வெற்றிவலவன் பதிவுகள்

மூலிகை மன்னன் செ.ர.பார்த்தசாரதி அவர்களின் படைப்புகளும், குறிப்பிடத்தக்க செய்திகளும் இடம்பெறும்.

Pages

  • Home
  • கைவல்யம் - வேதாந்தம்
  • உண்மை இராமாயணம்
  • சாமியார்கள் எச்சரிக்கை
  • சோதிட ஆராய்ச்சி
  • சிந்தனை செய்வோம்
  • சமூக நீதி
  • பெரியார் உலகம்
  • உழைப்பவர் உலகு

Wednesday, 8 March 2023

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை நாங்கள் நடத்த உள்ளோம்! கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு


வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை நாங்கள் நடத்த உள்ளோம்!
  March 08, 2023 • Viduthalai

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு

நாகர்கோவில், மார்ச் 8- வைக்கம் போராட்டத்தின் நூற் றாண்டு விழாவை நாங்கள் நடத்த உள்ளோம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார். 

தோள் சீலை போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி மாபெரும் பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் கடந்த 6.3.2023 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் தலைவர்கள் உரையாற்றினர்.  

பினராயி விஜயன் ஆற்றிய உரை வருமாறு: 

இந்த நிகழ்ச்சியில் சகோதரர் மு.க.ஸ்டாலினுடன் பங்கெடுக்க முடிந்ததற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். மார்பு மறைக்கும் உரிமைக்காக நடத்தப்பட்ட போராட்டமே தோள்  சீலை போராட்டம். அதன் 200 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு  மார்பை  மறைக்கும் உரிமை  மறுக்கப்பட்டிருந்தது.  இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் மார்த்தாண்ட வர்மன் இனி திருவிதாங்கூர் சனாதன தர்ம ராஷ்ட்டிரமாக இருக்கும் என்று அறிவித்தார். 

அதைத் தொடர்ந்தே சனாதன தர்மத்தை ஒட்டிய ஏராளமான கொடுமைகள் சமூகத்தில் நிகழ்த்தப்பட்டன. மனிதாபிமானமற்ற அத்தகைய நடவடிக்கைகள் மிகப்பெரிய மக்கள் பகுதியினர்மீது  திணிக்கப்பட்டன. அதன்படி மிகவும் மோசமான வரிகள் விதிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட் சட்டத்தின் படியே மார்பை மறைக்க தடை விதிக்கப்பட்டது. இத்தகைய மன்னராட்சியின் பாதிப்புகளை தடுத்து நிறுத்தும் முயற்சிகளும் நடைபெற்றன. அந்த முயற்சி களின் பகுதியே தோள்சீலை போராட்டமாக வெடித்தது.  

இந்தப்  போராட்டம் அரசியல் முக்கியத்துவம் கொண்டது. அதைத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கு விவரித்தார். நான் இங்கு நிற்கும்போது திருவள்ளுவர், மகாகவி சுப்ரமணிய பாரதி, பெரியார், அய்யா வைகுண்டர், இராமலிங்க அடிகளார், சிறீநாராயண குரு போன்றோரின் நினைவு கள் மனதை நிறைக்கின்றன. அவர்கள் எல்லாம் மேற்கொண்ட முயற்சியின் விளைவாகவே நமது நாடு மனிதர்கள் வாழத்தக்கதாக மாறியிருக்கிறது.  அதன் பிறகு நாட்டில் எழுந்து  வந்த முற்போக்கு மறுமலர்ச்சி இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள், சமுதாய அமைப் புகள் அந்த மாற்றங்களை முன்னெடுத்துச் செல்கின்றன. இத்தகைய ஒரு மறுமலர்ச்சி நிகழ்வு நடப்பது பாராட்டுக்குரியது

‘சனாதன இந்துத்துவம்’

‘சனாதன தர்மத்தின் அரசியல்’ என்று கூறி மார்த்தாண்டவர்மன் செயல்படுத்திய வழிமுறைகளே இன்றும் நமது நாட்டில் நிலவும் ‘சனாதன இந்துத்துவம்’. மன்னராட்சியையும், வகுப்புவாதத்தையும்  போற்றுவ தாக்கும் இந்த  வார்த்தை. சனாதன இந்துத்துவம் என்கிற  பாதையின் ஊடாக பிராமணிய ஆதிக்கத்தை  நிறுவுவதே இதன் நோக்கம். ஜனநாயகம் இந்த கும்பலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.  

சனாதன இந்துத்துவம் என்பது அடிமைத்துவமாகும்.  சனாதனம் போற்றுதலுக்கு உரிய ஒன்று  எனவும், மறுநிர்மாணம் அது எனவும், அனைத்து சமூக பிரச்சினைகளுக்கும் தீர்வுக்கான வழி எனவும்  விவா தங்கள் இப்போது முன்வைக்கப்படுகின்றன.  இதன் முக்கிய அடையாளமாக அவர்கள் ‘லோகா சமஸ்தியா சுபந்தோ’ என்கிற சுலோகத்தை  கூறுகிறார்கள். ‘உலகம் முழுமைக்கும் நலம் கிடைக்கட்டும்'  என்பதே இதன் பொருள். இது சாதாரண நிலையில் எதிர்க்கப்பட வேண்டிய ஒரு விசயம் அல்லவே!  

ஆனால், உலகத்தில் இந்துத்துவம் மட்டுமே இத் தகைய சகோதரத்துவமான அடையாள வார்த்தையை முன்வைத்துள்ளது என்கிறார்கள். இதுதான் நமது நாட்டில் கூறப்படும் கருத்து. ஆனால் இதற்கு முன்புள்ள வரி, வேண்டுமென்றே மறைக்கப்படுகிறது. அந்த வார்த்தை,  ‘‘கோ பிராமண்மே கியா சுப  மஸ்து’’. இதன்பொருள் "பசுவுக்கும், பிராமணனுக்கும் நலம் உண்டாகட்டும்" என்பதாகும். பசுவும் பிராமணனும் நலமாக இருந்தால் உலகத்தில் அனைவருக்கும் நலம் ஏற்படும் என்பதாகும்.  

இது பசுவை  மய்யமாகக்கொண்ட இன்றைய அரசியலுடன் எந்த அளவுக்குப் பொருந்துகிறது  என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அன்று இருந்த சமூக (அ) நீதிகள் அனைத்தும் மறைந்துவிட்டதாக கருத முடியுமா? அவை பல்வேறு வகையில் இன்றும் நீடிக்கின்றன. அன்று இருந்த அரசியல் அதிகாரத்தின் மேலாதிக்கம்  இன்றும் உள்ளது. அதனால்தான் வடஇந்தியாவில் தலித்துகளும், பிற்படுத்தப்பட்டோரும் சிறுபான்மையினரும், அச்சுறுத்தப்படுகிறார்கள். சட் டத்தின் முன்னாலும் கூட தப்பித்துச் செல்ல இந்த மேலாதிக்கம் அவர்களுக்கு உதவுகிறது. 

தோள்சீலை...  ஓர் அரசியல் போராட்டம்

தோள்சீலை போராட்டம் வெறும் ஜாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டமாக மட்டும் இருக்க வில்லை. அது ஒரு பெரிய அரசியல்  உள்ளடக்கமும் கொண்டுள்ளது. சவரண,  ஜென்மி, நாடுவாழி, காலனிய நடைமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் சாயல் அதில் உள்ளது. மன்னராட்சிக்கும் அதற்குத் தளம்  அமைத்த ஏகாதிபத்தியத்துக்கும் எதிராக இருந்தது அது. அந்த வகையில் தோள் சீலை போராட்டம் ஓர் அரசியல் போராட்டமாகவும் இருந்தது. 

வகுப்புவாதம், பெரும்பான்மை, சிறுபான்மை எதுவானாலும் மனித குலத்துக்கு எதிரானதாகும். இந்தியாவில் ஆட்சி அதி காரத்துடன் வளர்ந்த பெரும்பான்மை வகுப்பு வாதம் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. ஆட்சி அதிகாரத்தை கையாள்வதுபோல் நாட்டை வகுப்புவாத அடிப்படையில்  சங்பரிவார் பிளவுபடுத்த வும் செய்கிறது.  மதச் சிறுபான்மையினரை அச்சத்தில் ஆழ்த்துவது அன்றாடம் நடந்து வரு கிறது. நமது நாட்டில் வகுப்புவாத மோதல்கள் இல்லாத சில மாநிலங்களே உள்ளன. அதில்  ஒன்று தமிழ்நாடு; மற்றொன்று கேரளமாகும்.  கேரளத்தில் தாழ்த்தப் பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டோரும் கோயில்களில் அர்ச்சகராவது சாத்தியமாகி உள்ளது.

தகர்க்க முடியாத சக்தி அல்ல!

‘தாங்கள் தகர்க்க முடியாத சக்தி' என்ற பாஜகவின் வாதம், தேசிய அரசியலில் தகர்வதை இன்று காண முடிகிறது. 

பாஜகவுக்கு எதிராக பீகாரில் நிதீஷ் கட்சி உள்ளது. இது பீகாரில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். பாஜகவின் மக்கள் விரோதப் போக்குக்கு எதிராக அரியானாவில் தேவிலாலின் நூற்றாண்டு விழாவில் எதிர்க்கட்சிகள் பேரணி  நடத்தின. 2024 இல் பாஜக வின் மக்கள் விரோத ஆட்சியை முறியடிக்க வேண்டும் என்ற முழக்கம் அதில் எழுந்தது.  சிவசேனாவின் ஒரு பகுதி மட்டுமே பாஜகவுடன் உள்ளது. மேற்கு வங்கம், மராட்டியம் உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் பாஜக வுக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. 11 ஆண்டுகளாக ஆட்சியில்  இருந்த டில்லி மாநகராட்சி பாஜக-வின் கையை  விட்டுப் போனது. இதெல்லாம் நாட்டில் வளர்ந்து வரும் சரியான அரசியலின் அறிகுறிகள்.  பாஜகவால் ஏற்படும் துன்பத்தை மக்கள் அறிந்து  கொள்கிறார்கள்.

அவை மக்கள் மத்தியில் எதிரொலிக்காமல் இருக்க சங் பரிவார் பிரிவினை நிகழ்ச்சி நிரலை புகுத்துகிறது. காசியையும், மதுராவையும் அடுத்ததாகப் பிடித்து எடுக்கலாம் என கூறுகிறார்கள். பசியும் அதனால்  ஏற்படும் சமூக மாற்றங்களையும் கண்டு கொள்ளாமல் சங்பரிவார் உள்ளது. திரிபுராவில் பாஜக வென்றதாக நாம் நினைக்கிறோம். கடந்த முறை 50 சதவிகிதம் ஓட்டு வாங்கியவர்களுக்கு இப்போது 10 சதவிகிதம் ஓட்டு  குறைந்துள்ளது. திப்ராமோதா கட்சி ஓட்டுகளை  பிரிக்காமல் இருந்தால் அங்கு நிலைமை வேறு மாதிரி ஆகியிருக்கும். 

ஒருமொழி, ஒருநாடு, ஒரு மதம் என்று இந்தியாவை மாற்றப் பார்க்கிறார்கள். தி.மு.க. மொழிப் பாதுகாப்பு போராட்டம் நடத்தியது. ஹிந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக  நடத்திய மொழிப்போராட்டம் நினைவு கூரத்தக்கது.  

எல்.அய்.சி.யின் 70 ஆயிரம் கோடியை ஒருவர் விழுங்கி உள்ளார். அமலாக்கத்துறை, சி.பி.அய். போன்ற ஏஜென்சிகளை அரசியலுக்காக பயன்படுத்து கிறார்கள். அமலாக்கத்துறை வழக்குகளும் வெறும் அரை சதவிகிதம் தண்டனையே பெற்றுத் தந்துள்ளன. சி.பி.அய்.யும் அப்படித்தான்.  மென்மையான இந் துத்துவா எதிர்ப்பின் மூலம் இந்து வகுப்புவாதத்தை எதிர்கொள்ள முடியாது. அது ஆபத்தை உண்டாக்கும்.   மொழி பாதுகாப்பு முதல் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள்  வரை அனைத்துக்கும் நாம் போராட்டத்தை நடத்த வேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும். மக்கள் உரிமைப் போராட்டங்கள் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

வைக்கம் போராட்டத்தின் 

நூற்றாண்டு

இங்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஓர் அழைப் பைக் கொடுக்க விரும்புகிறேன். வைக்கம் போராட் டத்தின் 100ஆம்  ஆண்டு நிகழ்ச்சியை நாங்கள் நடத்த உள்ளோம். அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்களும் வரவேண்டும் என அழைக்கிறேன். 

‘சனாதன இந்துத்துவம்’பற்றி பினராயி விஜயன்

‘சனாதன தர்மத்தின் அரசியல்’ என்று கூறி மார்த்தாண்டவர்மன் செயல்படுத்திய வழிமுறைகளே இன்றும் நமது நாட்டில் நிலவும் ‘சனாதன இந்துத்துவம்’. மன்னராட்சியையும், வகுப்புவாதத்தையும்  போற்றுவதாக்கும் இந்த  வார்த்தை. சனாதன இந்துத்துவம் என்கிற  பாதையின் ஊடாக பிராமணிய ஆதிக்கத்தை  நிறுவுவதே இதன் நோக்கம். ஜனநாயகம் இந்த கும்பலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.  

சனாதன இந்துத்துவம் என்பது அடிமைத்துவமாகும்.  சனாதனம் போற்றுதலுக்கு உரிய ஒன்று  எனவும், மறுநிர்மாணம் அது எனவும், அனைத்து சமூக பிரச்சினைகளுக்கும் தீர்வுக்கான வழி எனவும்  விவாதங்கள் இப்போது முன்வைக்கப்படுகின்றன.  இதன் முக்கிய அடையாளமாக அவர்கள் ‘லோகா சமஸ்தியா சுபந்தோ’ என்கிற சுலோகத்தை  கூறுகிறார்கள். ‘உலகம் முழுமைக்கும் நலம் கிடைக்கட்டும்'  என்பதே இதன் பொருள். இது சாதாரண நிலையில் எதிர்க்கப்பட வேண்டிய ஒரு விசயம் அல்லவே!  

ஆனால், உலகத்தில் இந்துத்துவம் மட்டுமே இத்தகைய சகோதரத்துவமான அடையாள வார்த்தையை முன்வைத்துள்ளது என்கிறார்கள். இதுதான் நமது நாட்டில் கூறப்படும் கருத்து. ஆனால் இதற்கு முன்புள்ள வரி, வேண்டுமென்றே மறைக்கப்படுகிறது. அந்த வார்த்தை,  ‘‘கோ பிராமண்மே கியா சுப  மஸ்து’’. இதன்பொருள் பசுவுக்கும், ‘பிராமணனுக்கும் நலம் உண்டாகட்டும் என்பதாகும். பசுவும்‘ பிராமணனும் நலமாக இருந்தால் உலகத்தில் அனைவருக்கும் நலம் ஏற்படும் என்பதாகும்.  

இது பசுவை  மய்யமாகக்கொண்ட இன்றைய அரசியலுடன் எந்த அளவுக்குப் பொருந்துகிறது  என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

-இவ்வாறு பினராயி விஜயன் பேசினார். 

-'தீக்கதிர்', 8.3.2023

Posted by parthasarathy r at 09:38 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: பினராயி விஜயன், வைக்கம்

Tuesday, 7 March 2023

‘‘அக்கப்போர் அண்ணாமலை''யின் இடைச்செருகல் - திருவிளையாடலா - பித்தலாட்டமா?


      September 29, 2022 • Viduthalai

‘அக்கப்போர் அண்ணாமலை' என்று நாம் எழுதியதை அன்றாடம் அவரே முன்வந்து ‘ஆமாம், ஆமாம்' என்று நிரூபித்துக் கொண்டுள்ளார்.

அத்தகைய அக்கப்போர்களை வாங்கிக் கொட்டிக் கொள்ளும் கழிவுக் குப்பைத் தொட்டியாக ‘இன மலரான' ‘தினமலர்' என்ற ஒன்று இருக்கிறது.

தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் திருவாளர் அண்ணாமலை கரூரில் பேசியதாக ‘தினமலர்' (28.9.2022, பக்கம் 5) ஒரு பெட்டிச் செய்தியைப் போட்டுள்ளது.

‘‘ஆ.ராஜா கூறிய அதே ஈ.வெ.ரா. இறுதி பேருரை புத்தகத்தின் 21 வது பக்கத்தில் நாதி இல்லையே... சொல்வதற்கு நாதி இல்லையே....! சிந்திக்க நாதி இல்லையே....! ஒரு ஓட்டுக்கு என்னென்ன கொடுக்கிறான், பெண்டாட்டியைத் தவிர மத்தது எல்லாத்தையும் கொடுக்கிறான், ஓட்டு வாங்குவதற்கு; இதற்கு கவலையே பட மாட்டேன் என்கிறானே, யாரது? நம்ம முன்னேற்றக் கழகத்துக்காரன்தான்'' என்று ஈ.வெ.ரா. பேசியதாக உள்ளது.''

‘‘ஹிந்து மதம் பற்றி ஈ.வெ.ரா. பேசியதை கூறும் ஆ.ராஜா தி.மு.க.பற்றி ஈ.வெ.ரா. பேசியதையும் கூறத் தயாரா?'' இவ்வாறு அண்ணாமலை பேசியதாக ‘தினமலர்' செய்தி வெளியிட்டுள்ளது.

தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை நூல் 21 ஆம் பக்கத்தில் உண்மையில் என்ன இருக்கிறது?

‘‘நாதி இல்லையே, சொல்றதுக்கு ஆள் இல்லையே, சிந்திக்க ஆள் இல்லையே! ஒரு ஓட்டுக்கு என்னென்ன கொடுக்கிறான்? பெண்டாட்டியைத் தவிர மற்றதை எல்லாம் கொடுக்கிறானே, ஓட்டு வாங்குவதற்கு. இதற்குக் கவலையே படமாட்டேங்கிறானே, முன்னேற்றக் கழகத்துக்காரன். மற்றவன் எல்லாம் என்னை வைவான். ‘இவனுக்கு ஏன் இது எல்லாம் என்ன கேடு இந்த வேலையை ஏன் பண்ணிக்கிட்டு இருக்கிறான்'' என்று. 

- இதுதான் அக்கப் போர் அண்ணாமலை எடுத்துக்காட்டிய தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை நூல் 21 ஆம் பக்கத்தில் உள்ளது.

இதில் எந்த இடத்தில் யாரது? என்ற சொல் இருக்கிறது? இந்தச் சொல்லை ‘அரோகரா' அண்ணா மலை இடைச்செருகல் செய்வானேன்? இது கடைந்தெடுத்த மோசடி அல்லவா?

‘‘ஓட்டுக்கு என்னென்ன கொடுக்கிறான்? பெண் டாட்டியைத் தவிர மற்றதை எல்லாம் கொடுக்கிறான்'' என்று ஓட்டு வாங்கும் எல்லோரையும்தான் பொது வாகக் குறிப்பிடுகிறார். அப்படித்தான் அந்த நூலிலும் இருக்கிறது.

நாட்டின் அரசியல், தேர்தல் தரம் எவ்வளவுக் கீழிறக்கத்துக்குப் போய்விட்டது என்ற கவலையோடு பேசியிருக்கிறார் தந்தை பெரியார்.

அந்தப் பொதுவாகச் சொன்ன வார்த்தைகளின் இடையில் எதோ தி.மு.க.வைப்பற்றி மட்டும் பெரியார் குறிப்பிட்டுப் பேசினார் என்பதுபோல் ‘‘யாரது'' என்ற சொல்லை இடையில் திணிப்பானேன்? யாரது - அந்த அக்கப் போர் அண்ணாமலைதான் இந்த மோசடியைச் செய்திருக்கிறார்.

தேர்தல் பொதுக்கூட்டங்களில் கூடி இருக்கிற மக்களைப் பார்த்துக்கூட தந்தை பெரியார் கேட்டிருக் கிறார். ‘நீ என்ன யோக்கியன்? நீ பணம் வாங்கிக் கொண்டுதானே ஓட்டுப் போடுகிறாய்?' என்று வாக்காளர்களைப் பார்த்தே நேரடியாகக் குற்றம் சாட்டியதுண்டே!

பெரியார் சொல்லுவது நியாயம்தானே என்று பொதுமக்கள் கைதட்டி வரவேற்கத்தான் செய்தார்கள்.

தந்தை பெரியார் சொல்லாத வார்த்தையை இடையில் சொருகுவது ஏன்?

போலீஸ்காரர் அல்லவா, வழக்கை ஜோடிக்க இதுபோல் இடைச்செருகல் செய்து பழக்கப்பட்டவர் போல் இருக்கிறது.

இந்த வேலையை கருப்புச் சட்டைக்காரனிடம் வைத்துக்கொள்ள வேண்டாம் - பழைய காக்கிச் சட்டையும், இன்றைய காவிச் சட்டையுமான அண்ணாமலைகாரு!

தந்தை பெரியாரின் அதே இறுதிப் பேச்சில், அக்கப்போர் அண்ணாமலைகாரு எடுத்துக்காட்டிய அதே நூல் 18 ஆம் பக்கத்தில் காணப்படுகிறதே!

‘‘எல்லாக் கட்சிக்காரனும் ஒன்றாய்ச் சேர்ந்து இன்றைக்கு இருக்கிற ஆட்சியை ஒழிக்கணும் என்கிறான். ஒழிந்தால் ஒழிச்சிட்டுப்போ - எனக்கு ஒன்றும் கவலை இல்லை. அப்புறம் என்ன? இன்றைக்குத் திருட்டுத்தனமாக, மறைவாக பேசுகிற பேச்சை நாளைக்கு வெளிப்படையாகப் பேசுவான். பேசறவனை பார்ப்பான் மாலை போட்டு வரவேற்கிறான். அவனுக்கு விளம்பரம் கொடுக்கிறான்'' 

என்று பேசியிருக்கிறார் தந்தை பெரியார்.

அன்று அய்யா சொன்னது (1973 டிசம்பர் 19) 49 ஆண்டுகளுக்குப் பிறகு நினைத்துப் பாருங்கள் - எவ்வளவு தொலைநோக்குப் பார்வை!

‘‘எல்லாக் கட்சிக்காரனும் ஒன்றாய்ச் சேர்ந்து இன்றைக்கு இருக்கிற  ஆட்சியை (தி.மு.க.) ஒழிக்கணும் என்கிறான். ஒழிச்சிட்டுப் போ - எனக்கு ஒன்றும் கவலை இல்லை. அப்புறம் என்ன? இன்றைக்குத் திருட்டுத்தனமாகப் பேசுற பேச்சை நாளைக்கு வெளிப் படையாகப் பேசுவான். பேசுகிறவனை பார்ப்பான் மாலை போட்டு வரவேற்கிறான்'' என்று பேசியதில், பேசுகிற ஆள் என்கிற இடத்தில் அண்ணாமலை களையும், பார்ப்பான் மாலை போட்டு வரவேற்கிறான் என்ற இடத்தில் ‘தினமலரை'யும் பொருத்திப் பாருங்கள்.

உண்மை நிலை தெளிவாகிவிடும். தந்தை பெரியாரின் தொலைநோக்குப் புரிந்துவிடும்.

திருவாளர் எல்.முருகன் தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவராக வந்தவுடன் ஒன்றைச் சொன்னார்.

‘யாரும் பெரியாரைப்பற்றி அவதூறாகப் பேச வேண்டாம்' என்று சொன்ன நிலையில், ‘துக்ளக்'கில் முதல் பக்கத்திலேயே ‘‘எச்சரிக்கை!'' என்ற தலைப்பில் பெரியாரை பா.ஜ.க. புகழக் கூடாது என்று திருவாளர் குருமூர்த்தி எழுதியதையும் அண்ணாமலைகள் நினைத்துப் பார்க்கட்டும் - இதற்குள்ளும் இனப் பிரச்சினை இருக்கிறது.

நாம் சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்ற மனுதர்மம் (அத்தியாயம் 8; சுலோகம் 415, 417) கூறுவதைக் கண்டிக்கிறோம் என்றால், அண்ணா மலைகளின் சுயமரியாதைக்கும் சேர்த்துதான்.

‘தினமலர்' மனுவை தூக்கிப் பேசுகிறது என்றால், அதன் பார்ப்பன ஆதிக்கத் தன்மைதான். அண்ணாமலைகள் சுயமரியாதையோடு சிந்திக்கட்டும்!

‘‘பிராமண வேடத்தில்'' சிவனடியாராக வந்த சிவன் கேட்ட நேரத்தில், சற்றும் தாமதிக்காமல் சிவனடியார் (இயற்பகை நாயனார்) தன் மனைவியை அனுப்பி வைத்ததை எல்லாம் பயபக்தியோடு ஏற்றுக் கொள்வோர்  தேர்தலில் வாக்கு வங்கி முறையைக் கண்டிக்கும் வகையில் தந்தை பெரியார் சொன்னதை முடிச்சுப் போட்டு வில்லங்கம் செய்வதுதான் வேடிக்கை!

தளபதி மு.க.ஸ்டாலின் மிசாவில் சிறைக்குப் போனதுபற்றிக்கூட  தெரியாத பூஜ்ஜியங்கள், தந்தை பெரியார்பற்றியோ, தலைவர் வீரமணிபற்றியோ, ஆ.இராசாவைப்பற்றியோ எழுதுவதை நினைத்தால் சிரிப்பாகத்தான் இருக்கிறது.

கலி.பூங்குன்றன்,

துணைத் தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

29.9.2022

Posted by parthasarathy r at 08:41 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: அண்ணாமலை, இறுதிப் பேருரை

மாஸ்கோவில் 'பெஸ்போழ்னிக்' தலைமை அலுவலகத்தில் உரை நிகழ்த்தும் பெரியார் (அரிய படம்)

Karthick RM  முகநூல் பதிவு

Here is Periyar at the editorial office of 'Bezbozhnik', an anti-religious paper, in Moscow. And another image of him giving a speech.

With many many thanks to Ole Birk Laursen for the precious find!

மாஸ்கோவில் மதவெறுப்பான 'பெஸ்போழ்னிக்' தலையங்க அலுவலகத்தில் பெரியார் இதோ. அவர் உரை நிகழ்த்தும் மற்றொரு உருவம்.

விலைமதிப்பற்ற கண்டுபிடிப்புக்கு ஓலே பிர்க் லார்சனுக்கு மிக்க நன்றி!

...
Posted by parthasarathy r at 05:37 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: பெரியார், மாஸ்கோ

Thursday, 2 March 2023

பஞ்சாப் அரசின் பாராட்டத்தக்க செயல்! ஜாதிக் குறியீடு கொண்ட பள்ளிகளுக்குப் பெயர் மாற்றம்

 

    January 02, 2023 • Viduthalai

சண்டிகர்,ஜன.2- பஞ்சாப் மாநிலத் தில் ஜாதிக் குறியீடு கொண்ட 56 அரசுப் பள்ளிகளுக்கு அம்மாநில அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.

பஞ்சாபில் ஜாதி அடிப்படையில் பெயர் கொண்ட பள்ளிகளின் பெயரை மாற்றுமாறு அதிகாரிக ளுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பைன்ஸ் கடந்த 1ஆம் தேதி உத்தர விட்டார்.

இதையடுத்து அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளும் தங் களின் அதிகார வரம்புக் குட்பட்ட பகுதிகளில் இத்தகைய பெயர்கள் உள்ள பள்ளிகள் குறித்த அறிக்கையை அனுப்பி வைக்குமாறு பள்ளிக் கல்வித் துறை கேட்டுக் கொண்டது.

இதன் அடிப்படை யில் தொடக் கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி உட்பட 56 அரசுப் பள்ளி களின் பெயரை மாநில பள்ளிக் கல்வித் துறை மாற்றியுள்ளது.

பள்ளிகள் அமைந் துள்ள கிராமம் அல்லது நன்கு அறியப் பட்ட ஆளுமை, தியாகி அல் லது உள்ளூர் நாயகனின் பெயர் இந்தப் பள்ளிக்க ளுக்கு சூட்டப்பட்டுள் ளதாக அதிகாரிகள் தெரி வித்தனர். அரசின் இந்த நட வடிக்கைக்கு மாநில ஆம் ஆத்மி கட்சி வர வேற்பு தெரிவித்துள்ளது.

Posted by parthasarathy r at 01:42 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: பஞ்சாப், பள்ளி, ஜாதி

பிரிட்டிஷ் ஆட்சி காலம் இந்தியாவின் பாரம்பரியப் பெருமைகளைச் சிதைத்துவிட்டதா!

 திறந்தவெளி.... குறுகிய கண்ணோட்டம் எது?

      January 02, 2023 • Viduthalai

'குறுகிய கண்ணோட்டத்தில் வரலாற்றை அணுகக் கூடாது என்று சொல்லி இருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், அதே குறுகிய கண்ணோட் டத்தையே தனது உரையில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

சீக்கிய குருவான குருகோவிந்த சிங்கின் நினைவைப் போற்றும் வகையில், பேசிய பிரதமர் அவர்களது உரையில், அவர் எதைச் சொல்ல முன் வந்தாரோ, அதனையே அவர் எதிரொலித்தும் இருக்கிறார்.

குரு கோவிந்த சிங்கின் மகன்களை மதம் மாற வைக்க அவுரங்கசீப் முயற்சித்தார். அதனால்தான் அவர்கள் கொல்லப்பட்டார்கள்.

அடிப்படைகளையும் பாரம்பரியங்களையும் உணர்ந்து கொள்ளும் நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும்.

நம்பிக்கைகள் வாயிலாக நமது முன்னோர்கள் இந்தியக் கலாச்சாரத்தை வளர்த்தெடுத்தார்கள், என்றெல்லாம் பேசி இருக்கிறார் பிரதமர் அவர்கள். மொகலாயர்கள் ஆட்சி காலம் மோசமாக இருந்தது என்பதும், பிரிட்டிஷ் ஆட்சி காலம் இந்தியாவின் பாரம்பரியப் பெருமைகளைச் சிதைத்துவிட்டது என்பதுதான் பிரதமர் உரை யின் உள்ளடக்கமாக இருக்கிறது. அவர் வலியுறுத்தும் பரந்த மனப்பான்மை கொண்டதாக அவர் பேச்சு இல்லை. அதே குறுகிய எண்ணம் கொண்டதாகவே இருக்கிறது.

"தொன்மை மற்றும் இடைக்காலங்களில் நிலவிய இந்திய வரலாறு குறித்த அறிவியலுக்குப் புறம்பான பார்வை, வகுப்பு உணர்வுகள் பரவுவதற்கான முக்கியக் கருவியாகவும், அத்தகைய சித்தாந்தத்தின் முக்கிய அம்சமாகவும், அதன் விளைவாகவும் திகழ்ந்தது. உண்மையில் வரலாற்றை வகுப்புவாத ரீதியில் விளக் குவது இந்தியாவில் வகுப்புவாதத்தின் முக்கியமான சித்தாந்தமாக உள்ளது” என்று இந்தியாவின் தலை சிறந்த வரலாற்றாசிரியர் பிபின் சந்திரா எழுதி இருக்கிறார்.

"வகுப்பு வாதச் சித்தாந்தத்தின் அடிப்படையில் வகுப்பறை வரலாறு இருந்தால் கல்வியைப் பரப்புவது என்பது வகுப்புவாதத்தைப் பரப்புவதாக ஆகிவிடும்" என்று எச்சரித்தார் பிபின் சந்திரா.

இசுலாமியர்களும், ஆங்கிலேயர்களும் அன்னிய ஆட்சியாளர்கள், அவர்கள் கொடுமையை மட்டுமே செய்தார்கள் என்று கட்டமைக்க நினைப்பதுதான் இன்றைய வகுப்புவாத கருத்தாக்கம் ஆகும். இதன் மூலமாக மதமோதல்க ளுக்கு வித்திடுவதே இதன் உள்நோக்கம் ஆகும். இசுலாமிய மன்னர்களின் மதநல்லிணக்கக் கருத்துகளை மறைப்பதும், பிரிட்டிஷ் ஆட்சி யாளர்களின் சில சீர்திருத்த முயற்சிகளை மறைப்பதும் இதன் உள்ளடக்கம் ஆகும்.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் சில சட்டங்கள் போடப்பட்டன. அவை எதற்காக வந்தன என்பதை அறிந்தால், முந்தைய பாரம்பர்யம் என்ன செய்து கொண்டு இருந்தது என்பதை அறியலாம்.

1795-பெண் குழந்தைகளைக் கொல்லுதல் கொலைக்கும் சமமானது என அறிவிப்பு.

1811- அடிமை வர்த்தகம் ஒழிக்கப்பட்டது.

1812-உடன்கட்டை ஏறுதலை ஒழிக்க கல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு வெல்லெஸ்லி கடிதம் அனுப்பினார். சமயக் கோட்பாடுகளை மனதில் கொண்டு செயல்படவும் என்று அவருக்கு நீதிமன்றம் பதில் அனுப்பியது. உடன்கட்டை ஏறுதலுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

1817 - அனைத்துச் திறந்த வெளி ஜாதியினரும் ஓடு வேய்ந்த வீடுகளைக் கட்டிக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார் மன்றோ.

1817- திருவிதாங்கூர் பிரிட்டிஷ் ரெஜிமெண்ட பேராளராக மன்றோ இருந்தபோது ஈழவர், நாடார் முதலிய ஜாதியினர் பொன் வெள்ளி அணியலாம் என்று உத்தரவிட்டார்.

1819- சதி எனப்படும் உடன்கட்டை ஏறுதலுக்கு முழுத்தடை

1830 - சென்னை மாநிலத்தில் உடன்கட்டை எனப்படும் சதிக்கு தடை. 

1832 - காமக்கினியாள் கோவிலில் நரபலிக்குத் தடை விதிக்கப்பட்டது. இக்கோவில் 1565 முதல் நரபலி கொடுக்கப்பட்டு வந்த கோவிலாகும். 

1833 - உடன்கட்டை ஏறுதலை தடை செய்ததை எதிர்த்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இந்தியர்கள் செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

1833 - பட்டயச் சட்டத்தின்படி ஜாதி, சமய, நிற வேறுபாடுகளின் அடிப்படையில் இந்தியர் யாரும் வேலை வாய்ப்பினை இழந்துவிடக்கூடாது எனக் கூறியது. பிரிட்டிஷாருக்கும் இந்தியருக்கும் வேலைகள் பெறுவதில் வேற்றுமை கூடாது என்று அறிவிக்கப் பட்டது.

1833 - பிரிட்டிஷ் பேரரசில் அடிமை முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆறு வயதுக்கு உட்பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும். ஆறு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொழிற் பயிற்சி தந்து விடுவிக்க வேண்டும்.

1835- இந்தியக் கல்வி, சட்டம் பற்றி ஆராய மெக்காலே அமர்த்தப்பட்டார். அனைவரும் படிக்க இது வழிவகை செய்தது.

1837 - இந்திய தண்டனைச் சட்டத்தை மெக்காலே எழுதினார். அனைவர்க்கும் சட்டம் பொதுவானது.

1837 - மதம் மாறிய இந்துக்களுக்கும் கிறித்துவர் களுக்கும் முன் னோர் சொத்தில் பங்கு உண்டு என்று சட்டம் வந்தது. சிலர் எதிர்த்ததால் இதை இரண்டு ஆண்டுகளுக்கு தள்ளி வைத்தனர்.

1841 - கோவில் போன்ற சமய நிறுவனத் தொடர்பை கம்பெனி விலக்கிக் கொண்டது. கோவில்கள் மீண்டும் தர்மகர்த்தா முறைக்குப் போனது.

1856 - விதவை மறுமணச் சட்டம் இயற்றப்பட்டது. விதவைகள் திருமணம் செய்து கொண்டாலும் அவர்களுக்கு பரம்பரைச் சொத்தில் உரிமை உண்டு என்றது இச்சட்டம்.

1858 - பிரிட்டிஷ் மகாராணியின் அறிக்கையில், இந்தியாவின் ஊழியர்கள் ஜாதி, இனப் பாகுபாடின்றி நடத்தப்படுவார்கள் என்றும் பாரபட்சம் காட்டப்படாது என்றும் அறிவித்தார். எந்த சட்டம் இயற்றினாலும் இந்தியாவின் பாரம்பரிய உரிமைகள், பழக்கவழக் கங்கள், வழக்காறுகளுக்கு உரிய மரியாதை தருவோம் என்றும் சொல்லப்பட்டது. 

1861 - அடிமைகளை வைத்திருப்பது தண்டிக்கப்படும் சட்டம் ஆனது. 

1891 - திருமண வயது மசோதா அறிமுகம். சிறுமிகளை திருமணம் செய்வது தடை செய்யப்பட்டது.

1892 - ஆதிதிராவிடர் நிலம் மற்றும் சொத்து வாங்குவதை தடை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது. 

1909 - இந்திய கவுன்சில் சட்டப்படி முஸ்லீம்களுக்கு வகுப்புவாரி பிரதி நிதித்துவ முறைப்படி தனிப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. இனம், வகுப்பு அடிப் படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டன. சென்னை சட்ட மன்றத்தில் அனைத்து தரப்பினரும் நுழைந்தார்கள்.

இவை அனைத்தும் என்ன சொல்கிறது? பாரம் பரியம் என்ற பெயரால் பெண்களும், ஏழைகளும், எளிய மக்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் எப்படி ஒடுக்கப்பட்டுக் கிடந்தார்கள் என்பதையும், அதில் இருந்து சட்டபூர்வமான விடுதலைக்கு வழி அமைக் கப்பட்டது எப்படி என்பதையும் அறியலாம். இவர்கள் சொல்லிக் கொள்ளும் 'கலாச்சாரப் பெருமை கள்' எத்தகைய சிறுமைத்தனங்களை புனிதப்படுத்தி வைத் திருந்தன என்பதை இதன் மூலமாக அறியலாம். 

'குறுகிய கண்னோட்டத்தில் இருந்து வரலாற்றை அணுகக் கூடாது' என்று பிரதமர் சொல்வது உண்மை. முதலில் அவரே அதனைக் கடைப்பிடிக்க வேண்டும்!

நன்றி: ‘முரசொலி', 2.1.2023

தலையங்கம்


Posted by parthasarathy r at 01:35 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: சட்டம், பிரிட்டிஷ் ஆட்சி, முரசொலி

Wednesday, 1 March 2023

திராவிடம் என்பது வெள்ளைக்காரர்களால் உருவாக்கப்பட்டதா?

        December 31, 2022 • Viduthalai

வரலாற்றுப் புரட்டர்கள் யார்? வானதி சீனிவாசனுக்குப் பதில்!

 வெள்ளைக்காரனா காரணம்

திராவிடம் என்பது ஏதோ வெள்ளைக்காரர்களால் உருவாக்கப்பட்டது என்ற பொய்யைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆதாரத்துடன் பல முறை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இந்தப் பொய்யை அம்பலப்படுத்தி யிருக்கிறார். 

மநுதர்மம் என்ன வெள்ளைக்காரன் எழுதியதா?

விராத்திய க்ஷத்திரியனுக்கு அவ்வித க்ஷத்திரிய ஸ்த்ரீயினிடத்தில் சல்லன் பிறக்கிறான். அவனுக்கு மல்லன், நிச்சுவி, நடன், கரணன், கஸன், திரவிடன் என அந்தந்த தேசத்தில் வெவ்வேறு பெயருண்டு. (அத்தியாயம் 10; ஸ்லோகம் 22)

பிராமணனிடத்தில் வணங்காமையாலும், உபநயந முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொல்லும் க்ஷத் திரிய ஜாதிகள் இவ்வுலகத்தில் வரவர சூத்திரத் தன்மையைய டைந்தார்கள். (அத்தியாயம் 10; ஸ்லோகம் 43)

பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவநம், சகம், பாரதம், சீகம், கிராதம்,தரதம், கசம் இந்தத் தேசங்களையாண்டவர்களனைவரும் மேற் சொன்னபடி சூத்திரர்களாய் விட்டார்கள். (அத் தியாயம் 10; ஸ்லோகம் 44)

திராவிடர்

திராவிடன் என்றால் யார் - திராவிடம் என்றால் என்ன என்று எழுதுகிறதே மநுதர்மம். 

‘அய்ம்பத்தாறு தேசங்களுள் ஒன்று’ என்றும், ’தமிழ்’ என்றும் திராவிடத்திற்குப் பொருள் சொல்கிறதே தமிழ்ப் பேரகராதி!

18 தேசங்களுள் ஒன்றாகத் திராவிடம் பற்றிச் சொல்கிறதே 9-ஆம் நூற்றாண்டின் திவாகர நிகண்டு!

8-ஆம் நூற்றாண்டின் குமரில பட்டர் சொல் கிறாரே!

12-ஆம் நூற்றாண்டு விக்கிரம சோழன் காலத்துக் கல்வெட்டில் வரும் ”திரிபுவன சக்கரவர்த்திகள் கோனேரி மேலக் கொண்டான் திராவிட தேசம்” என்ற வரிகளில் வரும் திராவிடம் என்பது என்ன?

தளவாய்புரம் செப்பேட்டில் பாண்டியனைத் திராவிடன் (திரமிட) என்று குறிப்பிடும் சமஸ்கிருதப் பகுதியும், அதற்கு பாண்டிய தமிழாபரணன் என்று குறிப்பிடும் தமிழ்ப் பகுதியும் சொல்கிறதே!

வால்மீகி இராமாயணம், மகாபாரதம், பாகவதம், மச்சபுராணம் என்று இவர்களின் இதிகாச, புராணங்கள் எல்லாம் திராவிடம் என்று குறிப்பிடுகின்றனவே! பவுத்த, சமண இலக்கியங்கள், சீன, பிராக்ருத, பாலி மொழிப் பதிவுகள் எல்லாம் திராவிட என்ற சொல் லைத் தமிழர்கள்- திராவிடர்கள் என்ற நோக்கில் பயன்படுத்தியுள்ளனவே!

வெள்ளைக்காரர்கள் வருகைக்கு முன் தென் னாட்டை, தமிழ்நாட்டைக் குறிக்க திராவிடம் என்ற சொல் திராவிட என்றோ, த்ரமிட என்றோ பயன் படுத்தப்பட்டுள்ளதே, இதற்கெல்லாம் என்ன பதில் சொல்வார் அம்மையார்? (வானதி சீனிவாசன்)

ஆர்.எஸ்.எஸ். அச்செடுத்துக் கொடுத்த அரதப் பழசான அவதூறுக் குப்பைகளின் ஜெராக்ஸ் நகலைக் கையில் வைத்துக் கொண்டு இப்படியே காலம் தள்ளாமல், அறிவார்ந்த செய்திகளை அருள்கூர்ந்து அவர் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அவ்வளவு ஏன்? “நானும் ஒரு பச்சைத் திராவிடன் தான்!” என்று கச்சை கட்டினாரே, அதே பா.ஜ.க.வில் இருக்கும் இன்னொரு சூத்திரத் தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன். ஒரு முறை அவரிடமும் கேட்டுப் பார்க்கலாமே! 

பா.ஜ.க.வில் சூத்திரத் தலைமைகள் உருவாவணதற்கே தமிழ்நாட்டில் உள்ள  திராவிட இன உணர்வு தானே காரணம். ராதா ராஜன்கள் இருந்த இடத்தில் வானதி சீனிவாசன்கள் வந்து சேரவே திராவிட இயக்கம் இல்லா விட்டால் சாத்தியப்பட்டிருக்குமா? ஹெச்.ராஜாக்களும், திருப்பதி நாராயணன்களும், கே.டி.ராகவன்களும் தமிழ் நாட்டின் பாஜக தலைவராக முடியாமல், பெயரளவுக்கேனும் சூத்திரத் தமிழர்களை, தமிழச்சிகளை முன்னிறுத்துகிறதே பா.ஜ.க! 

திராவிட இன உணர்வின் பலன் மற்றவர்களை விட, புகைச்சல் பார்ப்பனர்களுக்குப் பக்கத்திலேயே இருக்கும் பா.ஜ.க.வைச் சேர்ந்த பார்ப்பனரல்லா தாருக்குத் தெரியாதா என்ன?

திராவிடம் என்ற சொல்லுக்கு இத்தனைப் பெரிய வரலாறு உண்டு. ஆனால் இந்து மதம் என்ற பெயர் யார் வைத்தது? 'வெள்ளைக்காரன் வந்து கொடுத்த பெயர் தான் இந்து' என்று காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரர் தனது 'தெய்வத்தின் குரலில்' ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது தெரியுமா அம்மையாருக்கு?

-  ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்

Posted by parthasarathy r at 23:51 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: திராவிடம், பதிலடி

யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டது யாரால்?

          December 31, 2022 • Viduthalai

வரலாற்றுப் புரட்டர்கள் யார்? வானதி சீனிவாசனுக்குப் பதில்!

தந்தை பெரியாருக்கு யுனெஸ்கோ மன்றத்தின் விருது வழங்கப்படவில்லை என்ற வடிகட்டிய பொய்யை வாரிக் கொட்டியிருக்கிறார் அம்மையார். (வானதி சீனிவாசன்)

யுனெஸ்கோ விருது

1970-ஆம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்த கல்வி ஆண்டில்,  சென்னையில் யுனெஸ்கோ மன்றம் (Unesco Mandram) தந்தை பெரியார் உள்ளிட்ட பலரையும் அழைத்துப் பாராட்டி விருதளித்துச் சிறப்பித்ததே! அந்த அமைப்பு யுனெஸ்கோவால் உல கெங்கும் தொடங்கப்பட்ட யுனெஸ்கோ மன்றங்களுள் ஒன்றல்லவா? அந்த விழாவில் பங்கேற்று விருது வழங்கியவர் அன்றைய ஒன்றிய அமைச் சரும், கல்வியாளரும், பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தருமான டாக்டர் திரிகுணசென் அல்லவா? உடன் பங்கேற்ற ஒன்றிய இணை அமைச்சர் பேராசிரியர் ஷேர் சிங் யார்? இவர்கள் திராவிட இயக்கத்தவரா? 

அன்றைய முதலமைச்சர் கலைஞர், சட்டப் பேரவைத் தலைவர் சி.பி.சிற்றரசு ஆகியோரைக் கூட, அவர்கள் அந்தப் பொறுப்பின் அடிப்படையில் நிகழ்ச்சியில் பங் கேற்றிருந்தாலும் திராவிட இயக்கத் தவர் என்று சொல்லி விடலாம். ஆனால், அன்றைய தலைமைச் செயலாளர் சி.ஏ.ராமகிருஷ்ணன் பங்கேற் றிருக்கிறாரே! அரசு விழா அல்லாத ஒன்றிலா ஒன்றிய அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்? யுனெஸ்கோ மன்றம் என்ற அமைப்பே இல்லை என்று சொல்லப் போகிறார்களா? உலகம் முழுவதும் யுனெஸ்கோ கிளப் என்று உருவாக்கி நெறிப்படுத்தி வருகிறதே யுனெஸ்கோ நிறுவனம், அதை மறுக்கப் போகிறார்களா?

பெரியாருக்கு வழங்கப்பட்ட விருது, விருது வழங்கிய ஒளிப்படம், பத்திரிகைச் செய்திகள் அனைத்தும் ஆதாரங்களாக இருக்கின்றன. அவ் வளவு ஏன்? விருது வழங்கப்பட்டபோது உடனிருந்த பலரும் கூட உயிருடன் இருக்கும் இந்த நிலையிலேயே 50 ஆண்டுகளுக்கு முன், இதே சென்னையில் நடந்த வரலாற்றையே மறுத்துப் பொய்யுரைக்கும் இந்தக் கூட்டம், திராவிட இயக்கத்தைப் பார்த்து கட்டுக்கதை என்று கூறுவதா?

விருதுகளால் அளக்கப்பட முடிந்த ஆளுமையா தந்தை பெரியார்?

சிந்திக்கட்டும்

திரும்பத் திரும்ப ஒரு பொய்யைச் சொல்வதன் மூலம் அது உண்மையாகாவிட்டாலும், மக்கள் மனதில் ஒரு சந்தேகத்தையாவது விதைத்துவிடுங்கள் என்று விவாதக் களத்திற்குச் செல்கையில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு வழங்கப்படும் ஆலோசனையை இங்கேயும் பின்பற்றிப் பார்க்கலாம் என்று நினைக் கிறாரா அம்மையார் வானதி?

கொஞ்சமேனும் கூர்மையாகப் பேசுவார் என்று பார்த்தால், அழி வழக்குகளைத் தூக்கி வந்து கொண்டிருக் கிறார் வழக்குரைஞர், பாவம்! 

- ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்

Posted by parthasarathy r at 23:41 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: யுனெஸ்கோ, விருது
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

மூலிகை மன்னன்

மூலிகை மன்னன்
செ.ர.பார்த்தசாரதி

செ.ர.பார்த்தசாரதி

செ.ர.பார்த்தசாரதி
மூலிகை மன்னன்
Powered By Blogger

Search This Blog

Translate

About Me

parthasarathy r
View my complete profile

Contact Form

Name

Email *

Message *

Subscribe To

Posts
Atom
Posts
All Comments
Atom
All Comments

Followers

Blog Archive

  • ▼  2026 (32)
    • ▼  November (5)
      • ஜூனியர் விகடனுக்கு திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ...
      • திருமண மந்திரங்கள் குறித்து இராமானுஜ தாத்தாச்சாரியார்
      • தாலி கட்டாத திராவிடர்கள்
      • பொங்கலை ‘திராவிடர் திருவிழா’ என்று ஏன் அழைக்கிறோம்...
      • புதுமை இலக்கிய தென்றல் 1000ஆவது நிகழ்ச்சியில் பொற...
    • ►  October (5)
    • ►  September (5)
    • ►  August (13)
    • ►  July (3)
    • ►  March (1)
  • ►  2025 (28)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (2)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (3)
    • ►  May (5)
    • ►  March (4)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2024 (53)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  October (13)
    • ►  September (5)
    • ►  August (1)
    • ►  July (8)
    • ►  June (10)
    • ►  May (4)
    • ►  April (1)
    • ►  March (1)
    • ►  February (4)
    • ►  January (3)
  • ►  2023 (51)
    • ►  December (3)
    • ►  November (9)
    • ►  October (5)
    • ►  August (6)
    • ►  May (8)
    • ►  April (5)
    • ►  March (11)
    • ►  February (3)
    • ►  January (1)
  • ►  2022 (42)
    • ►  December (1)
    • ►  November (3)
    • ►  October (3)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  July (8)
    • ►  June (1)
    • ►  May (4)
    • ►  April (1)
    • ►  March (6)
    • ►  February (10)
    • ►  January (3)
  • ►  2021 (81)
    • ►  December (3)
    • ►  November (3)
    • ►  October (13)
    • ►  September (3)
    • ►  August (9)
    • ►  July (11)
    • ►  June (3)
    • ►  May (5)
    • ►  April (1)
    • ►  March (5)
    • ►  February (20)
    • ►  January (5)
  • ►  2020 (80)
    • ►  December (7)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  July (5)
    • ►  June (8)
    • ►  May (24)
    • ►  April (6)
    • ►  March (8)
    • ►  February (12)
    • ►  January (5)
  • ►  2019 (61)
    • ►  December (6)
    • ►  November (5)
    • ►  October (5)
    • ►  September (5)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  May (3)
    • ►  April (7)
    • ►  March (3)
    • ►  February (9)
    • ►  January (8)
  • ►  2018 (34)
    • ►  December (2)
    • ►  November (3)
    • ►  October (3)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  July (6)
    • ►  June (4)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  February (7)
    • ►  January (3)
  • ►  2017 (31)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (5)
    • ►  April (1)
    • ►  March (4)
    • ►  February (6)
    • ►  January (4)
  • ►  2016 (33)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (4)
    • ►  September (10)
    • ►  August (1)
    • ►  June (5)
    • ►  May (4)
  • ►  2015 (7)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  August (1)
    • ►  May (1)

Popular Posts

  • வண்ணார் வரலாறு
    ஒற்றைப் பத்தி -  January 31, 2021  • Viduthalai 'அர்த்தமுள்ள ஹிந்து மதம்' என்று பீற்றுகிறார்கள் - அந்த மதத்தில் மனிதர்களைப் பிறப்பின...
  • சங்ககாலம் பொற்காலமா? - 2
      பிப்ரவரி 01-15 , 2014 உண்மை  இதழ் பெண்ணடிமை – மூடநம்பிக்கை – வர்ணபேதம்-ஆரியத் தாக்கம் – பேராசிரியர் ந.வெற்றியழகன்   சிறப்பிழந்த சேரமன்னர்க...
  • திராவிடர் கழக கொடி அறிமுகப்படுத்தப்பட்ட நாள்.
    இன்று - 22.4.20 ஈரோடு சண்முக வேலாயுதம் அவர்களால் வடிவமைக்கப்பட்ட கொடியை 22.4.1946 திருச்சி டவுன்ஆளில் நடைபெற்ற திராவிடர் கழக ம...
  • கோயில் நுழைவு போராட்டத்தை எதிர்த்த உ வே சாமிநாதையரும் வ.சு அய்யரும்
    1899ஆம் ஆண்டு நடந்த கமுதி ஆலய நுழைவு வழக்கில் நாடார்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று நீதிமன்றத்தில் கூறியவர் உவே சாமிநாத அய்யர் 1922ஆம்...
  • திராவிடர் இயக்கத்தின் அய்ந்து ஆவணங்கள்!
    சென்னை  வேப்பேரி எதிராஜூலு முதலியார் இல்லத்தில் 1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி பார்ப்பனர் அல்லாதாரின் ஓர் அமைப்புக் கூட்டம் நடைபெற்ற...
  • இராமாயணம் ஒரு கட்டுக்கதை!
    சம்பூகன் வதம் ஆரிய திராவிட போராட்டம்! இராமாயணம் ஒரு கட்டுக்கதை என்று தந்தை பெரியார் அவர்கள் பல ஆதாரங்களைக் கொண்டு ஆய்வு செய்து அ...
  • நான் பாரதியாரைச் சந்தித்தால்... 'குமுதம்' ஏடு கேட்டதற்கு இணங்க கி.வீரமணி கட்டுரை
      நான் பாரதியாரைச் சந்தித்தால்... கி.வீரமணி கட்டுரை ( பாரதியார் நூற்றாண்டு விழாவையொட்டி 1981 ஆம் ஆண்டில், 'குமுதம்' ஏடு ஆசிரியர் க...
  • ஒபிசி சான்றிதழ் பெறும் வழிமுறை
    ஓபிசி சான்றிதழ் - சில தகவல்கள் - குடந்தை கருணா மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோ ருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்...
  • இரண்டு வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த பெற்றோருக்கு வழங்கப்படும் குழந்தைகளின் சாதி சான்றிதழ் வழங்கல் - தெளிவுபடுத்தல்கள் -
     கலப்பு திருமணம் செய்து கொண்ட பெற்றோரின் குழந்தைகளுக்கு, இருவரில் ஒருவரின் சாதி அடிப்படையில் சாதிச் சான்றிதழ் அளிக்கலாம் என தமிழகஅரசு மீண்டு...
  • பாம்புக்கு கால் உண்டா? - செ.ர. பார்த்தசாரதி
    ‘பாம்பின் கால் பாம்பு அறியும்’ என்பது பழமொழி. அதாவது கால் என்றால் வழி, என்ற பொருளில் சொல்லப்பட்ட பழமொழியாகும் இது. ‘பாம்பின் உடைய வழி பாம்பு...

Labels

  • 100 நாள்
  • 1000ஆவது நிகழ்ச்சி
  • 2024
  • 27 சதவிகித இடஒதுக்கீடு
  • 5 வயது
  • 8மணி நேரம்
  • standing order
  • அ.குணசீலன்
  • அக்னி
  • அக்னி பகவான்
  • அசைவம்
  • அசோக வனம்
  • அடி
  • அடிப்படை கடமைகள் 51a
  • அண்ணா
  • அண்ணாதுரை
  • அண்ணாமலை
  • அநீதி
  • அமெரிக்கா
  • அமைப்பு சாரா தொழிலாளர்
  • அம்பேத்கர்
  • அயோக்கியர்கள்
  • அயோத்திதாசர்
  • அய்ந்து ஆவணங்கள்
  • அய்யா
  • அரசாணை
  • அரசிதழ்
  • அரசு
  • அரசு ஆணை
  • அரசு திட்டங்கள்
  • அரிச்சுவடி
  • அருங்காட்சியகம்
  • அருவறுப்பு
  • அர்ச்சகர்
  • அலுவலகம்
  • அல்ஹதீஸ்
  • அவசர உதவி
  • அளவு
  • அறக்கட்டளை
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிவியலாளர்
  • அறிவு
  • அறுவை சிகிச்சை
  • அற்றவர்
  • அனுமதிசான்றிதழ்
  • அனைத்து சாதியினரும் அர்ச்சகர்
  • அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்
  • ஆகமம்
  • ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை
  • ஆங்கில அரசு
  • ஆசிட் தியாகராசன்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் கி.வீரமணி
  • ஆசிரியர் மகள்
  • ஆசிவகம்
  • ஆடைச் சீர்திருத்தம்
  • ஆட்சி
  • ஆட்சி அதிகாரம்
  • ஆணை
  • ஆணையம்
  • ஆண்
  • ஆண்டு விழா
  • ஆதார்
  • ஆதி திராவிடர்
  • ஆதிச்சநல்லூர்
  • ஆதிதிராவிடர்
  • ஆதித்த கரிகாலன்
  • ஆயகலைகள்
  • ஆய்வு
  • ஆரிய பார்ப்பான்
  • ஆரியர்
  • ஆர் எஸ் எஸ்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்எஸ்எஸ்
  • ஆர்கனைசர்
  • ஆர்ப்பாட்டம்
  • ஆலய பிரவேசம்
  • ஆவடி
  • ஆவணம்
  • ஆளுநர்
  • ஆஷ் துரை
  • இசுலாம்
  • இசை
  • இசைப்பள்ளி
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு
  • இடிப்பு
  • இடுகாடு
  • இணையதளத்தில் பதிவு
  • இணையேற்பு
  • இதயம்
  • இதர பிற்படுத்தப்பட்டோர்
  • இதழ்
  • இந்தி
  • இந்தியா
  • இந்து
  • இந்து அல்ல
  • இந்து மதம்
  • இம்மானுவேல்
  • இயசு
  • இயேசு
  • இரட்டைமலை சீனிவாசன்
  • இரயில்
  • இரயில்வே
  • இராமதாசு
  • இராமராஜ்ஜியம்
  • இராமன்
  • இராமாயணம்
  • இராமானுஜ தாத்தாச்சாரியார்
  • இராமேஸ்வரம்
  • இராஜகோபாலாச்சாரி
  • இராஜாஜி
  • இலக்கணம்
  • இலக்கியம்
  • இலக்குமணன்
  • இலக்குவன்
  • இலவசம்
  • இளைஞரணி
  • இறுதிப் பேருரை
  • இனக்குழு
  • இனம்
  • இனவெறி
  • ஈரோடு
  • உ.பி
  • உ.வே.சா
  • உங்களுக்குத் தெரியுமா
  • உச்ச நீதிமன்றம்
  • உச்சநீதிமன்றம்
  • உஞ்சவிருத்தி
  • உடைப்பு
  • உணவு விடுதி
  • உண்மை இதழ்
  • உதவி
  • உத்தரவு
  • உத்திரமேரூர் கல்வெட்டு
  • உயர் நீதிமன்றம்
  • உயர்நிலை
  • உரிமை
  • உருக்கு இரும்பு
  • உருண்டை
  • உவேசா
  • உழைப்பு
  • உறுதிமொழி
  • உறுப்பினர்
  • ஊதியம்
  • ஊர்
  • ஊழல்
  • எதிர்ப்பு
  • எபிகூரசு
  • எபிகூரஸ்
  • எம்ஜிஆர் நகர்
  • எருக்கஞ்சேரி
  • எழிலன்
  • எழுத்து
  • எனது
  • எனது கட்டுரை
  • ஒ.பி.சி.
  • ஒப்புதல்
  • ஒரே தேர்தல்
  • ஒரே நாடு
  • ஒலிப்பு
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்றியம்
  • ஓசி சோறு
  • ஓபிசி சான்றிதழ்
  • ஓய்வூதியம்
  • கச்சத்தீவு
  • கடமை
  • கடவுள்
  • கட்டுக்கதை
  • கட்டுரை
  • கணக்கீடு
  • கணக்கு
  • கணக்கெடுப்பு
  • கணபதி
  • கண்டு பிடிப்பு
  • கண்ணதாசன்
  • கத்தோலிக் சர்ச்
  • கந்தன்
  • கம்பராமாயணம்
  • கம்யூனிசம்
  • கருத்துரை
  • கருப்பு
  • கருமை
  • கரோனா
  • கர்ணம்
  • கலி.பூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைஞர் உலகம்
  • கல்பாத்தி
  • கல்லூரி
  • கல்வி
  • கல்வியில் இட ஒதுக்கீடு
  • கவிஞர்
  • கவிஞர் கலிபூங்குன்றன்
  • கழகம்
  • கழிப்பறை
  • கழுவேற்றம்
  • கற்பழிப்பு
  • காட்டுமிராண்டி மொழி
  • காந்தி
  • காமராஜர்
  • காமலீலை
  • காரணம்
  • காரல் மார்க்ஸ்
  • காராம் பசு
  • காலக் கணக்கு
  • காவிரிச் செல்வன்
  • காஷ்மீர்
  • கி. வீரமணி
  • கி.வீரமணி
  • கிராம நிர்வாகம்
  • கிரிகோரியன்
  • கிருத்தவம்
  • கிருத்துவம்
  • கிளைக் கழகம்
  • கீரி
  • குங்குமம்
  • குடிஅரசு
  • குடும்ப அட்டை
  • குணம்
  • குமரேச சதகம்
  • குமாரசம்பவம்
  • குமுதம்
  • குரான்
  • குர்ஆன்
  • குலக்கல்வி
  • குழந்தை
  • குறைந்தபட்ச ஊதியம்
  • கூட்டணி
  • கூட்டாட்சி
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளா
  • கேள்வி பதில்
  • கேள்வி-பதில்
  • கைது
  • கைவல்யம்
  • கொடி
  • கொடுங்கையூர்
  • கொடுமை
  • கொலை
  • கொலை முயற்சி
  • கோடம்பாக்கம்
  • கோடு
  • கோயில்
  • கோயில் அகற்றல்
  • கோயில் நுழைவு
  • கோல்வால்கர்
  • சங்ககாலம்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சார்
  • சட்டமன்ற உறுப்பினர்கள்
  • சட்டம்
  • சண்டை
  • சத்தியவாணி முத்து
  • சத்திரியர்
  • சந்தா
  • சந்திப்பு
  • சமணம்
  • சமணர்
  • சமஸ்கிருதம்
  • சமூக நீதி
  • சமூக மாற்றம்
  • சமூகநீதி நாள்
  • சமையல்
  • சம்பிரதாயம்
  • சம்பூகன்
  • சனாதனம்
  • சாகு மகராசர்
  • சாதனை
  • சாதி
  • சாதி ஒழிப்பு
  • சாதி கொடுமை
  • சாதி சான்றிதழ்
  • சாதிவெறி
  • சாமிநாதன்
  • சாய்பாபா
  • சான்றிதழ்
  • சி.பி.எஸ்.ஈ
  • சிகாமணி
  • சிக்கனம்
  • சிங்காரவேலர்
  • சித்த மருத்துவம்
  • சிந்தனை
  • சிந்தனை முத்து
  • சிபிஎஸ்சி
  • சிவகளை
  • சிவம்
  • சிறுகதை
  • சீடர்
  • சீதை
  • சீமான்
  • சீர்காழி கோவிந்தராசன்
  • சீன கம்யூனிஸ்ட்
  • சீனிவாச அய்யங்கார்
  • சுதந்திரப் போராட்டம்
  • சுந்தரம்
  • சுபவீ
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்கம்
  • சுயமரியாதை திருமண சட்டம்
  • சுயமரியாதைத் திருமணம்
  • சூத்திரர்
  • சூத்திரர்கள்
  • சூத்திரன்
  • சூத்திரன் நீக்கம்
  • சூரிய மறைப்பு
  • செ.
  • செ.ர.பாரத்தசாரதி
  • செ.ர.பார்த்தசாரதி
  • செங்கை
  • செஞ்சட்டைப் பஞ்சாட்சரம்
  • செம்பரம்பாக்கம்
  • செலவு
  • செல்வேந்திரன்
  • சென்னை
  • சேது கால்வாய்
  • சைக்கிள் பேரணி
  • சைதாப்பேட்டை
  • சைதை கூட்டம்
  • சைவம்
  • சொக்கலிங்கம்
  • சொத்து
  • ஞாயிறு மலர்
  • ஞாயிறு மலர் கட்டுரை
  • டி.என்.பி.எஸ்.சி.
  • தகைசால் தமிழர்
  • தண்ணீர் தொட்டி
  • தந்தை பெரியார்
  • தமிழர் தலைவர்
  • தமிழர்கள்
  • தமிழன்
  • தமிழினம்
  • தமிழ்
  • தமிழ் கல்வெட்டு
  • தமிழ் தேசியம்
  • தமிழ் நாடு
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் பைபிள்
  • தமிழ் மொழி
  • தமிழ்த்தாய் வாழ்த்து
  • தமிழ்நாடு
  • தலாக்
  • தலித் முரசு இதழ்
  • தலைமைப் பதவி
  • தலையங்கம்
  • தலைவர்
  • தலைவெட்டி முனியப்பன்
  • தன்னிலை விளக்கம்
  • தாலி
  • தாவரம்
  • தாழ்த்தப்பட்டோர்
  • திட்டம்
  • திணிப்பு
  • திப்பு
  • திமிர்
  • தியாகராயர்
  • திராவிட தேசியம்
  • திராவிட நாடு
  • திராவிட வீராங்கன
  • திராவிடம்
  • திராவிடர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருவிழா
  • திராவிடர் மொழி
  • திராவிடர்கள்
  • திருடன்
  • திருநீறு
  • திருமண மந்திரங்கள்
  • திருமண வரலாறு
  • திருமணம்
  • திருமாவளவன்
  • திருமாவேலன்
  • திருமூலர்
  • திலகர்
  • திறப்பு
  • தினமலர்
  • தீ
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்ளக்
  • துறவி
  • தூக்கு
  • தூய்மைப் பணியாளர்கள்
  • தென் சென்னை
  • தென் சென்னை
  • தேசபக்தி
  • தேர்ச்சிக்கு சமம்
  • தேர்வு
  • தை
  • தொண்டு
  • தொலைபேசி
  • தொழிலாளர்
  • தொழில்
  • தொழிற்சாலை
  • தோள்சீலை
  • தோள்சீலைப் போராட்டம்
  • நடக்க உரிமை
  • நம்பூதிரி
  • நலவாரியம்
  • நன்கொடை
  • நன்மை
  • நன்னன்
  • நாடார்
  • நாத்திகர் மாநாடு
  • நாள்காட்டி
  • நான்
  • நிதி
  • நியமனம்
  • நியூயார்க் டைம்ஸ்
  • நிலம் அளனவ
  • நிலவு
  • நிலையானைகள்
  • நினைவிடம்
  • நீசபாசை
  • நீட்
  • நீதி
  • நீதிக் கட்சி
  • நீதிக்கட்சி
  • நீதிக்கட்சி அரசாணை
  • நுங்கம்பாக்கம்
  • நூல்
  • நூல் திறனாய்வு
  • நூல் விமர்சனம்
  • நூற்றாண்டு
  • நேரம்
  • நேர்காணல்
  • நோய்
  • பகத்சிங்
  • பசு
  • பசுவதை
  • பச்சையப்பன் கல்லூரி
  • பஞ்சமா பாதகம்
  • பஞ்சாப்
  • படக்கதை
  • படத்திறப்பு
  • படம்
  • படிம வளர்ச்சி
  • பட்டா
  • பட்டியல்
  • பணம்
  • பணிநிறைவு
  • பதவிகள்
  • பதிலடி
  • பதிலடி பக்கம்
  • பதிவு திருமணம்
  • பயிற்சி
  • பரமசிவம்
  • பல்லி
  • பழமொழி
  • பழனி
  • பள்ளி
  • பள்ளி சான்றிதழ்
  • பள்ளிக்கல்வி
  • பறைச்சி
  • பறையர்
  • பறையன்
  • பனகல் அரசர்
  • பனிக்கட்டி
  • பன்முகம்
  • பா.சிவக்குமார்
  • பா.ஜ.க.
  • பாகிஸ்தான்
  • பாடல்
  • பாதிரியார்
  • பாம்பு
  • பாரதி
  • பாரதியார்
  • பார்க்க வேண்டிய இடம்
  • பார்த்தசாரதி
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் ஆதிக்கம்
  • பார்ப்பனர் ஊழல்
  • பார்ப்பனர்கள் ஆதிக்கம்
  • பார்ப்பான்
  • பாலம்
  • பாலியல் கொடுமை
  • பாலியல் துன்புறுத்தல்
  • பாலியல் வன்முறை
  • பாவம்
  • பாவாணர்
  • பான்காடு
  • பிச்சை
  • பிராமணர்
  • பிரிட்டிஷ் ஆட்சி
  • பிரியன்
  • பிள்ளையார்
  • பிறந்தநாள்
  • பினராயி விஜயன்
  • பிஜேபி
  • புகழ்
  • புகார்
  • புதியகல்வி
  • புதுப்பிப்பு
  • புதுமை இலக்கிய தென்றல்
  • புதுவை
  • புத்தர்
  • புத்தர் சிலை
  • புரட்டு
  • புவி
  • புறம்போக்கு
  • பெண்
  • பெண்கள்
  • பெயர்
  • பெயர் சூட்டல்
  • பெயர் நீக்கம்
  • பெரியாரியல்
  • பெரியார்
  • பெரியார் உலகம்
  • பெரியார் மண்
  • பெரியார் மய்யம்
  • பெரியார் மேளா
  • பெரியார் மையம்
  • பெரியார் விருது
  • பேட்டி
  • பேதம்
  • பேய் விரட்டு
  • பேரணி
  • பேரவை
  • பேருந்தில் இலவசம்
  • பைபிள்
  • பொங்கல்
  • பொதுக்கூட்டம்
  • பொதுவுடமை
  • பொருளாதாரம்
  • பொறுப்பாளர்களுக்கு பாராட்டு
  • போப்
  • போராட்டம்
  • பௌத்தம்
  • பௌத்தர்
  • ம.பொ.சி.
  • மணியம்
  • மணியம்மை
  • மணியம்மையார்
  • மண்
  • மதசார்பின்மை
  • மதம்
  • மதிப்பு
  • மதிப்பெண்
  • மதிப்பெண் ஊழல்
  • மத்மாநாடு
  • மருத்துவம்
  • மருத்துவர்
  • மலம்
  • மலையாளம்
  • மறைவு
  • மனுதர்மம்
  • மன்னர்கள்
  • மஹத் போராட்டம்
  • மாட்டுப்பால்
  • மாணவர் சேர்க்கை
  • மாநாடு
  • மாநில பிரிவு
  • மாலன்
  • மாற்றுத்திறனாளி
  • மாஸ்கோ
  • மின் அஞ்சல்
  • மின் இணைப்பு
  • மின் நூல்
  • மின்சாரம்
  • மின்னஞ்சல்
  • மின்னூல்
  • மீட்பு
  • முகவரி
  • முதலைக் கண்ணீர்
  • முத்துராமலிங்கம்
  • முரசொலி
  • முருகன்
  • முனைவர் பட்டம்
  • முன்னேற்றம்
  • மூக்நாயக்
  • மூடநம்பிக்கை
  • மூலிகை மன்னன்
  • மெரினா
  • மே நாள்
  • மேளம்
  • மைல்கல்
  • மொழி
  • மோசடி
  • மோடி
  • யுனெஸ்கோ
  • ரயில்வே
  • ரவிக்கை
  • ராமர் பாலம்
  • ராமானுஜர்
  • ராஜாஜி
  • ரிஷி
  • லக்னோ
  • லண்டன்
  • லால் பகதூர் சாஸ்திரி
  • வகுப்புரிமை
  • வசை
  • வணிகக் கட்டடங்கள்
  • வண்ணார்
  • வயது
  • வரலாறு
  • வருணாசிரமம்
  • வருமான சான்றிதழ்
  • வர்ணம்
  • வழக்கு
  • வளர்ச்சி
  • வாஞ்சிநாதன்
  • வாரிசு
  • வாரிய உறுப்பினர்
  • வாலிபர் மாநாடு
  • வாழ்க்கை வரலாறு
  • வி பி சி ங்
  • விடுதலை
  • விடுதலை அலுவலகம்
  • விடுதலை புலிகள்
  • விண்ணேற்றம்
  • விபூதி வீரமுத்து
  • விமர்சனம்
  • வியப்பு
  • விருது
  • விருப்ப மொழி
  • வில்லிவாக்கம்
  • விவேகாநந்தர்
  • விவேகானந்தர்
  • விளக்கம்
  • விஜயவாடா
  • வெப்பம்
  • வெற்றிச்செல்வி
  • வேண்டாம்
  • வேதம்
  • வைக்கம்
  • வைத்தியநாதன்
  • ஜாக்கெட்
  • ஜாதி
  • ஜாதி ஒழிப்பு
  • ஜாதிப் பிரிவு
  • ஜூனியர் விகடன்
  • ஜெயலலிதா
  • ஜெயலெட்சுமி
  • ஸ்ரீ தேசிகப் பிரபந்தம்
  • ொத்துரிமை
Simple theme. Powered by Blogger.