வெற்றிவலவன் பதிவுகள்

மூலிகை மன்னன் செ.ர.பார்த்தசாரதி அவர்களின் படைப்புகளும், குறிப்பிடத்தக்க செய்திகளும் இடம்பெறும்.

Pages

  • Home
  • கைவல்யம் - வேதாந்தம்
  • உண்மை இராமாயணம்
  • சாமியார்கள் எச்சரிக்கை
  • சோதிட ஆராய்ச்சி
  • சிந்தனை செய்வோம்
  • சமூக நீதி
  • பெரியார் உலகம்
  • உழைப்பவர் உலகு

Monday, 24 January 2022

80 ஆண்டுகளுக்கு முன் பனகல் அரசர் போட்ட உத்தரவு (சமஸ்கிருதம் நீக்கம்)



   August 21, 2021 • Viduthalai

மதுரையில் சமஸ்கிருத மாநாடு நடைபெற்றது. அன்றைய மெட்ராஸ்  மாகாண முதல்வராக இருந்த பனகல் அரசர். மாநாட்டின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

பார்ப்பனரல்லாதோர் இயக்க மாக உருவெடுத்த நீதிக்கட்சியின் சார் பில் முதல்வரானவர் அவர்.

மாநாட்டுக்கு அவரை அழைத்த பார்ப்ப னர்கள், திட்டமிட்டு தமிழில் பேசுவதைத் தவிர்க்கிறார்கள்.

முதல்வருக்கு சமஸ்கிருதம் தெரியாதே என்ற எண்ணத்தில், பனகல் அரசரைப் பற்றி கேலியும், கிண்டலுமாக சமஸ்கிருதச் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.

எல்லோரும் கை கொட்டிச் சிரிக்கிறார்கள்.

அமைதியாக அமர்ந்திருக்கிறார் பனகல் அரசர்.

நிறைவாக முதல்வர் பேசுவார் என்று அறிவிக்கப்படுகிறது. பனகல் அரசர் தனது பேச்சை ஆரம்பிக்கிறார்.

தமிழில் அல்ல,  தெளிவான சமஸ் கிருதத்தில்.

அதுவரை பேசியவர்களை விடச் சிறப்பாக, அவர்களுக்கு பதில் சொல்வது போல், இலக்கியத் தரம் வாய்ந்த சொற்பொழிவை  ஆற்றி முடிக்கிறார்.

முதல்வர் சமஸ்கிருதத்தில் எம்.ஏ., படித்தவர் என்ற தகவல் அவர்களுக்குத் தெரியாத

தால், அவமானப்படுத்த நினைத்தவர்கள், அவமானப்பட்டு போகிறார்கள்.

அந்த மாநாடு முடிந்த பிறகு, ஓர் உத்தரவை பிறப்பிக்கிறார் முதல்வர்.

அதுவரை மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வில் பாடமாக இருந்த, சமஸ்கிருதத்தை நீக்கும் உத்தரவு அது.

ஆங்கிலத்தில் படிக்கப் போகும் மருத்துவக் கல்விக்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வி முதல்வருக்கும் எழுந்திருக்

கிறது.

சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் மட்டும் தான், அதாவது பார்ப்பனர்கள் மட்டும் தான், மருத்துவக் கல்வி படிக்க வேண்டும்.

மற்றவர்கள் படிக்கக் கூடாது  என்ற பரந்த உணர்வே அதற்குக் காரணம் என்பதை உணர்ந்தார் முதல்வர். அதனால் சமஸ்கிருதத்தை நுழைவுத் தேர்வில் இருந்து நீக்குகிறார்.

முதல்வரின் முடிவுக்கு எதிர்ப்பு வருகிறது.

மருத்துவத் துறையில் தகுதி, திறமை போய் விடும் என்கிற கேள்விகள் எழுகிறது. அதைப் புறந்தள்ளுகிறார் முதல்வர்.

அதன்பிறகு பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், முசுலீம்கள், கிறித்துவர்கள் என்று நிறைய பேர் மருத்துவக் கல்வி படிக்கிறார்கள்.

இன்று, இந்தியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவர்களைக் கொண்ட ஊர் என்ற பெயரை பெற்றிருக்கிறது சென்னை.

வெளிநாட்டினர் கூட இங்கு வந்து இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு போகும் நிலைமை உருவாகியிருக்கிறது.

80 ஆண்டுகளுக்கு முன் பனகல் அரசர் போட்ட உத்தரவு, செரியன், சாலமன் விக்டர் போன்ற உலகப் புகழ் பெற்ற மருத்துவர்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்தது என்றால், அது மிகையாகாது.

Posted by parthasarathy r at 02:45 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: சமஸ்கிருதம், பனகல் அரசர், மருத்துவம்

Friday, 31 December 2021

கிரெகொரியின் நாட்காட்டி


அய்க்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாட்காட்டி

கிரெகொரியின் நாட்காட்டி (Gregorian calendar) என்பது உலக (சர்வதேச) அளவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் நாட்காட்டியாகும்.[1][2][3] இந்த நாட்காட்டி கிரிகோரியன் நாட்காட்டி எனவும் அறியப்பெறுகிறது. மேலும் மேற்கத்திய நாட்காட்டி எனவும் கிறித்துவ நாட்காட்டி எனவும் வழங்கப்பெறுகிறது. இந்த நாட்காட்டியானது சர்வதேச நிறுவனங்களான சர்வதேச தபால் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றினால் அங்கீகரிப்பட்டுள்ளது.[4]

உரோமையில் புனித பேதுரு பெருங்கோவிலில் உள்ள திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரியின் கல்லறை. நாட்காட்டி சீர்திருத்தம் கொண்டாடப்படும் காட்சி

இன்று உலகில் பரவலாகப் பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியான இது கி. மு 45 -ல் ரோமப் பேரரசர் சூலியசு சீசரால் உருவாக்கப்பட்ட யூலியன் நாட்காட்டியின் (Julian calendar) ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோயிசியசு இலிலியசு (Aloysius Lilius) என்ற மருத்துவரால் முன்வைக்கப்பட்டது. இது பிப்ரவரி 24 1582 இல் அப்போதைய திருத்தந்தையான திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரியின் ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாகப் பின்னாளில் இந்நாட்காட்டிக்கு "கிரகோரியன் நாட்காட்டி" என்னும் பெயர் வழங்கலாயிற்று.
இந்த நாட்காடியின் படி இயேசு பிறந்ததாகக் கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன. மேலும் இக்காலப்பகுதி "ஆண்டவரின் ஆண்டு" எனவும் பெயரிடப்பட்டது. இது கிபி 6 வது நூற்றாண்டில்தயனீசியசு எக்சீகுவசு (Dionysius Exiguus) என்னும் கிறித்தவத் துறவியால் உரோமையில் துவக்கப்பட்ட ஆண்டுக் கணிப்பு முறையாகும்.

கிரிகோரியன் நாட்காட்டி பயன்படுத்தும் முன்னர் இருந்த உரோமானிய நட்காட்டியில் சனவரி, பிப்ரவரி, மார்ச்சு, ஏப்ரல், மே, சூன், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், திசம்பர் எனப் பத்து மாதங்கள் கொண்டதே ஒரு ஆண்டாகும். பின்னரே சூலை மற்றும் ஆகத்து மாதங்கள் சேர்க்கப்பட்டன. கிரகோரியின் நாட்காட்டியானது 'சூலியன் நாட்காட்டியின்' சராசரி ஆண்டைவிட நீளமாகக் காணப்பட்டமையால் இளவேனிற் சம இராப்பகல் நாள், நாட்காட்டியில் பின்னோக்கி நகர்வதைத் திருத்துவதற்காக முன்கொணரப்பட்டது.அதாவது கிபி.1752 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் சுமார் 10 நாட்கள் கிரிகோரியன் நாட்காட்டியில் இருந்து கழிக்கப் பட்டது.மேலும் உயிர்த்த ஞாயிறு நாளைக் கணக்கிட பயன்பட்ட சந்திர நாட்காட்டியும் பல குறைகளைக் கொண்டிருந்ததும் இன்னொரு முக்கிய காரணமாகும்.

எசுப்பானியா, போர்ச்சுக்கல், போலந்திய இலிதுவேனியன் காமன்வெல்த், இத்தாலியின் பெரும்பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் நாட்காட்டியை முதலில் ஏற்றுக் கொண்டன. 1582 அக்டோபர் முதல் இவை கிரிகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்தத் தொடங்கின. இங்கிலாந்தும் அமெரிக்காவும் 1752 ஆம் ஆண்டிற்குப் பிறகே கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தன. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்தியாவிலும் இந்த நாட்காட்டி புழக்கத்திற்கு வந்தது. கிரிகோரியன் நாட்காட்டியைக் கடைசியாக ஏற்றுக் கொண்ட நாடுகளில் கடைசியாக வருவது கிரேக்கம் ஆகும். 1923 பிப்ரவரி 15 -ல் தான் இந்நாடு கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தது.

விளக்கம்தொகு

சூரிய நாட்காட்டி வகையைச் சார்ந்தது கிரிகோரியன் நாட்காட்டியாகும். ஒரு வழக்கமான கிரிகோரியன் ஆண்டு என்பது முன்நூற்று அறுபத்து ஐந்து (365) நாட்களையும், ஒரு லீப்(நெட்டாண்டு) ஆண்டினையும் உடையதாகும். லீப் ஆண்டு என்பது வழக்கமான கிரிகோரியன் ஆண்டு நாட்களுடன், பிப்ரவரி 29 என்ற நாளையும் இணைத்து முன்நூற்று அறுபத்து ஆறு (366) உடையதாகும். பொதுவாக லீப் ஆண்டு நான்கு கிரிகோரியன் ஆண்டுக்கொருமுறை ஏற்படுகிறது. சூலியன் நாட்காட்டி படி இல்லாமல் நானூறு (400) ஆண்டுகளுக்கு மூன்று (3) லீப் வருடங்களைக் கிரிகோரியன் நாட்காட்டி தவிர்த்துவிடுகிறது.

ஒரு கிரிகோரியன் ஆண்டானது பின்வரும் பன்னிரண்டு மாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

வரிசை எண்.மாதத்தின் பெயர்நாட்கள்
1சனவரி31
2பிப்ரவரி28 or 29
3மார்ச்31
4ஏப்ரல்30
5மே31
6சூன்30
7சூலை31
8ஆகத்து31
9செப்டம்பர்30
10அக்டோபர்31
11நவம்பர்30
12திசம்பர்31

ஒவ்வொரு மாதமும் சீரற்ற முறையில் வருகின்ற நாட்களைக் கணக்கிட கீழ்கண்ட ஈடுகோள் உதவுகிறது.

L = 30 + { [ M + floor(M/8) ] MOD 2 }

இதில் L என்பது மாதங்களின் நாட்கள் எண்ணிக்கையைக் குறிக்கும், M என்பது 1 முதல் 12 வரையான மாதத்தின் வரிசை எண்ணைக் குறிக்கும்.

பொதுவாகப் பூமி ஒரு முறை சூரியனை சுற்றிவர 365 நாள் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடி காலத்தினை எடுத்துக் கொள்கிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் காலத்தினை ஒருநாள் என்று வைத்துக் கணக்கிட இருக்கும் சிரமத்தினை எண்ணி, ஒரு ஆண்டினை 365 நாட்கள் என்ற முழு எண்ணாகக் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மீதமிருக்கும் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடிகளைத் தவர்க்க இயலாது என்பதால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறப்பு நாளாகப் பிப்ரவரி 29 என்ற நாளையும் இணைத்துக் கிரிகோரியன் நாட்காட்டில் கணக்கிடப்படுகிறது.

இவ்வாறு ஆண்டிற்கொருமுறை ஒரு நாளை (பிப்ரவரி 29) நாளை இணைக்கையில் 100 ஆண்டுகளில் 18 மணி 43 வினாடி காலம் அதிகமாக இணைக்கப்படுகிறது. எனவேதான் நூறு வருடங்களுக்கு ஒரு முறை லீப் வருடம் (நெட்டாண்டு) கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இவ்வாறான பல சீர்த்திருத்தங்களை கொண்ட கிரிகோரியன் நாட்காட்டினாது, மேலும் தீர்வில்லாத சிக்கல்களை கொண்டிருப்பதால் இந்த நாட்காட்டியானது சரியானது இல்லை என்ற கருத்தும் அறிஞர்களிடையே உள்ளது.

சந்திர நாட்காட்டிதொகு

கிறிசுதுவர்கள் பொதுவாக இயேசுவின் பிறந்தநாளென்று டிசம்பர் 25 ஆம் நாளைக் குறித்துக் கொண்டாலும், இயேசு உயிர்த்தெழுந்த நாளைக் கணக்கிட கிரிகோரியன் நாட்காட்டியை அடிப்படையாகப் பயன்படுத்துகிறார்கள். இதனால் ஈஸ்டர் எனப்படும் இயேசு உயிர்த்தெழுந்த நாள் ஆண்டுதோறும் வேறுவேறு நாட்களில் வருகிறது. இதற்குச் சூரியன் மற்றும் சந்திரனின் இயக்கத்தினையும் கணக்கில்கொள்வதே காரணமாகிறது.

- விக்கிப்பீடியா

Posted by parthasarathy r at 09:57 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கிரிகோரியன், நாள்காட்டி

Thursday, 30 December 2021

கிராம நிர்வாகங்களில் பார்ப்பன, ஆதிக்க ஜாதி ஆதிக்கம் தகர்ப்பு


 ஜாதிஒழிப்பு

 

 AThi Asuran

 

  Dec 28, 2021

Image

கிராமங்களைப் பற்றி தோழர் பெரியார் பேசுவதைப் பாருங்கள்.

“கிராமங்கள்  பலவற்றால்  ஆகிய  ஒரு  நாட்டை  ஒருவன்  கைப்பற்றி  ஆட்சி  செய்யும்போது,  அவன் இந்தக்  கிராம  வாழ்க்கையின்  அமைப்பைச்  சீர்குலைக்காமல்,  மேலும்  பலமாக்கி  வைத்துத்  தன்  ஆட்சியை  நிலை  பெறுத்துவதற்குச்  சாதகம்  செய்து  கொண்டான். 

ஒவ்வொரு  கிராமத்திற்கும்  ஒரு  தலைவனை  ஏற்படுத்தி  அவன்  மூலம்  தனக்குத்  தேவையான கப்பத்தை  வாங்கிக்  கொண்டு  தன்  கட்டளைப்படி  நடந்து  தனக்குதவிபுரிபவர்களுக்கு  ஒவ்வொரு  கிராமத்திலும்  வரி  நீக்கப்பட்ட  விளைநிலங்களை ஊழிய  இனாமென்றும்,  தேவதாயம்,  பிரம்மதாயம்  என்றும்  சாமிக்கும்,  பூசாரிக்கும்,  பிராமணருக்கும்  கொடுத்து  இவர்களைத்  தன்  ஆட்சிக்கு  அரண்களாக்கிக்  கொண்டான். 

கிராம அமைப்பு  முடி  ஆட்சிக்கும்,  கொடுங்கோன்மைக்கும்  சாதகமான  அமைப்பு  என்பதைக்  கண்டதினால்,  பழைய  இந்து  அரசர்கள்  காலத்தில்  இருந்த  இவ்வமைப்புப்  பின்னால்  முகமதிய  அரசர்களாலும்,  அதற்குப்பின் வந்த கிருஸ்தவ  (இங்கிலீஸ்)  அரசாங்கத்தாலும்,  அப்படியே  காப்பாற்றப்பட்டு வருகிறது. (பகுத்தறிவு இதழ். மே 1936)

இந்து மதம் திணித்த ஜாதிஅமைப்பை அப்படியே நிலை நிறுத்தவும், வலிமைப்படுத்தவும் இந்த கிராம அமைப்பு பயன்பட்டது என்றார் பெரியார்.

இப்படிப்பட்ட கிராமங்களுக்குத் தலைவர்களையும், நிர்வாகிகளையும் தேர்ந்தெடுக்கும் முறை ஒன்றை இராஜராஜசோழன் தொடங்கி வைத்தார். அது தான் “குடவோலை முறை”. குடவோலை முறைப்படி, ஒவ்வொரு கிராமத்தையும் நிர்வகிக்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். இப்போது நடக்கும் பஞ்சாயத்து போர்டு தேர்தலைப் போன்றது அது.

ஒரு முக்கியமான வேறுபாடு என்னவென்றால், குடவோலை முறையில் பார்ப்பனர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும். அவர்களுக்கு மட்டுமே அந்தத் தகுதி இருப்பதாக மன்னர்களே அறிவித்தார்கள். பார்ப்பனர்கள் மட்டுமே கிராமங்களை நிர்வகிக்கும் உரிமை பெற்றவர்களாக இருந்தார்கள். 

 ஆங்கிலேய அரசாங்கம் வந்த பிறகு, குடவோலை முறை மறைந்தது. 1802, 1895- களில் கிராம அதிகாரிகள் சட்டம் இயற்றப் பட்டது. அந்தச் சட்டத்தின்படியும் பரம்பரை பரம்பரையாக கிராமங்களை நிர்வகித்தவர்கள் என்ற அடிப்படையில் பார்ப்பனர்களே கிராம அதிகாரிகளாக நீடித்து வந்தனர். பார்ப்பனர்கள் வசிக்காத பல கிராமங் களில் பெரும் நில உடமையாளர்களாக இருந்த, பார்ப்பனரல்லாத உயர்ஜாதியினர் கிராம அதிகாரிகளாக வரத் தொடங்கினர்.

தற்காலத்திலுள்ள வி.ஏ.ஓ.க்களுக்கு இணையான பதவி அது. கிராம முன்சீஃப், கர்ணம், மணியம் என பல பெயர்களில் இந்தப் பரம்பரைப் பதவிகள் இருந்தன. இந்தப் பரம்பரைக் கிராம அதிகாரி களிடம் தான் நமது இருப்பிடச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், நில உரிமைப் பதிவுக்குத் தேவையான அடிப்படை ஆவணங்கள், நிலங்களின் எல்லைகள் குறித்த தகவல்கள் போன்ற பல அடிப்படையான சான்றிதழ்களைப் பெறவேண்டும்.

திராவிடர் அரசுகள் எத்தனையோ வகுப்புரிமைச் சட்டங்களை இயற்றினாலும், கல்வி, வேலை வாய்ப்பு, விவசாய, நில உரிமைகள்  வழங்கப்பட்டாலும் அவற்றைப் பெறுவதற்கு இந்தச் சான்றிதழ்கள் மிகவும் முக்கியம். அந்தச் சான்றுகளை வழங்கும் உரிமை பார்ப்பனர் களிடமும், அந்தந்தக் கிராமங்களிலிருந்து ஆதிக்க ஜாதியினரிடமும் இருந்தது.

ஒரு பட்டியலின மாணவரோ, பிற்படுத்தப்பட்ட சமுதாயத் திலேயே எளிய ஜாதி மாணவரோ, அந்தக் கிராமத்தில் பெரும்பான்மை யாக இல்லாத ஜாதி மாணவரோ அல்லது விவசாய, நில உரிமைகளைப் பெற விரும்பும் மக்களோ மேற்கண்ட ஆதிக்கவாதிகளிடம் சான்றிதழ் களைப் பெறுவதென்பது கனவிலும் நடக்காததாக இருந்தது.

நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதையாக நமது உரிமைகள், ஏட்டில் இருந்தன. நடைமுறைக்கு வருவதில் பெரும் தடை இருந்தது. மக்கள் விடுதலையில் அக்கறையுள்ள - சமுதாயத்தை நன்கு அறிந்து வைத்துள்ள ஒரு அரசு மட்டுமே இதை நுணுக்கமாகப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்ற முடியும்.

தோழர் பெரியார் நீண்ட காலமாகவும், அந்த நேரத்திலும்,

கிராமங்களில் ஜாதி ஒழிய வேண்டுமென்றால், கணக்குப்பிள்ளை வேலையைப் பறையருக்குக் கொடுக்க வேண்டும். மணியம் வேலையை பள்ளர், சக்கிலியர், குறவர்களுக்குக் கொடுக்க வேண்டும். கணக்குப் பிள்ளையாகப் பார்ப்பானும், மணியமாக பிள்ளையும், கவுண்டரும் இருப்பதால்தான் அங்கே ஜாதி உரிமை தோன்றுகிறது. ஆகவே ஜாதி ஒழிப்புக்கு நாம் தூண்ட வேண்டும். பரிகாரம் தேட வேண்டும்” என்று அறிவிப்பு செய்தார். (விடுதலை 12.04.1964 & 16.04.1964)

என்றார். பெரியாரின் கனவை அண்ணா நனவாக்கினார். கிராம நிர்வாகம் என்பதில் இருந்த பார்ப்பன, ஆதிக்க ஜாதிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

Tamil Nadu Proprietary Estates Village Service and the Tamil Nadu Hereditary Village-Offices (Repeal) Act, 1968 எனும் சட்டத்தை 1968 அக்டோபர் 16 அன்று பிறப்பித்தார்.

அந்தச் சட்டத்தைச் செயல்படுத்தியதில் எழுந்த சில சட்டச் சிக்கல்களை - அடுத்து வந்த கலைஞர் ஆட்சி Tamil Nadu Village Officers Service Rules, 1970 எனும் சட்டத்தால் சரி செய்தது.

எதிர்பார்த்தபடியே இச்சட்டங்களை எதிர்த்து ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. 1973 மற்றும் 1975 ஆம் ஆண்டுகளில் அந்தச் சட்டச் சிக்கல்களைச் சரி செய்வதற்காக கலைஞரின் தி.மு.க. அரசு புதிய புதிய அரசாணைகளைப் பிறப்பித்தது.

கிராம அதிகாரி, கர்ணம்போன்ற எந்தப் பதவியாக இருந்தாலும் அவற்றுக்கு அரசு சார்பில் பொதுத்தேர்வு நடத்தப்படும். அதில் தேர்வாகும் எந்த ஜாதியினர் வேண்டுமானாலும் எந்தக் கிராமத்திற்கு வேண்டுமானாலும் கிராம நிர்வாக அதிகாரிகளாக நியமிக்கப்படலாம் என்ற நிலை உருவானது.

பஞ்சமிநிலக் கொள்ளைக்கு உடந்தையான பார்ப்பனர் மற்றும் கர்ணங்கள், மிராசுதார்கள்

ஆங்கிலேயர் காலத்தில் அரசுக்குச் சொந்தமாக இருந்த புறம் போக்கு நிலங்களில் விவசாயம் செய்து கொள்ள யார் வேண்டு மானாலும் விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிப்பவர்களுக்கு நிலம் கிடைக்க வேண்டுமானால், அந்தப் புறம்போக்கு நிலங்கள் இருக்கும் கிராமங்களில் உள்ள ஆதிக்க ஜாதிகளைச் சேர்ந்த இந்தக் கர்ணம், மணியம், முன்ஃப்புகளின் ஒப்புதல் வேண்டும். அவர்கள் மறுத்தால் யாருக்கும் நிலம் கிடைக்காது.

பார்ப்பனர்களோ, பெரும் நில உடமையாளர்களோ, நிலமே இல்லாத ஆதிக்க ஜாதியைச் சேர்ந்தவரோ யாராக இருந்தாலும், பட்டியலின மக்களுக்கோ, அந்தந்தக் கிராமங்களில் எண்ணிக்கை குறைவாக வாழும் ஜாதியினருக்கோ நில உரிமை கிடைப்பதை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்.

அதனால் தான், ஆங்கிலேயர் காலம் முதல் நீதிக்கட்சி காலம் வரை பட்டியலின மக்களுக்கு 12 இலட்சம் ஏக்கர் நிலங்கள் வழங்கப் பட்டன. (Depressed Classes Land Act G.O. No 1010/10-A (Revenue) 1892) அப்படி வழங்கப்பட்ட நிலங்களில் இன்று சுமார் 10 இலட்சம் ஏக்கர் நிலங்களைப் பட்டியலின மக்களிடமிருந்து இடைநிலை ஜாதியினர் பறித்துக் கொண்டனர்.

இந்து மதத்தின் ஜாதிமுறை என்பது சமுதாயத்தின் அனைத்துத் தளங்களிலும் ஆதிக்கத்தைச் செலுத்துவதை நாம் அறிவோம். பஞ்சமி நில அபகரிப்புக்குப் பின்னாலும் இந்து பார்ப்பன, ஜாதித்தத்துவங்களே இருக்கின்றன. அவை கிராம முன்ஃப், கர்ணம், மணியம் போன்றவர் களின் வழியாக பஞ்சமி நிலக் கொள்ளையை நடத்தின.

அப்படிப்பட்ட இந்து மத, ஜாதிமுறைப் பாதுகாப்புப் பதவி களைத்தான் அண்ணாவும், கலைஞரும் அதிரடியாகக் கலைத்தனர். ஒருவேளை இத்தகைய சட்டங்கள் பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்ட காலத்திலேயே நிறைவேற்றப்பட்டிருக்குமானால் இத்தனை இலட்சம் ஏக்கர் நிலங்கள் பட்டியலின மக்களிடமிருந்து பறிபோயிருக்காது.

ஜாதியச் சமுதாயம் மீது நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல்

பரம்பரைப் பதவிகளுக்கு எதிராக பொதுத்தேர்வுகள் வழியாக கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு செய்யப்படும் முறை உருவாக்கப் பட்ட, அதே காலகட்டத்தில், தமிழ்நாட்டு அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீடு சதவீதமும் 49 ஆக உயர்த்தப்பட்டது.

இதுபோன்ற தொடர்ச்சியான சட்டரீதியான கூட்டு நடவடிக்கை களும், இந்தச் சட்டங்களுக்கு ஆதரவாகப் பெரியார் திரட்டிக்கொடுத்த சமுதாய ஆதரவும் தமிழ்நாட்டு கிராமங்களில் நிலவிய கடுமையான பார்ப்பன, பார்ப்பனிய, இடைநிலை ஜாதிகளின் ஆதிக்கங்களின் மீது துல்லியத் தாக்குதல்களை நடத்தின.

– அதிஅசுரன், வேண்டும் மீண்டும் திராவிடர் ஆட்சி நூல்

-காட்டாறு இணைய பக்கத்தில் இருந்து



Posted by parthasarathy r at 20:56 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கர்ணம், கிராம நிர்வாகம், பெரியார், மணியம்

Friday, 17 December 2021

துறவியாக சூத்திரனுக்கு அனுமதி இல்லை

சூத்திரன் என்ற இழிசொல்லை நம்மைக் குறிப்பதற்குப் பயன்படுத்தியவர்கள்,  இன்றும் பயன் படுத்துகின்றவர்கள்,  பிராமணர்கள். அவர்கள் தம்மை பிராமணர் என்று சொல்லிக்கொள்ளும்போதே நம்மை இழிபிறவியினர் Kul-heena; low-borns)  சூத்திரர்கள் என்று கருதுகிறார்கள் மற்றும் சுட்டிக்காட்டுகிறார்கள் என்பது  தெளிவாகும்.  
கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளபோதே இந்தக் கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன.  நம்மை மீண்டும் அநாகரிக வேத காலத்திற்குக் கொண்டுசெல்ல ஜக்கி மூலமாக சதுர்வர்ண சதிகாரர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது நிலைமை இன்னும் மோசமாகவே இருக்கும். (அ)தர்ம சாஸ்திரங்களைக் காட்டி சூத்திரர்கள் துறவு புகுவது தடுக்கப்படும், (தற்போது நீதி மன்றங்கள் அந்த உரிமையை அங்கீகரித்திருந்தாலும் கூட). 
சென்னை உயர்நீதிமன்றத்தின், 1887 ஆம் ஆண்டுத் தீர்ப்பு ஒன்றில், சூத்திரர்களில் துறவிகள் இருந்தால், அவர்கள் பரதேசிகள் என்று அழைக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு விளக்கம் அளித்தவர் நீதிபதி முத்துசாமி ஐயர் ஆவார். (He said that  "If an ascetic or a hermit is a Brahmin, he is called a Yati or Sanyasi; if a Sudra, he is called a paradesi" (Giyana Sambandha Pandara Sannadhi v. Kandasami Tambiran - 1887) (Chief Justice. Sir Arthur J. H. Collins and Justice Muthusamy Ayyar) (P - 385 Madras Series Vol .X). )
இந்து மதம் பிராமணரல்லாதாரை அமைப்பு ரீதியாகத் தொடர்ந்து இழிவு படுத்தி வருகிறது. 
இந்தச் சூத்திர மடாதிபதிகள் (பரதேசிகள்) என்றைக்குத தன்மானம் கொண்டவர்களாக மாறுவர்?
- கட்செவி வழியாக பெறப்பட்டது
Posted by parthasarathy r at 07:07 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: சூத்திரர், தீர்ப்பு, துறவி

Monday, 29 November 2021

மோசடி செய்தி

https://images.app.goo.gl/9V3f4qHVtBAsEsL4A

Posted by parthasarathy r at 03:42 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: மோசடி

Sunday, 28 November 2021

இந்தியாவில் சத்ரியர்கள் என்றுயாரும் இல்லை; சூத்திரர்களுக்கு சொத்தும் இல்லை!

#இந்தியாவில் சத்ரியர்கள் என்றுயாரும் இல்லை என்று பார்ப்பனர் தொடுத்த வழக்கு எண் 1.

பார்பனர்கள் வாதம்,இந்துக்களில்
பிராமணர்,
சத்ரியர்கள்
இருவரைத்தவிர
யாருக்கும் சொத்துக்களை வாங்கவே விற்கவோ உரிமையில்லை.

மனுதர்மபடி பிராமணர் மற்றும் சத்ரியர்கள் மட்டுமே சொத்துக்களை வைத்துக் கொள்ள உரிமை உண்டு.

புராணகாலத்தில்
#பரசுராமர் தன்தந்தையை ஒரு சத்ரியன் கொன்ற கோபத்தில் இந்தியாவில் எல்லா சத்ரியர்களையும் கொன்று விட்டார்.
எனவே இந்தியாவில் இப்போது மீதம் இருப்பவர்கள் அனைவரும் 
பார்பனர்,
வைசியர்,
சூத்திரர்,
பஞ்சமர்
என்ற பிரிவுகளில் மட்டுமே வருவார்கள்.
மனுதர்மம் படி இவர்களில் பார்பனரைத் தவிர வேறு யாருக்கும்
சொத்து வைத்துக் கொள்ள உரிமையில்லை!

எனவே பார்பனரைத் தவிர வேறு யாருக்கும் சொத்து வைத்து‌ கொள்ள உரிமையில்லை என்று சட்டமியற்ற கோரி கிழக்கிந்திய கம்பெனி அரசுக்கு 1837ல் பார்ப்பார் மனு கொடுத்தனர்.

நல்லவேளை கிழக்கிந்திய கம்பெனியின் ப்ரைவி கவுன்சில் இப்படி ஒரே அடியாக உங்கள் புராணகதைகளை ஏற்றுக்கொண்டு வேறு யாருக்குமே சொத்து வைத்துக் கொள்ள உரிமையில்லை என்றெல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது.
நிச்சயம் சத்ரியர்கள் இருப்பார்கள் என்று சொல்லி அந்த முதல் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இந்தியாவில் சத்ரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்பனர் தொடுத்த வழக்கு எண்-2-
#ஆங்கிலேயரின்சட்ட ஆவண எண்
(I.L.R.10 I.L.R.12) 1886:

இந்த வழக்கு வரும் போது கம்பெனி ஆட்சி முடிந்து பிரிட்டிஷ் ஆட்சி வந்துவிட்டது.

இதற்கு நடுவே நடந்த 
#சிப்பாய்கலகம் பற்றியெல்லாம்,பார்ப்பானனுக்கு கவலை இல்லை,
இந்தியாவில் சத்ரியர்கள் யாருமே இல்லை என்பதை நிருபணம் செய்ய மீண்டும் போராடுகின்றான்.

இந்த வழக்கு வழக்கம்போல பார்ப்பனருக்கும்,வங்காள மற்றும் பீஹாரின் காயஸ்தா பிரிவினர் இவர்களில் யார் சத்ரியன் என்று பிரிட்டிஷ் கோர்ட்களில் நடைபெறுகிறது.
இந்த வழக்கில் வங்காளத்தில் உள்ள காயஸ்தா பிரிவினர் சத்ரியர் தான் என்று பிரிட்டிஷ் கோர்ட்களில் தீர்ப்பு வழங்குகிறார்கள்.

இந்தியாவில் சத்ரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்ப்பனர் கொடுத்த வழக்கு எண்--3.
ஆங்கிலேயரின் சட்ட ஆவண எண்(1916)20Cal.W.N.901).

1916ல் மறுபடியும் பார்ப்பனர் வழக்கு தொடர்ந்து வங்காளத்தில் உள்ள காயஸ்தா பிரிவினர் சத்ரியர் அல்ல என்று ஆங்கிலேய கோர்ட்டில் தீர்ப்பை பெறுகிறார்கள்.இந்த வழக்கு 1926ல்தான் முடிகிறது.

இந்தியாவில் சத்ரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்ப்பனர் தொடுத்த வழக்கு எண்--4.
ஆங்கிலேய சட்ட ஆவண எண்.L.R(1928)52 Bom.497

மறுபடியும் சிவாஜி பரம்பரையை விடாமல் வம்புக்கிழுத்த பார்பனர் 1926-ல் 
#வெங்கோஜி
அல்லது
#எக்கோஜி
என்று அழைக்கப்பட்ட சிவாஜியின் தம்பியின் வழி வந்தவர்கள் தஞ்சை மன்னர்களாக இருக்கிறார்கள் அவர்கள் சத்ரியர்கள் அல்ல சூத்திரர்கள் என்று
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்கள்.

அந்த வழக்கின் 229பக்க தீர்ப்பில்,
மகாராஷ்டிரத்தில் உள்ள சிவாஜி வம்சம் என்று சொல்பவர்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்(long gap from 1600-1900).
1)முதல் ஐந்து குடும்பங்கள் 
2)இரண்டாவது 96குடும்பங்கள்
3) மற்றவர்கள்
என்று பிரிக்கலாம்.
இவர்களில் முதல் இரண்டு பிரிவினரும் சத்ரியர்கள், அதனால் வெங்கோஜி அல்லது எக்கோஜி என்று அழைக்கப்பட்ட சிவாஜியின் தம்பியின் வழி வந்தவர்கள்
சத்ரியர்களே என்று பிரிட்டிஷ் கோர்ட்டு தீர்ப்பு வழங்குகிறது.

இந்தியாவில் சத்ரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்ப்பனர் தொடுத்த வழக்கு எண்--5.

மதுரையை சேர்ந்த யாதவர்கள் 1927ல் நாங்களும் யாதவ் குலத்தில் பிறந்த கிருஷ்ணனின் வம்ஷம்,
நாங்களும் சத்ரியர்கள்தான் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க,
எதிர்த்து வாதாடிய பாராபனர்கள் அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வைக்கின்றனர்.

இப்படியாக ஆங்கிலேயர் காலத்திலும் பார்ப்பார் நிறுவ முயன்றது என்னவென்றால்,இந்தியாவில் சத்ரியர்கள் என்று யாரும் இல்லை.

இந்து மனுதர்மப்படி பிராமணன் மட்டுமே சொத்து வைத்து
கொள்ளலாம்!
படிக்கலாம்!
பதவிகளில்
இருக்கலாம்!
இன்னும் பிற பிற லாம்!லாம்!!லாம்!!!
ஆகவே தன்னை ஆண்ட பரம்பரை என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படும் எல்லோரும் ஒன்று புரிந்து கொள்ளுங்கள்

பார்ப்பான் உங்களை நேரில் பார்க்கும் போது
"#ஆமா அய்யா நீங்கள் எல்லாம் எவ்வளவு பெரிய ஆண்ட பரம்பரை"
என்று தான் சொல்லுவான்.
ஆனால்,
உங்களை சூத்திரன் ஆக்க சட்டப்படி எல்லா வேலையும் செய்வான்.

எல்லா சாதியிலும் உங்கள் சொந்தக்காரன்(என்னையும் சேர்த்துதான்)உங்களை ஆண்டபரம்பரையில் சேர்க்க பல டகால்டி வேலை செய்வான் அதையெல்லாம் காதில் போட்டு கொள்ளாதீர்கள்.

உண்மையில் உங்களுக்கு உங்கள் சாதி உங்கள் சமூகத்தின் மீது அன்பு இருந்தால்,
ஆண்ட பரம்பரை,
புராண கதை
சொல்லி பெருமை பேசுவதை விட்டு விட்டு,
உங்கள் சமூகத்தில்,
கல்வியில்,
அறிவில்
நாம் இப்போது என்ன செய்கிறோம் என்று சிந்தியுங்கள்.

குறைந்தபட்சம் உங்கள் சமூகத்தில் உள்ள ஏழை மாணவர்கள் படித்து முன்னேற உதவுங்கள்.
பணமாக முடியவில்லை என்றாலும் நேரத்தை கொடுங்கள்.
படிப்புக்காக வங்கியில் கடன் வாங்க உதவுங்கள்.

ஆண்ட பரம்பரை கதை பேசினால்,
பார்ப்பான் உண்டியல் மட்டுமே நிறையும்.
அவனை தூக்கி சுமக்கும் தூக்குத் துக்கியாகத்தான் நம்மை வைத்திருப்பான்.
அப்போதும் நீங்கள் ஆண்ட பரம்பரை இல்லை என்று அவன் எங்காவது கோர்ட்டில் கேஸ் போட்டு கொண்டுதான் இருப்பான்.

பதிவுக்கு உதவிய நூல்:-
தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்
ஆசிரியர்:கிருஷ்ணவேல்.
Posted by parthasarathy r at 23:15 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: சத்திரியர், சூத்திரர், பிராமணர், ொத்துரிமை

Thursday, 25 November 2021

பார்ப்பனர் என்பது வசைச்சொல்லும் இல்லை, பிராமணர் என்பது நாகரிகச் சொல்லும் இல்லை



பார்ப்பனர் என்பது வசைச்சொல்லும் இல்லை, பிராமணர் என்பது நாகரிகச் சொல்லும் இல்லை என்று கூறியிருந்தேன். பார்ப்பனர் என்பது வசைச் சொல்லாக இருக்குமானால், சங்க இலக்கியம் தொடங்கி, பாரதியார் வரையில் அதனைப் பயன்படுத்த்தியிருக்க மாட்டார்கள்.

சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் 156 ஆவது பாடல் "பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பூ முருக்கின் நல்நார் களைந்து தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்து படிவ உண்டிப் பார்ப்பன மகனே" என்று அமைந்துள்ளது. மூன்று வரிகளில் நான்கு முறை பார்ப்பான் என்ற சொல் இடம்பெற்றுள்ளதைப் பார்க்க முடிகிறது. அகநானூற்றுப் பாடல் ஒன்றில், பாலை பாடிய பெருங்கடுங்கோ, "தூதுஓய் பார்ப்பான் மடிவெள் ஓலை படையுடைக் கையர் வருந்திறம் நோக்கி" என்று எழுதுகின்றார். திருவள்ளுவர் ஒரு குறளை, மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்" என வடித்துள்ளார். இப்படிப் பல மேற்கோள்களைக் காட்ட முடியும். கொஞ்சம் கடுமையாகப் பாரதியார், "தண்டச் சோறுண்ணும் பார்ப்பான்" என்று எழுதுகின்றார்.

எனவே பாப்பான் என்பது வசைச் சொல் அன்று. அது தொழிலைக் குறிக்கும் சொல்.மறைந்த தமிழறிஞர் பெருஞ்சித்திரனார், "குறி பார்ப்பார், கணி (சோதிடம்) பார்ப்பார் என்பதால் அவர்களுக்குப் பார்ப்பார் என்று பெயர் வந்தது தம்பி" என்று ஒருமுறை என்னிடம் சொன்னது இன்றும் என் நினைவில் உள்ளது. தச்சு வேலை செய்வோர் தச்சர் என்பது போல, ஆசிரியப் பணி செய்வோர் ஆசிரியர் என்பது போல, குறியம், சோதிடமும் பார்ப்போர் பார்ப்பனர் என்று ஆயினர். இதில் என்ன வசை இருக்கிறது? மேலும் உயர்வாக இதற்குப் பொருள் சொல்வோரும் உண்டு. பார்ப்பு என்னும் சொல்லுக்குப் பறவையின் குஞ்சு என்று பொருள். இந்தப் பொருளில் அந்தச் சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கும் இலக்கியச் சான்றுகள் உள்ளன. "அள்ளற் பழனத்து அரக்காம்பல் வாயவிழ வெள்ளம் தீப்பட்டதென வெரீஇப் - புள்ளினந்தம் கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை......." எனவரும் முத்தொள்ளாயிரப் பாடல் பார்ப்பு என்னும் சொல்லை பறவையின் குஞ்சு என்னும் பொருளில்தான் ஆள்கிறது.

சரி, இதற்கும் பார்ப்பனர்களுக்கும் என்ன தொடர்பு? வலிந்து ஒரு தொடர்பு சொல்லப்படுகிறது. முட்டைக்குள் இருக்கும் குஞ்சின் உயிர் வேறு, முட்டை உடைந்து வெளியில் வரும் குஞ்சின் உயிர் வேறு. எனவே அதற்கு இரு பிறப்பு. அதனைப் போலவே, உபநயனம் (பூணூல் அணிதல்) முடிந்தவுடன் அவர்கள் அடுத்த பிறப்பை எடுத்து விடுகின்றனர். அதனால்தான் அவர்களுக்கு இருபிறப்பாளர்கள்(துவிஜர்) என்று பெயர். அந்த அடிப்படையில்தான் பார்ப்பனர் என்று பெயர் வந்தது என்று பார்ப்பன ஆதரவாளர்கள் எழுதுகின்றனர். அப்படியே வைத்துக் கொண்டாலும் அதுவும் மிக உயர்வாகவே அவர்களைக் காட்டுகிறது. எழுத்தாளர் ஜெயமோகன் அவருடைய முகநூலில், எனக்கான விடையாக ஒரு செய்தியை எழுதுகின்றார். "சுபவீ இதனை வசைச் சொல் இல்லை என்கிறார். ஆனால் ஈ வே ரா வின் வெறுப்புஅரசியலால் இது வசைச் சொல் ஆகிவிட்டது. அதனை அந்தச் சமூகம் விரும்பவில்லை" என்று குறிப்பிடுகின்றார். இங்கும் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். ஜெயமோகனும் அதனை வசைச் சொல் என்று கூறவில்லை. பெரியார் பயன்படுத்திய முறையில் அது அப்படி ஆகிவிட்டது என்கிறார். அது உண்மையானால், அது பெரியாரின் திறனுக்கே எடுத்துக்காட்டாக உள்ளது.

சரி, இது வசைச் சொல் இல்லை என்றாலும், ஐயர், அந்தணர், பிராமணர் என்ற சொற்களை ஏன் நீங்கள் பயன்படுத்தக்கூடாது என்று கேட்கின்றனர். ஐயர் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் உரியதில்லை. அது பொதுவாகத் 'தலைமை'யைக் குறிக்கும் சொல். "என்ஐ முன் நில்லன்மீர்" என வரும் திருக்குறள் அடிக்கு, என் தலைவன் முன் நில்லாதீர்கள் என்றுதான் பொருள். எனவே ஐயர் என்ற சொல்லைக் கையாண்டால். அவர்களை நாம் தலைவர்களாக ஏற்றுக் கொண்டுவிட்டோம் என்று பொருள். அவர்கள் எப்படி நமக்குத் தலைவர்கள் ஆவார்கள்? அந்தணர் என்போர் அறவோர். ஆதலால், அச்சொல், எல்லாச் சமூகத்திலும் உள்ள சான்றோர்களைக் குறிக்கும். ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு உரிய சொல் இல்லை. பிராமணர் என்னும் சொல்லையே பலரும் கையாள்கின்றனர். அதனைத்தான் அவர்களும் விரும்புகின்றனர். ஆனால் அந்தச் சொல்லுக்கு என்ன பொருள்? பிரம்மனிலிருந்து வந்தவர்கள் என்றாகும். பிரம்மனையே ஏற்காத என்போன்றோர் எப்படிப் பிரம்மனிலிருந்து வந்தவர்களாக அவர்களை ஏற்க முடியும்?

இன்னொரு முதன்மையான பார்வையும் இங்கு தேவைப்படுகிறது. அவர்கள் பார்ப்பனர் என்றால் நான் ஆசிரியராகவோ, சலவைத் தொழிலாளியாகவோ, வேறு எதோ ஒரு தொழில் சார்ந்த பெயருக்கு உரியவராகவோ இருக்கலாம். ஏனெனில் அது தொழில் சார்ந்த சொல். ஆனால் பிராமணர் என்பது வருணம் சார்ந்த சொல். ஆதலால் அவர் பிராமணர் என்றால் நான் சூத்திரனாக அல்லது பஞ்சமனாகத்தானே இருக்க முடியும். (சத்திரியரும், வைசியரும் தமிழ்நாட்டில் இல்லை). அவர்களை உயர்த்தி என்னைத் தாழ்த்தும் அந்தப் பிராமணர் என்னும் சொல்லை சொல்லை நான் ஏன் பயன்படுத்த வேண்டும்? இவையெல்லாம் ஒரு புறமிருக்க, நம் எதிர்ப்பு வெறும் சொல்லுக்கானது இல்லை. அவர்களின் செயல்களுக்கானது. கடவுள், மதம் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு எவ்வளவு பிளவுகளை, மோதல்களை இணக்கமாக வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடம் அவர்கள் ஏற்படுத்தினார்கள் என்னும் அடிப்படையில்தான் நம் அறச்சீற்றம் எழுகிறது. எடுத்துக்காட்டாக, மிகச் சாதாரணமாக இருந்த பிள்ளையார் வழிபாட்டை எப்படியெல்லாம் மோதல்களுக்குப் பயன்படுத்தினார்கள் என்பதை எண்ணிப் பார்த்தாலே பல உண்மைகள் புரியும் .

- ஒன் இந்தியா இணைய இதழில் அண்ணன்
சுப.வீ.. எழுதிய கருப்பும் - காவியியும் தொடரிலிருந்து !
Courtesy:- Chandran Veerasamy
Posted by parthasarathy r at 09:41 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: சுபவீ, பார்ப்பனர்
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

மூலிகை மன்னன்

மூலிகை மன்னன்
செ.ர.பார்த்தசாரதி

செ.ர.பார்த்தசாரதி

செ.ர.பார்த்தசாரதி
மூலிகை மன்னன்
Powered By Blogger

Search This Blog

Translate

About Me

parthasarathy r
View my complete profile

Contact Form

Name

Email *

Message *

Subscribe To

Posts
Atom
Posts
All Comments
Atom
All Comments

Followers

Blog Archive

  • ▼  2026 (32)
    • ▼  November (5)
      • ஜூனியர் விகடனுக்கு திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ...
      • திருமண மந்திரங்கள் குறித்து இராமானுஜ தாத்தாச்சாரியார்
      • தாலி கட்டாத திராவிடர்கள்
      • பொங்கலை ‘திராவிடர் திருவிழா’ என்று ஏன் அழைக்கிறோம்...
      • புதுமை இலக்கிய தென்றல் 1000ஆவது நிகழ்ச்சியில் பொற...
    • ►  October (5)
    • ►  September (5)
    • ►  August (13)
    • ►  July (3)
    • ►  March (1)
  • ►  2025 (28)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (2)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (3)
    • ►  May (5)
    • ►  March (4)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2024 (53)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  October (13)
    • ►  September (5)
    • ►  August (1)
    • ►  July (8)
    • ►  June (10)
    • ►  May (4)
    • ►  April (1)
    • ►  March (1)
    • ►  February (4)
    • ►  January (3)
  • ►  2023 (51)
    • ►  December (3)
    • ►  November (9)
    • ►  October (5)
    • ►  August (6)
    • ►  May (8)
    • ►  April (5)
    • ►  March (11)
    • ►  February (3)
    • ►  January (1)
  • ►  2022 (42)
    • ►  December (1)
    • ►  November (3)
    • ►  October (3)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  July (8)
    • ►  June (1)
    • ►  May (4)
    • ►  April (1)
    • ►  March (6)
    • ►  February (10)
    • ►  January (3)
  • ►  2021 (81)
    • ►  December (3)
    • ►  November (3)
    • ►  October (13)
    • ►  September (3)
    • ►  August (9)
    • ►  July (11)
    • ►  June (3)
    • ►  May (5)
    • ►  April (1)
    • ►  March (5)
    • ►  February (20)
    • ►  January (5)
  • ►  2020 (80)
    • ►  December (7)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  July (5)
    • ►  June (8)
    • ►  May (24)
    • ►  April (6)
    • ►  March (8)
    • ►  February (12)
    • ►  January (5)
  • ►  2019 (61)
    • ►  December (6)
    • ►  November (5)
    • ►  October (5)
    • ►  September (5)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  May (3)
    • ►  April (7)
    • ►  March (3)
    • ►  February (9)
    • ►  January (8)
  • ►  2018 (34)
    • ►  December (2)
    • ►  November (3)
    • ►  October (3)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  July (6)
    • ►  June (4)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  February (7)
    • ►  January (3)
  • ►  2017 (31)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (5)
    • ►  April (1)
    • ►  March (4)
    • ►  February (6)
    • ►  January (4)
  • ►  2016 (33)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (4)
    • ►  September (10)
    • ►  August (1)
    • ►  June (5)
    • ►  May (4)
  • ►  2015 (7)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  August (1)
    • ►  May (1)

Popular Posts

  • வண்ணார் வரலாறு
    ஒற்றைப் பத்தி -  January 31, 2021  • Viduthalai 'அர்த்தமுள்ள ஹிந்து மதம்' என்று பீற்றுகிறார்கள் - அந்த மதத்தில் மனிதர்களைப் பிறப்பின...
  • சங்ககாலம் பொற்காலமா? - 2
      பிப்ரவரி 01-15 , 2014 உண்மை  இதழ் பெண்ணடிமை – மூடநம்பிக்கை – வர்ணபேதம்-ஆரியத் தாக்கம் – பேராசிரியர் ந.வெற்றியழகன்   சிறப்பிழந்த சேரமன்னர்க...
  • திராவிடர் கழக கொடி அறிமுகப்படுத்தப்பட்ட நாள்.
    இன்று - 22.4.20 ஈரோடு சண்முக வேலாயுதம் அவர்களால் வடிவமைக்கப்பட்ட கொடியை 22.4.1946 திருச்சி டவுன்ஆளில் நடைபெற்ற திராவிடர் கழக ம...
  • கோயில் நுழைவு போராட்டத்தை எதிர்த்த உ வே சாமிநாதையரும் வ.சு அய்யரும்
    1899ஆம் ஆண்டு நடந்த கமுதி ஆலய நுழைவு வழக்கில் நாடார்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று நீதிமன்றத்தில் கூறியவர் உவே சாமிநாத அய்யர் 1922ஆம்...
  • திராவிடர் இயக்கத்தின் அய்ந்து ஆவணங்கள்!
    சென்னை  வேப்பேரி எதிராஜூலு முதலியார் இல்லத்தில் 1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி பார்ப்பனர் அல்லாதாரின் ஓர் அமைப்புக் கூட்டம் நடைபெற்ற...
  • இராமாயணம் ஒரு கட்டுக்கதை!
    சம்பூகன் வதம் ஆரிய திராவிட போராட்டம்! இராமாயணம் ஒரு கட்டுக்கதை என்று தந்தை பெரியார் அவர்கள் பல ஆதாரங்களைக் கொண்டு ஆய்வு செய்து அ...
  • நான் பாரதியாரைச் சந்தித்தால்... 'குமுதம்' ஏடு கேட்டதற்கு இணங்க கி.வீரமணி கட்டுரை
      நான் பாரதியாரைச் சந்தித்தால்... கி.வீரமணி கட்டுரை ( பாரதியார் நூற்றாண்டு விழாவையொட்டி 1981 ஆம் ஆண்டில், 'குமுதம்' ஏடு ஆசிரியர் க...
  • ஒபிசி சான்றிதழ் பெறும் வழிமுறை
    ஓபிசி சான்றிதழ் - சில தகவல்கள் - குடந்தை கருணா மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோ ருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்...
  • இரண்டு வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த பெற்றோருக்கு வழங்கப்படும் குழந்தைகளின் சாதி சான்றிதழ் வழங்கல் - தெளிவுபடுத்தல்கள் -
     கலப்பு திருமணம் செய்து கொண்ட பெற்றோரின் குழந்தைகளுக்கு, இருவரில் ஒருவரின் சாதி அடிப்படையில் சாதிச் சான்றிதழ் அளிக்கலாம் என தமிழகஅரசு மீண்டு...
  • பாம்புக்கு கால் உண்டா? - செ.ர. பார்த்தசாரதி
    ‘பாம்பின் கால் பாம்பு அறியும்’ என்பது பழமொழி. அதாவது கால் என்றால் வழி, என்ற பொருளில் சொல்லப்பட்ட பழமொழியாகும் இது. ‘பாம்பின் உடைய வழி பாம்பு...

Labels

  • 100 நாள்
  • 1000ஆவது நிகழ்ச்சி
  • 2024
  • 27 சதவிகித இடஒதுக்கீடு
  • 5 வயது
  • 8மணி நேரம்
  • standing order
  • அ.குணசீலன்
  • அக்னி
  • அக்னி பகவான்
  • அசைவம்
  • அசோக வனம்
  • அடி
  • அடிப்படை கடமைகள் 51a
  • அண்ணா
  • அண்ணாதுரை
  • அண்ணாமலை
  • அநீதி
  • அமெரிக்கா
  • அமைப்பு சாரா தொழிலாளர்
  • அம்பேத்கர்
  • அயோக்கியர்கள்
  • அயோத்திதாசர்
  • அய்ந்து ஆவணங்கள்
  • அய்யா
  • அரசாணை
  • அரசிதழ்
  • அரசு
  • அரசு ஆணை
  • அரசு திட்டங்கள்
  • அரிச்சுவடி
  • அருங்காட்சியகம்
  • அருவறுப்பு
  • அர்ச்சகர்
  • அலுவலகம்
  • அல்ஹதீஸ்
  • அவசர உதவி
  • அளவு
  • அறக்கட்டளை
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிவியலாளர்
  • அறிவு
  • அறுவை சிகிச்சை
  • அற்றவர்
  • அனுமதிசான்றிதழ்
  • அனைத்து சாதியினரும் அர்ச்சகர்
  • அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்
  • ஆகமம்
  • ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை
  • ஆங்கில அரசு
  • ஆசிட் தியாகராசன்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் கி.வீரமணி
  • ஆசிரியர் மகள்
  • ஆசிவகம்
  • ஆடைச் சீர்திருத்தம்
  • ஆட்சி
  • ஆட்சி அதிகாரம்
  • ஆணை
  • ஆணையம்
  • ஆண்
  • ஆண்டு விழா
  • ஆதார்
  • ஆதி திராவிடர்
  • ஆதிச்சநல்லூர்
  • ஆதிதிராவிடர்
  • ஆதித்த கரிகாலன்
  • ஆயகலைகள்
  • ஆய்வு
  • ஆரிய பார்ப்பான்
  • ஆரியர்
  • ஆர் எஸ் எஸ்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்எஸ்எஸ்
  • ஆர்கனைசர்
  • ஆர்ப்பாட்டம்
  • ஆலய பிரவேசம்
  • ஆவடி
  • ஆவணம்
  • ஆளுநர்
  • ஆஷ் துரை
  • இசுலாம்
  • இசை
  • இசைப்பள்ளி
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு
  • இடிப்பு
  • இடுகாடு
  • இணையதளத்தில் பதிவு
  • இணையேற்பு
  • இதயம்
  • இதர பிற்படுத்தப்பட்டோர்
  • இதழ்
  • இந்தி
  • இந்தியா
  • இந்து
  • இந்து அல்ல
  • இந்து மதம்
  • இம்மானுவேல்
  • இயசு
  • இயேசு
  • இரட்டைமலை சீனிவாசன்
  • இரயில்
  • இரயில்வே
  • இராமதாசு
  • இராமராஜ்ஜியம்
  • இராமன்
  • இராமாயணம்
  • இராமானுஜ தாத்தாச்சாரியார்
  • இராமேஸ்வரம்
  • இராஜகோபாலாச்சாரி
  • இராஜாஜி
  • இலக்கணம்
  • இலக்கியம்
  • இலக்குமணன்
  • இலக்குவன்
  • இலவசம்
  • இளைஞரணி
  • இறுதிப் பேருரை
  • இனக்குழு
  • இனம்
  • இனவெறி
  • ஈரோடு
  • உ.பி
  • உ.வே.சா
  • உங்களுக்குத் தெரியுமா
  • உச்ச நீதிமன்றம்
  • உச்சநீதிமன்றம்
  • உஞ்சவிருத்தி
  • உடைப்பு
  • உணவு விடுதி
  • உண்மை இதழ்
  • உதவி
  • உத்தரவு
  • உத்திரமேரூர் கல்வெட்டு
  • உயர் நீதிமன்றம்
  • உயர்நிலை
  • உரிமை
  • உருக்கு இரும்பு
  • உருண்டை
  • உவேசா
  • உழைப்பு
  • உறுதிமொழி
  • உறுப்பினர்
  • ஊதியம்
  • ஊர்
  • ஊழல்
  • எதிர்ப்பு
  • எபிகூரசு
  • எபிகூரஸ்
  • எம்ஜிஆர் நகர்
  • எருக்கஞ்சேரி
  • எழிலன்
  • எழுத்து
  • எனது
  • எனது கட்டுரை
  • ஒ.பி.சி.
  • ஒப்புதல்
  • ஒரே தேர்தல்
  • ஒரே நாடு
  • ஒலிப்பு
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்றியம்
  • ஓசி சோறு
  • ஓபிசி சான்றிதழ்
  • ஓய்வூதியம்
  • கச்சத்தீவு
  • கடமை
  • கடவுள்
  • கட்டுக்கதை
  • கட்டுரை
  • கணக்கீடு
  • கணக்கு
  • கணக்கெடுப்பு
  • கணபதி
  • கண்டு பிடிப்பு
  • கண்ணதாசன்
  • கத்தோலிக் சர்ச்
  • கந்தன்
  • கம்பராமாயணம்
  • கம்யூனிசம்
  • கருத்துரை
  • கருப்பு
  • கருமை
  • கரோனா
  • கர்ணம்
  • கலி.பூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைஞர் உலகம்
  • கல்பாத்தி
  • கல்லூரி
  • கல்வி
  • கல்வியில் இட ஒதுக்கீடு
  • கவிஞர்
  • கவிஞர் கலிபூங்குன்றன்
  • கழகம்
  • கழிப்பறை
  • கழுவேற்றம்
  • கற்பழிப்பு
  • காட்டுமிராண்டி மொழி
  • காந்தி
  • காமராஜர்
  • காமலீலை
  • காரணம்
  • காரல் மார்க்ஸ்
  • காராம் பசு
  • காலக் கணக்கு
  • காவிரிச் செல்வன்
  • காஷ்மீர்
  • கி. வீரமணி
  • கி.வீரமணி
  • கிராம நிர்வாகம்
  • கிரிகோரியன்
  • கிருத்தவம்
  • கிருத்துவம்
  • கிளைக் கழகம்
  • கீரி
  • குங்குமம்
  • குடிஅரசு
  • குடும்ப அட்டை
  • குணம்
  • குமரேச சதகம்
  • குமாரசம்பவம்
  • குமுதம்
  • குரான்
  • குர்ஆன்
  • குலக்கல்வி
  • குழந்தை
  • குறைந்தபட்ச ஊதியம்
  • கூட்டணி
  • கூட்டாட்சி
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளா
  • கேள்வி பதில்
  • கேள்வி-பதில்
  • கைது
  • கைவல்யம்
  • கொடி
  • கொடுங்கையூர்
  • கொடுமை
  • கொலை
  • கொலை முயற்சி
  • கோடம்பாக்கம்
  • கோடு
  • கோயில்
  • கோயில் அகற்றல்
  • கோயில் நுழைவு
  • கோல்வால்கர்
  • சங்ககாலம்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சார்
  • சட்டமன்ற உறுப்பினர்கள்
  • சட்டம்
  • சண்டை
  • சத்தியவாணி முத்து
  • சத்திரியர்
  • சந்தா
  • சந்திப்பு
  • சமணம்
  • சமணர்
  • சமஸ்கிருதம்
  • சமூக நீதி
  • சமூக மாற்றம்
  • சமூகநீதி நாள்
  • சமையல்
  • சம்பிரதாயம்
  • சம்பூகன்
  • சனாதனம்
  • சாகு மகராசர்
  • சாதனை
  • சாதி
  • சாதி ஒழிப்பு
  • சாதி கொடுமை
  • சாதி சான்றிதழ்
  • சாதிவெறி
  • சாமிநாதன்
  • சாய்பாபா
  • சான்றிதழ்
  • சி.பி.எஸ்.ஈ
  • சிகாமணி
  • சிக்கனம்
  • சிங்காரவேலர்
  • சித்த மருத்துவம்
  • சிந்தனை
  • சிந்தனை முத்து
  • சிபிஎஸ்சி
  • சிவகளை
  • சிவம்
  • சிறுகதை
  • சீடர்
  • சீதை
  • சீமான்
  • சீர்காழி கோவிந்தராசன்
  • சீன கம்யூனிஸ்ட்
  • சீனிவாச அய்யங்கார்
  • சுதந்திரப் போராட்டம்
  • சுந்தரம்
  • சுபவீ
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்கம்
  • சுயமரியாதை திருமண சட்டம்
  • சுயமரியாதைத் திருமணம்
  • சூத்திரர்
  • சூத்திரர்கள்
  • சூத்திரன்
  • சூத்திரன் நீக்கம்
  • சூரிய மறைப்பு
  • செ.
  • செ.ர.பாரத்தசாரதி
  • செ.ர.பார்த்தசாரதி
  • செங்கை
  • செஞ்சட்டைப் பஞ்சாட்சரம்
  • செம்பரம்பாக்கம்
  • செலவு
  • செல்வேந்திரன்
  • சென்னை
  • சேது கால்வாய்
  • சைக்கிள் பேரணி
  • சைதாப்பேட்டை
  • சைதை கூட்டம்
  • சைவம்
  • சொக்கலிங்கம்
  • சொத்து
  • ஞாயிறு மலர்
  • ஞாயிறு மலர் கட்டுரை
  • டி.என்.பி.எஸ்.சி.
  • தகைசால் தமிழர்
  • தண்ணீர் தொட்டி
  • தந்தை பெரியார்
  • தமிழர் தலைவர்
  • தமிழர்கள்
  • தமிழன்
  • தமிழினம்
  • தமிழ்
  • தமிழ் கல்வெட்டு
  • தமிழ் தேசியம்
  • தமிழ் நாடு
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் பைபிள்
  • தமிழ் மொழி
  • தமிழ்த்தாய் வாழ்த்து
  • தமிழ்நாடு
  • தலாக்
  • தலித் முரசு இதழ்
  • தலைமைப் பதவி
  • தலையங்கம்
  • தலைவர்
  • தலைவெட்டி முனியப்பன்
  • தன்னிலை விளக்கம்
  • தாலி
  • தாவரம்
  • தாழ்த்தப்பட்டோர்
  • திட்டம்
  • திணிப்பு
  • திப்பு
  • திமிர்
  • தியாகராயர்
  • திராவிட தேசியம்
  • திராவிட நாடு
  • திராவிட வீராங்கன
  • திராவிடம்
  • திராவிடர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருவிழா
  • திராவிடர் மொழி
  • திராவிடர்கள்
  • திருடன்
  • திருநீறு
  • திருமண மந்திரங்கள்
  • திருமண வரலாறு
  • திருமணம்
  • திருமாவளவன்
  • திருமாவேலன்
  • திருமூலர்
  • திலகர்
  • திறப்பு
  • தினமலர்
  • தீ
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்ளக்
  • துறவி
  • தூக்கு
  • தூய்மைப் பணியாளர்கள்
  • தென் சென்னை
  • தென் சென்னை
  • தேசபக்தி
  • தேர்ச்சிக்கு சமம்
  • தேர்வு
  • தை
  • தொண்டு
  • தொலைபேசி
  • தொழிலாளர்
  • தொழில்
  • தொழிற்சாலை
  • தோள்சீலை
  • தோள்சீலைப் போராட்டம்
  • நடக்க உரிமை
  • நம்பூதிரி
  • நலவாரியம்
  • நன்கொடை
  • நன்மை
  • நன்னன்
  • நாடார்
  • நாத்திகர் மாநாடு
  • நாள்காட்டி
  • நான்
  • நிதி
  • நியமனம்
  • நியூயார்க் டைம்ஸ்
  • நிலம் அளனவ
  • நிலவு
  • நிலையானைகள்
  • நினைவிடம்
  • நீசபாசை
  • நீட்
  • நீதி
  • நீதிக் கட்சி
  • நீதிக்கட்சி
  • நீதிக்கட்சி அரசாணை
  • நுங்கம்பாக்கம்
  • நூல்
  • நூல் திறனாய்வு
  • நூல் விமர்சனம்
  • நூற்றாண்டு
  • நேரம்
  • நேர்காணல்
  • நோய்
  • பகத்சிங்
  • பசு
  • பசுவதை
  • பச்சையப்பன் கல்லூரி
  • பஞ்சமா பாதகம்
  • பஞ்சாப்
  • படக்கதை
  • படத்திறப்பு
  • படம்
  • படிம வளர்ச்சி
  • பட்டா
  • பட்டியல்
  • பணம்
  • பணிநிறைவு
  • பதவிகள்
  • பதிலடி
  • பதிலடி பக்கம்
  • பதிவு திருமணம்
  • பயிற்சி
  • பரமசிவம்
  • பல்லி
  • பழமொழி
  • பழனி
  • பள்ளி
  • பள்ளி சான்றிதழ்
  • பள்ளிக்கல்வி
  • பறைச்சி
  • பறையர்
  • பறையன்
  • பனகல் அரசர்
  • பனிக்கட்டி
  • பன்முகம்
  • பா.சிவக்குமார்
  • பா.ஜ.க.
  • பாகிஸ்தான்
  • பாடல்
  • பாதிரியார்
  • பாம்பு
  • பாரதி
  • பாரதியார்
  • பார்க்க வேண்டிய இடம்
  • பார்த்தசாரதி
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் ஆதிக்கம்
  • பார்ப்பனர் ஊழல்
  • பார்ப்பனர்கள் ஆதிக்கம்
  • பார்ப்பான்
  • பாலம்
  • பாலியல் கொடுமை
  • பாலியல் துன்புறுத்தல்
  • பாலியல் வன்முறை
  • பாவம்
  • பாவாணர்
  • பான்காடு
  • பிச்சை
  • பிராமணர்
  • பிரிட்டிஷ் ஆட்சி
  • பிரியன்
  • பிள்ளையார்
  • பிறந்தநாள்
  • பினராயி விஜயன்
  • பிஜேபி
  • புகழ்
  • புகார்
  • புதியகல்வி
  • புதுப்பிப்பு
  • புதுமை இலக்கிய தென்றல்
  • புதுவை
  • புத்தர்
  • புத்தர் சிலை
  • புரட்டு
  • புவி
  • புறம்போக்கு
  • பெண்
  • பெண்கள்
  • பெயர்
  • பெயர் சூட்டல்
  • பெயர் நீக்கம்
  • பெரியாரியல்
  • பெரியார்
  • பெரியார் உலகம்
  • பெரியார் மண்
  • பெரியார் மய்யம்
  • பெரியார் மேளா
  • பெரியார் மையம்
  • பெரியார் விருது
  • பேட்டி
  • பேதம்
  • பேய் விரட்டு
  • பேரணி
  • பேரவை
  • பேருந்தில் இலவசம்
  • பைபிள்
  • பொங்கல்
  • பொதுக்கூட்டம்
  • பொதுவுடமை
  • பொருளாதாரம்
  • பொறுப்பாளர்களுக்கு பாராட்டு
  • போப்
  • போராட்டம்
  • பௌத்தம்
  • பௌத்தர்
  • ம.பொ.சி.
  • மணியம்
  • மணியம்மை
  • மணியம்மையார்
  • மண்
  • மதசார்பின்மை
  • மதம்
  • மதிப்பு
  • மதிப்பெண்
  • மதிப்பெண் ஊழல்
  • மத்மாநாடு
  • மருத்துவம்
  • மருத்துவர்
  • மலம்
  • மலையாளம்
  • மறைவு
  • மனுதர்மம்
  • மன்னர்கள்
  • மஹத் போராட்டம்
  • மாட்டுப்பால்
  • மாணவர் சேர்க்கை
  • மாநாடு
  • மாநில பிரிவு
  • மாலன்
  • மாற்றுத்திறனாளி
  • மாஸ்கோ
  • மின் அஞ்சல்
  • மின் இணைப்பு
  • மின் நூல்
  • மின்சாரம்
  • மின்னஞ்சல்
  • மின்னூல்
  • மீட்பு
  • முகவரி
  • முதலைக் கண்ணீர்
  • முத்துராமலிங்கம்
  • முரசொலி
  • முருகன்
  • முனைவர் பட்டம்
  • முன்னேற்றம்
  • மூக்நாயக்
  • மூடநம்பிக்கை
  • மூலிகை மன்னன்
  • மெரினா
  • மே நாள்
  • மேளம்
  • மைல்கல்
  • மொழி
  • மோசடி
  • மோடி
  • யுனெஸ்கோ
  • ரயில்வே
  • ரவிக்கை
  • ராமர் பாலம்
  • ராமானுஜர்
  • ராஜாஜி
  • ரிஷி
  • லக்னோ
  • லண்டன்
  • லால் பகதூர் சாஸ்திரி
  • வகுப்புரிமை
  • வசை
  • வணிகக் கட்டடங்கள்
  • வண்ணார்
  • வயது
  • வரலாறு
  • வருணாசிரமம்
  • வருமான சான்றிதழ்
  • வர்ணம்
  • வழக்கு
  • வளர்ச்சி
  • வாஞ்சிநாதன்
  • வாரிசு
  • வாரிய உறுப்பினர்
  • வாலிபர் மாநாடு
  • வாழ்க்கை வரலாறு
  • வி பி சி ங்
  • விடுதலை
  • விடுதலை அலுவலகம்
  • விடுதலை புலிகள்
  • விண்ணேற்றம்
  • விபூதி வீரமுத்து
  • விமர்சனம்
  • வியப்பு
  • விருது
  • விருப்ப மொழி
  • வில்லிவாக்கம்
  • விவேகாநந்தர்
  • விவேகானந்தர்
  • விளக்கம்
  • விஜயவாடா
  • வெப்பம்
  • வெற்றிச்செல்வி
  • வேண்டாம்
  • வேதம்
  • வைக்கம்
  • வைத்தியநாதன்
  • ஜாக்கெட்
  • ஜாதி
  • ஜாதி ஒழிப்பு
  • ஜாதிப் பிரிவு
  • ஜூனியர் விகடன்
  • ஜெயலலிதா
  • ஜெயலெட்சுமி
  • ஸ்ரீ தேசிகப் பிரபந்தம்
  • ொத்துரிமை
Simple theme. Powered by Blogger.