மணி நேரம் என்பது நமது சொடுக்கும் அளவையும், இமைக்கும் அளவையும் வைத்து கணக்கிடப்படுகிறது. அதேபோல் ஒளியின் பயணத் தொலைவை வைத்து ஒளி ஆண்டு கணக்கிடப்படுகிறது.
நாம் எங்கு இருக்கிறோமோ அதை வைத்து தான் எதையும் கணிக்க முடியும்! ஆங்கில ஆண்டாக இருந்தாலும் தமிழ் ஆண்டாக இருந்தாலும் ஹிஜ்ரி ஆண்டாக இருந்தாலும் எல்லாம் ஞாயிற்றை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுவதால் ஒன்றாகத்தான் கணக்கு வரும் ! சமஸ்கிருத ஆண்டு விண்மீன் களை அடிப்படையாக கொள்வதால் நமது கணக்குக்கு மாறாக இருக்கும்!
ஒவ்வொரு கணக்கீட்டிற்கும் அடிப்படை பொருள் தேவை. அந்த அடிப்படையில் கணக்கீடுகள் செய்கின்றனர். கணக்கீடு அலகுகளை மாற்றுவதும் உண்டு. தண்ணீரை அடிப்படையாக கொண்டு கிலோ கிராம் கணக்கிடப்படுகிறது. அதாவது 1லிட்டர் நீர் 1கிலோவாகும். இதை வைத்து எந்த பொருளையும் கிலோ எவ்வளவு, லிட்டர் எவ்வளவு என கணக்கிட்டு விடலாம்! இதேபோல் தான் வெப்பத்தை அளக்க பயன்படும் செல்சியசு - பாரன்யீட் அளவும். மீட்டர்- அடி போன்றவையும்!
நிலாவில் இருந்தாலும் அதற்கேற்றார்போல் கணக்கீடுகளை மாற்றிக்கொள்ளலாம்!
ஒருகாலத்தில் மாதத்தை வைத்துகூட வயதை கணித்துள்ளனர்.
- செ.ர.பார்த்தசாரதி
4.9.19
No comments:
Post a Comment