Saturday 2 July 2022

ஜாதி, மதம் அற்றவர்கள் எனச் சான்றிதழ்


சிவகாசி, ஜூன் 24 சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட தேவர்குளம் பஞ்சாயத்து பகுதி யைச்  சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 35). இவர் சில நாட்களுக்கு முன்பு சிவகாசி தாலுகா அலுவலகத்தில் தனக்கும், தனது மனைவி சர்மிளாவுக்கும் ஜாதி, மதம் அற்றவர்கள் என சான்றிதழ் வழங்க வேண் டும் என்று விண்ணப்பம் அளித்தார். விண் ணப்பத்தை பெற்ற அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

இதுவரை இப்படி சான்றிதழ் யாருக்கும் கொடுத்தது இல்லை என்று கூறினர். அப்போது கார்த்திகேயன், இந்தியாவில் இதுவரை 7 பேர் ஜாதி, மதம் அற்றவர்கள் என சான்றிதழ் பெற்றுள்ளார்கள். அதில் 6 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறி அதற்கான ஆதாரத்தை வழங்கி உள் ளார். பின்னர் சில நாட்கள் கழித்து அதி காரிகள் உரிய விசாரணை நடத்தி கார்த்தி கேயன், அவருடைய மனைவி சர்மிளா ஆகிய இருவருக்கும் ஜாதி, மதம் அற்ற வர்கள் என்ற சான்றிதழை வழங்கியுள்ளனர். 

இதுகுறித்து கார்த்திகேயன் கூறும்போது, "எனது சொந்த ஊர் சிவகாசி. சில ஆண்டுகளுக்கு முன்னரே ஜாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் கேட்டு மனு கொடுத் தேன். அப்போது வழங்க மறுத்துவிட்டனர். ஆனால், அந்த சான்றிதழ் பெற தேவையான ஆவணங்களை சேகரிக்கத் தொடங்கினேன். இணையதளத்தில் அதற்கான தகவல்கள் கிடைத்தன, கடந்த 2018 இல் வழக்குரைஞர் சினேகா என்பவர் இதே போன்ற சான்றிதழை பெற்று இருந்தார். 

இதை ஆதாரமாக வைத்து ஜாதி, மதம் அற்றவர்கள் என்று எனக்கும், என் மனை விக்கும் சான்றிதழ் பெற்றுள்ளேன். நான் சுயதொழில் செய்து வருகிறேன். எனது மனைவி சர்மிளா உதவி பேராசிரியையாக உள்ளார். எங்களுக்கு 2 குழந்தைகள். மூத்த மகன் நேசன்(4) யு.கே.ஜி. படித்து வருகிறான். அவனுக்கும் ஜாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருக்கி றேன். 2 ஆவது மகன் கரிகாலனுக்கு தற்போது 2 வயதுதான் ஆகிறது. அவனுக்கும் இதே சான்றிதழுக்கு விண்ணப்பம் கொடுப்பேன்.

 இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment