ஒற்றைப் பத்தி - பச்சையப்பன் கல்லூரி
• Viduthalai1927 அக்டோபர் 22, 23 நாட்களில் சென்னையில் நடைபெற்ற சென்னை மாகாண முதல் பார்ப்பனரல்லாத வாலிபர் மாநாடு வரலாற்றில் நிலைத்து நிற்கும் சிறப்புக்குரியதாகும்.
அந்த மாநாட்டில் பல்வேறு புகழ் பூத்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்று, சுரேந்திரநாத் ஆர்யா அவர்களால் முன்மொழியப் பட்டு, சந்திரா ரெட்டியால் (சென்னை உயர்நீதிமன்றத்தில் பிற்காலத்தில் தலைமை நீதி பதியாக இருந்தவர்) வழிமொழி யப்பட்ட தீர்மானம் வருமாறு:
‘‘பச்சையப்பன் கல்லூரியி லும், அவர்களின் அறக்கட் டளை நிர்வகிக்கும் பள்ளிகள், மாணவர் விடுதிகளிலும் ஆதி திராவிடர், முஸ்லிம், கிறித்துவ மாணவர்களும் படிக்க சேர்க் கப்பட வேண்டியதன் அவசியத் தைக் கல்லூரியின் அறங்காவ லர்களுக்கு இம்மாநாடு வலி யுறுத்திக் கூறுகிறது. இவ்வாறு அவர்கள் சேர்க்காமல் ஒதுக் குவது பச்சையப்ப வள்ளல் அவர்களின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் சேர்ப்ப
தாகும்.
சகோதரர்களான ஆதிதிரா விடர், முஸ்லிம்கள், கிறித்தவர் கள் அவர்களின் ரத்தத்தில் பிறந்த பெரும் வள்ளலான பச் சையப்பர் தாராள மனம் கொண்டு நிறுவிய பள்ளி, கல் லூரிகளில் சேர்ப்பதற்கு விதிக் கப்பட்டிருந்த தடையை எவ் வாறு அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியும்? இதைவிட அவமானமும், அநீதியும் வேறு எதுவும் இருக்க முடியாது.
ஒரு கிறித்துவரை கல்லூரி முதல்வராக வைத்துக்கொள் வார்கள். ஆனால், அதே கல் லூரியில் ஒரு கிறித்துவ மாண வனைக் கல்வி பயில அனு மதிக்க மாட்டார்கள். மனிதர் களின் ஜாதி, இனம், பிரிவு, நிறம் பற்றி தங்களுக்கு நம்பிக்கை நம்பிக்கை இல்லை என்பதை பார்ப்பனர் அல்லாத சமூக மக்கள் ஒரே குரலில் உரக்கப் பிரகடனப்படுத்த வேண்டும்'' என்று அத்தீர்மானம் கூறுகிறது.
இந்தத் தீர்மானம்பற்றி கருத் துக் கூறப்படுகையில் பச்சை யப்பன் அறக்கட்டளையின் பத் திரத்தில் சில நிபந்தனைகளும், வரையறைகளும் இருப்பதால் அவைகளைப் பின்பற்றவேண் டிய கட்டாயம் அறங்காவலர் களுக்கு உள்ளது. அந்த அறக் கட்டளையின் நிதி இந்துக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். இதில் இந்துக்கள் யார், இந்துக்கள் அல் லாதார் யார்? என்று எப்படிக் கூற முடியும்? என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
‘‘இந்தக் கோரிக்கையை, அறக்கட்டளை ஏற்று செயல் படத் தவறினால் அக்கல்வி நிறு வனங்களுக்கு அளிக்கும் மானி யத்தை அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்று மாநாடு கேட் டுக் கொள்கிறது'' என்று தீர்மா னத்தில் மாற்றம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆர்.வி.சொக்கலிங்கம் மற் றொரு தீர்மானத்தை முன் மொழிந்தார்.
‘‘ஆதிதிராவிடர், கிறித்தவர், முஸ்லிம் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள மறுக்கும் அனைத்துத் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் அரசு எந்த வித மானியங்களையும், அளிக் காமல் நிறுத்தி வைக்கவேண்டும்'' என்பதுதான் அத்தீர்மானம்.
எத்தனை எத்தனைத் தடைக் கற்களைக் கடந்து வந் துள்ளோம் - திராவிடர் இயக்கம் எப்படியெல்லாம் குரல் கொடுத் திருக்கிறது, செயல்பட்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத் துக்காட்டே! மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், இந்துக்களாகக் கணக்கிடப்பட்ட ஆதிதிராவிடர் கள், இந்து என்று பச்சையப்பர் குறிப்பிட்டுள்ளதில் மட்டும் சேரமாட்டார்கள் என்ற நிலை எத்தகைய பார்ப்பனீய சித்தாந்த மனப்போக்கு? சிந்திப்பீர்!
- மயிலாடன்
No comments:
Post a Comment