வாலாசா வல்லவனின்
* பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா?என்ற நூலில்
* இருந்து -சிறு துளி.
பள்ளர் பறையர் என்று இழிவாக உள்ள பெயரை மாற்றி,ஆதி திராவிடர் என்ற பெயரை எங்கள் சமூகத்திற்கு இட்டு அழைக்க வேண்டும் என்று எம்.சி.இராஜா சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார்.
அவரின் தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டு,
அச் சமூகத்தினரை ‘ஆதி திராவிடர்கள் என்றே அனைத்து ஆவணங்களிலும் பதிய வேண்டும் என்று
அரசாணை (எண் 217 )சட்டம் (பொது)25-03-1922 இல் பிறப்பிக்கப் பட்டது.
ஆதி திராவிடர் பிள்ளைகள் பொது பள்ளியில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.(G.O.No87-கல்வி நாள் 6-1-23.
அரசு மான்யம் பெறும் பள்ளியில் ஆதிதிராவிடர் மாணவர்களை சேர்க்க மறுத்தால் அரசு மான்யம் இரத்து செய்யப்படும்(G.O.எண் 88-கல்வி நாள்16-1-23)
இந்தியாவின் முதன் முதலாக ஆதி திராவிடப் பிள்ளைகள் இலவசமாக தங்கிப்படிக்க ஆதிதிராவிடர் மாணவர் விடுதி கட்டப்பட்டது.
G.O-2563-நாள் 24-10-1923-.1931க்குள் மூன்று விடுதிகள் கட்டப்பட்டன.
ஆதி திராவிடர் பிள்ளைகள் வருவதற்கு தடையில்லாத இடத்தில் பள்ளிகள் கட்ட அரசு ஆணை G.O-2333-27-11-1922
ஆதி திராவிட மாணவர்களுக்கு நான்காம்வகுப்பு முதல் கல்வி உதவித் தொகை
S.S.L.C.தேர்வு கட்டணம் இரத்து.
ஆதி திராவிடப் பிள்ளைகளை அதிகமாகச் சேர்க்கும் பள்ளிகளுக்கு அதிக அளவில் பண உதவி.
பனகல் அரசர் காலத்தில் ஆதி திராவிடர் மாணவர்களுக்கு வகுப்புரிமையின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் மூன்று இடங்கள் கிடைத்தன.மருத்துவக் கல்லூரியில் பயிலும் ஆதி திராவிட மாணவர்களுக்கும்,பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு பஞ்சமி நிலங்கள் ஆதி திராவிடர்க்கு ஒதுக்கப்பட்டன.1920-1921 ஆதி திராவிடர்க்கு ஒதுக்கப் பட்ட பஞ்சமி நிலங்கள்-19251 ஏக்கர்.
நீதிக்கட்சி ஆட்சியில் ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் 3,42,611 ஏக்கர்.
- பன்னீர்செல்வம் முகநூல் பக்கத்திலிருந்து...
No comments:
Post a Comment