Friday, 2 November 2018

இராமன் கட்டிய பாலம் எங்கே?

மரக்கலம் இயங்க வேண்டி வரிசிலைக் குதையால் கீறித்
தருக்கிய இடத்துப் பஞ்ச பாதகரேனும் சாரின்
பெருக்கிய எழுமூன்று பிறவியும் பிணிகள் நீங்கி
நெருங்கிய அமரர்க்கெல்லா நீண்நீதியாவர் அன்றே!
கம்பராமாயணம் - யுத்த காண்டம் - 37 மீட்சிப் படலம், பாடல் எண் 4057
மரக்கலங்கள் (கப்பல்கள்) ஓட்டுவதற்கு அப்பாலம் தடை யாக இருந்தது என்பதால், ராமனே தனது வில்லின் நுனியால் சேது (பாலம்)வைக்  கிறீ உடைத்து வழிவிட்டான் என்கிறது இப்பாடல்.
இராமன் கட்டிய பாலத்தை இராமனே உடைத்து விட்டான் என்று கூறுகிறது. கம்பராமாயணம்.. அப்படி இருக்கும்போது இல்லாத பாலத்தை, எப்படி உடைக்க முடியும்.
  அங்கு இருப்பது மணல் திட்டுகள் தான்! பாலமல்ல.
இராமாயணத்தில் மகேந்திர மலைக்கு அருகிலிருத்து தான் இராமன் பாலம் கட்டியதாக சொல்லப்படுகிறது. மகேந்திர மலை மத்திய பிரதேசத்தில் ஜபுல்பூரில் உள்ளது, இராமன் கட்டிய பாலத்தை அங்கு போய் தேடிப்பாருங்களேன்!
- நான் (செ.ர.பார்த்தசாரதி) 2.11.2012ல் முகநூலில் பதிவிட்டது.

Thursday, 1 November 2018

பசும்பொன்_முத்துராமலிங்கம்_சிறையில்_அடைக்கப்பட்டது_ஏன்?


"மதுரை கோரிப்பாளையத்தில் தற்போது அவரின் சிலை அமைந்திருக்கும் இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை விளக்கிய அரசுக் குறிப்பு (நாள் 28/09/1957) கூறுவதாவது:- "ராமநாதபுரம் கலெக்டர் முதுகுளத்தூரில் 10.09.1957 அன்று கூட்டிய அமைதி மாநாட்டில் முத்துராமலிங்கத்தேவரும் கலந்து கொண்டார். ஹரிஜனங்கள் சார்பில் அந்த மாநாட்டில் பேசிய இம்மானுவேல் என்பவரது தலைமை குறித்து அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கேள்வி எழுப்பினார். அந்த மாநாட்டில் தமக்கு இணையான அளவில் ஓர் ஹரிஜன் முன்வரிசைக்கு வந்து பேசியது தம்மை அவமதித்ததாகும் என்று அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கருதினார். இம்மானுவேல் அந்த அளவுக்கு முக்கியத்துவம் அடையுமாறு நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள்? என்றும், தமக்கு நேர்ந்த இந்த பகிரங்க அவமானம் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் முத்துராமலிங்கத் தேவர் மாநாட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, தமது சீடர்களைக் கேட்டார்.

அதற்கு அடுத்த தினமே, முத்துராமலிங்கத் தேவரின் சீடர்கள் அடங்கிய ஒரு கும்பல் இம்மானுவேலை மறைந்திருந்து தாக்கிக் கொலை செய்தது. "முத்துராமலிங்கத் தேவருக்குச் சவால் விடுவதற்கு உனக்கு என்ன தைரியம்? என்று கொலையாளிகளில் ஒருவர் இம்மானுவேலை வெட்டியபோது கேட்டார்."

இம்மானுவேல் கொலை வழக்கில் பெருமாள் பீட்டர் என்பவரது சாட்சியம் மிகவும் முக்கியமானது. அப்போது 88 வயதை எட்டியிருந்த பேரையூரைச் சேர்ந்த அவரின் சரித்திரம் சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் முரசில் வெளிவந்துள்ளது.

நீதிமன்ற விசாரணையில் பீட்டர், தேவருக்கு எதிராக சாட்சி சொன்னார் "ஒரு ஹரிஜன இளைஞர் நம்மை எதிர்த்துப் பேச விட்டு விட்டீர்களே! நீங்கள் மறவர்களா? என்று தமது ஆதரவாளர்களிடம் முத்துராமலிங்கத் தேவர் கூறியதை நான் கேட்டேன்" என்றார் அவர்.

கீழத்தூவல் துப்பாக்கிச் சூட்டில் 5 மறவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, காமராஜர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தது. அத்தீர்மானத்தின் மீதான விவாதம், தேவரின் பல பரிமாணங்களை சட்டசபைக் குறிப்பேடுகளில் பதிய வைத்துள்ளது. இனி, சட்டமன்றக் குறிப்பேடுகள் பேசட்டும்.

உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் 26 அக்டோபர் 1957 அன்று தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து:
"..The Government received petitions alleging several cases of lawlessness as a result of the inflamatory speeches by Sri.Muthuramalinga Thevar, inciting his followers to harass Nadars and Harijans...."

கலவரத்தை நிறுத்திட கூட்டப்பட்ட சமாதான மாநாடு பற்றி அந்த அறிக்கை பின்வருமாறு சொன்னது:
"Recognized leaders of the different communities were invited to attend this Conference. It is on record, Sir, that Sri Muthuramalinga Thevar who attended the Conference questioned the leadership of one Sri Emmanuel, Leader of the Local Depressed Classes League, who was representing the Harijans, Sri Thevar is reported to have asked Emmanuel whether he could pose as a Leader of the same stature as Sri Thevar, and whether his assurances on behalf of the Harijans were worth having."

"It is also learnt, Sir, that while coming out of the Conference, Sri Muthuramalinga Thevar chided his followers for allowing even Pallans like Emmanuel to talk back to him. The very next day, Sri Emmanuel was brutally murdered at Paramakudi."

முதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஜாதிக் கலகத்தை விதைக்க வெறியூட்டும் பேச்சை எங்கெல்லாம் தேவர் பேசினார் என்பதை அவ்வறிக்கை பட்டியலிட்டது - இவ்வாறு: "On 16th September 1957 addressing a public meeting at Vadakkampatti, Sri Thevar refered to the communal strife raging in Mudukulathur and Paramakudi areas. Obviously the reference was to the incidents which had occured at Arunkulam, Keelathooval, Veerambal, Ilanjambur, Irulandipatti and Sandakottai between 10th and 16th September 1957".

கீழத்தூவலில் இம்மானுவேலைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்கப்போன போலீசாருடன் மோதிய மறவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைப் பற்றி விசாரிக்க அனுப்பப்பட்ட எஸ்.வெங்கடேஸ்வரன் I.C.S. முன்பு ஆஜராக வந்த மக்களை மிரட்டும் வகையில் தேவர், தனது காரினை விசாரணை நடந்த இடத்துக்கெதிரில் நிறுத்தி வைத்து அந்தக் காரிலே அவர் இருந்த செயலையும் பக்தவச்சலத்தின் அறிக்கை அம்மணமாக்கியது.

"In connection with the enquiry by Sri. S. Venkateswaran I.C.S. into the Police firing at keelathooval village through Sri Thevar had orally announced that he and his party would not take part in the enquiry, he seated himself in a car at the entrance of the building where the enquiry was held. This had the effect of preventing witness coming forward to tender evidence which might clash with Sri. Thevar's contentions."

-அசுரன்
#தேவர்ஜெயந்தி

- கட்செவி வழியாக(சுரேசு. என்)

Wednesday, 24 October 2018

பள்ளிச் சான்றிதழ்களில் ஜாதி மதங்களைக் குறிப்பிட வேண்டும் என்று வற்புறுத்த முடியுமா?

சென்னை உயர் நீதிமன்றம்

தலைமை நீதிபதி சஞ்ஜய் கிஷன்கௌல் 
நீதிபதி ஆர். மகாதேவன்
நீதிப் பேராணை மனு கீ.றி. 18488-2016
15.6.2016

ஜி.பாலகிருஷ்ணன்     மனுதாரர்
தமிழ்நாடு அரசு அதன் சார்பாக 
அரசுச் செயலாளர் உயர் கல்வித்துறை
தலைமைச் செயலகம் சென்னை - 600009 மற்றும் ஒருவர்

எதிர் மனுதாரர்கள்

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்: எஸ். சத்யசந்திரன்

எதிர் மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்: டி.என்.ராஜகோபால் அரசு வழக்கறிஞர் (கல்வி)

நீதிப் பேராணை மனுவில் தீர்வு காணப்பட்டது செலவுத் தொகை இல்லை.

கோரிக்கை: இந்திய அரசமைப்புச் சட்டம் உறுப்பு 226இன்படி செயலுறுத்தும் நீதிப் பேராணை தாக்கலாகி,

(அ) மேல் நிலைக் கல்வித் துறையோ, பள்ளிக் கல்வித் துறையோ, அரசாணை எண் நி.ளி. விஷி 205 நாள்: 31.7.2000 கல்வித்துறை (சி2) ஐ முழு அளவில் அமல் செய்து இத்துறையின் கீழ் பணிபுரியும் அனைத்துப் பள்ளிகளும் பெற்றோரிடமிருந்தோ அவர்களது பிள்ளைகளிடமிருந்தோ கல்வி நிலையங்களில் சேரும்போது ஜாதி, மதத்தைக் கூறுமாறு வற்புறுத்தக் கூடாது என்று பணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் ஜாதி, மதம் எனும் இடத்தில் எந்த ஜாதியும், மதமும் கிடையாது என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கு அனுமதிக்க வேண்டும்.

(ஆ) மேலே சொன்ன வகையில் பள்ளி மாற்றுச்சான்றிதழிலும் எநதச் சாதியும் மதமும் இல்லை என்று குறிப்பிட அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது. இது மனுதாரர் கோரிய 5.5.2016 தேதி முதல் நீதிமன்றம் வரையறுத்துக் கூறும் நாளிலிருந்து பின்பற்றப்பட வேண்டும் என ஆணை வழங்கக் கோரப்பட்டிருக்கிறது.

தீர்ப்புரை

தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கௌல்

சாதி, மத பேதமற்ற சமுதாயம் அமைப்போம் எனும் உயரிய எண்ணத்துடன் தமிழ்நாடு மாநில அரசு பின்வரும் அரசாணையை 31.7.2000 அன்று பிறப்பித்திருக்கிறது. அது பின்வருமாறு:

தமிழ்நாடு அரசு சுருக்கக் குறிப்பு

ஆரம்பக் கல்வி - பள்ளிச் சான்றிதழில் ஜாதி, 
மதத் தகவல்களைக் குறிப்பிடாமல்
தவிர்க்கும் உரிமையை வழங்குதல் 
- ஆணை வழங்கப்பட்டது.
பள்ளிக் கல்வித் துறை (சி2)

அரசாணை எண் 205     நாள்: 31.7.2000
படிக்க: அரசாணை எண் 120 கல்வித்துறை நாள் : 2.7.1973

ஆணை:

மேலே படிக்கப்பட்ட அரசாணைப்படி பள்ளிக்கல்வி இயக்குனர் பணிக்கப்பட்டதாவது: இடைநிலைக் கல்விச் சான்றிதழிலும், பள்ளி மாற்றுச் சான்றிதழிலும் ஜாதி, மதம், பற்றிக்குறிப்பிட விரும்பாதோர் அவ்வாறு ஜாதி இல்லை. மதமும் இல்லை என்று குறித்துக் கொள்ளலாம் அல்லது அந்தப் பகுதியை நிரப்பாமல் விடலாம். பள்ளிக் கல்வி இயக்குனராலும், ஆரம்பக் கல்வி இயக்குனராலும் இது முழு அளவில் பின்பற்றப்படுவதில்லை என்று அரசுக்குத் தெரிய வந்தது. எதிர்வரும் நாட்களில் அரசாணைப்படி இதனை முழுமையாகப் பின்பற்றுமாறு சம்மந்தப்பட்டவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும் பள்ளியில் மாணவர் சேர்க்கையின் போதோ வேறு சூழ்நிலைகளிலோ, மாணவர்களின் பெற்றோர் ஜாதி, மதம் பற்றித் தெரிவிக்க மறுப்பு தெரிவித்தால், அவர்களால் அதைக் கூற இயலாமல் போனால் அதுபற்றி அதிக முக்கியத்துவம் தரத் தேவையில்லை.

/ஆளுநரின் ஆணைப்படி/
(ஒப்பம்) எம்.ஏ. கௌரிசங்கர்
அரசுச் செயலாளர்

பெறுநர்:

இயக்குநர், ஆரம்பக் கல்வி இயக்ககம்
சென்னை-6
இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்ககம்
சென்னை-6

2. இந்நிலையில் மனுதாரர் சமர்ப்பிப்பதாவது: அரசாணை சரிவரப் பின்பற்றப்படுவதில்லை. அதற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.,

3. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சமர்ப்பித்ததை நாங்கள் ஏற்கிறோம். எனவே எதிர் மனுதாரர் இந்த அரசாணையினை மக்கள் மத்தியில் சென்று சேரும் வகையில் விரிவான வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். இவ்வகையில் பள்ளிச் சான்றிதழ் களில் ஜாதி, மதம் பற்றிப் பதிவு செய்ய விரும்பாதோர் அதைக் குறிப்பிடும்படி வற்புறுத்தப்பட மாட்டார்கள்.

4. ஆனால் அதே சமயத்தில் பள்ளி மாற்றுச்சான்றிதழில் இது கட்டாய நடைமுறையாகப் பின் பற்றப்பட வேண்டும் என்று ஆணையிட எங்களால் இயலாது; ஏனெனில் சிலர் அதைக் குறிப் பிட ஆர்வம் காட்டலாம். அரசாணையைக் கவனத்தில் கொண்டு பார்த்து ஒருவர் ஜாதி மதப் பெயரைக் குறிப்பிடுவதிலிருந்து விலக்களிக்கப்படலாம். அதே நேரத்தில் இதனைக் கட்டாயப் படுத்தமுடியாது.

5. இவ்வகையில் நீதிப் பேராணை மனுவில் தீர்வு காணப் படுகிறது. செலவுத் தொகை இல்லை.
மொழியாக்கம்:

திருவேங்கடம் அரங்கநாதன்

நன்றி: சட்டக்கதிர், செப்டம்பர் 2017

- விடுதலை ஞாயிறு மலர், 7.10.17

Tuesday, 23 October 2018

மதிப்பு எதற்கு? பொருளுக்கா! உழைப்பிற்கா1

பொருள்கள் விலை மலிவாகவும், விலை மிகையாகவும் இருப்பதற்கு முதன்மைக் காரணம் உழைப்பே!
பொருளுக்கு விலைகிடையாது; உழைப்பிற்கு தான் விலை(மதிப்பு)!
ஒரு பொருள் மிகையாகவும் எளிதாகவும் கிடைத்தால் எவ்வளவுதான் முதன்மை தேவையாக இருந்தாலும் அப் பொருள் விலை மலிவாகத்தான் கிடைக்கும்.
ஆனால் குறைவாகவும் அரிதில் கிடைக்க கூடியதும் ஆன பொருள்கள் முதன்மை தேவைக்கு பயன்படாவிட்டாலும் விலை கூடுதலாக இருக்கும்.

ஒரு பொருள் மூலப் பொருளாக இருந்தால் மதிப்பு(விலை) குறைவு. அதே பொருளை உழைப்பை செலுத்தி அதாவது இரும்பை குண்டூசி யாக மாற்றி விற்றால் கூடுதல் விலை கிடைக்கும். இதை மதிப்பு கூட்டு பொருள் என்பர்.

அலுமினியம் கண்டுபிடிக்கப் பட்டபோது தங்கத்திற்கு மேலாக கருதப்பட்டது. அதில் முடி(கிரீடம்) சூடிக்கொண்ட காலமும் உண்டு!

உப்பு கண்டுபிடிக்கப் பட்டபொழுது விலை கூடுதலாக இருந்தது. வேலை ஆட்களுக்கு கூலியாக உப்பு வழங்கினர். சம்பளம் என்ற பெயர் இதனால் தான் வந்தது. அளம் என்றால் உப்பு என்று பொருள்.

இதேபோல் தான் ஆங்கிலத்தில் சாலரி என்ற சொல் சால்ட் என்ற பெயரிலிருந்து வந்தது.

பொருளுக்கு மதிப்பல்ல; உழைப்பிற்கு தான் மதிப்பு!

- நான்(22.10.18)

Saturday, 13 October 2018

பார்ப்பனரைப்பற்றிய பழமொழிகள்



1897ஆம் ஆண்டில் தமிழ்ப் பழமொழிகள் 3644 அய்த் தொகுத்து ஹெர்மன் ஜென்சன் பாதிரியார் (Rev. Herman Jensen)  என்பவர் 523 பக்கங்கள் கொண்ட நூலாக வெளியிட்டார். (அது 1982ஆம் ஆண்டில் புதுடில்லி Asian Educational Services ஆல் மறுபதிப்புச் செய்யப்பட்டுள்ளது). A Classified Collection of Tamil Proverbs என்னும் அந் நூலில் பார்ப்பனரைப் பற்றிக் காணப்படும் பழமொழிகள் வருமாறு:-

241: அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டித் தீர்ப்பான்.

744: குள்ளப் பார்ப்பான் கிணற்றில் விழுந்தால், தண்டு எடு, தடி எடு என்பார்கள்.

887: அறிந்த பார்ப்பான் சிநேகிதன் ஆறு காசுக்கு மூன்று தோசையா?

981: பானையில் அரிசி இருந்தால் பார்ப்பான் கண் உறங்காது.

1581: அக்கிகாரத்து நாய் பிரதிஷ்டைக்கு அழுததுபோல

1625: அப்பன் சோற்றுக்கு அழுகிறான்; பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்.

1626: ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம்

1657: பெற்ற தாய் பசித்திருக்க, பிராமண போஜனம் செய்வித்தது போல

1930: சாகிற வரையில் வைத்தியன் விடான்; செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்

2278: கெட்டுப்போன பார்ப்பானுக்குச் செத்துப்போன பசுதானம்

2884: ஆனைமேலிருக்கிற அரசன் சோற்றைவிட பிச்சை எடுக்கிற பார்ப்பான் சோறுமேல்

2902: பசு சாதும் பார்ப்பான் ஏழையும் நம்பப்படாது.

2904: பத்து விதத்திலும் பறையனை நம்பலாம்; பார்ப்பானை நம்பக் கூடாது.

- விடுதலை ஞாயிறு மலர், 22.9.18

Sunday, 30 September 2018

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மூன்றாமிடம்!


தானியங்கு மாற்று உரை இல்லை.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மூன்றாமிடம்!

தமிழ்நாடு அரசின் தமிழ் கற்றல் சட்டம், 2006இ-ன் படி, நர்சரி, பிரைமரி, மேல்நிலைப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என அறிவிக் கப்பட்டது. பல தனியார் பள்ளிகள் இந்தச் சட் டத்தை அமல்படுத்தப் படவில்லை, இந்தச் சட் டத்தை அமல்படுத்துவதி லிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் தனி யார் பள்ளிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட் டது இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்தச் சட்டத்தின் படி, அடுத்தக் கல்வியாண் டில் (2015-_16) தனியார் பள்ளிகளின் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கட்டாயமாக தமிழ்ப் பாடத் தேர்வை எழுத வேண்டும்.
ஆகையால் அந்த பள்ளிகளை காப்பாற்றும் வகையில் அப்பள்ளி களுக்கு ஆதரவாக தமிழ் நாடு அரசு புது ஆணை ஒன்றை வெளியிட்டுள் ளது. இந்த புதிய தமிழ் கற்றல் ஆணையி னால் சி.பி.எஸ்.இ., சி.எஸ்.இ., சர்வதேசப் பள்ளிகள் உள் ளிட்ட தனியார் பள்ளி களை மேலும் 10 ஆண்டு களுக்கு தமிழை புறக்கணிக்க வழிவகுத்துள்ளது.

மேலும் தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித் யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள், ராணுவப் பள்ளிகள் ஆகி யவற்றிற்கு விளக்களித்து ஆணைவெளியிட்டுள்ளது. ஏன் தமிழ்நாட்டில் உள்ள இந்த பள்ளிகளில் தமிழ்ப் பாடம் கற்பிக்கக் கூடாதா? எந்த மாநிலத் தவரானாலும் தமிழ் நாட்டிற்குள் வந்துவிட் டால் அவரை தமிழ்நாட் டில் அமலிலுள்ள சட் டங்கள் தானே கட்டுப் படுத்தும்?

அது ஒருபுறமிருக்க கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள பள்ளி விளம்பர பலகைகளில் தமிழ் மூன்றாமிடத்திலுள் ளது. தமிழ்நாட்டு அரசு ஆணைப்படி விளம்பர பலகைகளில் தமிழ் முத லாவதாகவும் மற்ற மொழி களைவிட பெரியதாகவும் இருக்கவேண்டும்.

பாடதிட்டம் மட்டும் தான் மய்ய அரசுடையது. மற்ற அனுமதியெள்ளாம் (கட்டிட அனுமதி உள் பட) தமிழ்நாட்டு அரசி டமிருந்து தான் பெற வேண்டும். ஆகையால் தமிழ்நாடு அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள பள்ளி விளம்பர பலகைகளில் தமிழை முத லாவதாக எழுத நட வடிக்கை எடுக்கவேண்டும்.

சென்னை, சூளைமேடு, கில் நகர் பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உள்ள பள்ளி விளம்பர பலகையில் தமிழ் மூன்றாமிடத்தி லுள்ள படம் இது.

- விடுதலை நாளேடு, 30.9. 2014
- நான் அனுப்பிய செய்தி (செ.ர.பார்த்தசாரதி)

Tuesday, 4 September 2018

பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டுமென்றால், என்ன பொருள்!

ஒழிக்கும் வழி!

பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டுமென்றால், அவர்களைக் கொன்று ஒழிப்பது என்பது அல்ல. சாக்கடைக் கசுமாலம் ஒழிந்தால் எப்படி கொசுத் தொல்லை ஒழியுமோ அப்படி இந்த மதம், கடவுள், கோயில், புராணம் ஒழிந்தால் பார்ப்பனர்கள் ஒழிந்து விடுவார்கள்.

(பெரியார், விடுதலை - 13.10.1953)