Wednesday 23 January 2019

சாலைகளை ஆக்கிரமிக்கும் கோயில்கள்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு



சென்னை, ஜன.23 பொதுச் சாலைகளை ஆக்கிர மித்து கோயில்கள்  கட்டுவதால் வாகன போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற் படுகிறது. எந்த  சூழ்நிலையிலும் ஆக் கிரமிப்புகளை அனுமதிக்க முடியாது. தெய்வங்களாக  இருந்தாலும் கூட ஆக்கிரமிப்பு செய்ய உரிமை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

கோவை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனுமதியின்றி கட்டப்பட் டுள்ள விநாயகர் கோயிலை அகற்ற கோரியும், அரசு நிலங்கள், பொதுச் சாலைகளை ஆக்கிரமித்து வழிபாட்டுத் தலங்களை கட்டக் கூடாது என்ற அரசாணையை பின்பற்றும்படி உத்தரவிடக் கோரியும்  சென்னை உயர்நீதிமன்றத்தில் 2005 ஆம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அளித்த உத்தர வில், அரசு புறம்போக்கு நிலங்களை அப கரிக்கும் நோக்குடன் சிலர், அங்கு கோயில் கட்டுவதாகவும், இதை இந்து சமய அறநிலையத்துறை ஊக்குவிக்கக் கூடாது.

எனவே, தமிழகம் முழுவதும் அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப் பட்டுள்ள கோயில்கள், மசூதிகள், கிறித்துவக் கோயில்கள் குறித்த புள்ளிவிவரங்களை  அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று (22.1.2019) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஒரு சுற்ற றிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தலைமைச் செயலாளர் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் தமிழகம் முழுவதும்  ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில்கள், கிறித்துவ கோயில், மசூதி குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்டஅதிகாரிகளிடம்கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று கூறப்பட்டி ருந்தது.

மேலும், அரசு வழக்குரைஞர், நீதிபதியிடம், புள்ளிவிவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.

"தெய்வங்களாக" இருந்தாலும்..


நீதிபதி தன் உத்தரவில், பொதுச் சாலைகளை ஆக்கிரமித்து கோயில்கள்  கட்டுவதால் வாகன போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. எந்த  சூழ்நிலையிலும் ஆக்கிரமிப்புகளை அனு மதிக்க முடியாது. தெய்வங்களாக  இருந் தாலும் கூட ஆக்கிரமிப்பு செய்ய உரிமை இல்லை.

-  விடுதலை நாளேடு, 23.1.19

No comments:

Post a Comment