Friday, 12 February 2021

பெரியாரைப் பாராட்டிய தினமலர் (சிக்கனமும் தொண்டறமும்)


ஈ.வெ.ரா. 25 ஆயிரம் ரூபாயை மடியில் 
கட்டிக் கொண்டு, நீதிமன்றத்திற்குப் போய் இதோ பணம் இருக்கிறது… என்று சொன்ன சம்பவம் ஒன்று நடந்தது.

 என்.எஸ்.கிருஷ்ணனுக்கு, ஒரு வழக்கில்
தண்டனை கொடுத்துவிட்டனர் (1945). அன்று தீர்ப்பு சொன்னபோது, நீதிமன்றத்தில் பெரும் கூட்டம்.

 ஜாமினில் எடுப்பதானால் பணம் வேண்டி இருக்கும் என்று யாரோ கூறினர். அதைக் கேள்விப்பட்ட  ஈ.வெ.ரா., 25 ஆயிரம் ரூபாயை மடியில் கட்டிக் கொண்டு, நீதிமன்றத்திற்கு வந்தார். 

" இதோ பணம், 25 ஆயிரம் நான் தருகிறேன். ஜாமினில் எடுங்கள் " என்றார். ஆனால் , ஜாமினில் 
எடுக்க முடியவில்லை. தவித்துப் போனார், ஈ.வெ.ரா.

. அண்ணாதுரை முதல்வரான பின், அவருக்குச் சிகிச்சை அளிக்க அமெரிக்கா செல்ல வேண்டும் 
என்று தீர்மானிக்கப்பட்டது. பெரும் அளவில் பணம் செலவாகும் என்று பேச்சு எழுந்தது. அதெல்லாம் அரசு செலவுதான். 

ஆனாலும், ஈ.வெ.ரா. பெருந்தொகையை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து, அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம் தனித்தனியாக, எவ்வளவு செலவானாலும், நான் தருகிறேன்…என்று மன்றாடியபோது, கலங்காத கண்களும் கலங்கின..

ஒருபுறம் பொதுப்பணத்தில் ஒரு காசுகூட
தொடாத சிக்கன சிகாமணி. 

மறுபுறம், உற்றவருக்கு ஓடி வந்து உதவும் மனிதாபிமானம்.

இவை, ஈ.வெ.ரா., எனும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

- ”தினமலர்” வார மலர் 20.1.2013 பக்கம் 15

நன்றி : Sirpi Rajan

No comments:

Post a Comment