Monday 10 February 2020

தமிழர் பண்பாட்டு இயக்கம் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில்கள்( பார்ப்பனர்- ஆரியர்- திராவிடர்)

தமிழர் பண்பாட்டு இயக்கம் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில்கள்
1. கைபர் - போலன் கணவாய் வழியாக வந்தது ஆரியர்களா ? பார்ப்பனர்களா ? 
தமிழில் பார்ப்பனர் எனப்படும் ஆரியர்.
2. தமிழைச் சிதைத்தது ஆரியப் பிராமணக் கூட்டமா ? பார்பனக் கூட்டமா ?
ஆரியப் பார்ப்பனக் கூட்டம்.
3. பார்ப்பனர் எனும் குலப்பிரிவு எங்கு, எப்போது தோன்றியது ? 
தமிழர்கள் பார்த்துவந்த இளைஞர் சார்ந்த சேர்த்துவைக்கும் தொழிலை பறித்துக்கொண்டு அதனைவைத்து புரோகிதத் தொழிலை செய்துகொண்டு வரும் ஆரியக் கூட்டமே பார்ப்பனக் குலம்.
4. தொழில் அடிப்படையில் தோன்றிய குலப்பிரிவுகளை, கடவுளின் பெயரால் சாதியாய் நிலை நிறுத்தியது ஆரிய (திராவிட) வந்தேறிக் கூட்டமா ? பார்ப்பனர் கூட்டமா ? 
ஆரிய (பார்ப்பன) வந்தேறிக் கூட்டம் 
5. பழங்காலத்தில் இந்தியா முழுவதும் பரவிய மக்கள் கூட்டம் பேசிய மொழி எது ? தமிழ் மொழியா ? திராவிட மொழியா ?
திராவிட மொழி (பழந்தமிழ்)
6. உங்களின் கருத்துப்படி திராவிடர்கள் தமிழர், தமிழர்தான் திராவிடர்கள் என்றால், மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் என்றான பின்பும் இன்னும் தமிழர்களைத் திராவிடர்கள் என்று அழைப்பதின் உள்நோக்கம் என்ன ?
திராவிடர்களின் ஒரு பிரிவினரே இன்றைய தமிழர்கள், அதனால் தமிழர்கள் திராவிடர்கள். தமிழர்கள் என்று சொல்லக்கூடாது என்று சொல்லவில்லை, நீங்கள் தான் திராவிடர்கள் என்று சொல்லக்கூடாது என்று சொல்கிறீர்கள். ‘தமிழ் நாடு’ என்று பெயர் வைக்க சொன்னவர் தந்தை பெரியார். திராவிடர் என்ற பெயரை எந்த பார்ப்பனரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். பாதுகாப்புக்காக தமிழர் என்று சொல்லிக்கொள்ள தயாராக இருப்பார்கள். அதனால் தான் தந்தை பெரியார்.இயக்கமாக கட்டமைக்கும் போது பாதுகாப்பு கருதி பார்ப்பனர்கள் அஞ்சும் ‘திராவிடர்’ என்ற பெயரை பயன்படுத்தினார். தமிழர் என்று பார்ப்பனர்கள் பாதுகாப்புக்காக சொல்லிக்கொண்டாலும் தமிழை ‘நீசபாஷை’ என்று சொல்பவர்கள் தான் பார்ப்பனர்கள். ஆட்சிமொழிக் காவலர் இராமலிங்கனாரும, இராமானுஜ தாத்தாச்சாரியும் இதை உறுதிப்படுத்தியுற்றனர். 
7. தமிழ்நாட்டுக் கோயில்களில் பூசாரியாய் இருப்பவர்களில் மிகப் பெரும்பான்மையோர் தெலுங்கு, மராட்டி மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட ஆரியப் பிராமணர்களா ? தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பார்ப்பனர்களா ?
தமிழர் அர்ச்கராக வரக்கூடாது என்பதில் எல்லாப் பார்ப்பனர்களும் குறியாகத்தானே உள்ளனர். தமிழனை தாழ்ந்த பிறவி என்றல்லவா சொல்கின்றனர்.
- செ.ர.பார்த்தசாரதி
- 10.2.2013ல் எனது முகநூல் பதிவு

No comments:

Post a Comment