Tuesday, 3 July 2018

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு


சென்னை, ஜூலை 3- சட்டப் பேரவையில் தொழி லாளர், வேலை வாய்ப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்த அமைச்சர் நிலோபர் கபில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளர்கள் பணியின் போது விபத்து ஏற்பட்டு பணியிடத்தில் மரணம் அடையும்போது வழங்கப்பட்டு வரும் ரூ.5 லட்சம் உதவித் தொகை, பணியின் போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைபவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும்.கட்டுமானத் தொழி லாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து 60 வயது பூர்த்தியடைந்த தொழிலாளர்களுக்கு மாதந் தோறும் ரூ.1000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகி றது.

இந்த வாரியத்தில் பதிவு செய்துள்ள60 வயது பூர்த்தியடையாத தொழிலாளிநோய் மற்றும் உடல் பலமின்மை காரணமாக முடக்கம் ஏற்பட்டால் அவரும் ஓய்வூதியம் பெற தகுதியானவர் ஆவார்.மாதாந்திர ஓய்வூதியம் பெறும் தொழிலாளி இறந்து விட்டால் அவரது கணவர், மனைவிக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் ரூ. 400 லிருந்து 500 ஆக உயர்த்தப் படுகிறது.தொழிலாளர் நலவாரியத்தில் தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர் அவரது பணிக் காலத்தில் இறக்க நேர்ந்தால் அவரது ஈமச்சடங்கு செலவிற்காக வழங்கப்பட்டு வரும் ரூ. 2000 லிருந்து ரூ. 5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

 

வேலைவாய்ப்பு துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம் சென்னையில் இயங்கி வருகிறது. மேலும் 13 மாவட்டங்களில் அமைந்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் சிறப்பு வேலைவாய்ப்பு பிரிவுகள் இயங்கி வருகின்றன.இந்த ஆண்டு முதல் நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், சிவகங்கை, நாகை, புதுக்கோட்டை, விழுப்புரம், திருண்ணாமலை, திண்டுக் கல், இராமநாதபுரம், தேனி, விருதுநகர், திருவள்ளூர் ஆகிய 18 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சேவையை மேம் படுத்தும் வகையில் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

- விடுதலை நாளேடு, 3.7.18

Monday, 2 July 2018

ஒரு எழுத்தை நான்கு வகையாக ஒலிக்கலாம்

ஒரு எழுத்தை நான்கு வகையாக ஒலிக்கலாம்.அந்தந்த நாட்டின் வெப்பநிலைக்கேற்ப வாயையும்,நாக்கையும் பயன்படுத்தும் நிலையில் ஒலிப்பு மாறும். அதோடு பக்க எழுத்துக்கு ஏற்பவும் ஒலிப்பு மாறும்.[மஞ்ச(ஜ)ள்,அஞ்சா(ஜா) நெஞ்ச(ஜ)ன்,அஞ்ச(ஜ)ல்] ஒவ்வொரு ஒலிப்புக்கும் எழுத்து கொடுத்துக்கொண்டே சென்றால் கற்றல் எளிதாக இருக்காது. ஜ,ஸ,ஷ,ஹ,க்ஷ போன்றவை சமஸ்கிருத எழுத்துகள் அல்ல. சமஸ்கிருதத்திற்கு எழுத்தே கிடையாது. மேற் கண்டவை தமிழில் சமஸ்கிருத சொற்களை பயன்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துகள்(கிரந்த) அவை.
- முக நூல் 3.7.16 (நான்)

Friday, 22 June 2018

சத்திரியர் யார் ?

பார்ப்பனர்களின் மூன்று பிரிவினர் தான் பிராமணர், சத்திரியர், வைசியர் என்போர்.இவர்கள் ஆரிய வர்த்தத்தில் உள்ளோர். ஆரிய  வர்த்தத்திற்கு தெற்கே உள்ளவர்கள்(தென் இந்தியா) சூத்திர்கள் என சாஸ்திரங்(புராணங்கள்&மனுஸ்மிருதி)களும் நீதி மன்ற தீர்ப்பும் கூறுகிறது. சத்திரியர் என்றால் தமிழில் அரசர் என்று பொருள். அதனால் சாஸ்திரத்தால் சூத்திரர் எனப்பட்ட அரச வழியினர் என சொல்லிக்கொள்வோர் நாங்களும் சத்திரியர் என்று சொல்லிக்கொள்கின்றனர். அவர்களையும் சூத்திரர் பட்டியலில் சேர்த்து தான், அவர்களுக்கும் திருமணத்தின் போது தான் பூனூல் மாட்டுகிறான் பார்ப்பான்.
- 14.12.17 முகமது நசீம் - ஆறாம் அறிவு முக நூலில் எனது கருத்து.

Wednesday, 20 June 2018

முன்னோக்கி இருக்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே...

50 வருடங்களாக இந்தி தெரியாமல், முன்னோக்கி இருக்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே...

#உயர்_கல்வி :
பள்ளி கல்வியை முடித்து, உயர் கல்வி சேர்பவர்கள், தமிழகத்தில்தான் அகில இந்திய சராசரியை விட இருமடங்கு அதிகம்.
#தமிழகம்.       – 38.2%..
#குஜராத்         – 17.6% ;
#மபி                 – 17.4% ;
#உபி                – 16.8% ;
#ராஜஸ்தான் – 18.0% ;
இந்திய சராசரி : 20.4%

#கல்வி_நிலையங்களின்_தரம் :-
2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் HRD துறை வெளியிட்டுள்ளது… அந்த பட்டியலின் படி,

முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழகத்தில்தான்.

பிஜேபி பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில் இருபத்தோ மூன்றாமிடத்தில்...

இதேபோல இந்தி பெல்ட் மாநிலங்களான மபி, உபி, பிகார், ராஜஸ்தான் போன்றவற்றிலிருந்து ஒன்று கூட இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை……

#முதல்_100_பொறியியல்_கல்லூரிகளில்
1.தமிழ் நாடு – 22 ;
2.குஜராத் – 5 ;
3.மபி – 3 ;
4.உபி – 6 ;
5.பிகார் – 1 ;
6.ராஜஸ்தான் – 3

#100_சிறந்த_பல்கலைகழகங்களில் 1.தமிழ் நாடு – 24 ;
2.குஜராத் – 2 ;
3.மபி – 0 ;
4.உபி – 7 ;
5.பிகார் – 0 ;
6.ராஜஸ்தான் – 4

#பொருளாதார_மொத்த_உற்பத்தி_(GDP)
இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள் அளிக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழகமே.

தமிழ் நாடு – ₹18.80 lakh crore (2nd Place)
குஜராத் – ₹10.94 lakh crore (5th) ;
மபி – ₹7.35 lakh crore (10th) ;
உபி – ₹12.37 lakh crore (4th) ;
ராஜஸ்தான் – ₹7.67 lakh crore (7th) ;
சத்தீஸ்கர் – ₹2.77 lakh crore (17th)

#Infant_Mortality_Rate
தமிழ் நாடு – 21 ;
குஜராத் – 36 ;
மபி – 54 ;
உபி – 50 ;
ராஜஸ்தான் – 47 ;
சத்தீஸ்கர் – 46 ;
இந்திய சராசரி : 40

#Maternal_Mortality_Rate
தமிழ் நாடு – 79 ;
குஜராத் – 112 ;
மபி – 221 ;
உபி – 285 ;
ராஜஸ்தான் – 244 ;
சத்தீஸ்கர் – 221 ;
இந்திய சராசரி : 167

#தடுப்பூசி_அளிக்கப்படும்_குழந்தைகள்
தமிழ் நாடு – 86.7% ;
குஜராத் – 55.2% ;
மபி – 48.9% ;
உபி – 29.9% ;
ராஜஸ்தான் – 31.9% ;
சத்தீஸ்கர் – 54% ;
இந்திய சராசரி : 51.2%

#கல்வி_விகிதாசாரம்
தமிழ் நாடு – 80.33% ;
குஜராத் – 79% ;
மபி – 70% ;
உபி – 69% ;
ராஜஸ்தான் – 67% ;
சத்தீஸ்கர் – 71% ;
இந்திய சராசரி : 74%

#ஆண்_பெண்_விகிதாசாரம்
தமிழ் நாடு – 943 ;
குஜராத் – 890 ;
மபி – 918 ;
உபி – 902 ;
ராஜஸ்தான் – 888 ;
இந்திய சராசரி : 919

#தனிநபர்_வருமானம்
தமிழ் நாடு – 1,28,366 ;
குஜராத் – 1,06,831;
மபி – 59,770 ;
உபி – 40,373 ;
ராஜஸ்தான் – 65,974 ;
சத்தீஸ்கர் – 64,442 ;
இந்திய சராசரி : 93,293

#மனிதவள_குறியீடு
தமிழ் நாடு – 0.6663 ;
குஜராத் – 0.6164 ;
மபி – 0.5567 ;
உபி – 0.5415 ;
ராஜஸ்தான் – 0.5768 ;
சத்தீஸ்கர் – 0.358 ;
இந்திய சராசரி : 0.6087

#ஏழ்மை_சதவீதம்
தமிழ் நாடு – 11.28% ;
குஜராத் – 16.63% ;
மபி – 31.65% ;
உபி – 29.43% ;
ராஜஸ்தான் – 14.71% ;
சத்தீஸ்கர் – 39.93% ;
இந்திய சராசரி : 21.92%

#ஊட்டசத்து_குறைபாடு_குழந்தைகள்
தமிழ் நாடு – 18% ;
குஜராத் – 33.5% ;
மபி – 40% ;
உபி – 45% ;
ராஜஸ்தான் – 32% ;
சத்தீஸ்கர் – 35% ;
இந்திய சராசரி : 28%

#மருத்துவர்களின்_எண்ணிக்கை
தமிழ் நாடு – 149
குஜராத் – 87 ;
மபி – 41 ;
உபி – 31;
ராஜஸ்தான் – 48 ;
சத்தீஸ்கர் – 23 ;
இந்திய சராசரி : 36 (ஒரு லட்சம் பேருக்கு)

*இப்படி எந்த ஒரு அளவீடை எடுத்துக்கொண்டாலும், தமிழ்நாடு, பிற மாநிலங்களைவிட, குறிப்பாக, பிஜேபி ஆளும் மாநிலங்களை விட, எல்லா விதங்களிலும் பல மடங்கு உயர்ந்த நிலையில் உள்ளது….

மேலும்,
1. தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரின் வாழ்வியல் வசதிகள், வட மாநில முற்பட்ட வகுப்பினரைவிட அதிகமாக உள்ளது.

2. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நிலையைவிட, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலை உயர்வாக உள்ளது.

3. இந்தியாவிலே தமிழகத்தில்தான் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலைமை மிக மேம்பட்டு உள்ளது.

4. தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக அளவில் தலித் தொழில் முனைவோர் அதிகம்..

5. தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக அளவில் பெண் தொழில் முனைவோர் அதிகம்..

உண்மை நிலவரம் இப்படியிருக்க, #திராவிட_ஆட்சியில் தமிழகம் முன்னேறவில்லை, வளரவில்லை என பொய்களை, வாய் கூசாமல் சொல்லிக்கொண்டு இருகிறார்கள்… தமிழக மக்களை ஏமாற்ற முயல்கிறார்கள்….

நன்றி:தீக்கதிர்

Monday, 11 June 2018

பெரியாரும் தென்னாட்டு சிந்தனையும்

தந்தை பெரியார் தத்துவ நூல்களை மட்டும் எழுதியவரல்ல! தெருத்தெருவாக பிரச்சாரம் செய்து மண்னை பக்குவப்படுத்தினார். அதனால் தான் வடநாட்டு சிந்தனையும் தென் நாட்டு சிந்தனையும் வேறு வேறாக இருக்கிறது. நாம் சிந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கியதில் பெரும் பங்கு தந்தை பெரியாருடையதே!
-8.6.17(நான்)

Monday, 4 June 2018

தத்துவ பேராசிரியர் பெரியார்!

என்ன தான் பல்கலைக்கழக பாடமாக இருந்தாலும், அதை விளக்கிச் சொல்ல பேராசிரியர் வேண்டும். அந்த பேராசிரியர் நடைமுறை உதாரணங்களை எடுத்துச்சொல்லி விளக்கினால் தான் மாணவர்கள் விளங்கிக்கொள்ள முடியும். தந்தை பெரியார் தத்துவ பேராசிரியர், அவர் பாமரமக்களிடையே விளக்கி பேசினார், பாமரர்களுக்கு விளங்கும் வகையில் பேசினார். தந்தை பெரியாரின் ''இலங்கைப் பேருரை, தத்துவ விளக்கம், மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதி வாதம், இனி வரும் உலகம்'' போன்ற நூல்களை படித்துப் பாருங்கள் தந்தை பெரியாரின் வாதம் கற்பனா வாதமா! தத்துவ வாதமா! என்பது புரிந்துவிடும்.

Monday, 7 May 2018

உ.பி. சாமியார் அரசின் சாதனை 150 பள்ளிகளில் ஒருவர்கூட தேர்ச்சி பெறாத அவலம்



லக்னோ மே 3 உத்தரப்பிரதேசத்தில் ஆதித்யநாத் தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி  நடை பெற்று வருகிறது. அங்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் 10 ஆவது மற்றும் 12 ஆவது வகுப்புகளுக்கான அரசுப் பள்ளி இறுதித் தேர்வுகள் நடை பெற்றன.

இந்தத்தேர்வுகளின்முடி வுகள் கடந்த 29.4.2018- அன்று வெளியானது. அதில், மாநிலத் தில் உள்ள 150 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சிப் பெறாத அவலம் நிகழ்ந்துள்ளது. அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது. இந்த 150 பள்ளிகளில், 98 பள்ளிகளில் எந்த மாணவரும் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற வில்லை என்றும், மேலும்  52 பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் பூஜ்ஜியமாக இருந்தது என்றும் அம்மாநில கல்வித்துறை தெரி வித்துள்ளது. உ.பி.யின் காஷிப்பூர் மாவட் டத்தில்தான் அதிக அளவிலான பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றும், ஆக்ரா மாவட்டத்தில் 9 பள்ளி களிலும் பூஜ்ய சதவிகித அள விலான தேர்ச்சி என்றும் கூறப் பட்டுள்ளது. மேலும்காஷிப்பூர்,மிர்சா பூர்,அலிகார்ஆகியமாவட் டங்களில் தேர்ச்சி சதவிகிதம்  மோசமான நிலையில் இருக் கிறது. இதில் ஆச்சரியப்படத்தக்க தகவல் என்னவென்றால் அரசு பள்ளிகள் மட்டுமில்லாமல், தனியார் பள்ளிகளும் இதில் அடக்கம். மேலும் 237 பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 20 சதவிகிதம் என்றும்கூறப்படுகிறது.இது குறித்துவிசாரணைநடத்தப் படும் என்று பள்ளிக் கல்வித் துறை ஆய்வாளர் வினோத் குமார் ராய் தெரிவித்துள்ளார். உ.பி. அரசு கல்வித்துறையில்  எவ்வளவு அழகாக செயல்பட்டு வருகிறது என்பதை  இந்த தேர்வு முடிவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.  மாணவர்கள் இந்த அளவு மிகவும் மோசமான முறையில் தேர்ச்சி பெறாமல் போவது இதுவே முதல்முறை ஆகும். இது சாமியார் ஆதித்யநாத் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகு நடக்கும் இரண்டாவது பொதுத்தேர்வாகும். 2016 -- 2017 ஆம் ஆண்டில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்தபோது, நான் ஆட்சி ஏற்று இரண்டு மாதம் ஆகிறது; ஆகவே, அடுத்த பொதுத் தேர்வுகளில் உ.பி. மாணவர்கள் தேர்விற்காக எனது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்'' என்று கூறிய நிலை யில், அவரது ஆட்சியிலே உத்தரப்பிரதேச வரலாற்றிலேயே மிகவும் மோசமான தோல்வியை பள்ளிக்கல்வித்துறை சந்தித் துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.



நீட்' தேர்வு மய்யத்தை தமிழ்நாட்டில் அமைக்க முடியாதா?


தமிழர் தலைவர் ஆசிரியர்  கண்டனம்


தமிழ்நாட்டு மாணவர்கள் 90 ஆயிரம் பேர் தேர்வு எழுத, தமிழ்நாட்டில் மய்யங்கள் அமைக்க முடியாது என்று இன்று உச்சநீதிமன்றம் கூறி, மற்ற வெளிமாநிலங்களுக்குத்தான் தேர்வு எழுதச் செல்லவேண்டும் என்பது சமூகநீதிக்கு விரோத மான எவ்வளவு பெரிய அநீதித் தீர்ப்பு?


இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஒரே நேரத்தில் தமிழ்நாட்டில் 12 லட்சம் பேர் எழுதும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிசன் தேர்வு நடைபெறும் வசதிகள் உள்ள மண்ணில், 90 ஆயிரம் பேர் எழுதும் சி.பி.எஸ்.இ. தேர்வுக்கு மய்யங்களை அமைக்க முடியாதா? பிறகு ஏன் இங்கு சி.பிஎஸ்.இ.? மற்ற மாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழு திட, ஏழை, எளிய மாணவர்கள், பெற்றோர் களுக்கு இயலுமா?


தொடர்ந்து தமிழ்நாட்டுக்குக் கேடு - எல்லா தரப்பிலும் இருந்து இழைக்கப்படுகிறது;  இனி மாணவர்கள், பெற்றோர்கள் அமைதியாக இருக்க முடியுமா?


என்னே கொடுமை!


- விடுதலை நாளேடு, 3.5.18