Friday, 5 July 2019

பிராமணர்கள் கீழ்ஜாதிப் பெண்ணைக் கற்பழிப்பார்களா?” - நீதிபதி



1992ஆம் ஆண்டில் இதேபோல ஒரு நிகழ்ச்சி நடந்தது ராஜஸ்தான் மாநிலத்தில். அது நடந்த இடம் உயர்நீதிமன்றம் என்றால் ஆச்சரியப்படுவீர்கள்.

ராஜஸ்தான் அரசின் மகளிர் வளர்ச்சிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றியவர் ‘சச்சின்’ திருமதி பன்வாரி தேவி. குழந்தைத் திருமணங் களைத் தடுப்பது இவரின் தலையாய பணி.

ஆனால் அது ராஜஸ்தான் மாநிலமாயிற்றே. குழந்தைத் திருமணம் என்பது இந்தியாவிலேயே கொடி கட்டிப் பறக்கும் பூமியாயிற்றே.

அந்த அம்மையாருக்கு எதிர்ப்பு என்பது எரிமலையாகத் தானே இருக்கமுடியும்.

ராம்கர்ன் குர்ஜார் என்பவரின் ஒரு வயது குழந்தை மணத்தைத் தடுத்தார் அந்தச் சமுக சேவகி. அதன் கோர விளைவு என்ன தெரியுமா? அய்ந்து பேர் கொண்ட கும்பல் அந்தப் பெண் ணின் கணவருக்கு எதிரிலேயே  நிர்வாணப் படுத்தி  வன்புணர்ச்சி செய்தனர் (இப்படியும் மனிதப் பதர்கள்!).

இது நடந்தது 1992 செப்டம்பரில். என்ன கொடுமை - அந்தப் பெண் பக்கம் நிற்க வேண்டிய மகளிர் வளர்ச்சித் துறை அவரைக் கைவிட்டது - பிஜேபி அரசாயிற்றே!

கடும் எதிர்ப்புக்கிடையே ஓராண்டு கழித்துக் குற்றப்பத்திரிகை  தாக்கல் செய்யப் பட்டது. அதன்பிறகு 5 மாதங்கள் கழித்தே குற்றவாளிகள் கைது செய் யப்பட்டனர்.

குற்றவாளிகள் சாதாரணமான வர்களா? பிர்மாவின் நெற்றியில் பிறந்த பிராமணோத்தமர்கள்.

சமுகப் பிரஷ்டம் செய்யப்பட்டது யார் தெரியுமா? பாதிப்புக்கு ஆளான பன்வாரி தேவியே! 30 புதிய பஞ்சாயத்து உறுப்பினர்கள் வழக்கை வாபஸ் வாங்க வற்புறுத்தினர், அசரவில்லை அந்தப் பெண்.

கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டது 1994இல். வழக்கு இரகசியமாகவும் நடத்தப்பட வில்லை. அந்தப் பெண்ணை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே பகிரங்கமாக நடத் தப்பட்டது.

இதில் மறக்காமல் நினைவுபடுத்தப்பட வேண்டிய ஒன்று இருக்கிறது. வன்புணர்வு செய் யப்பட்ட அந்தப் பெண், மருத்துவ மனைக்குச் சென்றபொழுது பெண் மருத்துவர் இல்லை என்று சோதனை செய்ய மறுக்கப்பட்டது. ஒரு விதமாக 52 மணி நேரம் கழித்து மருத்துவ சோதனை.

இந்த அவலம் எல்லாம் ஒரு புறம் இருக் கட்டும். இப்பொழுது படிக்கப்போகும் பகுதிதான் முக்கியமானது.

“கீழ்ஜாதிப் பெண்ணான பன்வாரியை, உயர்ஜாதியினர் - அதுவும் பிராமணர் உட்பட எப்படி கற்பழிப்பர்?” என்று கேட்டார்களே பார்க்கலாம் டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள்.

(ஆதாரம்: Economic and Political Weekly 1995 November 25)..

உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருந்தாலும் பார்ப்பான் பார்ப்பானே!
- விடுதலை ஞாயிறு மலர், 15.6.19


1 comment: