மின்சாரம்
இந்தியாவின் இமய மலைச்சாரலில் உள்ள காஷ்மீர் மாநிலம் கதுவாவில் ஆசிபா என்ற 7 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலி யல் வன் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் தீர்ப்பு பாந் தன்கோட் சிறப்பு நீதிமன் றத்தில் வழங்கப்பட் டது.
இந்தக் கொடூரமான கொலை நாடு முழு வதும் கடும் போராட்டத் தைத் தூண்டியது. இந்த வழக்கில் 8 பேர் சிக்கியுள்ளனர். குற்றம் தொடர்புடைய ஒரு சிறுவன்மீதான குற்றச் சாட்டு உறுதிசெய்யப்படாத தால் அவரை மட்டும் விடுவித்த நீதி மன்றம் மற்ற அனை வருக்கும் சிறைத் தண்டனை வழங்கியது
பஞ்சாப் - பதான் நீதிமன்றத்தில்...
இந்தியாவையே பரபரப்பிற்கு ஆளாக்கிய ஆசிபா பாலியல் வன் கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கு பஞ்சாப் மாநிலம் பதான் கோட் நீதிமன்றத்தில் ஜூன் 3 ஆம் தேதியோடு விசாரணை முடிந்தது. மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி தேஜ்வந்தர் சிங் 10.6.2019 அன்று தீர்ப் பளிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த வழக்கு அதிகளவு போராட் டத்தைத் தூண்டியது என்பதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன.
குற்றப்பத்திரிகையில், இஸ்லாமிய நாடோடி இன சிறுமி கடந்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி கதுவா மாவட் டத்தில் கடத்தப் பட்டு கோயிலுக்குள் 4 நாட்கள் வைத்து வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். சிறுமியின் தலை பாறையின் மீது கிடந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.
உடல் காட்டிற்குள் கிடந்தது என ஜூன் 17 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று நாள் கள் கழித்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தேன் என்று பெருமையுடன் கூறிய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டான். அதன் பிறகு கத்துவாவில் ஊருக்கு வெளியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து கோவில் பூசாரி, அவரது மகன், உள்ளூர் இந்து அமைப்பின் தலைவர், இரண்டு காவல் அதி காரிகள் உள்ளிட்ட பலரால் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்று தெரியவந்தது.
குற்றவாளியாக
கோவில் அர்ச்சகர்
இந்த வழக்கு தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை உண்டாக் கியது. இதனால் இந்த வழக்கு குற்றவியல் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட் டது. துணை ஆய்வாளர் மற்றும் தலைமை கான்ஸ்டபிள் இருவரும் ஆதாரங்களை அழிக்க முற்பட்ட குற்றத்திற் காக கைது செய்யப்பட் டனர். முக்கிய குற்றவாளியான ஓய்வு பெற்ற வருவாய்த் துறை அதிகாரியும் கோவில் அர்ச்சகருமான சஞ்சி ராம் 20.3.2018 அன்று சரணடைந்தார்.
சஞ்சி ராம், அவரது மகன் விஷால் மற்றும் அவரது நண்பர் ஆனந்த் தத்தா, சிறப்பு காவல்துறை அதிகாரிகளான தீபக் கஜூரியா மற்றும் சுரேந்தர் வர்மா ஆகியோர் பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுமியை கொலை செய்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் சான்றுகளை அழிக்க முற்பட்ட துணை ஆய்வாளர் ஆனந்த் தத்தா மற்றும் தலைமை கான்ஸ்டபிள் திலக் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பா.ஜ.க. அமைச்சர்கள் ஆதரவு
குற்றவியல் பிரிவின் விசாரணைப்படி கதுவா நகரில் இருந்து இஸ்லாமியர்களை விரட்டி அடிக்கவும் பயத்தினை உருவாக்கவும் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வும் பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை, வனவிலங்கு சிறுமியை கடித்து குதறியுள்ளது, ஆனால் முதல்வர் மகபூபா முப்தி இந்துக்கள் மீது விரோதமாக இருக்கிறார் ஆகவே பொய்யான குற்றச்சாட்டை இந்துக்கள் மீது வைக்கிறார் என்று கூறி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் காஷ்மீர் பாஜக அமைச்சர்கள் சவுத்ரி லால் சிங் மற்றும் பிரகாஷ் கங்கா ஆகியோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
கதுவா நீதிமன்றத்தில் ஏப்ரல் 9 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வந்தபோது நீதிமன்றத்தில் பாஜக வழக்குரைஞர் அணி பெரும் வன்முறையில் ஈடுபட்டு அதை தடுக்க முற்பட்டனர். இதனால் உச்ச நீதி மன்றம் இந்த வழக்கை ஜம்மு-காஷ்மீரில் இருந்து மாற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கின் வழக்குரைஞர் கள் ஜே.கே. சோப்ரா, எஸ்.எஸ் பாஸ்ரா மற் றும் ஹர்மீந்தர் சிங் ஆகியோரை உள்ளடக் கியது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் குர்தாஸ்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்ற விசாரணைகள் அனைத்தும் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது.
வழக்குரைஞர் அச்சம்!
கடந்த ஆண்டு கதுவா சிறுமியின் குடும் பத்தினரின் வழக்குரைஞர் தீபிகா ராஜ்வத் வழக்கு குறித்து வாதாடுவதில் இருந்து பின் வாங்கினார். தனக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் காவல் துறைக்கு எழுத்துமூலம் புகார் கொடுத்தும் காவல்துறை அலட்சியம் செய்ததால் இவ் வழக்கில் இருந்து வெளியேறுவதாகக் கூறி யிருந்தார்.
உலகை உலுக்கிய இந்தக் கொடூரத்தின் பின்னணியில் நியாய தர்மம், தார்மிகம் பேசும் பார்ப்பனர்களாக ‘இந்து’த்துவாவாதி கள் இருக்கிறார்கள். இவ்வளவுக் கேவலமான ஆபாச நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை இந்துத் தீவிரவாதிகள், வெறியர்கள் என்று சொன்னால் வெறிபிடித்த வேட்டை மிருகங் களாக விழுந்து பிடுங்குகிறார்கள் - குதறு கிறார்கள்.
இதில் மிக முக்கியமான - ஏன் அதி முக் கியமான தகவல் ஒன்று இருக்கிறது. பார்ப்ப னர்களைப் பற்றிக் கூறினால், இந்தத் தி.க. காரர்களுக்கு இதுதான் வேலை; சதா பார்ப்பனர்களைப் பற்றிப் பேசிக் கொண்டே இருப்பார்கள் என்று கதைக்கும் மனிதர்களை அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் இருக்கி றோம்.
இதோ ஒரு தகவல்; படித்தபின் ஆற அமர யோசியுங்கள் - யோசியுங்கள். அதற்குப்பின் தி.க.காரர்கள் யாரையேனும் பார்க்க நேர்ந் தால் உங்கள் கருத்தை மனந்திறந்து சொல்லுங் கள்! சொல்லுங்கள்!
இதோ அந்தத் தகவல்:
பெண் காவல்துறை அதிகாரியின் பேட்டி இதோ:
குற்றவாளிகளில் பெரும்பாலோர் பிராம ணர்களாக இருக்கிறார்கள். நாமெல்லாம் ஒரே ஜாதியை சார்ந்தவர்கள், ஒரே மதத்தை சார்ந்தவர்கள்... ஒரு முஸ்லிம் பெண்ணின் வன்புணர்வு கொலையில் நமது பிராமணர் களை குற்றவாளிகளாக காட்டக்கூடாதென பல வழிகளில் எனக்கு அழுத்தம் கொடுத் தார்கள்.
ஒரு போலீஸ் அதிகாரி என்ற முறையில் நான் அவர்களிடம் சொன்னேன்... ‘ எனக்கு மதமில்லை, என்னுடைய ஒரே மதம் எனது போலீஸ் யூனிபார்ம் தான்’ என்று. அவர்களது எல்லா தந்திரங்களும் எங்களிடம் எடுபடாத தால், அவர்களது குடும்பத்தார்களும், ஆதர வாளர்களும் மிரட்டவும் அச்சுறுத்தவும் செய்தார்கள்.
கம்புகளை எடுத்து வந்தார்கள். பயங் கரமாக முழக்கமிட்டார்கள். மூவர்ணக் கொடியோடு ஊர்வலங்கள் நடத்தினார்கள். பல கிராமங்களுக்கான சாலைகளை அடைத் தார்கள். கடைசியில் நீதிமன்றத்தையும் மறித்தார்கள். பிணை மனுக்கள் விசார ணைக்கு வரும்போதெல்லாம் வழக்குரை ஞர்கள் கும்பலாக முழக்கமிட்டு மிரட்டி அச்சுறுத்தினார்கள். நீதிமன்றத்திற்கு வெளி யேயும் அச்சுறுத்தும் கும்பல்கள் நிறைந் திருக்கும். சில காவல்துறையினரும் குற்ற வாளிகளுக்காகவே இருந்தார்கள். ஒரு விதமான சட்டமற்ற தன்மையையும் பீதி யையும் நிறைத்து வைத்திருந்தார்கள். ஆனால், அமைதியாகவும் உறுதியாகவும், அர்ப்பணிப்புணர்வோடு எங்கள் பணிகளை தொடர்ந்தோம். . நீதித்துறையின் மீது எங்க ளுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அனைத்துவிதமான ஆதாரங்களோடும் சாட்சிகளோடும் எங்களது விசாரணை நிறைவடைந்துள்ளதால், நீதி நிலைக்குமென நம்புகிறோம்... “
- ஆசிஃபா வன்புணர்வு கொலைவழக்கு சிறப்பு புலனாய்வு குழுவின் ஒரே பெண் அதிகாரியான திருமதி. சுவேதாம்பரி சர்மா அவர்களின் பேட்டிதான் இது.
இப்பொழுது என்ன சொல்லுகிறீர்கள்? பார்ப்பனர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் பச்சைப் பார்ப்பனராகவே கொஞ்சமும் கூச்ச மின்றி நடந்து கொள்கிறார்கள் என்பதுதான் கவனிக்கத்தக்கது. பார்ப்பனராக இருந்தாலும் இதுபோன்ற பெண் அதிகாரிகளைக் காண் பது அரிதினும் அரிதே!
- விடுதலை ஞாயிறு மலர், 15.6.19
No comments:
Post a Comment