- மின்சாரம்
1. கருநாடக பாஜக எம்.எல்.ஏக்கள் 3 பேர் சட்டசபையில் ஆபாசப் படம் பார்த்து மாட்டிக் கொண்டனர்.
2. குஜராத் பாஜக அமைச்சர்கள் 2 பேர் சட்டசபையில் ஆபாசப் படம் பார்த்த போது பிடிபட்டு, பாஜகவின் கலாச் சாரத்தை நாடு முழுவதும் தெரிய வைத் தனர்.
3. அருணாச்சலப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ. ராமகந்த தேவ்ரி, விடுதி ஒன்றில் ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்த காணொலி வெளியாகி மாட்டிக் கொண்டார்.
4. மத்தியப் பிரதேசத்தில் பாஜக செய்தித் தொடர்பாளர் நீரஜ் சாக்யா, விபச்சார விடுதி நடத்திவந்தார் - இவரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அரசியல் தலையீடு காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.
5. இமாச்சலப் பிரதேசத்தில் விடுதி ஒன்றில் பெண் ஒருவருடன் விபச்சாரத் தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் ராஜிந்தர் ராணா, எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்குப் பிறகு பதவி வில கினார்.
6. மத்தியப் பிரதேச நிதி அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராகவ்ஜி, வீட்டு வேலைக்காரியை பாலியல் துன் புறுத்தல் செய்ததாக கைது செய்யப் பட்டார்.
7. குஜராத் மாநில பாஜக செயலாளராக இருந்த சஞ்சய் ஜோஷியின் ஆபாசக் காணொலி வெளியானதை அடுத்து, கட்சிப் பொறுப்பிலிருந்து விலகினார்.
8. மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்தில் ஒரு பெண்ணை பாலியல் வன்முறை செய்த பாஜக தலைவர் ரவீந்தர பவந் தாதே-யின் காணொலி வெளியாகி, கைது செய்யப்பட்டார்.
9. ஜார்க்கண்ட் பாஜக பெண் தலைவர் கீதா சிங் என்பவரின் ஆபாசக் காணொலி வெளியாகி, பெரும் பரபரப்பு கிளம்பியது.
10. பாஜகவின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவராக இருந்த முத்து என்கின்ற மாரிமுத்து கள்ளக் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
11. இந்து முன்னணியின் செந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண் டன், நந்தினி என்ற தலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்முறை செய்து, கொடூரமாகக் கொலை செய்தார்.
12. ஆர்.எஸ்.எஸ். தலைவரும், மேகாலயா ஆளுநருமான சண்முக நாதன் (பாஜக நியமனம்), பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி, ஆளுநர் பொறுப் பிலிருந்து விலகினார்.
13. உத்தரப் பிரதேசம், உன்னாவ் மாவட்டம் பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கும், அவரின் சகோதரரும் 17 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வெளியே சொன்ன குற்றத்திற்காக அவரின் தந்தையைக் காவல் நிலையத்தில் வைத்து கொலை செய்துவிட்டார்கள்.
14. இப்போது சிறுமி ஆசிஃபா வழக்கிலும் இந்துத்துவா கும்பல் கைது செய்யப்பட்டிருக்கிறது. கைதானவர்க ளுக்கு ஆதரவாக பாஜக கூட்டணி அமைச்சர்கள் போராட்டம் நடத்து கிறார்கள். கத்துவா, உன்னாவ் பிரச்சினை நாடு முழுவதும் பெரிதாக வெடித்துக் கொண்டு இருக்கும் போது உ.பி. முதல் வர் சாமியார் ஆதித்யநாத், பாலியல் குற் றவாளியான முன்னாள் அமைச்சரும் பாஜக பிரமுகருமான சாமியார் சின்ம யானந்த் என்பவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.
பா.ஜ.க. பதவியாளர்களும் பச்சைக்கொடி!
வட இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சிறுமிகளை பாலியல் ரீதியில் சீரழித்து கொலை செய்யும் நிகழ்வுகள் தொடர்கின்றன. இந்த நிலையில் பொதுமக்களே சமூக வலைதளங்களில் பாஜகவினரின் நட்பை முறிக்கும் வகையில் #அன்ஃப் ரெண்ட்பிஜேபி (#UNFRIEND_BJP) என்ற ஹேஷ்டேக்கை பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார், உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் ஒரு மைனர் பெண்ணை பாலியல் வன்முறை செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். அதை ஒட்டி முகநூலில் உள்ள பலரும் பாஜக உறுப்பினர்களையும் ஆதரவாளர் களையும் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கி வருகின்றனர்.
இதற்காக #அன்ஃப்ரெண்ட் பிஜேபி என்னும் ஹேஷ்டாக் உப யோகம் பரவலாகி வருகிறது. இதன் மூலம் கத்துவா மற்றும் உன்னாவ் பாலியல் வன்முறை விவகாரத்தில் ஆதரவு தெரி விக்கும் பாஜகவினரை நண்பர்கள் பட் டியலில் இருந்து பலர் நீக்கி வருகின் றனர். மேலும் தங்கள் நண்பர்களையும் பாஜகவினரை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். பெரும்பாலானோர், பாஜகவினரே உங்கள் கரங்களில் ரத்தக் கறை படிந்துள்ளது. எனவே உங்கள் நட்பு தேவை இல்லை எனக் குறிப்பிட்டு உள்ளனர்.
கடந்த 13ஆம் தேதி அன்று பிரதமர் மோடி இது குறித்து தனது மவுனத்தை கலைத்தார். அவர் இந்த சம்பவங்கள் வெட்கப்படத் தக்கவை எனக் கடும் கண்டனத்தை தெரிவித்தார். ஆனால் அதே நாளில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லேகி எனபவர், ஆசிஃபாவை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு பாஜக அமைச் சர்கள் ஆதரவு தெரிவித்து பேரணியில் கலந்து கொண்டதை ஆதரித்து கருத்து தெரிவித்தார்.
மதவாதம் கண்களை மறைக்கிறது
ஜம்முவில் உள்ள கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் மற்றும் காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பலையை எழுப்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரபல இந்தி நடிகை கரீனா கபூர் டிவிட்டரில் கண்டனப் பதிவு செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாடல் அழகு ஸ்வரா பாஸ்கர் என்பவர் கரீனா கபூரின் பதிவிற்கு மறுபதில் இட்டுள்ளார். அதில் "நீ இந்துவாக இருந்துகொண்டு இசுலாமியரை திருமணம் செய்ததால் இந்துவிற்கும் இந்தியாவிற்கு துரோகம் செய்துவிட்டாய் என்று பதி லிட்டுள்ளார். கரீனா கபூர் பிரபல இந்தி நடிகர் ராஜ்கபூர் குடும்பத்திலிருந்து வந்தவர். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு குவாலியர் நவாப் வம்சத்தைச் சேர்ந்த பிரபல இந்தி நடிகர் சைப் அலிகானை திருமணம் செய்து கொண் டார். இதனால் இவரை இந்துக்களுக்கு எதிரானவர் என்று இந்துத்துவ மத வாதிகள் பிரச்சாரம் செய்து வருகின் றனர். 2017-ஆம் ஆண்டு ஜெய்பூரில் நடந்த இந்துமத மாநாட்டில் இவரது படத்தை அட்டையில் போட்டு இவர் லவ்ஜிகாத்திற்கு பலியானவர் (இசுலாமி யர்கள் இந்துப் பெண்களை திருமணம் செய்வதை இந்துத்துவாதிகள் லவ்ஜி காத் என்று கூறுவார்கள்) என்று கூறி ஒரு சிறிய நூலை வெளியிட்டிருந்தனர். இவருக்கு சைப் அலிகானுக்கும் பிறந்த குழந்தைக்கு தைமூர் அலிகான் என்று பெயரிட்டிருந்தார்.
உடனே மதவாதிகள் தைமூர் என்ற பெயரை வைக்கக் கூடாது என்று போராட்டம் நடத்தினர். தற்போது இந்துத்துவ வாதி கள் 8 வயது சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்து கொலைசெய்ததை கண்டித்த கரீனா கபூரை மீண்டும் இந்து மதத்திற்கும் இந்தியாவிற்கும் துரோகி என்று கூறியுள்ளனர். உண்மையில் பாஜக என்ற மதவாத கட்சி மோடி தலைமையில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாடு முழுவதும் மதவாதிகளின் கொடூரப் பிடியில் ஆட்கொண்டு சீரழிந்து வருகிறது. ஒரு தவற்றை சுட்டிக்காட்டிய கரீனா கபூரை ஒரு பிர பல மாடல் அழகியே இந்துத் துரோகி என்று எழுதியிருப்பதில் இருந்து நாடு எந்த அளவு மதவாதப் பிடியில் சீரழிந் துள்ளது என்று கண்டுகொள்ளலாம்.
Swara Bhasker @ReallySwara You should be ashamed you exist. That God gave you a brain which you chose to fill with hate and a mouth you chose to spew filth from. You are a shame on India and Hindus. That shits like you feel emboldened to talk this crap publicly is this govt.’s legacy 8:18 PM - Apr 14, 2018.
பாசிச பா.ஜ.க. அதிகாரி
கேரள மாநிலம் கொச்சி நகரில் உள்ள தனியார் வங்கியில் துணை மேலாளராகப் பணியாற்றி வந்த விஷ்ணு நந்தகுமார் காஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாகச் சமீபத்தில் அவரின் முகநூலில் சர்ச்சைக் குரிய கருத்தைப் பதிவிட்டார். அதில் நல்லவேளை அந்தச் சிறுமி இந்தச் சின்ன வயதிலேயே கொல்லப் பட்டுவிட்டார். இல்லாவிட்டால், வளர்ந்த பின் என்றாவது ஒருநாள் மனித வெடி குண்டாக மாறி இந்தியாவுக்கு எதிராக மாறிவிடுவார் என்று பதிவிட்டு இருந்தார். இந்தக் கருத்துக்கு அனைத்துத் தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந் தன.
முகநூலில் பலரும் விஷ்ணுவைக் கண்டித்து வாசகங்கள் எழுப்பினர். பலர் உடனடியாக விஷ்ணுவை வேலையில் இருந்து நீக்க வேண்டும் என்று வலி யுறுத்தினார்கள். இதற்காக ட்விட்டரில் டிஸ்மிஸ் யுவர் மேனேஜர் என்று பிரத் தியேகமாக ஹேஷ்டேக் உருவாக்கப் பட்டு வைரலானது. இந்த ஹேஷ் டேக்கை பயன்படுத்தி அந்தத் தனியார் வங்கியில் வாடிக்கையாளர்களாக இருக்கும் ஏராளமானோர் கடும் கண்டனத்தை யும், விஷ்ணுவை டிஸ்மிஸ் செய்யவும் வலியுறுத்தினார்கள். மனிதநேயமற்ற வகையில் உங்கள் வங்கியில் ஊழியர் முகநூலில் கருத்து தெரிவித்து குற்ற வாளியைவிட மோசமாக நடந்து கொள் கிறார் என்று ஒருவரும், எப்படி இப்படிப் பட்ட மோசமான மனநிலையைக் கொண் டவரை வேலைக்கு வைத்திருக்கிறீர்கள். உங்கள் வங்கியின் பெயரை காப்பாற் றிக் கொள்ளுங்கள் என்று சிலரும், விஷ்ணுவை உடனடியாக பதவியிலி ருந்து தூக்குங்கள் என்று பலரும் ட்வீட் செய்ததால், வங்கி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது.
இதையடுத்து, வங்கி நிர்வாகத்தின் சார்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் வங்கியின் துணை மேலாளர் விஷ்ணு வேலையில் இருந்து கடந்த 11ஆம் தேதி நீக்கப்பட்டு விட்டார். வேலையில் மோசமாகச் செயல்பட்டதால் அவர் பணி நீக்கம் செய்யபட்டார். அவரின் சர்ச்சைக்குரிய கருத்துகள் அனைவரின் மனதையும் புண்படுத்தி விட்டது. இதை வங்கி நிர்வாகமும் கண்டிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது. பதிவு செய்த விஷ்ணு ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச்சேர்ந்த பிரமுகர் என்பதும் அவரது குடும்பத்தினரும் இந்துத்துவ அமைப்பினர் என்றும் தெரியவந்தது, ஆசிஃபா கொலை தொடர்பாக ஆர். எஸ்.எஸ் பிரமுகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப் பிடத்தக்கது.
- விடுதலை ஞாயிறு மலர், 21.4.18
No comments:
Post a Comment