Showing posts with label தென் சென்னை. Show all posts
Showing posts with label தென் சென்னை. Show all posts

Sunday, 25 October 2026

செஞ்சட்டைப் பஞ்சாட்சரம் | கொஞ்ச நேரம் பேசுகிறேன்

 

செஞ்சட்டை பஞ்சாட்சரம்

வணக்கம் தோழர்!


வாங்க தோழர்!


கைகொடுங்க தோழர்!


தோழரே திராவிட கழகத் தலைவர் தளபதி கி. வீரமணி அவர்கள் 69 சதவிகித இட ஒதுக்கீடு சம்மந்தமாக தயாரித்த 31சி சட்டத்தை மாநில அரசும் ஏற்று மத்திய அரசுக்கு அனுப்பியதை டெல்லி அரசு ஏற்க வேண்டும். அங்கீகரிக்க வேண்டும். என்ற நோக்கத்திற்காக சென்னை திராவிடர் கழக இளைஞரணி சார்பில் இருநூறு தோழர்கள் கொண்ட சைக்கிள் பேரணி தோழர் மு. பாலகுரு அவர்கள் தலைமையில் புதுப்பேட்டையிலிருந்து 11-7-94 காலை 10 மணிக்கு தோழர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் துவக்கி வைக்க புறப்பட்டது. சைக்கிள் பேரணி புதுப்பேட்டையிலிருந்து சிந்தாதிரிப்பேட்டை, கோடம்பாக்கம், அசோக் நகர், சைதாப்பேட்டை தியாகராயர் நகர், ராயப்பேட்டை போன்ற பகுதியில் பயணம் செய்து பிரச்சாரம் செய்தது இடை இடையே அங்கங்கே ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட தெருமுனை கூட்டங்களும் நடந்தது. தோழர்கள் ஆனுர் ஜெகதீசன், நடிகர் எம். ஏ. கிரிதரன் ஆகியோர் பேசினார்கள். 19-7-94 அன்று 31,சி சட்டத்தை அங்கீகரித்து குடியரசு தலைவர் ஒப்புதலும் கிடைத்துவிட்டது. 


கருஞ்சட்டை தோழர்கள் சைக்கிள் ஊர்வலத்தில் 74 வது வயது கொண்ட செஞ்சட்டை தோழனாகிய நானும் காலை முதல் மாலைவரை ஊர்வலத்தில் சைக்கிள் பேரணியில் எனது சைக்கிளில் பயணம் செய்தேன். இந்த நேரத்தில் கடந்த கால வரலாறு ஒன்று என் நினைவிற்கு வருகிறது.


(தொடர்ச்சி 5-ம் பக்கம் பார்க்க)


2-ம் பக்க தொடர்ச்சி


1962 ம் ஆண்டு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் ஒட்டர்கள் மாநாடு திராவிடர் கழக மாநாடு என்று இரு மாநாடுகள் நடைபெற்றது. அதுபோது எனது தலைமையில் மாநாட்டை விளம்பரப்படுத்த வேண்டும் என்று சென்னை முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்களுடன் சைக்கிள் பிரச்சார பயணம் செய்தோம்.


முப்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன் எனது தலைமையில் நடந்த ஊர்வலத்தில் பகல் உணவுக்காக தலைவர்கள் பெரியாரிடம் ரூபாய் 100/- பெற்று ராயபுரம் பகுதியில் ஓட்டலில் பகல் உணவுக்கு ஏற்பாடு செய்தேன்.


இப்பொழுது நடந்த ஊர்வலத்தில் தோழர், மு. பாலகுரு இல்லத்தில் தோழர்களுக்கு பகல் உணவு வழங்கப்பட்டது.


உண்மைக்கு, நேர்மைக்கு, கொள்கைக்கு, எப்பொழுதும் வெற்றி தான் கிட்டும்.


திராவிடர் கழகத்திற்கு நமது பாராட்டுக்கள். தளபதி கி. வீரமணிக்கு நமது வாழ்த்துக்கள்.


கை கொடுங்க தோழர் 

வணக்கம் தோழர் 

வருகிறேன் தோழர்


- 'அறிவு வழி' மாத இதழ், ஆகஸ்ட் 1994