Saturday, 3 September 2016

கல்விக் கடன் பற்றிய சில விவரங்கள்

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. பெற்றோர்களும் மாணவர்களும் கல்லூரியில் சேர்வதற்கான வேலைகளில் தீவிரமாக இருப்பார்கள். அவர்களுக்கு வங்கியில் கல்விக் கடன் பெறுவதற்கான வழிகாட்டல்களைத் தருகிறார், `சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா' வங்கியின் சீனியர் மேனேஜர் ரவீந்திர குமார்.

1. தகுதி நிர்ணயம்

பத்தாம் வகுப்பு தேர்வானவர்கள் அய்.டி.அய் மற்றும் தொழிற்கல்வி படிப்புகளில் சேர கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வானவர்கள் எந்தப் பிரிவில் இளநிலை கற்கவும் கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

2. இணைக்க வேண்டியவை

¨    சேரவிருக்கும் கல்லூரியின் கல்விக் கட்டண விவரம்
¨    பத்தாம் வகுப்பு / பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்று
¨    பிறப்புச் சான்று
¨    குடும்ப அட்டை
¨    சாதிச்சான்று
¨    கல்லூரியில் சேர்ந்ததற்கான சேர்க்கைச் சான்று
¨    வங்கி பாஸ்புக்
இவற்றின் நகல்களை இணைக்க வேண்டும்.

3. கடன் தொகை

இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப் பட்ட கல்வி நிறுவனங்களில், அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் சேர அதிகபட்சமாக ரூபாய் 10 லட்சம் வரை கல்விக்கடன் தரப் படுகிறது. வெளிநாடுகளில் படிக்கச் செல்பவர்கள், ரூபாய் 20 லட்சம் வரை கடன் தொகை பெற்றுக்கொள்ளலாம்; அவர்கள் போக்கு வரத்துச் செலவுக்கும் கடன் பெறலாம்.

4. முன்பணம்

இந்தியாவில் படிக்கிறவர்கள், ரூபாய் 4 லட்சம் வரை எந்த முன் பணமும் செலுத்தாமல் கல்விக்கடன் பெற இயலும். அதற்கு மேலான தொகைக்கு விண்ணப்பிக்கும்போது, கடன் தொகையில் 5% முன்பணமாக செலுத்த வேண்டும். அதுவே வெளிநாடுகளில் படிக்கச் செல்பவர்கள், ரூபாய் 4 லட்சத்துக்கு மேல் கல்விக்கடனுக்கு விண்ணப்பித்தால் 15.5% வரை முன்பணமாக செலுத்த வேண்டும்.

5. காப்பீடு கட்டாயம்

கல்விக்கடன் பெற, காப்பீடு கட்டாயம். அதற்கான தவணைத் தொகையை வங்கியே மாணவரின் கடன் தொகையில் இருந்து செலுத்தும். ஒருவேளை எதிர்பாராதவிதமாக அந்த மாணவர் இறந்துபோனால், அவர் செலுத்த வேண்டிய கடனை காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து வங்கி பெற்றுக்கொள்ளும்.

6. உத்தரவாதம்

கல்விக்கடன் தொகை ரூபாய் 7.5 லட்சத்துக்கு மேல் எனில், அந்த மாணவருடன் பெற்றோரும் கல்விக்கடன் ஆவணங்களில் உத்தரவாத கையெழுத்திட வேண்டும்.

7. வட்டிச் சலுகை

கல்விக்கடன் பெறும் மாணவர்கள் புரொஃபஷனல் கோர்ஸ் படிக்கும்பட்சத்தில், அவர்களுக்கு மத்திய அரசு வட்டிச் சலுகை அளிக்கிறது. அதற்கு பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூபாய் 4.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. இந்த வட்டிச் சலுகையை படிப்பு முடிந்த ஒரு வருடம் வரை பெற முடியும். இதைப் பெற விரும்பும் மாணவர்கள், பெற்றோர்களின் வருவாய் சான்றிதழை தங்கள் பகுதியில் உள்ள வட்டாட்சியரிடம் பெற்று இணைக்கவும்.

8. வட்டி விகிதம்

வங்கிகளில் தற்போது `மார்ஜினல் காஸ்ட் ஆன் லெண்டிங் அண்ட் ரெட்' முறையில் வட்டி வசூலிக்கப்படுகிறது. அதாவது, தொடக்க நிலை வட்டியானது 11.5% வசூலிக்கப்படுகிறது. வங்கிகளைப் பொறுத்து இந்த வட்டி சதவிகிதம் மாறுபடலாம். எனினும் தனியார் வங்கிகளில் கடன் வாங்குவதை முடிந்தவரை தவிர்க்கவும்.

9. காத்திருப்பு நேரம்

வங்கிகளில் கல்விக்கடன் பெற விண்ணப் பித்து அதற்கான சான்றிதழ்களை இணைத்துக்கொடுத்த 15 நாள்களில் இருந்து ஒரு மாத காலத்துக்குள் அவர்களின் விண்ணப் பம் வங்கிகளால் பரிசீலனை செய்யப்பட்டு கடன் கொடுக்கப்படும்.

10. ஆன்லைன் விண்ணப்பம்

‘வித்யாலட்சுமி’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் கல்விக்கடன் பெற ஷ்ஷ்ஷ்.ஸ்வீபீஹ்ணீறீணீளீsலீனீவீ.நீஷீ.வீஸீ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பம், நீங்கள் கல்விக்கடன் பெற விரும்புவதாக அதில் குறிப்பிட்டிருக்கும் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். வங்கிக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கும்போது, மறக்காமல் ரசீது வாங்கவும்.

11. ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கடன்...

ஒரே குடும்பத்தில் எத்தனை பிள்ளைகள் வேண்டுமானாலும் ஒரே நேரத்தில் கல்விக்கடன் பெற இயலும். மேலும், வட்டிச்சலுகை பெற தகுதி இருப்பின், அந்தக் குடும்பத்து மாணவர்கள் அனைவரும் அதைப் பெற்றுக் கொள்ளலாம்.

12. கல்விக்கடனை திருப்பிச் செலுத்தும் காலம்

கடன் பெறப்பட்ட இரண்டாம் மாதத்தில் இருந்தே செலுத்தத் தொடங்கலாம். அது இயலாதவர்கள், படிப்பை முடித்த 6 மாதத்துக்குள் செலுத்த ஆரம்பித்து, 15 ஆண்டுகளுக்குள் முழுக்கடனையும் முடித்திருக்க வேண்டும். வேலை கிடைக்காதபட்சத்தில், படிப்பை முடித்த ஒரு ஆண்டு காலத்துக்குள் செலுத்த ஆரம்பிக்க வேண்டும்.
கல்விக்கடன்... காலத்தில் கிடைக்கும் உதவி!
உதவி பெறுவோம், உயர்ந்து மிளிர்வோம்.ஸீ
-உண்மை இதழ்,1-15.7.16

Thursday, 1 September 2016

அன்பார்ந்த பெற்றோர்களே!

கொல்கத்தா பள்ளி ஒன்றினால் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஒன்று...



அன்பார்ந்த பெற்றோர்களே!
உங்களுடைய பிள்ளைகளுக்கான தேர்வு விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
உங்கள் பிள்ளை சிறப்பாக தேர்வு எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.
எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற் கொள்ளுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.
தேர்வில் தோற்கும் மாணவர்களுள்..
ஒரு கலைஞன் இருப்பான்
அவனுக்குக் கணிதம் தேவைப்படாது.
அங்கே ஒரு தொழிலதிபர் இருப்பான்
அவனுக்கு வரலாறு / இலக்கியம் முக்கியமில்லை.
ஒரு இசைஞானி இருப்பான்
அவனுக்கு வேதியல் அவசியமிராது.
ஒரு விளையாட்டு வீரனிருப்பான்
அவனது உடல் நலனே முக்கியமன்றி
இயற்பியல் புள்ளி முக்கியமில்லை.
தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தால் சிறந்த பிள்ளை.. எடுக்காவிட்டால்..
தயவு செய்து அவர்களது தன்னம்பிக் கையைப் பறித்து விடாதீர்கள்.
சொல்லுங்கள் அவர்களுக்கு இது வெறும் ஒரு பரீட்சை மட்டுமே.
நீ வாழ்கையில் வெற்றி கொள்ளக் கூடிய - இதை விட பெரிய சவால்கள் நிறைய உள்ளன.
உன் மீதுள்ள என் அன்பு - நீ பரீட் சையில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்துத் தீர்மானிப்பதில்லை.
என்றும் நீ என் பிள்ளை; என் உயிர். இப்படி சொல்லிப் பாருங்கள், தேர்வில் வெல்லாத உங்கள் பிள்ளை ஒரு நாள் உலகை வெல்வான்.
வெறுமனே ஒரு தேர்வு, அதன் மதிப்பெண் உங்கள் பிள்ளையின் கனவை, திறமைகளை அழித்து விடக்கூடாது.
மருத்துவர்களும் பொருளியலாளர் களும் மட்டுமே உலகில் சிறந்தவர்கள், மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் என தயவு செய்து நினைக்காதீர்கள்.
உங்களுக்கும், பிள்ளைகளுக்கும் எமது நல்வாழ்த்துக்கள்.
- இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
-விடுதலை  ஞ.ம.27.8.16

யானைத் தலையுடன் பிறந்த வினாயகனாம்!


வினாயகன், கணபதி, கணநாதன், கணேசன், விக்னேஷ்வரன், கணன், பிள்ளையார் என்று பல பெயரால் வணங்கப்படும் வினாயகனின் பிறப்புக் கதைகள் ஒரே வகையாக இல்லாமல் ஒவ்வொரு புராணத்திலும் வெவ்வேறு வகையாக உள்ளது.

காணபத்யம் என்கின்ற வினாயகனை முழு முதல் கடவுளாக (பரப்பிரம்மம்) வழிபடும் பிரிவினரின் வினாயகர் புராணம் என்கிற உப புராணத்தில் மட்டுமே வினாயகனை உயர்வாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது வினாயகன்தான் முதலில் தோன்றிய கடவுள் என்றும்; சக்தி, சிவன், விஷ்ணு, பிரம்மா போன்றோரையும் படைத்து அண்ட சராசரங்களையும் படைத்ததாக கூறுகிறது.  ஆனால், வினாயகன் பிறக்கும் போதே தலையில்லாமல் முண்டமாக பிறந்ததாகவும், பார்வதியும், பரம சிவனும் யானைகள் வடிவாக மாறி புணர்ந்ததின் விளைவாக யானைத் தலையுடன் பிறந்ததாகவும், பார்வதி குளிக்கும்போது உடலில் உள்ள அழுக்கைத் திரட்டி வடிவமும் உயிரும் கொடுத்து காவலுக்கு வைத்தபோது, சிவனால் தலை அறுக்கப்பட்டு பிறகு யானைத்தலை பொருத்தப் பட்டதாகவும் இன்னும் பற்பல வகையாக வினாயகன் பிறப்பை பற்றி புராணங்கள் கூறுகின்றன.

சிவமஹா புராணத்தில் (முதல் பாகம்,ஞான சம்ஹிதை 31. கணபாலன் அவதரித்த கதை) வினாயகனின் பிறப்பு பற்றி இப்படி கூறுகிறது;
ஏவம் விசார்யஸாதேவி ஜலம் ஜக்ராஹபாணிநா
தேஹஸ்தம் ருதமாதாய த்யாத்வாரூபம் ப்ரபோஸ் ஸாபம்
நிர்மாய ப்ரணவாகாரம் சதுர்பாஹூந்த்ரி லோசனம்
ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் கஜவக்ரதம் ஸுவாக்ருதிம்
சிவனின் கணங்களே பார்வதிக்கும் பாதுகாவலாக இருப்பதால் அவர்களின் மீது நம்பிக்கையின்மை தோழியின் மூலமாக பார்வதிக்கு ஏற்பட்டது. இதனால் பார்வதி குளிக்கும் போது தண்ணீர்விட்டு உடலில் உள்ள அழுக்கை திரட்டி யானைத் தலையுடன் பொம்மை செய்து அதற்கு உயிரும் கொடுத்து காவலுக்கு வைத்தாள். யானைத் தலையுடன் காவலுக்கு வைக்கப்பட்டவனே வினாயகனாம். ஏன் மனிதத்  தலைபோல் வைத்தால் என்ன உடல் அழுக்கா குறைந்துவிடும்?

“பவிஷ்ய புராணம்“ என்கிற பாரசீக (பார்சி) மத ஆதரவு புராணத்தில் வினாய கனின் பிறப்பு வேறுவகையாக உள்ளது. பிரம்மனால் படைக்கப்பட்ட மனிதர்கள் எல்லோரும் இடையூறு இல்லாமல் நிம் மதியாக வாழ்ந்து வந்ததால், கடவுளை நினைப்பதைவிட்டுவிட்டார்களாம். ஆகையினால் அவர்களுக்குப்பாடம் புகட்டவேண்டி, பிரம்மா விக்னத்தை உண்டாக்குவதற்கு என்றே விக்னேஷ் வரன் என்கிற வினாயகனை படைத்தாராம். அதாவது தொல்லை கொடுப் பதற்கென்றே பிரம்மனால் படைக்கப்பட்டவன் தான் வினாயகனாம்.

ஒவ்வொரு புராணத்திலும் வினாயகன் பிறப்பைப் பற்றி வெவ்வேறு வகையாக கூறுவதால் புராணங்கள் அனைத்தும் அவரவர் இச்சைக்கேற்ப எழுதப்பட்டது என்பது தெளிவாகின்றது.
கொசுரு செய்தி ஒன்று, வைணவ(பெருமாள்) கோயில்களின் வாயிலில் தும்பிக்கை ஆழ்வார் (கடவுளல்ல) என்கிற பெயரில் சிறுமைபடுத்தப்பட்டு வினாயகன் சிலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எப்படி பிறந்தான் என்று அறுதியிட்டு கூறமுடியாத வினாயகனுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒருகேடா!.

- செ.ர.பார்த்தசாரதி
-விடுதலை,01.09.2016


-விடுதலை,01.09.2016,பக்கம்-2

Wednesday, 31 August 2016

அன்பார்ந்த பெற்றோர்களே!

கொல்கத்தா பள்ளி ஒன்றினால் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஒன்று....


அன்பார்ந்த பெற்றோர்களே!
உங்களுடைய பிள்ளைகளுக்கான தேர்வு விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
உங்கள் பிள்ளை சிறப்பாக தேர்வு எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.
எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற் கொள்ளுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.
தேர்வில் தோற்கும் மாணவர்களுள்..
ஒரு கலைஞன் இருப்பான்
அவனுக்குக் கணிதம் தேவைப்படாது.
அங்கே ஒரு தொழிலதிபர் இருப்பான்
அவனுக்கு வரலாறு / இலக்கியம் முக்கியமில்லை.
ஒரு இசைஞானி இருப்பான்
அவனுக்கு வேதியல் அவசியமிராது.
ஒரு விளையாட்டு வீரனிருப்பான்
அவனது உடல் நலனே முக்கியமன்றி
இயற்பியல் புள்ளி முக்கியமில்லை.
தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தால் சிறந்த பிள்ளை.. எடுக்காவிட்டால்..
தயவு செய்து அவர்களது தன்னம்பிக் கையைப் பறித்து விடாதீர்கள்.
சொல்லுங்கள் அவர்களுக்கு இது வெறும் ஒரு பரீட்சை மட்டுமே.
நீ வாழ்கையில் வெற்றி கொள்ளக் கூடிய - இதை விட பெரிய சவால்கள் நிறைய உள்ளன.
உன் மீதுள்ள என் அன்பு - நீ பரீட் சையில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்துத் தீர்மானிப்பதில்லை.
என்றும் நீ என் பிள்ளை; என் உயிர். இப்படி சொல்லிப் பாருங்கள், தேர்வில் வெல்லாத உங்கள் பிள்ளை ஒரு நாள் உலகை வெல்வான்.
வெறுமனே ஒரு தேர்வு, அதன் மதிப்பெண் உங்கள் பிள்ளையின் கனவை, திறமைகளை அழித்து விடக்கூடாது.
மருத்துவர்களும் பொருளியலாளர் களும் மட்டுமே உலகில் சிறந்தவர்கள், மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் என தயவு செய்து நினைக்காதீர்கள்.
உங்களுக்கும், பிள்ளைகளுக்கும் எமது நல்வாழ்த்துக்கள்.
- இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
-விடுதலை ஞா.ம.27.8.16