Sunday, 25 July 2021

சென்னை மாநகரம் மீட்கப்பட்டது ராஜாஜியாலா?

 ‘புளுகு’ மலருக்கு பதிலடி!

சென்னை மாநகரம் மீட்கப்பட்டது ராஜாஜியாலா?

21.7.2021 நாளிட்ட ‘தினமலரி’ல் (பக்கம் 11) நாஞ்சில் நாடு கண்ட நம் டி.வி.ஆர். எனும் தலைப்பில் சிறப்புக் கட்டுரை ஒன்று தீட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு செய்தி பகிரப்பட்டுள்ளது.

சென்னையை - ஆந்திராவின் தலைநகராக்குவது குறித்த பிரச்சினை அது. என்ன எழுதுகிறது தினமலர்?

ஆந்திரர்களின் ஆர்ப்பாட்டங் களுக்கும், போலிக் கண்ணீருக்கும் மத்திய சர்க்கார் பணிந்து சென்னையை ஆந்திராவின் தற்காலிகமாக தலைநகராக்கத் தீர்மானித்திருக்க ராஜாஜி ஒருவர் முழு பலத்தோடு எதிர்த்ததன் பலனாக, “பகீரதன் கங்கையைக் கொண்டு வந்தது போல, சென்னையைத் தமிழர்களுக்கு கொண்டு வந்தார்” என்று தினமலரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் உண்மை நிலை என்ன என்பது விளக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

சென்னை தலைநகரப் பிரச்சினை தொடர்பாக நீதிபதி வாஞ்சு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

நீதிபதி வாஞ்சு தன் பணியை 30.12.1952இல் தொடங்கினார். 7.2.1953 இல் வாஞ்சு குழுவின் அறிக்கையை இந்திய அரசிடம் ஒப்படைத்தனர். அவர் தம் பரிந்துரையில்,சென்னை ஆந்திராவின் தற்காலிகத் தலைநகராக 3 முதல் 5 ஆண்டுகள் வரை இருக்கலாம். ஆந்திரர்களுக்குச் சென்னையின் மீது எவ்வித உரிமை யும் இல்லை. விருந்தாளிகளைப் போல அல்லது வாடகைதாரர்களைப் போல அவர்கள் இருக்கலாம். அந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் அவர்கள் சென்னையில் இருக்கக் கூடாது. அதற்குள் தாங்கள் மாநிலத்தில் புதிய தலைநகரை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இமாச்சல பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் இருந்தபோதும், இமாச்சல அரசு சிம்லாவின் மீது எந்த உரிமையையும் கொண்டாட முடியவில்லை” என்பதை வாஞ்சு உதாரண மாகக் காட்டியுள்ளார். இது என் சொந்தக் கருத்து என்றும் கூறியுள்ளார். (வாஞ்சுகுழு அறிக்கை பக். 5)

“சென்னையைத் தற்காலிகத் தலைநகராகக் கொடுத் தால் அதன் பிறகு ஆந்திரர்கள் போகமாட்டார்கள் என்று சென்னையில் உள்ள மற்றவர்கள் அச்சப்படத் தேவையில்லை” என்றும் கூறியுள்ளார். “ஆந்திர அரசின் அனைத்து அலுவலகங்களையும் உடனடியாக மாற்றிக் கொள்வதில் சிரமம் இருக்கும். சென்னையிலேயே ஆந்திர உயர்நீதிமன்றம் தற்காலிகமாக 5-10 ஆண்டுகள் வரை இருக்கப் பரிந்துரை செய்கிறேன்.” (பக். 8) அதற்கு உதாரணத்தையும் வாஞ்சு காட்டியுள்ளார். “ஒடிசா 1936இல் பிரிந்தாலும் அதனுடைய உயர்நீதிமன்றம் 1947 வரை பீகாரிலேயே இருந்தது” என்கிறார். (பக். 9) “ஆந்திராவின் தலைநகரமும் ஆந்திராவின் உயர்நீதிமன்றமும் உடனடியாகச் சென்னையை விட்டுப் போகவேண்டும் என்று ஆந்திரர் அல்லாத வர்கள் கூறுகிறார்கள். அது உடனே முடியக் கூடிய காரியமல்ல”. (பக். 10)

“சென்னை மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, சட்டக்கல்லூரி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 36 இடங்களை 25 ஆண்டுகளுக்கு ஆந்திரர்களுக்கு ஒதுக்கித்தரவேண்டும். அந்த இடங்களுக்கான மாணவர் பெயர்ப் பட்டியலை ஆந்திர அரசு கொடுக்கும்“. (பக். 12) இக்குழு பெல்லாரி மாவட்டத்தைக் கருநாடகாவுடன் சேர்க்கப் பரிந்துரை செய்தது. (பக். 2) மற்ற 11 மாவட்டங் களைக் கொண்ட ஆந்திர மாநிலம் அமைத்துக் கொள்ள வழிவகுத்தது.சென்னை நகருக்கு ஈடாக ரூ. 2.3 கோடியை புதிய ஆந்திர அரசுக்குக் கொடுக்கப் பரிந்துரை செய்தது. (பக். 26)`

சென்னை பிரமுகர்கள் ஆலோசனை

“அனைத்துக் கட்சிக்கூட்டம், வாஞ்சு அறிக்கையைப் பற்றிப் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கும் சேதிகள் அநேகமாக உண்மையென்றே விஷயம் தெரிந்த மக்களிடையே பேசப்படுகிறதை உத்தேசித்து அதைக் கண்டித்து டில்லி முதன் மந்திரிக்குக் (பிரதமர்) கண்டனம் அனுப்புவதற்காக சென்னை மேயர் செங்கல்வராயன் அவர்கள் முன் முயற்சியின் மீது கார்ப்பரேஷன் தியாகரா யர் கட்டிடத்தில் 13.02.1953இல் மாலை 4 மணிக்கு சென்னைப் பிரமுகர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடந்தது.

அக்கூட்டத்திற்கு தந்தை பெரியார்,  சர்.முகமது உஸ்மான்,  மேயர் டி.செங்கல்வராயன், மாஜி மந்திரிகள், எம்.பக்தவச்சலம், டி.பரமேஸ்வரன், எஸ்.முத்தையா முதலியார், மாஜி மேயர்கள், ராமநாதன் செட்டியார், ராதா கிருஷ்ணபிள்ளை, சிக்யதுல்லா சாயுபு, மாஜி அய்க் கோர்ட் ஜட்ஜ் பி. பாஷ்யம் அய்யங்கார், மாஜி அட்வகேட் ஜெனரல் குட்டி கிருஷ்ணமேனன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உபதலைவர் என்.எல். கரையாளர், பார்லிமென்ட் மெம்பர் பி.எம். லிங்கேஸ்வரன், எம்.எல்.சி., ம.பொ.சிவஞான கிராமணி, கே. விநாயகம், டாக்டர் வி.கே. ஜான், எம்.பி. தாமோதரன், லக்கபராய், நஜீர் உசைன், தெ. பொ. மீனாட்சி சுந்தரம், மீனாம்பாள் சிவராஜ், செரியன் ஆகிய தமிழ், கேரள, கருநாடக நாட்டுப் பிரதிநிதிகளான முக்கியஸ்தர்கள் அழைக்கப்பட்டு இருந்தார்கள். வந்திருந்தவர்கள் யாவரும் கலந்து ஆலோசித்து, பண்டித நேருவுக்கு ஒரு அறிக்கை அனுப்புவது என்றும், அதன் சுருக்கத்தைத் தந்தியில் உடனே அனுப்புவது என்றும், ஒருமனதாக முடிவு செய்தனர். அதில் மேற்கண்டவர்கள் கையெழுத்திட்டனர். பிறகு 16ஆம் தேதி திங்கட்கிழமை திருவல்லிக்கேணி கடற்கரையில் ஒரு சென்னை ராஜ்யப் பொதுக்கூட்டம் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றி டில்லிக்கு அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்திய சர்க்காருக்கு வேண்டுகோள்!

அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் முடிவு:-நீதிபதி வாஞ்சு இந்திய சர்க்காருக்கு ஆந்திர ராஜ்ய அமைப்புப் பற்றிச் செய்துள்ள சிபாரிசுகளைக் குறித்துப் பற்பல கவலைகளைக் கொடுக்கக்கூடிய தகவல்கள் பத்திரிக்கை மூலமாகவும் வெளிவந்திருக்கின்றன. ஆந்திர ராஜ்ய அமைப்பில் மிகவும் முக்கியமான அம் சங்களைப் பற்றிய மேற்கூறிய தகவல்கள் எங்களுக்கு மிகுந்த கவலையைக் கொடுத்திருக்கின்றன. ஆந்திர  மாநிலத்தின் தலைநகரமானது. உயர்நீதி மன்றமாவது தற்காலிக ஏற்பாடாகக்கூட சென்னை நகரத்தில் இருக்கக்கூடாதென்று மீண்டும் வற்புறுத்திக் கூற விரும்புகிறோம். ஆந்திரத் தலைநகரையும், உயர்நீதி மன்றத்தையும் சிறிது காலத்திற்குச் சென்னை நகரில் விருந்தாளியாகக்கூட இருப்பதற்கு அனுமதிப்பதால் அநாவசிய மான தொல்லைகளும் சர்ச்சைகளும் ஏற்படும். இதனால் நிர்வாகக் கஷ்டங்களும் தொல்லைகளும் ஏற்படும். ஆந்திர ராஜ்ய அமைப்பு மிகவும் சவுகர்யமாகவும் நேச மனப்பான்மையாகவும் அமல் நடத்தப்பட வேண்டியது அவசியம். ஆகவே ஆந்திரத் தலைநகரை எந்த வகையிலும் சிறிது காலத்திற்குக் கூட சென்னையில் வைத்ததால் அநாவசியமான தகராறுகள், சர்ச்சைகள் ஏற்படுகிறது. ஆகவே பாக்கியுள்ள சென்னை ராஜ்யத்தின், தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் சொற்பகாலத்திற்குக் கூட ஆந்திரத் தலைநகரமோ உயர்நீதி மன்றமோ சென்னை நகரத்தில் இருக்கக் கூடாதென்று ஏக மனதாக அபிப்ராயப்படுகிறார்கள். ஆந்திரர்களில் சிலர் இன்னும் சென்னை நகரத்தில் பாத்தியதை கொண்டாடிக் கிளர்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஆந் திரத் தலைநகரைச் சென்னை நகரில் ஏற்படுத்துவது மிக வும் ஆட்சேபகரமானது. சென்னை நகரம் பாக்கியுள்ள சென்னை மாநிலத்தின் தலைநகராக இருக்கும். ஆகவே பலமான எதிர்ப்பை அலட்சியம் செய்து, ஆந்திர தலை நகரையும், உயர்நீதி மன்றத்தையும், தற்காலிகமாகக்கூட சென்னை நகரத் தில் ஏற்படுத்துவதென்று முடிவு செய்யா மலிருக்குமாறு இந்திய சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறோம் என்று தீர்மானிக்கப்பட்டது. (‘விடுதலை’, 14.02.1953)

தந்தை பெரியார் வேண்டுகோள்

சென்னை மேயர் தலைமையில் 13.02.1953இல் கூடிய கூட்டத்தில் தந்தை பெரியார் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கையொப்பமிட்டு பிரதமர் நேருவுக்கு அன்றே உடனடியாகத் தந்தி அனுப்பப்பட்டது. விரிவான கோரிக்கை விண்ணப்பத்தையும் அனுப்பி வைத்தார்கள்.சென்னை நகரமேயர் ஏற்பாடு செய்து திருவல்லிக்கேணிக் கடற்கரையில் 16.02.1953 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் பேசியதாவது: மாட்சிமிக்க மேயர் அவர்களே, தாய்மார்களே, தோழர்களே, நான் உங்கள் ஆரவாரத்திற்கு நன்றி செலுத்துகிறேன்.ஆனால் இந்த ஆரவாரத்திற்கு ஏற்ப நீங்கள் இப்போது என்னிடம் உங்களுக்கு உற்சாகமும் உணர்ச்சியும் ஊட் டத் தகுந்த காரசாரமான பேச்சை எதிர்பார்த்து ஏமாற்ற மடையக் கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் இன்று என் பேச்சு அப்படி இருக்காது. இந்தக் கூட்டம் பல கருத்துக் கட்சிகள் கூட்டமாகும். இதில் ஆளும் கட்சியும் அங்கம் வகித்திருக்கிறது. காங்கிரஸ் கலந்துகொண்ட இந்தக்கூட்டத்தில் எனக்குத் தலை காட்டவும் பேசவும் கிடைத்த ஒரு வாய்ப்பை நல்ல வாய்ப்பென்றே கருதுகிறேன். ஆதலால் இந்தக் கூட்டத் தின் தன்மைக்கு ஏற்றபடிதான் நான் பேசுவேன். வேறு எதையாவதைப் பேசி அவர்களுக்குத் தொந்தரவோ, சங்கடமோ ஏற்படும்படி பேசமாட்டேன். அப்படி எதை யாவதை நான் பேசிவிட்டால் அப்புறம் அவர்கள் என் னைக் கூப்பிட மாட்டார்கள். அன்றியும் எல்லோருடனும் சேர்ந்து எல்லோருக்கும் ஏற்ற முறையில் நமது குறை பாடுகளுக்கு ஒரு பரிகாரம் செய்ய வாய்ப்புக் கிடைத்தால் அது நமக்கு எவ்வளவு பெரிய இலாபம் என்று எண்ணிப் பாருங்கள்.நம் காரியம்: நாம் செய்ய வேண்டிய - செய்யப் போகும் காரியம் இருக்கவே இருக்கிறது. அதை எடுத்துச் சொல்ல நமக்கு வேறு பல மேடைகளும் இருக்கின்றன. சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. நாம் கடிவாளம் இல்லாத குதிரைகள். மற்றவர்கள் எல்லோரையும் அப்படி எதிர் பார்க்கக் கூடுமா?இந்தக் கூட்டம் நான்கு நாட்களுக்கு முன் மேயர் காரியாலயத்தில் பல பிரமுகர்கள் கூடிப்பேசி, ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காகவே கூட்டப்பட்ட கூட்ட டமாகும். ஆகவே அந்தக்காரியம் நடைபெறும் அளவுக்கே நமது எல்லை இருக்க வேண்டும்.ஆதலால் நான் மேயர் அவர்களின் தீர்மானத்தை ஆதரிக்கிற அளவுக்குப் பேசுகிறேன் என்றார்.

சென்னை நகரம் தமிழ்நாட்டுக்குரியதே என்பதை வலியுறுத்தி 1.2.1953 அன்று பிற்பகல் சென்னை ராபின்சன் பூங்கா அருகிலிருந்து புறப்பட்டன. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் திரண்ட அந்த ஊர்வலத்தில் தந்தை பெரியார் அமர்ந்து வர சென்னை கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது - சென்னை தமிழ்நாட்டுக்கு உரியது என்றும், மொழிவாரி மாநிலம் என்று ஆன பிறகு நிர்வாக வசதிக்காக ஆந்திராவோடு இணைக்கப்பட்டுள்ள தமிழ்ப்பகுதி தமிழ்நாட்டோடு இணைக்கப்பட வேண்டும் என்றும் தந்தை பெரியார் வலியுறுத்திப் பேசினார்.

15.2.1953 சென்னையில் கூடிய திராவிடர் கழக மத்திய கமிட்டியிலும், சென்னையில் தற்காலிகமாக ஆந்திர உயர்நீதிமன்றத்தை வைத்துக் கொள்ளலாம். அரசு அலுவலகங்களையும் சென்னையில் தற்காலிகமாக வைத்துக் கொள்ளலாம் என்று நீதிபதி வாஞ்சு குழுவின் அறிக்கையை கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக உரிமை பாதுகாப்பு நாள் (22.2.1953) தமிழ்நாடெங்கும் கொண்டாடுவது என்று குடியரசு தலைவர் ராஜேந்திரபிரசாத்துக்கு கறுப்புக் கொடி கட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

இவ்வளவு நிகழ்வுகளும் (அனைத்துக் கட்சிக்கூட்டம் உட்பட) தலைநகரைக் காப்பாற்றுவதற்காக நடைபெற்றுள்ளன. இவற்றுள் எதிலும் தலைகாட்டாத ராஜாஜிதான் சென்னையை மீட்டாராம் - சொல்லுகிறது பூணூல் மலரான ‘தினமலர்’. (21.7.2021, பக்கம் 11)

ஒரு எழுபது ஆண்டுகளுக்குள் நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்வையே தலைகீழாக புரட்டி, பார்ப்பனர்களால் அவர்களின் ஊடகங்களால் திரிக்க முடிகிறது என்பதை கவனிக்க வேண்டும். புளுகுப் பூணூல்கள் எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Thursday, 22 July 2021

மதுரை கோயில் நுழைவும் வைத்தியநாதய்யரும்

 

(ஆலயப்பிரவேசத்தின் முன்னோடி - மதுரை வைத்தியநாதய்யர் என்று ஆர்.எஸ்.எஸ். வார இதழான விஜயபாரதம் நீட்டி முழங்குகிறது உண்மையில் நடந்தது என்ன? ஆலய பிரவேச உரி மைக்கான போராட்டங்கள் வைத்தியநாத அய்யருக்கு முன்பே யாரால் எப்பொழுதெல்லாம் நடத்தப்பட்டு உள்ளன என்பதை விளக்குகிறது இதோ ஆதாரம்)

கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில் 1927 இல் சுமார் 1000 பேர் அனைத்து ஜாதியினருடன் மயிலாடு துறை மயூரநாதசுவாமி கோயிலில் நுழையச்சென்றனர். நுழைவாயிலையும் கருவறையையும் கோயில் நிர்வாகி கள் பூட்டிவிட்டபோதிலும் பக்கவாட்டுக் கதவுகள் வழியாகச் சென்று மணிக்கதவம் தாழ் திறவாய்' என்ற திருநாவுக்கரசர் பாடலைப் பாடினர். 12.8.1928இல் திரு வானைக்கோயிலிலும் 25.6.1928இல் திருச்சி மலைக் கோயிலிலும் அத்தகைய முயற்சிகள் நடத்தப்பட்டன (மங்கள முருகேசனின் "சுயமரியாதை இயக்கம்",

229-230). ஈரோட்டில் உள்ள ஈசுவரன் கோயிலுக் குள் சா.குருசாமி தாழ்த்தப்பட்ட தோழர்களை அழைத் துச் சென்றார். அவர்கள் கோயில் வளாகத்துக்குள் வைத்துப் பூட்டப்பட்டனர். அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது (குடிஅரசு, 21.4.1929 : குவெ, 160).

நீதிக்கட்சித் தொண்டர்களும், சுயமரியாதை இயக்கத்தினரும் நடத்திய கோயில் நுழைவுப் போராட்டங்கள் இன்றுவரை பலராலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன. அதற்கு மாறாக, 1939 இல் தமிழக மெங்கும் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் காங் கிரசைத் தனிமைப்படுத்தியிருந்த நேரத்தில், எம்.சி. ராஜா கொண்டு வந்த கோயில் நுழைவு உரிமை மசோ தாவை ராஜகோபாலாச்சாரி அமைச்சரவை ஒழித்துக் கட்டியிருந்த சமயத்தில், அப்போது நடக்கவிருந்த மதுரை, ராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தல்களில் வெற்றிபெறுவதைக் கருத்தில் கொண்டு, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் யாருக்கும் தெரியாமல் இரவு நேரக் கடைசிப் பூசைக்குப் பிறகு சில தாழ்த்தப் பட்டவருடன் நுழைந்து தேசிய பத்திரிகைகளில் பெரும் ஆரவாரம் * மிக்க அங்கீகாரம், ராஜகோபாலாச் சாரியிலிருந்து காந்திவரைதேசியத் தலைவர்களின் புகழ்ச்சி ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டார் பெரியாரால் குள்ள நரி' என்று அழைக்கப்பட்ட மதுரை ஏ.வைத்தி நாதய்யர். தாழ்த்தப்பட்டோருக்குக் கோயில் நுழைவு உரிமை என்பதை 1922 இல் கடுமையாக எதிர்த்தவர் இதே நபர்தான் என்பதைத் திரு.வி.க. வின் வாழ்க்கைக் குறிப்பு'களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இனாம் குடிகளின் உரிமையையும் இனாம்தாரி, ஜமீன் தாரி ஒழிப்பையும் எதிர்த்தவரும் இவர்தான்.

 மேற்சொன்ன மதுரை மீனாட்சியம்மன் கோயி லில் வைத்தியநாதய்யர் நடத்திவைத்த 'நுழைவும்' கூட அப்போது அக்கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஆர். எஸ். நாயுடு என்னும் நீதிக்கட்சிக்காரரின் அனுமதி யாலும் இசைவின் பேரிலுமே சாத்தியமாயிற்று. தாழ்த் தப்பட்டவர்களை அனுமதித்ததன் காரணமாக, கரு வறையைப் பூட்டிவிட்டு மறுநாள் கோயிலுக்கு வராமலிருந்த பட்டர்களை இடைநீக்கம் செய்தவர் ஆர்.எஸ்.நாயுடுதான் (குஅ, 16.7.1939 : நகரதூதன், 16.7.1939).

நன்றி:  பெரியார் சுயமரியாதை சமதர்மம் - எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா (பக்கம் 550-551)

உண்மை இவ்வாறு இருக்க பார்ப்பனப் பத்திரி கைகள் தொடர்ந்து மதுரையில் நடைபெற்றது தான் முதல் கோயில் நுழைவு என்றும் வைத்தியநாத அய்யர் தான் ஆலய நுழைவின் முன்னோடி என்றும் தொடர்ந்து பேசி வருவது கடைந்தெடுத்த பித்தலாட்டம் அல்லவா?

கோவில் நுழைவை எதிர்த்த வைத்தியநாதய்யர்

திருப்பூரிலே வாசுதேவ அய்யர் தலைமையில் (1922) தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கூடிய போது, நாடார் முதலியோர் கோயில் நுழைவைப் பற்றி இராமசாமி நாயக்கரால் ஒரு தீர்மானங் கொண்டுவரப்பட்டது. அவர் பெரும் புயலைக் கிளப்பினார். அத்தீர்மானம் என்னால் ஆதரிக்கப்பட்டது. அதை எதிர்த்தவர் மதுரை வைத்தியநாத அய்யரும், கிருஷ்ண அய்யங் காருமாவர்.                              

   - திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் பக்.644

ஆலயபிரவேசத்தில் சுயமரியாதைக்காரர்கள்

மதுரையில் 30.7.1939 அன்று பேசிய ராஜாஜி கோபாலாச்சாரியார் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

"இந்த வெற்றி (மதுரை மீனாட்சி கோவிலில் ஆதி திராவிடர்கள் நுழைந்தமை) காங்கிரசுடையது அல்ல; அல்லது ஒரு கட்சிக்குக் கிடைத்த வெற்றியுமல்ல. இது எல்லோருக்கும் கிடைத்த வெற்றியாகும். ஏனெனில் இவ்விஷயத்தில் சுயமரியாதைக்காரர்களும் ஜஸ்டிஸ் காரர்களும் இன்னும் இதரர்களும் சேவை செய்திருக் கின்றனர்" என்று குறிப்பிட்டார்.

இச்செய்தி 31.7.1939 நாளிட்ட

'சுதேசமித்திரன்' ஏட்டில் வெளியாகி இருந்தது.

(ஆதாரம்: விடுதலை 1.8.1939)

ஆலயப் பிரவேசத்திற்கு ஆச்சாரியார் கொண்டு வந்த சட்டத்திற்கு முன் நடைபெற்ற முயற்சிகள்...

  

சென்னை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த டாக்டர் சுப்பராயன்  31.1.1933 அன்று கோயில் நுழைவு உரிமைக்கான சட்டவரைவு ஒன்றை கொண்டு வந்தார். சுப்பராயன் எதிர்க் கட்சியைச் சார்ந்தவர் என்ற காரணத்தினால், நீதிக்கட்சியினர் இதை ஆதரிக்காமல் விட்டுவிடக் கூடாது. இம் மசோதாவை கட்டாயம் ஆதரிக்க வேண்டும் என்று மசோதா வரும் முன்பே பெரியார் எழுதினார் (குடி அரசு - 10.11.32).

இம்மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில் ரெட்ட மலை சீனிவாசன் உட்படப் பலரும் பேசினர். நீதிக் கட்சியில் சிலர் ஆதரித்தனர், சிலர் நடுநிலை வகித்தனர். மசோதாவுக்கு ஆதரவாக 56 வாக்குகளும் நடுநிலையாக 19 வாக்குகளும் பதிவாயின. எதிர்ப்பு என்பதே இல்லை. சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு வைசிராய் ஒப்புதல் கொடுக்காத காரணத்தால் சட்டமாக் கப்படவில்லை. 

சுப்பராயன் மசோதாவிற்கு மாற்றாக டெல்லி சட்ட சபையில் (பார்லிமெண்ட்) 24.3.1933 அன்று ரங்க அய்யர் கோயில் நுழைவு மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் பல குறைபாடுகள் இருந்தன. இதனால் இதை அம்பேத்கர் ஆதரிக்க மறுத்தார். காந்தி இதை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய ஜி.டி. பிர்லா, ராஜாஜி, தேவதாஸ் காந்தி ஆகியோர் கொண்ட குழுவை அமைத் தார். ஆனால், 1935இல் தேர்தல் வருவதைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சியினர் இம்மசோதாவை விவா தத்திற்கு எடுத்துக் கொள்ளாமலேயே விட்டுவிட்டனர்.

சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி 1937 தேர்தலில் தோல்வி கண்டது. இதையடுத்து 1937இல் ராஜாஜி முதல் அமைச்சரானார். 15.8.1938 அன்று எம்.சி. ராஜா கோயில் நுழைவு மசோதா ஒன்றை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, டாக்டர் சுப்பராயன் மசோதாவிற்கு, கவர்னர் ஜெனரல் ஒப்புதல் தரவில்லை. ரங்க அய்யர் மசோதா புதைக்கப்பட்டது.

எனவே, கோவில் நுழைவு உரிமைக்காக நான் இப்போது இந்த மசோதாவை தாக்கல் செய்கிறேன் என்றார். முதல்வர் ராஜாஜி, வேண்டாம் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்.  முடியாது விவாதத்திற்கு எடுத் துக் கொண்டே ஆக வேண்டும் என்பதில் எம்.சி. ராஜா பிடிவாதமாக இருந்தார். உடனே ராஜாஜி இந்த மசோ தாவை எதிர்த்துப் பேசிவிட்டு வாக்கெடுப்புக்கு விட்டார். இதற்கு 24 பேர் ஆதரவு தெரிவித்தனர்; 130 பேர் எதிர்ப்புத் தெரிவித்தனர். எம்.சி.ராஜா கொண்டுவந்த ஆலயப் பிரவேச மசோதாவை அமல்படுத்த தயங்கிய ராஜ கோபாலாச்சாரியாரை கடுமையாக எதிர்த்து குடிஅரசு, விடுதலை இதழ்களில் தொடர்ந்து எழுதினார் பெரியார்.

1939இல் எந்தவித முன்னறிவிப்புமின்றி யாருக்கும் தெரியாமல் கடைசி நேர இரவு பூஜைக்குப்பிறகு சில தாழ்த்தப்பட்டவர்களோடு மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் நுழைந்ததன் மூலம் அகில இந்தியப் பத்திரிகைகளில் தன்னை விளம்பரப்படுத்தி கொண்டு ராஜாஜி, காந்தி போன்றவர்களின் பாராட்டை பெற்றவர் வைத்திய நாத அய்யர்.அய்யர்வாளின் திடீர் ஆலயப் பிரவேசத்திற்கு அவசியம் என்ன?

தமிழகமெங்கும் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத் தினால் தலை தூக்கமுடியாமல் கிடந்தது காங்கிரஸ் கட்சி. அதோடு கோவில் நுழைவு மசோதாவை அமல்படுத்தாத ராஜாஜி அமைச்சரவை பார்ப்பனரல்லாதாரின் கடுங் கோபத்திற்கு ஆளாகியிருந்தது. அப்படி ஒரு மோசமான சூழலில் நடை பெற இருந்த மதுரை, இராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தல்களில் காங்கிரஸ் மண்ணைக் கவ்வாமல் இருக்க ஏற்படுத்தப்பட்ட ரகசியத்திட்டம்தான் வைத்தியநாத அய்யரின் திடீர் ஆலயப்பிரவேசம்!

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் இனி தமிழுக்கு முதலிடம்

 

சென்னை, ஜூலை 21- வினா-விடைத்தாள் அறிக்கை யில் தமிழ் பதிப்பு முதலி லும், ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக்கும் எனவும் அறி விக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளில் இனி தமி ழுக்கு முதலிடம் கொடுக் கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வினாத்தாள், விடை வினாத்தாள் அறிக்கை யில் தமிழ் பதிப்பு முதலி லும், ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக் கும்  எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது என்று குறிப் பிடப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு சான்றிதழ் வழங்க பெற்றோரின் வருமானத்தை கணக்கிட வேண்டாம்

 

தமிழ்நாடு அரசு அறிவுரை

சென்னை, ஜூலை 21 இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு சான்றிதழ் வழங்கும்போது பெற்றோ ரின் ஆண்டு வருமானத் தில் ஊதியம் மற்றும் விவ சாய வருமானத்தை கணக் கில் கொள்ளாமல் தாம தமின்றி சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது,

இதுதொடர்பாக தமிழ் நாடு அரசின் பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற் படுத்தப்பட்டோர் மற் றும் சிறுபான்மையினர் நலத் துறை முதன்மை செயலர் ஆ.கார்த்திக், அனைத்து மாவட்ட ஆட் சியர்களுக்கும் அனுப்பி யுள்ள சுற்றறிக்கை:

ஒன்றிய அரசு பணிகளி லும், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) வளமான பிரிவினரை நீக்கி 27 சதவீத இடஒதுக் கீடு அளிக்கப்படுகிறது.

அந்த வகையில், வள மான பிரிவினரை நீக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான வரம்பை (ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம்) ஊதியம் மற்றும்விவசாய வருமானத்தை சேர்க்கக் கூடாது என வழிகாட்டு நெறிமுறையில் விளக்கப் பட்டுள்ளது.

எனவே, ஒன்றிய அர சின் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சான்றிதழ் வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார் கள். சான்றிதழ் வழங்கும் போது பெற்றோரின் ஆண்டு வருமானத்தில் ஊதியம் மற்றும் விவசாய வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் எவ்வித தாமதமின்றி இதர பிற் படுத்தப்பட்ட வகுப்பின ருக்குச் சான்றிதழ் வழங்கு மாறு சம்பந்தப்பட்ட வரு வாய்த் துறை அதிகாரிக ளுக்கு தகுந்த அறிவுரை கள் அளிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

இவ்வாறு சுற்றறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசின் ஆணை




அனைத்து இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் கோ.கருணாநிதியுடன் நேர்காணல்






Monday, 19 July 2021

பெரியார் தான் தமிழ்நாட்டுக்கு எல்லாம் பண்ணாரா?

சங்கீகளும், தம்பிகளும் எப்போவுமே கேட்குற ஒரு கேள்வி.

 "# *பெரியார் தான் தமிழ்நாட்டுக்கு எல்லாம் பண்ணாரா?"* 

ரொம்ப நாளா, இதை பத்தி எழுதணும்னு

"பெரியார் தான் எல்லாம் பண்ணாரா?" அப்படிங்கிற கேள்விக்கு என்னோட பதில்
' *ஆமாம் #பெரியார் தான் எல்லாம் பண்ணார்!'* 

வடக்குல அம்பேத்கர் என்ன பண்ணாரோ, அதை இங்கே பெரியார் பண்ணார். சொல்லப்போனா, 1927ல அம்பேத்கர் ‘மகத்’ பொதுக் குளத்துல ‘தீண்டப்படாத’ மக்களை திரட்டி தண்ணீர் எடுக்கும் போராட்டத்தை நடத்துனதுக்கு *உந்துசக்தியா இருந்ததே 1925ல பெரியார் வைக்கத்துல நடத்துன சத்தியாகிரகம்தான்னு* அம்பேத்கர்

நடத்துன “Mook Nayak” பத்திரிகையோட தலையங்கத்துல் பதிவு பண்ணியிருக்கார்.

- அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன் உட்பட எத்தனையோ பேரால முடியாத விஷயங்களை செஞ்சு காட்டுனவர் பெரியார். புத்தர் கூட தோத்து போனார். ராமலிங்க வள்ளலார் எரிச்சு கொல்லப்பட்டார்.
- 2000 வருஷமா கண்ணை மூடிட்டு பின்பற்றி வந்த சாஸ்திரத்தை, ஜாதியை, மூடநம்பிக்கைகளை இவ்வளவு வலிமையா பெரியாரை விட வேற யார் எதிர்த்தது இருக்காங்க? ஒரு பேரை சொல்லுங்களேன் பார்ப்போம்..

- இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்குறதுக்கு 30 வருஷம் முன்னாடி இருந்தே, *வகுப்புவாரி
இடஒதுக்கீடு* வேணும்ன்னு குரல் கொடுத்தவர் பெரியார். காங்கிரஸ் கட்சியில சேர்ந்து 6 வருஷமா கேட்டும் இடஒதுக்கீட்டு தீர்மானத்தை கொண்டுவராததால, " *சமூகத்தை பத்தி கவலைப்படாம, சுதந்திரம் கிடைச்சு என்ன பிரயோஜனம்...?* இடஒதுக்கீடு தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி நிறைவேத்தாதுன்னா
எனக்கு காங்கிரஸே வேணாம்"னு சொல்லி கட்சியை விட்டு விலகுனவர் பெரியார்.

- காங்கிரஸை விட்டு வெளியேறி, *சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்* பெரியார். "காங்கிரஸ் கட்சி என் எதிரி இல்ல, 
 *ஜாதி தான் எதிரி* ... ஜாதியை தூக்கி பிடிக்குற *வைதீக மதத்தையும், கடவுளை போதிக்குற சாஸ்திரத்தையும்,* 
 *மூடநம்பிக்கைகளையும்* வாழ்க்கை முழுக்க தீவிரமா எதிர்க்க போறேன்"னு சொன்னார்.

- 1937ல மெட்ராஸ் பிரசிடென்சியோட முதல்வரா ராஜாஜி இருந்தப்போ, பள்ளிக்கூடங்கள்ல *ஹிந்தியை கட்டாய மொழி ஆக்குனப்போ* இந்த மாகாணம் முழுக்க ஹிந்திக்கு எதிரா புரட்சி வெடிக்க காரணமா இருந்தார்.
1939ல ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்துல உயிரை விட்ட தாளமுத்து நடராசனுக்கு 1940ல வடசென்னையில நினைவு மண்டபம் எழுப்பினார் பெரியார்.

- இந்தியாவிலேயே *பேருக்கு பின்னால ஜாதியை போட்டுக்காத ஒரே மாநிலமா தமிழ்நாடு* இருக்குறதுக்கு ஒரே காரணம், சுதந்திரம் அடையுறதுக்கு முன்னாலேயே
' *சுயமரியாதை இயக்கம்'* மூலமா பெரியார் எடுத்த முன்னெடுப்பு!

 இன்னைக்கு வரை, ஒருத்தனோட ஜாதியை நேரடியா கேட்குறதுக்கு கூச்சப்படுறானுங்க இல்ல? அதுக்கு காரணம், *பெரியார் இல்லாம வேற யாரு?* 

- தமிழ் மொழியை *எளிமையா எழுதுறதுக்காகவும், அச்சடிக்குறதுல* இருக்குற சிரமங்களை குறைக்குறதுக்காகவும்...

15 தமிழ் எழுத்துக்கள்ல சீர்திருத்த மாற்றங்களை முன்மொழிந்தார் பெரியார். அவரோட இந்த *மொழி சீர்திருத்தத்தை* அக்டோபர் 1978ல அரசாணையில கொண்டுவந்த பெருமை, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை சேரும்.

- கடந்த 100 வருஷத்துல *பெரியார் அளவுக்கு பெண்களுக்காக* பேசுன ஒரு தலைவர்,
இந்தியா முழுமையிலும் கிடையாதுன்னே சொல்லலாம். உடன்கட்டை ஏறுதலுக்கு எதிராவும், குழந்தை திருமணத்துக்கு எதிராவும், தேவதாசி முறைக்கு எதிராவும் பேசியவர், போராடியவர் பெரியார். *விதவை மறுமணத்தோட அவசியம்* பத்தியும், குடும்பக்கட்டுப்பாடோட அவசியம் பத்தியும்,
 *பெண்களுக்கு சொத்துல உரிமை* வேணும்ன்னும் பல மேடைகள்ல பேசுனவர்.

இன்னைக்கு நாம பேசுறோமே.. *பொண்ணுங்களோட financial independence,* பொண்ணுங்க அவங்களுக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணனும்ன்னு அதையெல்லாம் அந்த மனுஷன் 100 வருஷமா முன்னாலேயே பேசிட்டு போயிருக்கார்.
- பிரிட்டிஷ் ஆட்சியில கம்யூனிச கொள்கை தடை செய்யப்பட்டிருந்தப்போ, கம்யூனிச கொள்கைகளை மொழிபெயர்த்து எழுதி மக்கள்கிட்ட பரப்புனவர் பெரியார்.

- ஒரு முறை *காந்திஜி அவர்கள் "தீண்டாமை தப்பு, ஆனா வர்ணாசிரமம் தப்பு இல்ல"* ன்னு சொன்னப்போ உடனே அவரை போய் பெங்களூர்ல சந்திச்சு தன்னோட
எதிர்ப்பை தெரிவிச்சுட்டு வந்தார் பெரியார்.. " *நம்ம சட்டம் தீண்டாமைக்கு எதிராதான் இருக்கு, ஜாதிக்கு எதிரா இல்ல.* அதையேதான் நீங்களும் சொல்றீங்க, மகாத்மா... மதத்தை வெச்சுக்கிட்டு, சமுதாயத்துல உங்களால எந்த சீர்திருத்தத்தையும் பண்ண முடியாது"ன்னு சொல்லிட்டு வந்தார்.
- 1939ல ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்துல இருந்தப்போவும், 1942 காலக்கட்டத்துலயும், இரண்டு முறை முதல்வர் பதவி பெரியாரை தேடி வந்தது... 

அவர் தலைமையில மந்திரி சபை அமைக்க சொல்லி ஆளுநர் சொன்னப்போ, 'வேணாம், *எனக்கு பதவியில ஆசை இல்ல'ன்னு* பெரியார் சொல்லிட்டார்...
ராஜாஜி அவர்கள் கூட 'உங்க தலைமையில ஆட்சி அமைச்சா, நான் காங்கிரஸ் ஆதரவு வாங்கி தர்றேன்"னு சொன்னார். ஆனா, "பதவின்னு வந்துட்டா, நாம எவனை எதிர்க்குறோமோ அவன் கூடவே சமாதானமா போகவேண்டியிருக்கும்.. அதனால, சாகுற வரைக்கும் எந்த அரசியல் பதவியும் வேணாம்ங்கிறதுல நான் ரொம்ப தெளிவா இருக்கேன்..

அரசியல்வாதிகளுக்கு வேணா அந்த பொழப்பு சரிப்பட்டு வரும், எனக்கு அது வேணாம்"னு சொல்லிட்டார். எந்தவொரு உட்சபட்ச பதவியையும், பணத்தையும் துட்சமா நினைச்ச ஒரு தலைவர் பெரியார்!

- 1947'ல இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சப்போ கூட, 
" *அதிகாரம் பிரிட்டிஷ்* *காரன் கையிலருந்து,* 
 *பார்ப்பனர்கள் கைக்கு போயிருக்கு அவ்ளோதான்...* அடிமட்ட *ஜனங்களுக்கு இது ஒரு துக்க நாள் மட்டுமே"* ன்னு சொன்னார் பெரியார்!

- எல்லா தலைவர்களும் தன்னை பின்தொடர்ந்து வர்றவங்களை எல்லாம் "நான் சொல்றத செய்ங்க"ன்னு தான் சொல்வாங்க.
ஆனா, பெரியார் ஒருத்தர் தான், ' *யார் எது சொன்னாலும், அதை நம்பாதீங்க... கேள்வி கேளுங்க...* ஏன், நானே சொல்றதையும் கேள்வி கேளுங்க... அப்புறமா, நீங்க முடிவெடுங்க.. உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை பண்ணுங்க"ன்னு சொன்னார்.
ஒரு முறை, மெட்ராஸ் யூனிவர்சிட்டியோட vice chancellor சுந்தரவடிவேலு அவர்கள் “இன்னைக்கு *கிராமத்துல கூட படிச்சவங்க எண்ணிக்கை ஜாஸ்தியா இருக்கு* , நிறைய கல்விக்கூடங்கள் இருக்குதுன்னா, அதுக்கு நீங்க கொண்டு வந்த திட்டங்கள்தான் காரணம்"ன்னு காமராஜரை புகழ்ந்தப்போ,
" *இதுக்கெல்லாம் பெரியார்தான்* காரணம். அவர்தானே *அடித்தட்டு மக்கள் எல்லாரும் படிக்கணும்ன்னு ஆசைப்பட்டார்* "ன்னு பெரியாரை நினைவுகூர்ந்தார் காமராஜர்.

தமிழ்நாட்டுல காங்கிரஸ் கட்சியை ஒரு கோட்டையா ஆக்க பாடுபட்டவர் பெரியார். அந்த கோட்டையை கட்டி எழுப்பிட்டு, அதை அனுபவிக்காம
வெளியே போய்ட்டார். அவர் நினைச்சிருந்தா, எப்பவோ முதல்வர் ஆகியிருக்கலாம். ஆனா, மக்கள் தொண்டுதான் முக்கியம்ன்னு நினைச்சார்.

 காங்கிரஸ்ல இருந்துக்கிட்டு பெரியார் சொன்ன சமூகநீதி கொள்கையை நான் செயல்படுத்துறேன்னு சிலர் என் மேல புகார் சொல்றான்.
அதுக்கு நான் பெருமைப்படுறேன்"னு சொன்னார் 'கல்வி கண் திறந்த' காமராஜர்.

- பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்ததும் முதல்ல கையெழுத்து போட்ட " *சுயமரியாதை திருமண சட்டம்"* உருவாக முழுமுதற் காரணமா இருந்தவர் பெரியார்.

இந்தியாவிலேயே OBC *ரிசர்வேஷனை முதன்முதல்ல கொண்டுவந்த மாநிலம் தமிழ்நாடு.* 

 அதே போல, இந்தியாவிலேயே முதல்முறையா *தலித் சமூகத்தை சேர்ந்த ஒருத்தர் நீதிபதி* ஆன பெருமையும் பெரியார் அவர்களையே சேரும்.

அனைத்து சாதி மக்களும் கோவில் *கருவறைக்குள் போக அனுமதி வேண்டும்"* ன்னு போராட போறேன்னு
பெரியார் சொன்னார்.... அப்போ, "அதுக்கு அவசியமே இல்ல.. *எல்லா சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம்ன்னு* சீக்கிரமே ஒரு சட்டம் கொண்டுவர்றேன்"னு சொல்லி அந்த போராட்டத்தை நிறுத்தினார் கருணாநிதி.

- பெரியாரை பத்தி பேரறிஞர் அண்ணா "உலக தலைவர்களில், *தன்னுடைய காலத்திலேயே தன் கொள்கை வெற்றி* 
பெறுவதைப் பார்த்த ஒரே ஒருவர் நீங்கள்தான்"னு சொன்னார். அதுதான் உண்மையும் கூட. ஹிந்துத்துவா, தமிழ் தேசியம் உட்பட எந்த அரசியல் கொள்கையை முதன்முதல்ல பேசுனவங்களும் அந்த கொள்கை அரசியல்ரீதியா வெற்றியடையுறதை பார்க்கல!

காமராஜர், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா, தொல்.திருமாவளவன், வைகோ, ராமதாஸ், உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியோட நிறுவனர் கன்ஷி ராம் உட்பட எத்தனையோ தலைவர்களோட *சமூக நீதி கொள்கைகளுக்கு ரோல் மாடல்* ஆக இருந்தவர் / இருப்பவர் பெரியார்.
பெரியார் அவர்கள் இறந்து போறதுக்கு சில நாள் முன்னால சொன்ன விஷயம்... 

" *இந்தி திணிப்பை* எதிர்த்து ஜெயிச்சாச்சு.. *தெருவுக்குள்ள* விடமாட்டேன்னு சொன்னவங்களை எதிர்த்து போராடி ஜெயிச்சாச்சு.. *கோவிலுக்குள்ள* விடமாட்டேன்னு சொன்னவங்களை எதிர்த்து *ஜெயிச்சாச்சு* ..

ஆனா, *நான் சாகும்பொழுது இப்போவும் உங்களை எல்லாம் சூத்திரனாவே விட்டுட்டு போறேனே* . இந்த ஜாதியை இன்னமும் ஒழிக்க முடியலையே"ன்னு வருத்தப்பட்டார்.

நாடு முழுக்க கால்தடம் பதிச்ச பாஜக, இன்னமும் தமிழ்நாட்டுல மட்டும் நோட்டாவுக்கு கீழே இருக்குன்னா அதுக்கு காரணம் *பெரியார் அவர்கள் வளர்த்தெடுத்த சமூகநீதி, சமத்துவ கொள்கைகள்!* 

வரலாறு தெரிஞ்சவர்கள் வாட்சப் வதந்தியை பார்த்து வாயை பொளக்காதவர் தெரியும்.

 *ஆமா பெரியார் தான் எல்லாம் பண்ணார்* 🖤
• • •
Siva KS

பெரியார் மணியம்மை திருமணமும் - ஆடைகளற்ற கேள்விகளும்..



பெரியார்-மணியம்மை திருமணம் பற்றி பல்வேறு விளக்கம் அளிக்கப்பட்டாலும், அந்தத் திருமணம் பற்றிய விசமக் கேள்வி அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆடையின்றி சுற்றுகிறது. பெரியார் தன் மகள் வயதில் இருக்கும் பெண்ணை மணந்து கொண்ட ஒழுக்கமற்றவர் என்றும், அப்படியே அவரது சொத்துக்களை பாதுகாக்கத்தான் என்றால் மகளாக தத்தெடுத்திருக்கலாமே.. அதை விட்டு திருமணம் என்பது அவரின் வக்கிரத்தைக் காட்டுகிறது எனச் சில புனித மனிதர்கள் கேட்கிறார்கள். பெரியாரின் கொள்கைகளை விமர்சிக்க இயலாதோருக்கும், அந்தரங்கத் திரை அகற்றி அரசியல் ஆய்வு மையம் நடத்துகிறோர்க்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்.

periyar and maniammaiபெரியாரைப் பொருத்தவரை சமூகத் தொண்டு செய்ய குடும்பம் தொல்லையாக இருக்கும் எனக் கருதியவர். அதை முதல் மனைவி நாகம்மாளின் மறைவின் போது அவர் வெளியிட்ட உருக்கமான 'இரங்கல்' அறிக்கையில் அறியலாம். அப்படி இருக்கையில் முதல் மனைவி இறந்து 16 ஆண்டுகள் கழித்து இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்தது அந்த 70 வயது கிழவருக்கு?

அதற்கு அன்றைய களச்சூழலோடு இந்தக் கேள்வியைப் பொருத்திப் பார்ப்பது அவசியமானது.

தனது வயது முதிர்வின் காரணமாக தன் சொந்த சொத்துக்களையும், தன் சிந்தாந்தங்களைத் தொடர்ந்து எடுத்துச் செல்லவும், பாதுகாக்கவும் ஒருவரை நியமிக்க நினைத்தார் பெரியார். அர்ஜுனன் என்பவரைத் தத்தெடுக்க நினைத்தார். ஆனால் அவர் இறந்துவிட்டதார். 1948ல் ஈரோட்டில் நடந்த மாநாட்டில் தனக்குப் பிறகு அண்ணாதான் இயக்கத்தை வழிநடத்தப் போகிறார், ஆதலால் "பெட்டிச்சாவியை அண்ணாவிடம் தந்துவிடப் போவதாக அறிவித்தார்". ஆனால் அண்ணாவோ தேர்தல் அரசியலைக் கையில் எடுக்கத் தொடங்கியதால் அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டார் பெரியார்.

ஈ.வெ.கி சம்பத்தை தத்தெடுக்கலாம் எனத் துணிந்தவருக்கு மீண்டும் ஏமாற்றமே. சம்பத் அண்ணாவோடு தேர்தல் பயணத்தில் நுழைந்துவிட்டார். எனவே தன்னை ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக கவனித்து வந்த எழுத்தாளரும், பேச்சாளரும், திராவிடக் கொள்கையாளரும், தமிழ் இலக்கியத்தில் புலமை பெற்றவருமான மணியம்மையால் இந்த இயக்கத்தையும், தன் சொத்துகளையும் தொடர்ந்து எடுத்துச் செல்ல முடியும் என எண்ணினார். அவர் ஏன் இயக்கத்தில் வேறு யாரையுமே தேர்வு செய்யவில்லை என்பதற்குப் பெரியாரின் பதில்,

"என்னைச் சுற்றியிருக்கும் தோழர்களிடம் நான் எவ்வளவு சகிப்புத்தன்மையோடு பழகினாலும் அவைகளை என் பலவீனமாகவும் ஏமாந்ததனமாகவும் கருதிக் கொண்டு நான் பயப்படும் வண்ணமாய் பெரிதும் அவநம்பிக்கை கொள்ளும் வண்ணமுமாய் நடந்து வருவதை உணர்கிறேன்".

எனவே அவரின் நம்பிக்கையான ஒரே தேர்வு மணியம்மை மட்டும்தான்.

பெரியார் மணியம்மையை மணப்பது சட்டப்படி தன் வாரிசாக அறிவிக்கத்தான். அதன் மூலம் இயக்கத்தையும், சொத்துக்களையும் பாதுகாக்கத்தான். இந்துமதச் சட்டம் "கடவுள் மறுப்பாளர்"களும் இந்துக்கள்தான் என வரையறுத்ததால், காலம் முழுதும் எதிர்த்துப் போராடிய இந்து மதச் சட்டத்திற்கு உட்பட்டே அந்தத் திருமணம் நடக்க வேண்டியிருந்தது.

அப்படியானால் அவர் ஏன் மதம் மாறவில்லை என்பதுதான் உங்கள் அடுத்த கேள்வியாக இருக்கும். அம்பேத்கர் பவுத்த மதம் தழுவியபோது பெரியார் மாறவில்லை. காரணம் இந்து மதத்திற்குள்ளேயே இருந்தால்தான் இதன் இழிவுகளை சுட்டிக் காட்ட முடியும். மதம் மாறினால் இது சாத்தியப்படாது எனத் திடமாக நம்பினார்.

அப்போதைய இந்து மதச் சட்டத்தின் படி, "பெண்ணுக்கு தத்தெடுக்கவும், தத்து போகவும் உரிமையில்லை" என்பதால் பெரியாரால் மணியம்மையைத் தத்தெடுக்க இயலாமல் மணந்துகொள்ள நேரிட்டது.

70 வயதை அடைந்திருந்த பெரியார் உடலியல் தேவையால்தான் மணந்துகொண்டார் என்பது ஏற்புடைய வாதமில்லை. ஒருவேளை உடலியல் தேவைதான் பிரதானம் என்றால் அதை மணந்து கொள்ளாமலே அடைந்திருக்க முடியும். அவரது படுக்கையறையை யாரும் தாழுடைத்து பார்க்கப் போவதில்லை. எல்லாவற்றையும் விட முதன்மையானது அது மணியம்மையாரின் முழுச் சம்மதத்தோடு அரங்கேறிய திருமணம்.

இந்தத் திருமணத்தால்தான் திமுக உதயமானது எனச் சொல்கிறவர்கள் நுனிப்புல் பிரியர்கள். அண்ணா பிரிய இதுவும் ஒரு காரணம். இத்திருமணம் நடக்கவில்லை என்றாலும் திமுக தோன்றியிருக்கும் என்பதுதான் வரலாறு சொல்லும் செய்தி.

அண்ணா சில காலமாக பெரியாரோடு நட்பு முரண் கொண்டிருந்தார். பெரியார் எதையும் திடமாக எதிர்ப்பவர். அவரது இயக்க அரசியலை அது பாதிக்காது. அண்ணா தேர்தல் பாதையைத் தீர்மானித்தபோது பொதுப்புத்தியோடும், பொதுமக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டிய அவசியமும் உண்டாயிற்று. அதனால்தான் கடவுள் மறுப்பிலிருந்து "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" எனச் சொல்ல வேண்டிற்று.

அதுபோலத் தான் 70 வயது கிழவர் தன்னைவிட 40 வயது குறைந்த பெண்ணை மறுமணம் செய்துகொள்வது பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் உண்டாக்கக் கூடும் என அண்ணா கருதினார். திமுக உதித்தது. பெரியார் இவைகளைப் பற்றி கவலைப்படவில்லை. பேராசிரியர் சுபவீ சொல்லுவார் "பெரியார் 24 காரட் தங்கம், அண்ணா 22 காரட் தங்கம்". சுத்தமான 24 காரட்டை வைத்து நகை செய்ய இயலாது. 22 காரட்டை வைத்துதான் நகை செய்ய இயலும் என்று. இருவருக்கும் ஒரே இலக்குதான் சமமான சமூகத்தை கட்டியமைப்பது. ஆனால் பாதைதான் வேறுவேறு.

பெரியார்-மணியம்மை திருமணத்தில் இருந்த சட்ட சிக்கல்கல்களை உணராத எங்கள் தலைமுறை பெரியாரைப் பழிக்கத் துணிகின்றனர். ஒரு தலைவரை விமர்சிக்க குறைந்தபட்ச நாகரிகத்தைக் கையாளுங்கள். இனியாவது உங்கள் கேள்விகளுக்கு ஆடைகட்டுங்கள். இல்லையேல் உங்கள் கூட்டத்திற்கு மக்கள் பாடை கட்டி விடுவார்கள்
. — with Ramasamy Gopalan.
Lakshmanan SK shared 👍
பகுத்தறிவாளர்கள் vs மதவாதிகள்
முகநூல் பதிவு