சென்னை, மே 15- பள்ளிகளில் மாற்று சான் றிதழ் வழங்கும்போது ஜாதிப் பெயரை தலைமை ஆசிரியர்கள் குறிப்பிடாமல் அந்த பகுதியில் வருவாய்துறை வழங் கிய ஜாதிச் சான்றிதழை பின்பற்றுமாறு குறிப்பிட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பள்ளி மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்கள் (டி.சி) வழங்கும்போது அதில் ஜாதி குறித்து குறிப்பிடுவது சார்பான அறிவுரைகள் வழங்கி அர சாணை ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் ஏற்கெனவே பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல் முறைகளில் பள்ளிகளில் மாற்றுச் சான்று வழங்கும்போது ஜாதி என்ற பகுதியில் எந்த ஜாதியையும் குறிப் பிடாமல் வருவாய்துறை அளித்த ஜாதிச் சான்றிதழை பின்பற்றவும் என்று குறிப் பிடுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக் குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் தக்க வழி காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் வருவாய்துறை வழங்கும் ஜாதிச் சான்றே இறுதியானதும், ஏற் றுக்கொள்ளத்தக்கதும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர், பாதுகாவ லர் விருப்பப்பட்டால் அந்த மாணவர் களின் பள்ளி சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ்களில் ஜாதி இல்லை, சமயம் இல்லை என்று குறிப்பிடவோ அல் லது அந்த வினாக்களுக்கு எதிரான இடத்தில் காலியாக விடவோ மனு தாரர் விரும்பினால் சம்பந்தப்பட்ட வரின் விருப்ப கடிதத்தை பெற்றுக் கொண்டு அவர்கள் விருப்பப்படி சான்று வழங்கலாம் என தெரிவிக்கப் படுகிறது.
ஏற்கனவே பள்ளி கல்வி இயக்குநர் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளவாறு 2018--2019ஆம் கல்வியாண் டில் முடிந்து வெளியே செல்லும் மாணவ மாணவியர்களின் மாற்று சான்றிதழ் வழங்குவதற்கு அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கும் இது தொடர்பாக தக்க அறிவுரைகள் வழங்க அனைத்து மாவட்ட முதுன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படு கின்றனர். இவ்வாறு உத்தரவில் தெரி விக்கப்பட்டுள்ளது.
- விடுதலை நாளேடு, 15.5.19
No comments:
Post a Comment