Friday 8 October 2021

பச்சையப்பன் கல்லூரியும் சிந்தா தரிப்பேட்டை விடுதலை அலுவலகமும்

 ஒற்றைப் பத்தி : பச்சையப்பன் கல்லூரி

ஈரோட்டிலிருந்து ‘விடுதலை' அலுவலகம் சென்னைக்கு மாற்றப்பட்டது 1940 இல்! சென்னை சிந்தா தரிப்பேட்டை, 2, பால கிருஷ்ண பிள்ளைத் தெரு வில் உள்ள கட்டடத்தில் இயங்கத் தொடங்கியது.


ஈரோட்டிலிருந்து அச்ச கத்திற்குத் தேவையான இயந் திரங்கள் உள்படப் பல பொருள்கள் வந்து சேர வேண்டிய இடைக்காலத்தை ஏன் வீணடிக்க வேண்டும் என்று கருதிய தந்தை பெரியார் அவர்கள், ‘‘சீர் திருத்த தொண்டர் மாநாட்டை'' சென்னை சிந் தாதரிப்பேட்டை அந்தக் கட்டடத்தில் நடைபெறும் என்று அறிவித்தார்.


‘விடுதலை' குடியேற விருந்த அந்த இடத்திற்கு ‘‘ஜஸ்டிஸ் மகால்'' என்று பெயர் சூட்டினார். சுமார் 2000  பேர் கலந்துகொண்ட மாநாடு அது (23.12.1940).


அம்மாநாட்டில் 17 தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றுள் ஒன்று முக்கிய மாகக் கவனிக்கத்தக்கதாகும்.


‘‘சென்னை பச்சையப்பன் கல்லூரியில் வடமொழியில் கடவுள் வணக்க வாழ்த்துச் சொல்லுவதை நீக்கவேண்டும் என்று இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது'' என்பதுதான் அந்தத் தீர்மானம்.


‘‘பச்சையப்பன் கல்லூரி யின் படிக்கட்டும் தமிழ்ப்   பேசும் - பாடும்'' என்று பிற் காலத்தில் சொல்லப்பட்ட ஒரு கல்லூரி, ஒரு காலகட்டத் தில் எந்த நிலையில் இருந் தது?


கடவுள் வாழ்த்து- தமி ழில் இல்லை என்பதும்; அதேநேரத்தில், சமஸ்கிருதத் தில் இருந்தது என்பதும் இன் றைய இளைய தலைமுறை யினர் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவலாகும்.


பார்ப்பனரல்லாத பச்சை யப்பரால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை நடத்தும் கல்வி நிறுவனங்களில்கூட, ஆரியம் தன் ‘ஆக்டோபஸ் வேலை'யை எப்படி காட்டி வந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஒரு ‘ஹிந்து'வான பச்சை யப்பர் அறக்கட்டளை நடத் தும் அந்தப் பச்சையப்பன் கல்லூரியில், தாழ்த்தப்பட் டோர் ‘ஹிந்து' இல்லை என்று கூறி, அம்மாணவர்களைச் சேர்க்காமல் தடை செய்தி ருந்த சூழ்ச்சியையும் புரிந்து கொள்ளவேண்டும். அதன் பின்னால் இருந்தது பார்ப்ப னியம் என்பது விளங்க வில்லையா?


இந்த இடத்தில் இன் னொன்றையும் இணைத்துப் பார்ப்பது அவசியம். சென் னையில் 24.1.2018 அன்று பி.ஜே.பி.யின் தேசிய செய லாளர் திரு.எச்.ராஜாவின் தந் தையார் ஹரிஹர சர்மா என் பவர் எழுதிய நூல் வெளி யீட்டு விழா நடைபெற்றது.


அவ்விழாவில் பங்கேற்ற காஞ்சிபுரம் சங்கராச்சாரியார், விஜயேந்திர சரஸ்வதி மட் டும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்க வில்லை என்பதையும் நினைவு கூர்க! 1940 ஆனா லும், 2018 ஆனாலும் பார்ப் பனர்கள், பார்ப்பனர்கள்தான் - அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை.


- மயிலாடன்


குறிப்பு: சென்னையில் நடைபெற்ற ‘‘சீர்திருத்த தொண் டர் மாநாட்டுத்'' தீர்மானத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் நேற்று நமக்குத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment