Friday 31 December 2021

கிரெகொரியின் நாட்காட்டி


அய்க்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாட்காட்டி

கிரெகொரியின் நாட்காட்டி (Gregorian calendar) என்பது உலக (சர்வதேச) அளவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் நாட்காட்டியாகும்.[1][2][3] இந்த நாட்காட்டி கிரிகோரியன் நாட்காட்டி எனவும் அறியப்பெறுகிறது. மேலும் மேற்கத்திய நாட்காட்டி எனவும் கிறித்துவ நாட்காட்டி எனவும் வழங்கப்பெறுகிறது. இந்த நாட்காட்டியானது சர்வதேச நிறுவனங்களான சர்வதேச தபால் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றினால் அங்கீகரிப்பட்டுள்ளது.[4]

உரோமையில் புனித பேதுரு பெருங்கோவிலில் உள்ள திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரியின் கல்லறை. நாட்காட்டி சீர்திருத்தம் கொண்டாடப்படும் காட்சி

இன்று உலகில் பரவலாகப் பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியான இது கி. மு 45 -ல் ரோமப் பேரரசர் சூலியசு சீசரால் உருவாக்கப்பட்ட யூலியன் நாட்காட்டியின் (Julian calendar) ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோயிசியசு இலிலியசு (Aloysius Lilius) என்ற மருத்துவரால் முன்வைக்கப்பட்டது. இது பிப்ரவரி 24 1582 இல் அப்போதைய திருத்தந்தையான திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரியின் ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாகப் பின்னாளில் இந்நாட்காட்டிக்கு "கிரகோரியன் நாட்காட்டி" என்னும் பெயர் வழங்கலாயிற்று.
இந்த நாட்காடியின் படி இயேசு பிறந்ததாகக் கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன. மேலும் இக்காலப்பகுதி "ஆண்டவரின் ஆண்டு" எனவும் பெயரிடப்பட்டது. இது கிபி 6 வது நூற்றாண்டில்தயனீசியசு எக்சீகுவசு (Dionysius Exiguus) என்னும் கிறித்தவத் துறவியால் உரோமையில் துவக்கப்பட்ட ஆண்டுக் கணிப்பு முறையாகும்.

கிரிகோரியன் நாட்காட்டி பயன்படுத்தும் முன்னர் இருந்த உரோமானிய நட்காட்டியில் சனவரிபிப்ரவரிமார்ச்சுஏப்ரல்மேசூன்செப்டம்பர்அக்டோபர்நவம்பர்திசம்பர் எனப் பத்து மாதங்கள் கொண்டதே ஒரு ஆண்டாகும். பின்னரே சூலை மற்றும் ஆகத்து மாதங்கள் சேர்க்கப்பட்டன. கிரகோரியின் நாட்காட்டியானது 'சூலியன் நாட்காட்டியின்' சராசரி ஆண்டைவிட நீளமாகக் காணப்பட்டமையால் இளவேனிற் சம இராப்பகல் நாள், நாட்காட்டியில் பின்னோக்கி நகர்வதைத் திருத்துவதற்காக முன்கொணரப்பட்டது.அதாவது கிபி.1752 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் சுமார் 10 நாட்கள் கிரிகோரியன் நாட்காட்டியில் இருந்து கழிக்கப் பட்டது.மேலும் உயிர்த்த ஞாயிறு நாளைக் கணக்கிட பயன்பட்ட சந்திர நாட்காட்டியும் பல குறைகளைக் கொண்டிருந்ததும் இன்னொரு முக்கிய காரணமாகும்.

எசுப்பானியாபோர்ச்சுக்கல்போலந்திய இலிதுவேனியன் காமன்வெல்த்இத்தாலியின் பெரும்பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் நாட்காட்டியை முதலில் ஏற்றுக் கொண்டன. 1582 அக்டோபர் முதல் இவை கிரிகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்தத் தொடங்கின. இங்கிலாந்தும் அமெரிக்காவும் 1752 ஆம் ஆண்டிற்குப் பிறகே கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தன. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்தியாவிலும் இந்த நாட்காட்டி புழக்கத்திற்கு வந்தது. கிரிகோரியன் நாட்காட்டியைக் கடைசியாக ஏற்றுக் கொண்ட நாடுகளில் கடைசியாக வருவது கிரேக்கம் ஆகும். 1923 பிப்ரவரி 15 -ல் தான் இந்நாடு கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தது.

விளக்கம்தொகு

சூரிய நாட்காட்டி வகையைச் சார்ந்தது கிரிகோரியன் நாட்காட்டியாகும். ஒரு வழக்கமான கிரிகோரியன் ஆண்டு என்பது முன்நூற்று அறுபத்து ஐந்து (365) நாட்களையும், ஒரு லீப்(நெட்டாண்டு) ஆண்டினையும் உடையதாகும். லீப் ஆண்டு என்பது வழக்கமான கிரிகோரியன் ஆண்டு நாட்களுடன், பிப்ரவரி 29 என்ற நாளையும் இணைத்து முன்நூற்று அறுபத்து ஆறு (366) உடையதாகும். பொதுவாக லீப் ஆண்டு நான்கு கிரிகோரியன் ஆண்டுக்கொருமுறை ஏற்படுகிறது. சூலியன் நாட்காட்டி படி இல்லாமல் நானூறு (400) ஆண்டுகளுக்கு மூன்று (3) லீப் வருடங்களைக் கிரிகோரியன் நாட்காட்டி தவிர்த்துவிடுகிறது.

ஒரு கிரிகோரியன் ஆண்டானது பின்வரும் பன்னிரண்டு மாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

வரிசை எண்.மாதத்தின் பெயர்நாட்கள்
1சனவரி31
2பிப்ரவரி28 or 29
3மார்ச்31
4ஏப்ரல்30
5மே31
6சூன்30
7சூலை31
8ஆகத்து31
9செப்டம்பர்30
10அக்டோபர்31
11நவம்பர்30
12திசம்பர்31

ஒவ்வொரு மாதமும் சீரற்ற முறையில் வருகின்ற நாட்களைக் கணக்கிட கீழ்கண்ட ஈடுகோள் உதவுகிறது.

L = 30 + { [ M + floor(M/8) ] MOD 2 }

இதில் L என்பது மாதங்களின் நாட்கள் எண்ணிக்கையைக் குறிக்கும், M என்பது 1 முதல் 12 வரையான மாதத்தின் வரிசை எண்ணைக் குறிக்கும்.

பொதுவாகப் பூமி ஒரு முறை சூரியனை சுற்றிவர 365 நாள் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடி காலத்தினை எடுத்துக் கொள்கிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் காலத்தினை ஒருநாள் என்று வைத்துக் கணக்கிட இருக்கும் சிரமத்தினை எண்ணி, ஒரு ஆண்டினை 365 நாட்கள் என்ற முழு எண்ணாகக் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மீதமிருக்கும் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடிகளைத் தவர்க்க இயலாது என்பதால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறப்பு நாளாகப் பிப்ரவரி 29 என்ற நாளையும் இணைத்துக் கிரிகோரியன் நாட்காட்டில் கணக்கிடப்படுகிறது.

இவ்வாறு ஆண்டிற்கொருமுறை ஒரு நாளை (பிப்ரவரி 29) நாளை இணைக்கையில் 100 ஆண்டுகளில் 18 மணி 43 வினாடி காலம் அதிகமாக இணைக்கப்படுகிறது. எனவேதான் நூறு வருடங்களுக்கு ஒரு முறை லீப் வருடம் (நெட்டாண்டு) கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இவ்வாறான பல சீர்த்திருத்தங்களை கொண்ட கிரிகோரியன் நாட்காட்டினாது, மேலும் தீர்வில்லாத சிக்கல்களை கொண்டிருப்பதால் இந்த நாட்காட்டியானது சரியானது இல்லை என்ற கருத்தும் அறிஞர்களிடையே உள்ளது.

சந்திர நாட்காட்டிதொகு

கிறிசுதுவர்கள் பொதுவாக இயேசுவின் பிறந்தநாளென்று டிசம்பர் 25 ஆம் நாளைக் குறித்துக் கொண்டாலும், இயேசு உயிர்த்தெழுந்த நாளைக் கணக்கிட கிரிகோரியன் நாட்காட்டியை அடிப்படையாகப் பயன்படுத்துகிறார்கள். இதனால் ஈஸ்டர் எனப்படும் இயேசு உயிர்த்தெழுந்த நாள் ஆண்டுதோறும் வேறுவேறு நாட்களில் வருகிறது. இதற்குச் சூரியன் மற்றும் சந்திரனின் இயக்கத்தினையும் கணக்கில்கொள்வதே காரணமாகிறது.

- விக்கிப்பீடியா

No comments:

Post a Comment