மூலிகை மன்னன் செ.ர.பார்த்தசாரதி அவர்களின் படைப்புகளும், குறிப்பிடத்தக்க செய்திகளும் இடம்பெறும்.
Wednesday, 24 May 2023
நீதிக் கட்சி ஆட்சியில் ஆதி திராவிடர் பெற்ற * நன்மைகள்-
Tuesday, 23 May 2023
தமிழ் உலகு: தமிழ் இனி கட்டாயம்
Thursday, 18 May 2023
கொடுமைகள் திருத்தப்பட்ட வரலாறு
Friday, 5 May 2023
ஓபிசி சான்றிதழ் குறித்து திருத்தப்பட்ட ஆணை வெளியீடு
Viduthalai April 11, 2023 மற்றவை,
தமிழ்நாடு முதலமைச்சரின் உடனடி உத்தரவு!
பொதுத்துறை நிறுவன ஓபிசி பணியாளர்களுக்கு தமிழ்நாட்டில் ஓபிசி சான்றிதழ் மறுக்கப்படுவது குறித்து நமது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் என்.எல்.சி. நிறுவன ஓபிசி அமைப்பின் சார்பில் 10.8.2022 தேதியிட்ட கடிதம் பெறப்பட்ட நிலையில், அ.இ.பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் கூட்ட மைப்பின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு 4.9.2022 தேதியிட்ட கடிதம் அனுப்பப்பட்டது.
நமது கூட்டமைப்பின் கடிதத்தில்,‘‘தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் 24.8.2021 தேதியிட்ட ஆணையில், ஓபிசி பிரிவினரில் முன்னேறிய பிரிவினரை (கிரிமிலேயர்) நீக்கம் செய்திட குறிப்பிட்டுள்ள பணியாளர் வகைப்பாட்டில் (service category), (பத்தி 2- வீவீ)” பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர்” என பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் பொதுத்துறை நிறுவனங் களில் பணியாற்றும் அனைத்து நிலை ஓபிசி பணியாளர்கள் பிள்ளைகளுக்கு ‘ஓபிசி சான்றிதழ்’ பெறுவதில் பெரும் சிக்கலும் தடையும் ஏற்பட்டுள்ளது.
இதற்கு ஆதாரமாக, தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை 24.8.2021 இல் குறிப்பிட்டுள்ள ஒன்றிய அரசின் இரு ஆணைகளிலும், (இந்திய அரசின் அலுவலக குறிப் பாணை எண்: 361012/22/93-Estt.SCT, நாள்: 8.9.1993 மற்றும் இந்திய அரசின் அலுவலக குறிப்பாணை எண்:36033/1/2013-Estt-(Res), நாள் 13.9.2017) பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஓபிசி பிரிவினர் குறித்து பொத்தாம் பொதுவாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் 24.8.2021 தேதியிட்ட ஆணையையும், அதே போன்று அந்த ஆணையை வழி மொழிந்து அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கும் பிறப்பித்த வருவாய் நிருவாக ஆணையரகத்தின் 24.9.2021 தேதியிட்ட ஆணையையும் திரும்பப் பெற வேண்டும்.
ஒன்றிய அரசின் அரசுத் துறை மற்றும் பொதுத்துறை நிறுவன பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பதையும், தற்போதைய 24.8.2021 தேதியிட்ட ஆணை, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங் களில் பணியாற்றும் தமிழ்நாடு ஓபிசி பிரிவினர் வாய்ப்பை மேலும் குறைத்திடும் என்பதையும் கருத்தில் கொண்டு, மிகவும் முக்கியம் வாய்ந்த இந்தப் பிரச்சினையில் தாங்கள் உடனடியாக தலையிட்டு, ஆவன செய்திட தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்” என கடிதம் எழுதப்பட்டது. கடிதத் தின் நகல் பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் அவர் களுக்கும் அளிக்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட கடிதத்தின் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசின் ‘சமூக நீதி கண்காணிப்புக் குழு’ 11.10.2022 தேதியிட்ட கடிதத்தில் வலியுறுத்தப்பட்ட நிலையிலும், நமது கூட்ட மைப்பின் சார்பில் பிற்படுத்தப்பட்டோர் துறையின் சம்பந்தப் பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்துத் தொடர்ந்து வலியுறுத் தப்பட்டது.
நமது கூட்டமைப்பின் தொடர் முயற்சியின் காரணமாக, தற்போது தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் துறையின் சார்பில் 30.3.2023 தேதியிட்ட கடிதத்தின் மூலம், நாம் கோரிய கோரிக்கை, அதாவது, தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் ஆணை (24.8.2021), வருவாய் துறையின் ஆணை (24.9.2021) திரும்பப் பெறப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு அரசின் 30.3.2023 தேதியிட்ட கடிதத்தின் பார்வை 7 இல் நமது கூட்டமைப்பின் 4.9.2022 தேதியிட்ட கடிதம் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டுகிறோம்.
தமிழ்நாடு அரசின் தற்போதைய 30.3.2023 தேதியிட்ட கடிதம் காரணமாக, ‘பொதுத் துறை நிறுவன ஊழியர்கள்’ அனைவருக்கும் கிரிமிலேயர் என்ற நிலை நீக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் அல்லாத பதவிகளில் உள்ள ஓபிசி பிரிவினர் ஒன்றிய அரசின் குரூப் சி-க்கு இணையான பதவிகள் என்பதாலும், குரூப் சி பதவிகளுக்கு ‘கிரிமிலேயர்’ முறை பொருந்தாது என்பதாலும், ஒன்றிய அரசு, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்களில் அலுவலர்கள், கடைநிலை ஊழியர்கள் பதவிகளில் உள்ள அனைத்து பிற்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரது பிள்ளை களுக்கு ஓபிசி சான்றிதழ் பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தற்போது பிற்படுத்தப்பட்டோர் துறையின் 30.3.2023 தேதியிட்ட கடிதத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் வருவாய் துறை, அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் ஓபிசி சான்றிதழ் வழங்கிடும் துறைகளுக்கும் விரைவில் கடிதம் அனுப்பப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, வருவாய் துறை கூடுதல் முதன்மை செயலாளர் /ஆணையருக்கு கூட்டமைப்பின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் ஆணை (24.8.2021), வருவாய் துறையின் ஆணை (24.9.2021) குறித்த சிக்கலை நமது கவனத்திற்கு கொண்டு வந்த என்.எல்.சி. நிறுவன ஓபிசி அமைப்பிற்கும் அதன் அனைத்து நிர்வாகிகளுக்கும் நமது நன்றி. பாராட்டுகள்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பி வருவாய் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் அருமைத் தம்பி மருத்துவர் நா.எழிலன் அவர்களுக்கு நன்றி!
நமது அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் கூட்டமைப்பு கடிதத்தின் அடிப்படையில் உரிய தீர்வினை மேற்கொண்டு, ஓபிசி பிரிவினருக்கு சான்றிதழ் கிடைத்திட வழிவகை செய்த தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது கூட்டமைப்பின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள் கிறோம். மேலும் பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுக்கும், சமூக நீதி கண்காணிப்புக் குழு அரசு செயலாளர் மற்றும் தலைவர் ஆகியோருக்கும் நமது உளமார்ந்த நன்றிகள்!
- கோ.கருணாநிதி
பொதுச்செயலாளர்
அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் கூட்டமைப்பு
இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு ஜாதிச் சான்றிதழ் கிடைக்க வழிசெய்வீர்! சட்டப்பேரவையில் டாக்டர் நா. எழிலன் வலியுறுத்தல்!
Viduthalai April 09, 2023 தமிழ்நாடு,
சென்னை, ஏப்.9- சட்டப் பேரவையில், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நா.எழிலன் எழுப்பிய கேள்வியும், அமைச்சர் கே. கே. எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அளித்த பதிலும் வரு மாறு:-
டாக்டர் நா. எழிலன்:
இதர பிற்படுத்தப்பட் டோர் 27 சதவிகித இடஒ துக்கீடு ஜாதிச் சான்றிதழ் தொடர்பாக என் கேள்வி யைக் கேட்கிறேன். ஒன் றிய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் வகைப்பாடுகளில், ஜாதிச் சான்றிதழ்களில் தனித்தனியாக வகைப் படுத்தி உள்ளார்கள். ஆனால் தமிழ்நாடு அர சின் உத்தரவுகளில் 4 (2) (3) பிரிவில் பொதுவாக பொதுத்துறை ஊழியர் கள் என்று குறிப்பிட்டி ருப்பதால், பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்யும் இடைநிலை, கடைநிலை ஊழியர்க ளுக்கு உரித்தான ஜாதிச் சான்றிதழ் கிடைக்காமல் சிக்கல் உள்ளது.
பொதுத் துறை ஊழி யர்கள் என்ற இப்பிரிவினை வகைப்படுத்தி, கடைநிலை ஊழியர் கள், இடைநிலை ஊழியர்கள் என்று பிரித்தால்தான், 27 சதவிகிதம் இட ஒதுக் கீடு அவர்களுக்கு கொண்டுபோய் சேருவதற்கான வழி முறைகள் சாத்தியக்கூறு ஆகும்.
இதனால் இந்தத் திருத்தத்தைத் திருத்தி வருவாய்த் துறையில் இதர பிற்படுத்தப்பட் டோர் பொதுத் துறை நிறுவனங்களில் இடை நிலை ஊழியர்கள், கடை நிலை ஊழியர்கள் என்று பிரித்தால் அவர்களு டைய குழந்தைகள் ஒன் றிய அரசின் வேலை வாய்ப்பிலும், கல்வி நிறு வனங்களிலும் சேர இதர பிற்படுத்தப்பட்டோர் 27 சதவிகித இட ஒதுக்கீடு சான்றிதழ் கிடைக்க வழி செய்யுமாறு அமைச்சர் அவர்களிடம் கேட்டு அமர்கிறேன்.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன்:
உறுப்பினர் அவர்கள் இது சம்பந்தமாக ஏற் கெனவே என்னிடம் பேசியிருக்கிறார்கள். அது சம்பந்தமாக என்னு டைய துறை அதிகாரிகள் மத்தியிலும் நான் கலந்து பேசியிருக்கிறேன்.
என்னுடைய துறை சார்ந்த மானியக் கோரிக்கை முடிந்த பிறகு, உறுப்பினர் அவர் களை அழைத்து பேசி, அதற்கு வேண்டிய முடி வெடுத்து, முதலமைச்சர் அவர்களின் கவனத் திற்குக் கொண்டு செல் லலாம்.
-இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.
Wednesday, 3 May 2023
கவிஞர் 'புதுவை சிவம்' அவர்களின் முயற்சியால் ஆசியாவிலேயே முதல் முறையாக புதுவையில் 8 மணி நேர வேலை
Tuesday, 2 May 2023
100 நாள் வேலைக்கான சம்பளம் உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
ஹரியானா, கேரளா, கர்நாடகா, கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்த குறைந்தபட்ச ஊதியம் ரூ. 300 க்கும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
mgnrega tamil nadu: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூலி விகிதத்தை அதிகரித்து மத்திய ஊரக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஒரு நாள் குறைந்தபட்ச கூலித் தொகை ரூ. 281ல் இருந்து ரூ. 290ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.அதாவது, வெறும் 3% விகிதம் உயர்த்தப்பட்டுளளது.
2005-ல் இயற்றப்பட்ட தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்ட சட்டத்தின் கீழ், கிராமப்புற மக்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு கட்டாய உடலுழைப்பு வேலை சட்டப்படி அளிக்கப்படும். அவ்வாறு, வேலை கொடுக்கத் தவறினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் 30 நாட்கள் சம்பளத்தில் கால் பங்கும், மேலும் தவறினால் பாதி ஊதியத்தை அபராதமாக வேலைக் கொடுக்கும் வரை அரசு தர வேண்டும்.
இந்த சட்டத்தின் 6(C) பிரிவின் கீழ், 100 நாள் பணியாளர்களுக்கான ஊதிய விகிதத்தை மத்திய அமைச்சகம் அவ்வப்போது நிர்ணயித்து வருகிறது. இந்த நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்திற்குக் குறைவான ஊதியத்தை வழங்கக் கூடாது.
அந்த வகையில், தற்போது ஊதிய விகிதத்தை மத்திய ஊரக அமைச்சகம் மாற்றி அமைத்துள்ளது. புதிய அறிவிப்பின் படி, தமிழ்நாட்டில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹரியானா, கேரளா, கர்நாடகா, கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்த குறைந்தபட்ச ஊதியம் ரூ. 300 க்கும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் சட்டத்தின் கீழ், 100 நாள் பணியாளர்களுக்கு வாரத்திற்கு ஒரு முறையோ, அல்லது வேலை செய்த 14 நாடுகளுக்குள் ஊதியம் வழங்க வேண்டும். ஊதியம் தாமதமாக வழங்கப்பட்டால் ஊதியம் வழங்கல் சட்டத்தின் கீழ் நஷ்டஈடு கொடுக்க வேண்டும்.
-நியூஸ் 18 தமிழ் இணையதளம்
26.03.2023
