1964-ஆண்டு கரூர் வந்த #பெரியார் அவர்களை காண ஒரு அய்யர் பூணூலை மறைக்க ஒரு துண்டை போர்த்தி கொண்டு வந்தார்.
இதை கண்ட தொண்டர்கள் ஆவேசப்பட்டு, 'உனகென்னையா இங்கே வேலை' என்று கேட்க..
'நான் ராமசாமி நாயக்கரை பார்க்கணும். அதுதான் வேலை.' என்றவுடன்,
'அதெல்லாம் பார்க்கமுடியாது நீங்கள் திரும்பிப்போங்கள்' என்று சொன்ன சொல் அய்யாவின் காதில் விழுந்தது.
வெகுண்டு வெளியே வந்த அய்யா, நடந்ததைப் புரிந்து கொண்டு, தன் தோழர்களை அழைத்து..
"ஏனப்பா நீங்கள் எல்லாம் சுயமரியாதை காரர்கள்தானா? ஒருவர் நம்மைத் தேடிவந்தால் அவரை அழைத்து உபசரிக்க வேண்டாமா? இப்படி நீங்கள் செய்வதால் நம் கொள்கைக்கு எவ்வளவு பெரிய இழுக்கு தெரியுமா? தனிப்பட்ட எந்த ஒரு பார்பனரும் நமக்கு எதிரி கிடையாது" என கண்டிப்பு காட்டிவிட்டு..
அய்யா அந்த அய்யரிடம் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டு, உள்ளே அழைத்து விவரம் கேட்டார்.
வந்தவர் "நாயக்கர்வாள் எனக்கு வயது 65. மனைவி இறந்து விட்டாள். பிள்ளைகள் கிடையாது. எங்கள் வீடு அகலம் 64 அடி. அதில் என் அண்ணன் பங்கு 32 அடி..
அதை அவன் உங்கள் கட்சிக்காரருக்கு விற்றுவிட்டான். வாங்கிய உங்கள் தொண்டர் கொல்லைப்பக்கம் வேலியை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி, இப்போது எனக்கு வெறும் 2 அடி மட்டுமே உள்ளது.
வயதான இந்தக் காலத்தில் அவசரமாக என்னால் கழிவரைக்குக்கூட போகமுடியவில்லை.
நான் ஓய்வுபெற்ற ஆசிரியன். எனக்கு பென்ஷன் மாதம் 6 ரூபாய்தான் கிடைக்கிறது.
உங்களிடம் சொன்னால் நல்லது செய்வீர்கள் என்று என் உறவினர் சொன்னார்.. அதுதான் வந்தேன்" என்றார்..
இதைக்கேட்டு வேதனைப்பட்ட அய்யா, தொண்டர்களிடம் 'யாரப்பா அந்த அயோக்கியன்' என்று கேட்டார்..
'அய்யா இன்று இந்த கூட்டமே அவர் எற்பாடுதான்.'
-என்றவுடன்.. கூட்டிவாருங்கள் அவரை என்றார்...
அந்த தோழர் வந்து நின்றவுடன் அய்யா அவரிடம்...
"நீங்க நாளைக்கே வேலியை அவிழ்த்துக்கட்டி, அவருக்கு 32 அடி கொடுக்கணும். அதிலுள்ள மரம் எதையும் வெட்டக்கூடாது. அவருக்கு ஒரு பைசாகூட செலவு வைக்கக்கூடாது.
எந்த ஒரு சாக்குபோக்கு சொல்லியும் இந்த காரியத்தை தள்ளிப் போடக் கூடாது.போ.."
-என்றார்..
10 நாட்கள் கழித்து அந்த அய்யர் சென்னை சென்று அய்யா அவர்களுக்கு கூடை நிறையபழங்கள் வாங்கிக்கொண்டு, நேரில் பார்த்து நன்றி கூறினார்..
பழங்களைவாங்க மறுத்த பெரியார்,
"நீங்கள் செய்தது தவறு. தப்பு செஞ்சவன் என் கட்சிக்காரன். அதற்கு ஏன் நீங்கள் எனக்குப்பழம் தரனும்? இதுபோன்ற செயல்களால்தான் லஞ்சம் ஆரம்பமாகிறது.
நீங்கள் நன்றி சொல்ல ஒரு அஞ்சலட்டை போதுமே? உங்கள் 6 ரூபாய் வருமானத்தில் ரயில் வண்டிக்கு 3 ரூபாய், இந்தப் பழங்கள் 20 ரூபாய் இருக்கும் இப்படிசெய்யலாமா?"
-என்று சொல்லி அவருக்கு 30 ரூபாய் கொடுத்து, வாசல் வரை வந்து அனுப்பியவர்
#அவர்தான்_பெரியார்..
No comments:
Post a Comment