பொருள்கள் விலை மலிவாகவும், விலை மிகையாகவும் இருப்பதற்கு முதன்மைக் காரணம் உழைப்பே!
பொருளுக்கு விலைகிடையாது; உழைப்பிற்கு தான் விலை(மதிப்பு)!
ஒரு பொருள் மிகையாகவும் எளிதாகவும் கிடைத்தால் எவ்வளவுதான் முதன்மை தேவையாக இருந்தாலும் அப் பொருள் விலை மலிவாகத்தான் கிடைக்கும்.
ஆனால் குறைவாகவும் அரிதில் கிடைக்க கூடியதும் ஆன பொருள்கள் முதன்மை தேவைக்கு பயன்படாவிட்டாலும் விலை கூடுதலாக இருக்கும்.
ஒரு பொருள் மூலப் பொருளாக இருந்தால் மதிப்பு(விலை) குறைவு. அதே பொருளை உழைப்பை செலுத்தி அதாவது இரும்பை குண்டூசி யாக மாற்றி விற்றால் கூடுதல் விலை கிடைக்கும். இதை மதிப்பு கூட்டு பொருள் என்பர்.
அலுமினியம் கண்டுபிடிக்கப் பட்டபோது தங்கத்திற்கு மேலாக கருதப்பட்டது. அதில் முடி(கிரீடம்) சூடிக்கொண்ட காலமும் உண்டு!
உப்பு கண்டுபிடிக்கப் பட்டபொழுது விலை கூடுதலாக இருந்தது. வேலை ஆட்களுக்கு கூலியாக உப்பு வழங்கினர். சம்பளம் என்ற பெயர் இதனால் தான் வந்தது. அளம் என்றால் உப்பு என்று பொருள்.
இதேபோல் தான் ஆங்கிலத்தில் சாலரி என்ற சொல் சால்ட் என்ற பெயரிலிருந்து வந்தது.
பொருளுக்கு மதிப்பல்ல; உழைப்பிற்கு தான் மதிப்பு!
- நான்(22.10.18)
No comments:
Post a Comment