தாலி கட்டாத திராவிடர்கள்
தமிழ்நாடு
நீலகிரியில் வாழும் மக்களாகிய தொதவர், கோட்டர் என்பவர்கள் இல்லாதவர்கள். திருமணத்தின் போது தாலி கட்டும் வழக்கம் இல்லாதவர்கள்.
இவர்களோடு அம்மலையில் வாழும் படகரிடமும் தாலிகட்டும் வழக்கம் இல்லை.
கோதாவரி மாவட்டத்து மலைகளில் வாழும் கோயிகளும் தாலி கட்டாத வர்கள்.
கஞ்சம், விசாகப்பட்டினம் மாவட்டங்களிலுள்ள மலைவாழ் கொண்டர் என்பவர்களும், இவர்களது கிளையினரான சவரர் என்பவர்களும் திருமணத்தின்போது தாலி கட்டும் வழக்கம் இல்லாதவர்கள்.
இவர்களுள் நீலகிரியில் வாழும் கோட்டர் மனைவி, கணவன் இறந்த பின், தான் அதுவரையில் அணிந்திருந்த பித்தளை காப்பை மங்கல நீக்கத்திற்கு அறிகுறியாக உடைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் முதுவர் என்னும் வகுப்பார், சில நூற்றாண்டுகளுக்கு முன் அயலார் படையெடுப்பின்போது,
மதுரையிலிருந்து இம்மலை நாட்டுப் பகுதிகளுக்கு ஓடி வந்து விட்டதாக கூறுவர். இவர்கள் கோவை, மதுரை மற்றும் மலையாள மாவட்டங்களி லுள்ள மலைகளிலும் திருவாங்கூர் நாட்டிலுள்ள மலைகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களிடையே திருமணத்தின்போது மணமகன் மணமகளுக்கு காதணிகளையும், பித்தளைக் காப்பையும், ஒரு புடவையையும், சீப்பையும் கொடுப்பது வழக்கம். அவன் இறந்த பிறகு அம்மணமகள், அவனால் கொடுக்கப்பட்டு தான் அதுவரையில் அணிந்து வந்த காதணிகளையும், பித்தளைக் காப்பையும் நீக்கி விடுதல் இன்றும் இருந்து வரும் வழக்கமாகும். (இக்கால கோட்டர் மனைவி வளையலை உடைத்தலும், முதுவர் மனைவி வளையலை நீக்கலும், சங்க காலக் கண்ணகி வளையலை உடைத்தலும், வெளிமான் மனைவியர் வளையலை நீக்கியதும் இங்கு சிந்திக்கத்தக்கன)
தெலுங்குப் பழங்குடிகள்
இக்கால நாகரிகம் எட்டிப் பாராத| பழங்குடிகளாகிய தெலுங்கு நாட்டு ஏட்டர், ஏனாதிகள் முதலிய இனத்தாரிடம் தாலி கட்டும் வழக்கம் இல்லை.
மலையாளம்
மலையாள நாட்டிலுள்ள செருமார், முக்குவர், பலியர், வலையர், புலையர், பறையர், நாயாடிகள், பனியர், மலக்கர், கரிம்பளர், மலையர், மலசர், காடர், வேட்டுவர், மாவிலோர், அருநடர்.முதலி யோரிடத்திலும் திருமணத்தின்போது தாலி கட்டும் வழக்கம் இல்லை. ஈழுவர், காணிகர் முதலிய சில சாதியர் "மின்னு" என்னும் அணியைத் திருமணத்தின்போது அணிகின்றனர். வாரியார் என்பவர் மத்தளம் அல்லது பறை வடிவில் உள்ள 'மாத்ரா' என்னும் அணியை கட்டுவர். அந்நாட்டு சலவைத் தொழிலாளர் ‘உந்து மின்னு’ அல்லது ‘புளியிலைமின்னு’ என்னும் அணியை கட்டுவர். மலையாள வேட்டுவருள் மண அணியாக மோதிரம் அணிவித்தல் மரபு.
கன்னட நாடு
கன்னட நாட்டிலுள்ள காப்பிலியர், | கொரகர், காடு குறும்பர், மொகயர், கார்விகள் முதலிய சாதியாரிடமும் தாலி கட்டும் வழக்கம் இல்லை. கார்வி என்னும் பரதவர் பொன்மணி (தாரைமணி) கழுத்தில் கட்டி பெண்ணைப் பந்தலுக்கு அழைத்து வருவர். காப்பிலியர் கரிய கண்ணாடி வளையல்களை அணிகின்றனர்.
துளு நாடு
துளுநாட்டிலுள்ள பாணார், ஓடாரி என்னும் சாதியரிடமும் தாலி கட்டும் வழக்கம் இல்லை.
அகம்படியர்
இவருள் பலர் மங்கல நாண் மட்டுமே அணிவது வழக்கம். சிலர் தாலி கட்டுதலை மேற்கொண்டுள்ளனர்
. நன்றி: காவிரி நாடனின் "உலகத் திருமணங்கள்' என்ற நூலிலிருந்து
- விடுதலை ஞாயிறு மலர், 29.11.2003

No comments:
Post a Comment