Sunday 12 February 2017

‘அரசு அருங்காட்சியகம்’ சென்னை



1846 ஆம் ஆண்டில் மதராஸ் கல்விக் கழகம்(Madras Literary Society)  தென் னிந்தியாவின் வரலாற்று நினைவுச் சின் னங்களைப் பட்டிலிட்டு பார்வைக்கு வைக்கும் வகையில் சென்னையில் அருங் காட்சியகம் ஒன்று வேண்டும் என அன் றைய பிரிட்டீஷ் இந்திய அரசின் ஆளுநர் சர் ஹென்றி பாட்டிங்கர் என்பவரிடம் கோரிக்கை வைத்தது, சர் ஹென்றி பாட் டிங்கர் தொல்பொருள் ஆய்வாளரும் கூட. அதில் அதிக ஆர்வத்துடன் ஈடுபாடு கொண்டவர்
அவர் உடனே லண்டனில் இருந்த பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியன் தலைமை நிர்வாகியிடமிருந்து இதற்கான அனுமதி யைப் பெற்று அருங்காட்சியகம் அமைக் கும் பணியைத் துவங்கினார்.  இந்த அருங்காட்சியகத்தின் முதல் பொறுப்பா ளராக மருத்துவரான எட்வார்ட் பல்ஃபர்(Edward Balfour) என்பவரை நியமித்தார்.
1851 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி அரசு அருங்காட்சியகம் திறந்து வைக்கப்படுவது பற்றிய அரசு ஆணை முதன்முதலாக வெளியிடப்பட்டது. மத ராஸ் கல்விக் கழகத்தின் 1100 நிலவியல் மாதிரிகளுடன், கல்லூரிச் சாலையில் இருந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டை கல் லூரியின் முதலாம் மாடியில் இந்த அருங் காட்சியகம் அமைக்கப்பட்டது. அருங் காட்சியகம் விரிவடைந்து வந்த நிலையில், அந்தக் கட்டிடத்தில் இட வசதி இன்மை யால் எழும்பூர் பாந்தியன் பில்டிங் என்ற கட்டிடத்தில் 1854 ஆம் ஆண்டு இடம் மாற்றப்பட்டது.
1854 ஆம் ஆண்டில் ஒரு புலியும், சிறுத்தையும்  மக்கள் பார்வைக்காக அருங் காட்சியகத்தில் வைக்கப்பட்டன. இதனால் அருங்காட்சியகத்துக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மருத்துவர் பல்ஃபர், கர்நாடக நவாப்பிடம் இருந்த காட்டு விலங்குகளை அருங்காட்சியகத் துக்கு அனுப்புமாறு கேட்டுப் பெற்றுக் கொண்டார்.
1856 ஆம் ஆண்டு முதல் அரைப் பகுதியளவில் அருங்காட்சிய கத்தில் விலங்கினக் காட்சிச் சாலையில் 360 விலங்குகள் இருந்தன. 1863 ஆம் ஆண் டில் மாநகரசபை பொறுப்பேற்று விலங்கினக் காட்சிச்சாலையை  வேறி டத்துக்கு மாற்றியது.
1909 ஆம் ஆண்டு அக்டோபரில் நீர்வாழ்விலங்குகள் காட்சியகமும் (Aquarium) அரசு அருங்காட்சியகத்தின் கீழ் திறந்துவைக்கப்பட்டது. மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த இக் காட்சியகத்தை 1910 ஆம் ஆண்டு ஏப்ரலில் மீன்வளத்துறை பொறுப்பேற்றுக் கொண் டது. உலகப்போர் நடைபெற்ற காலத்தில் பராமரிப்பு இன்றிப் போன வனவிலங்கு காட்சிச்சாலை மூடப்பட்டு, மீண்டும் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது,
எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த  அருங்காட் சியகத்தில் தற்கால கலைப் பொருட்கள் முதல் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட கலைப் பொருட்கள் வரை இடம் பெற்றுள்ளன.
தென் இந்தியாவின் நூற்றாண்டுக்கால கல்வெட்டு, செப்பேடு மற்றும் பல்வேறு நினைவுச் சின்னங்கள் பட்டியலிடப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பல்வேறு பழங்கால வெண்கல மற்றும் இதர உலோக சிற்பங்கள், விலங்கியல் மற்றும் புவியியல் பகுதிகள் பார்வையாளர்களின் கருத்தைக் கவர்வதாக உள்ளன. அமராவதி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலைகள், அவரது வாழ்க்கையைச் சித்தரிப்பதாக உள்ளன.
சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள விலங்குகளின் எலும்புப் படிமங்கள்!
இங்குள்ள தேசிய கலைப் பொருள் பகுதியில் 10 முதல் 13ஆம் நூற்றாண்டு வரையான காலத்தைச் சேர்ந்த வெண்கலப் பொருட்கள், 16, 18ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த முகலாய ஓவியங்கள், ராஜஸ்தானி மற்றும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தட்சிண கலைப் பொருட்கள், பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கைவினைப் பொருட்கள் ஆகியவை கண்ணைக் கவர்வதாக அமைந்துள்ளன. தேசிய கலைப்பொருள் பகுதி அமைந்துள்ள கட்டடம் சிவப்பு கற்களால் கட்டப்பட்டது. இங்குள்ள பொருட்கள் மட்டுமல்லாமல் இந்தக் கட்டடமே ஒரு கலைப்பொருளாக திகழ்கிறது.
1984 ஆம் ஆண்டு சனவரி 25 ஆம் தேதி சமகால ஓவியங்களுக்கான புதிய கட்டடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டு இருப் பனவற்றுள் ராஜா ரவிவர்மாவின் ஓவி யங்களும் அடங்கும். 1988 ஆம் ஆண்டில் ஒரு சிறுவர் அருங்காட்சியகமும் திறந்து வைக்கப்பட்டது.இங்குள்ள தலைமைக் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் சிற்பங்கள், இந்துச் சிற்பங்கள், அமராவதி, சமணம், பொது விலங்கியல், பறக்கும் விலங்குகள், வெளிநாட்டு விலங்குகள்,
ஊர்வன, பற வைகள், பாலூட்டிகள், பொது நிலவியல் போன்றவற்றுக்கான 13 காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேல்தளத்தில் தபால்தலைகள், முறைமைசார் தாவரவியல், பொருளாதாரத் தாவரவியல், பவழப் பாறைகள், முதுகெலும்பிலிகள், மீன்கள், பறவைகள், பொருளாதார நிலவியல், கல்வெட்டியல், சிந்துவெளி நாகரிகம், சிற்பம் என்பவற்றுக்கான காட்சிக்கூடங்கள் உள்ளன.
முன் கட்டடத்தில், மானிடவியல் பகுதி யில் படைக்கலங்கள், வரலாற்றுக்கு முந்தி யகாலம், இனவியல், இசைக்கருவிகள், நாட்டார் கலைகள் என்பவற்றுக்கான காட்சிக்கூடங்களும்,தொல்லியல் பகுதியில் தொழில்துறைக் கலைக்கான காட்சிக் கூடமும் அமைந்துள்ளன.வெண்கலக் காட்சிக்கூடக் கட்டடம் தொல்லியல், நாணயவியல், வேதிக் காப்பு ஆகிய பிரிவுகளில் வைணவ, சைவ, பவுத்த, சமண மதங்களைச் சார்ந்த வெண்கலச் சிற்பங் களுக்கான காட்சிக்கூடங்களும், நாண யங்கள், பதக்கங்கள் என்பவற்றுக்கான காட்சிக்கூடங்களும் உள்ளன.
சிறுவர் அருங்காட்சியகத்தில் நாகரிகம், சிறுவர் பகுதி, அறிவியல், போக்குவரத்து, தொழில்நுட்பம், பல்வேறுவகை ஆடை களுடன் கூடிய பொம்மைகள் ஆகிய வற்றுக்கான காட்சிக் கூடங்கள் காணப் படுகின்றன.
தேசிய ஓவியக் காட்சிக்கூடக் கட்டடத்தில், இந்திய மரபு ஓவியப் பிரிவில் இந்தியச் சிற்றோவியங்கள், தஞ்சாவூர் ஓவியம், பிற இந்திய மரபு ஓவியங்கள் என்பவற்றுக்கான காட்சிக்கூடங்கள் உள்ளன.
சமகால ஓவியக்காட்சிக்கூடக் கட்டடம் பிரித்தானிய ஓவியங்களுக்கும், தற்கால ஓவியங்களுக்குமான காட்சிக்கூடங்களைக் கொண்டுள்ளது.
-விடுதலை ஞா.ம.,31.12.16

No comments:

Post a Comment