ஒரு மனிதனை அல்லது ஒரு சமுதாயத்தை, ஒரு நாட்டாரை, ஒரு மதத்தாரைக் காட்டு மிராண்டித் தன்மையுள்ளவர்கள் என்று சொல்லுவதற்குக் காரணங்களான குறிப்புகள் என்னவென்றால்:
1. கை ரேகை பார்த்தல்.
2. சோதிடம் பார்த்தல்.
3. பிறந்த நேரம் கொண்டு சாதகப் பொருத்தம் பார்த்தல்.
4. சகுனம் பார்த்தல், அதற்குப் பலன் கணித்தல்.
5. நல்ல நேரம், நல்ல நாள், நல்ல கிழமை, நல்ல மாதம் என்பவைகளைப் பார்த்தல்.
6. ஆருடம் பார்த்தல், அதை நம்புதல்.
7. பட்சி சாத்திரம் பார்த்தல்.
8. ராகு காலம், குளிகை காலம், எம கண்டம் முதலியன பார்த்தல்.
9. நல்ல நட்சத்திரம், கெட்ட நட்சத்திரம், நல்ல லக்னம், கெட்ட லக்னம் பார்த்தல்.
10. கழுதை கத்துதல் பலன் பார்த்தல், ஆந்தை அலறுதல் பலன் பார்த்தல்.
11. பல்லி, கத்துதல் குறித்துப் பலன் பார்த்தல்.
12. பாம்பு குறுக்கே போவது பற்றிப் பலன் பார்த்தல்.
13. காக்காய் கத்துதலுக்குப் பலன் கூறுதல்.
14. பூனை குறுக்கே போவதற்குப் பலன் கூறுதல்.
15. ஒத்தைப் பார்ப்பான் தென்படுதல்.
16. முண்டை பாப்பாத்தி (கைம்பெண்) வருதல்.
17. நெருப்பு எதிரில் வருதல்.
18. மனிதன் தும்முவதன் (தும்மல்) பலன்.
19. விளக்கு அணைதல், அதற்கே கெட்ட பலன் கூறுதல்.
20 கண் திருட்டி படுதல், திருட்டி கழித்தல்.
21. சாந்தி கழித்தல்.
22. பாடம் போடுதல் (நோய் தீருவதற்காக)
23. மந்திரம் செபித்தல்.
24. தழைகளைக் கொண்டு (வேப்பிலை) பாடம் போடுதல்.
25. சாமி ஆடுதல்.
26. வாக்குக் கேட்டல் (பூசாரியிடம்).
27. பேய் ஆடுதல் (இதில் நம்பிக்கை வைத்தல்).
28. பேய் ஓட்டுதல்.
29. வலம் சுற்றுதல், இடம் சுற்றுதல் (பிரதட்சணம் - அப்பிரதட்சணம்).
30. வலது கால், இடது கால், வலது கை, இடது கை, உயர்வு தாழ்வு கற்பித்தல்.
31. எண்களில் நல்ல எண்கள், கெட்ட எண்கள் எனக்கருதுதல் (3, 13, 8, 18) இவை கெட்ட எண்கள் என்பது).
32. அதிசயங்கள் செய்வது, அற்புதங்கள் செய்து காட்டுவது பற்றிய நம்பிக்கைகள்.
33. ஆசீர்வாதம் செய்தல், வாழ்த்துக் கூறுதல் நம்பிக்கை கொள்ளுதல், வசவு (வைதலில்) சாபம் கொடுத்தல் ஆகியவைகளில் நம்பிக்கை வைத்தல்.
34. பிரார்த்தனை செய்து விட்டு தொழுதுவிட்டு வந்தவர்களைக் குழந்தைகளின் தலையில் வாயினால் ஊதச்சொல்லுவதில் குழந்தைக்கு நோய் சவுகரியமாகும் என்ற நம்பிக்கை.
35. அகால - இயற்கைக்கு மாறான வகையில் செத்துப் போனவர்கள், பிசாசாகப் பிறந்து வந்து தொல்லை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை.
36. தூங்கி எழுந்தவுடன் பார்க்கத் தகுந்த வஸ்துக்கள், சிலர் முகத்தில் விழிப்பதால் கெடுதி ஏற்படுதல் என்ற நம்பிக்கை.
37. அமாவாசை, சனிக்கிழமை முதலிய நாட்களில் கறி தின்னுவதில்லை என்ற நம்பிக்கை.
“பெரியார் கணினி”, ப. 891
- க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி
- விடுதலை ஞாயிறு மலர், 22.12.18
No comments:
Post a Comment