சமஸ்கிருதம் படித்திருந்தால்தான் தமிழ் படிக்க முடியுமாம்!
ஒழித்தது நீதிக்கட்சி ஆட்சியே!
சமஸ்கிருதத்தையும் ஒரு பாடமாகப் படித்திருந்தா லொழிய, தமிழ் உட்பட வேறு எந்தப் பயிற்று மொழியில் கல்வி கற்றிருந்தாலும் பட்டம் பெற இயலாத நிலை இருந்தது ஒரு காலகட்டத்தில், உயர்கல்வி நிறுவனங்களில் பார்ப்பன மாணவர்கள் மட்டுமே பயன் பெற வேண்டும் என்ற மறைமுகமான நோக்கமே இதற்குக் காரணம்.
1924ஆம் ஆண்டில் கல்வி அமைச்சராக இருந்த பரசுராம் பாத்ரோவ், "இது திராவிடர் அரசு. இந்த அரசின் நிதி திராவிட மொழிகளுக்காக மட்டுமே செலவிடப்பட வேண்டும்" என்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.
அத்துடன் நிற்காமல் அவர் இதற்கென அரசாணையும் பிறப்பித்தார். (அரசு ஆணை 2123/08.12.1925) அதன் பிறகுதான் சமஸ்கிருதம் படித்திராவிட்டாலும் 'தமிழ்ப் பண்டிதர் (புலவர்) (Tamil Pandit) பட்டம் பெற, தமிழ் மட்டும் படித்திருந்தாலே போதும் என்ற நிலை உருவாயிற்று. 1927 ஆம் ஆண்டிலிருந்து, சமஸ்கிருதம் படித்திராமலேயே பி.லிட் (B. Lit.,) பட்டத்திற்காக படிக்கும் தகுதியும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. சமஸ்கிருத மொழி ஆதிக்கத்திலிருந்து தமிழ் மொழியையே மீட்டது நீதிக்கட்சி (The Justice Party)யின் ஆட்சிதான்!
தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர், பக்கம்-183
No comments:
Post a Comment