Monday 19 July 2021

பெரியார் தான் தமிழ்நாட்டுக்கு எல்லாம் பண்ணாரா?

சங்கீகளும், தம்பிகளும் எப்போவுமே கேட்குற ஒரு கேள்வி.

 "# *பெரியார் தான் தமிழ்நாட்டுக்கு எல்லாம் பண்ணாரா?"* 

ரொம்ப நாளா, இதை பத்தி எழுதணும்னு

"பெரியார் தான் எல்லாம் பண்ணாரா?" அப்படிங்கிற கேள்விக்கு என்னோட பதில்
' *ஆமாம் #பெரியார் தான் எல்லாம் பண்ணார்!'* 

வடக்குல அம்பேத்கர் என்ன பண்ணாரோ, அதை இங்கே பெரியார் பண்ணார். சொல்லப்போனா, 1927ல அம்பேத்கர் ‘மகத்’ பொதுக் குளத்துல ‘தீண்டப்படாத’ மக்களை திரட்டி தண்ணீர் எடுக்கும் போராட்டத்தை நடத்துனதுக்கு *உந்துசக்தியா இருந்ததே 1925ல பெரியார் வைக்கத்துல நடத்துன சத்தியாகிரகம்தான்னு* அம்பேத்கர்

நடத்துன “Mook Nayak” பத்திரிகையோட தலையங்கத்துல் பதிவு பண்ணியிருக்கார்.

- அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன் உட்பட எத்தனையோ பேரால முடியாத விஷயங்களை செஞ்சு காட்டுனவர் பெரியார். புத்தர் கூட தோத்து போனார். ராமலிங்க வள்ளலார் எரிச்சு கொல்லப்பட்டார்.
- 2000 வருஷமா கண்ணை மூடிட்டு பின்பற்றி வந்த சாஸ்திரத்தை, ஜாதியை, மூடநம்பிக்கைகளை இவ்வளவு வலிமையா பெரியாரை விட வேற யார் எதிர்த்தது இருக்காங்க? ஒரு பேரை சொல்லுங்களேன் பார்ப்போம்..

- இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்குறதுக்கு 30 வருஷம் முன்னாடி இருந்தே, *வகுப்புவாரி
இடஒதுக்கீடு* வேணும்ன்னு குரல் கொடுத்தவர் பெரியார். காங்கிரஸ் கட்சியில சேர்ந்து 6 வருஷமா கேட்டும் இடஒதுக்கீட்டு தீர்மானத்தை கொண்டுவராததால, " *சமூகத்தை பத்தி கவலைப்படாம, சுதந்திரம் கிடைச்சு என்ன பிரயோஜனம்...?* இடஒதுக்கீடு தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி நிறைவேத்தாதுன்னா
எனக்கு காங்கிரஸே வேணாம்"னு சொல்லி கட்சியை விட்டு விலகுனவர் பெரியார்.

- காங்கிரஸை விட்டு வெளியேறி, *சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்* பெரியார். "காங்கிரஸ் கட்சி என் எதிரி இல்ல, 
 *ஜாதி தான் எதிரி* ... ஜாதியை தூக்கி பிடிக்குற *வைதீக மதத்தையும், கடவுளை போதிக்குற சாஸ்திரத்தையும்,* 
 *மூடநம்பிக்கைகளையும்* வாழ்க்கை முழுக்க தீவிரமா எதிர்க்க போறேன்"னு சொன்னார்.

- 1937ல மெட்ராஸ் பிரசிடென்சியோட முதல்வரா ராஜாஜி இருந்தப்போ, பள்ளிக்கூடங்கள்ல *ஹிந்தியை கட்டாய மொழி ஆக்குனப்போ* இந்த மாகாணம் முழுக்க ஹிந்திக்கு எதிரா புரட்சி வெடிக்க காரணமா இருந்தார்.
1939ல ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்துல உயிரை விட்ட தாளமுத்து நடராசனுக்கு 1940ல வடசென்னையில நினைவு மண்டபம் எழுப்பினார் பெரியார்.

- இந்தியாவிலேயே *பேருக்கு பின்னால ஜாதியை போட்டுக்காத ஒரே மாநிலமா தமிழ்நாடு* இருக்குறதுக்கு ஒரே காரணம், சுதந்திரம் அடையுறதுக்கு முன்னாலேயே
' *சுயமரியாதை இயக்கம்'* மூலமா பெரியார் எடுத்த முன்னெடுப்பு!

 இன்னைக்கு வரை, ஒருத்தனோட ஜாதியை நேரடியா கேட்குறதுக்கு கூச்சப்படுறானுங்க இல்ல? அதுக்கு காரணம், *பெரியார் இல்லாம வேற யாரு?* 

- தமிழ் மொழியை *எளிமையா எழுதுறதுக்காகவும், அச்சடிக்குறதுல* இருக்குற சிரமங்களை குறைக்குறதுக்காகவும்...

15 தமிழ் எழுத்துக்கள்ல சீர்திருத்த மாற்றங்களை முன்மொழிந்தார் பெரியார். அவரோட இந்த *மொழி சீர்திருத்தத்தை* அக்டோபர் 1978ல அரசாணையில கொண்டுவந்த பெருமை, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை சேரும்.

- கடந்த 100 வருஷத்துல *பெரியார் அளவுக்கு பெண்களுக்காக* பேசுன ஒரு தலைவர்,
இந்தியா முழுமையிலும் கிடையாதுன்னே சொல்லலாம். உடன்கட்டை ஏறுதலுக்கு எதிராவும், குழந்தை திருமணத்துக்கு எதிராவும், தேவதாசி முறைக்கு எதிராவும் பேசியவர், போராடியவர் பெரியார். *விதவை மறுமணத்தோட அவசியம்* பத்தியும், குடும்பக்கட்டுப்பாடோட அவசியம் பத்தியும்,
 *பெண்களுக்கு சொத்துல உரிமை* வேணும்ன்னும் பல மேடைகள்ல பேசுனவர்.

இன்னைக்கு நாம பேசுறோமே.. *பொண்ணுங்களோட financial independence,* பொண்ணுங்க அவங்களுக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணனும்ன்னு அதையெல்லாம் அந்த மனுஷன் 100 வருஷமா முன்னாலேயே பேசிட்டு போயிருக்கார்.
- பிரிட்டிஷ் ஆட்சியில கம்யூனிச கொள்கை தடை செய்யப்பட்டிருந்தப்போ, கம்யூனிச கொள்கைகளை மொழிபெயர்த்து எழுதி மக்கள்கிட்ட பரப்புனவர் பெரியார்.

- ஒரு முறை *காந்திஜி அவர்கள் "தீண்டாமை தப்பு, ஆனா வர்ணாசிரமம் தப்பு இல்ல"* ன்னு சொன்னப்போ உடனே அவரை போய் பெங்களூர்ல சந்திச்சு தன்னோட
எதிர்ப்பை தெரிவிச்சுட்டு வந்தார் பெரியார்.. " *நம்ம சட்டம் தீண்டாமைக்கு எதிராதான் இருக்கு, ஜாதிக்கு எதிரா இல்ல.* அதையேதான் நீங்களும் சொல்றீங்க, மகாத்மா... மதத்தை வெச்சுக்கிட்டு, சமுதாயத்துல உங்களால எந்த சீர்திருத்தத்தையும் பண்ண முடியாது"ன்னு சொல்லிட்டு வந்தார்.
- 1939ல ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்துல இருந்தப்போவும், 1942 காலக்கட்டத்துலயும், இரண்டு முறை முதல்வர் பதவி பெரியாரை தேடி வந்தது... 

அவர் தலைமையில மந்திரி சபை அமைக்க சொல்லி ஆளுநர் சொன்னப்போ, 'வேணாம், *எனக்கு பதவியில ஆசை இல்ல'ன்னு* பெரியார் சொல்லிட்டார்...
ராஜாஜி அவர்கள் கூட 'உங்க தலைமையில ஆட்சி அமைச்சா, நான் காங்கிரஸ் ஆதரவு வாங்கி தர்றேன்"னு சொன்னார். ஆனா, "பதவின்னு வந்துட்டா, நாம எவனை எதிர்க்குறோமோ அவன் கூடவே சமாதானமா போகவேண்டியிருக்கும்.. அதனால, சாகுற வரைக்கும் எந்த அரசியல் பதவியும் வேணாம்ங்கிறதுல நான் ரொம்ப தெளிவா இருக்கேன்..

அரசியல்வாதிகளுக்கு வேணா அந்த பொழப்பு சரிப்பட்டு வரும், எனக்கு அது வேணாம்"னு சொல்லிட்டார். எந்தவொரு உட்சபட்ச பதவியையும், பணத்தையும் துட்சமா நினைச்ச ஒரு தலைவர் பெரியார்!

- 1947'ல இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சப்போ கூட, 
" *அதிகாரம் பிரிட்டிஷ்* *காரன் கையிலருந்து,* 
 *பார்ப்பனர்கள் கைக்கு போயிருக்கு அவ்ளோதான்...* அடிமட்ட *ஜனங்களுக்கு இது ஒரு துக்க நாள் மட்டுமே"* ன்னு சொன்னார் பெரியார்!

- எல்லா தலைவர்களும் தன்னை பின்தொடர்ந்து வர்றவங்களை எல்லாம் "நான் சொல்றத செய்ங்க"ன்னு தான் சொல்வாங்க.
ஆனா, பெரியார் ஒருத்தர் தான், ' *யார் எது சொன்னாலும், அதை நம்பாதீங்க... கேள்வி கேளுங்க...* ஏன், நானே சொல்றதையும் கேள்வி கேளுங்க... அப்புறமா, நீங்க முடிவெடுங்க.. உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை பண்ணுங்க"ன்னு சொன்னார்.
ஒரு முறை, மெட்ராஸ் யூனிவர்சிட்டியோட vice chancellor சுந்தரவடிவேலு அவர்கள் “இன்னைக்கு *கிராமத்துல கூட படிச்சவங்க எண்ணிக்கை ஜாஸ்தியா இருக்கு* , நிறைய கல்விக்கூடங்கள் இருக்குதுன்னா, அதுக்கு நீங்க கொண்டு வந்த திட்டங்கள்தான் காரணம்"ன்னு காமராஜரை புகழ்ந்தப்போ,
" *இதுக்கெல்லாம் பெரியார்தான்* காரணம். அவர்தானே *அடித்தட்டு மக்கள் எல்லாரும் படிக்கணும்ன்னு ஆசைப்பட்டார்* "ன்னு பெரியாரை நினைவுகூர்ந்தார் காமராஜர்.

தமிழ்நாட்டுல காங்கிரஸ் கட்சியை ஒரு கோட்டையா ஆக்க பாடுபட்டவர் பெரியார். அந்த கோட்டையை கட்டி எழுப்பிட்டு, அதை அனுபவிக்காம
வெளியே போய்ட்டார். அவர் நினைச்சிருந்தா, எப்பவோ முதல்வர் ஆகியிருக்கலாம். ஆனா, மக்கள் தொண்டுதான் முக்கியம்ன்னு நினைச்சார்.

 காங்கிரஸ்ல இருந்துக்கிட்டு பெரியார் சொன்ன சமூகநீதி கொள்கையை நான் செயல்படுத்துறேன்னு சிலர் என் மேல புகார் சொல்றான்.
அதுக்கு நான் பெருமைப்படுறேன்"னு சொன்னார் 'கல்வி கண் திறந்த' காமராஜர்.

- பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்ததும் முதல்ல கையெழுத்து போட்ட " *சுயமரியாதை திருமண சட்டம்"* உருவாக முழுமுதற் காரணமா இருந்தவர் பெரியார்.

இந்தியாவிலேயே OBC *ரிசர்வேஷனை முதன்முதல்ல கொண்டுவந்த மாநிலம் தமிழ்நாடு.* 

 அதே போல, இந்தியாவிலேயே முதல்முறையா *தலித் சமூகத்தை சேர்ந்த ஒருத்தர் நீதிபதி* ஆன பெருமையும் பெரியார் அவர்களையே சேரும்.

அனைத்து சாதி மக்களும் கோவில் *கருவறைக்குள் போக அனுமதி வேண்டும்"* ன்னு போராட போறேன்னு
பெரியார் சொன்னார்.... அப்போ, "அதுக்கு அவசியமே இல்ல.. *எல்லா சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம்ன்னு* சீக்கிரமே ஒரு சட்டம் கொண்டுவர்றேன்"னு சொல்லி அந்த போராட்டத்தை நிறுத்தினார் கருணாநிதி.

- பெரியாரை பத்தி பேரறிஞர் அண்ணா "உலக தலைவர்களில், *தன்னுடைய காலத்திலேயே தன் கொள்கை வெற்றி* 
பெறுவதைப் பார்த்த ஒரே ஒருவர் நீங்கள்தான்"னு சொன்னார். அதுதான் உண்மையும் கூட. ஹிந்துத்துவா, தமிழ் தேசியம் உட்பட எந்த அரசியல் கொள்கையை முதன்முதல்ல பேசுனவங்களும் அந்த கொள்கை அரசியல்ரீதியா வெற்றியடையுறதை பார்க்கல!

காமராஜர், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா, தொல்.திருமாவளவன், வைகோ, ராமதாஸ், உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியோட நிறுவனர் கன்ஷி ராம் உட்பட எத்தனையோ தலைவர்களோட *சமூக நீதி கொள்கைகளுக்கு ரோல் மாடல்* ஆக இருந்தவர் / இருப்பவர் பெரியார்.
பெரியார் அவர்கள் இறந்து போறதுக்கு சில நாள் முன்னால சொன்ன விஷயம்... 

" *இந்தி திணிப்பை* எதிர்த்து ஜெயிச்சாச்சு.. *தெருவுக்குள்ள* விடமாட்டேன்னு சொன்னவங்களை எதிர்த்து போராடி ஜெயிச்சாச்சு.. *கோவிலுக்குள்ள* விடமாட்டேன்னு சொன்னவங்களை எதிர்த்து *ஜெயிச்சாச்சு* ..

ஆனா, *நான் சாகும்பொழுது இப்போவும் உங்களை எல்லாம் சூத்திரனாவே விட்டுட்டு போறேனே* . இந்த ஜாதியை இன்னமும் ஒழிக்க முடியலையே"ன்னு வருத்தப்பட்டார்.

நாடு முழுக்க கால்தடம் பதிச்ச பாஜக, இன்னமும் தமிழ்நாட்டுல மட்டும் நோட்டாவுக்கு கீழே இருக்குன்னா அதுக்கு காரணம் *பெரியார் அவர்கள் வளர்த்தெடுத்த சமூகநீதி, சமத்துவ கொள்கைகள்!* 

வரலாறு தெரிஞ்சவர்கள் வாட்சப் வதந்தியை பார்த்து வாயை பொளக்காதவர் தெரியும்.

 *ஆமா பெரியார் தான் எல்லாம் பண்ணார்* 🖤
• • •
Siva KS

No comments:

Post a Comment