Saturday, 11 June 2022

'சைவம்' ஒரு சர்ச்சை!


'சைவம்' ஒரு சர்ச்சை!

'சைவம்' என்றால், கறி (ஊன்), மீன், முட்டை போன்ற பொருள்களை சாப்பிடாமல் இருப்பதுதான் என்று சொல்லப்படுகிறது.

 'சைவம்' - பெயர் வரக் காரணம்

 தமிழ் நாட்டில் சைவ சமயத் தவர்கள் தான் இந்த முறையை தீவிரமாக கடைப்பிடிப்பவர்கள். அதனால் இந்த முறைக்கு 'சைவம்' என்ற பெயர் வந்துவிட்டது.

வட நாட்டில் வைணவம்' என்றால்தான் 'சைவம்' என்று பொருள்.

சைவம் என்றால் என்ன?

இந்த சைவ முறை, வீட்டுக்கு வீடு; நாட்டுக்கு நாடு, வேறுபடுகிறது.

வெளிநாட்டு வகையை சேர்ந்த 'லகான்' கோழி முட்டையை சில வீடுகளில் 'சைவ முட்டை' என்று
உண்கின்றனர்.

காஷ்மீர், மேற்கு வங்கம், இலங்கை போன்ற இடங்களில் மீனை 'ஜலப்புஷ்பம் என்ற பெயராலே 'சைவம்'' என்று பார்ப்பனர்கள் உட்பட உண்கின்றனர்.

இந்தியாவில் 'சைவம்' என்று சொல்லப்படும் 'பால்' பொருள்களை சீனாவில் 'அசைவம்' என்று ஒதுக்கி
விடுகின்றனர்.

ஆங்கிலத்தில் சொல்லப்படும் 'விஜிடேபுள்' என்பதன் பொருள் 'தாவர உணவு' என்பதாகும்.

பொதுவாக பார்க்கப்போனால்;  சைவ உணவு உண்ண வேண்டும் என்று சொல்லப்படுவதன் நோக்கம்; "எந்த உயிரையும் துன்புறுத்தவோ கொல்லவோ! கூடாது" என்பதுதான்.

விவேகானந்தர் கூற்று

விவேகானந்தர் ஒரு முறை கூறினார்;

எந்தவொரு உயிரையும் வஞ்சிக்காமல்; எந்த ஒரு மனி தனாலேயும் வாழ முடியாது' என்று.

முதல்வர் கலைஞர் கேட்ட கேள்வி!

ஊன் (அசைவ) உணவை விட்டு விட்டு; இப்பொழுது 'சைவ உணவையே' உண்பதாக கூறியுள்ள தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள்; இளமைக் காலத்தில் ஒரு முறை, கிருபா னந்தவாரியாரைப் பார்த்து. 'உயிரை கொல்லக்கூடாது என்கிறீர்களே!' கீரைத்தண்டை

(6-ம் பக்கம் பார்க்க)

5-ம் பக்கத் தொடர்ச்சி...

வேரோடு பிடுங்கி சமைத்து உண்கிறீர்களே! இது கொலை அல்லவா? என்று கேட்டாராம். 

கிருபானந்த வாரியார் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கூட: இன்றளவும் இதற்கு பதில் இல்லையே! என்று கூறியிருந்தார்.

எது சரி?

ஒரு மாட்டைக் கொள்றால் சுமார் 200 பேர் பங்கு போட்டு உண்ணலாம். ஆனால் 'சைவ உணவு" என்று சொல்லப்படும் முளைக்கீரைகளில் சுமாராக 200 அய் கொன்று ஒருவர் தான் உண்ண முடியும்.

ஒன்றை கொன்று 200 பேர் சாப்பிடுவது சரியா? 200 அய் கொன்று ஒருவர் சாப்பிடுவது சரியா? முதலில் கூறப்பட்ட வழியே சிறந்த வழி!

மனித இனம் வாழ பெரியார் கூறிய வழி!

''மனித இனப்பெருக்கத்தினால் உணவுப் பற்றாக் குறை ஏற்படுகிறது. இதை ஓரளவு தடுக்க வேண்டுமானால், 'இறைச்சி' உணவை உண்டு வந்தால்தான் முடியும். அதோடு சத்தான உணவும் இறைச்சிதான். ஆகையால் இறைச்சி உணவை அனைவரும் உண்ண வேண்டும்" என்று தந்தை பெரியார் கூறியுள்ளார்.

அதோடு மனித இனப்பெ ருக்கத்தினால் நிலப்பரப்பில் தாவர  உணவும், இறைச்சி உணவும் கிடைக்காமல் போகும்போது முழுக்க முழுக்க மனிதன் கடலினுள் இருக்கும் 'மீன்' இனத்தை நம்பித்தான் இருக்க முடியும்" என்றும் கூறியுள்ளார்.

பெரியார் தத்துவம்தான் இன்றைக்கும். நாளைக்கும் பொருந்திவரக் கூடியது.

உயிரினங்களை கொன்று தின்னாத மனிதனே உலகில் கிடையாது.

ஏதாவது ஒரு வகையில் உயிரினங்களைக் கொன்று கொண்டுதான் இருக்கிறனர்.

. 'தயிர்' எனப்படும் 'பால்' பொருள், "ஈஸ்ட்டு' எனப்படும் பாக்டீரியாவால்தான் உண்டாக்கப்படுகிறது. 
தயிரை சாப்பிடும்போது அதில் உள்ள 'ஈஸ்ட்டு'களையும் விழுங்கி சீரணித்து விடுகிறோம்.

பார்ப்பனர்கள் அனைவரும் இதைத்தான் செய்கின்றனர். 'சைவ' வேடம் போடுகிறவர்களை மூட்டை பூச்சி, கொசு கடித்தால் சும்மாவாகவா இருக்கிறார்கள்?

'தோல்', பொருள்களைப் பயன்படுத்தாதவர்கள் யார்? தோள்பை, பணப்பை (மணி பர்சு), கைப்பை, காலணிகள். உடைகள் என்று வகைவகையாக பயன்படுத்துகிறார்களே! 

'ஷூ' கம்பெனிகளை பலபார்ப்பனர்கள் வைத்துக் கொண்டுள்ளனரே! 'ஷூ'வுக்கு பாலிஷ் தயார் செய்யும் கம்பெனிகளைக்கூட வைத்துள்ளனரே! 

இனிதான 'தேன்' எப்படி கிடைக்கிறது? தேனீக்களின் எச் சிலுடன் பூவின் தேன் கலக்கப்பட்டு தேன் கூட்டில் உமிழப்படுகிறது. அந்த எச்சிலை தான் உண்கின்றனர். அப்பொழுது எச்சில் தீட்டு என்ன ஆனது!

பட்டுப் பூச்சியின் எச்சில் தான் பட்டுத்துணி, பட்டுப் பூச்சிகளை சுடு நீரில் கொன்று தானே பட்டாடைகள் தயாரிக்கப்படுகின்றன. அப்பொழு தெல்லாம் ஏன் உயிர்க் கொலை தெரிவதில்லை!

சைவத்தை யாராலும் கடைப்பிடிக்க முடியாது!. எல்லோரும் சைவ வேடதாரிகளே! சைவர்கள் அல்ல!

- செ.ர.பார்த்தசாரதி

(21.9.97, விடுதலை ஞாயிறு மலர், பக்கம் -5,6)

No comments:

Post a Comment