அங்கும் இங்கும்!
புதிய கட்சி அலுவலகத்துக்கு செல்லுமுன்பாக அதில் உள்ள பிசாசுகளை விரட்டுவதற்காக சடங்கு நடத்திய சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரி ஒருவருக்கு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து கல்தா கொடுக்கப்பட்டிருக்கிறது.
கிழக்கு குவாங் டோங் மாநிலத்தில் மாப்பு கூட்டுப்பண்னையின் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் ஷு ஷூங்வாங் கம்யூனிஸ்டு கட்சி யின் புதிய அலுவலகத்துக்கு குடிபுகு விழா நடத்துவதற்கான நல்ல தேதியை மந்திரவாதி ஒருவருடன் ஆலோசனை நடத்தி அவர் நிர்ணயம் செய்தார்.
அந்த சுபதினத்தில் அவர் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களையும் 20 ஆயுதபாணி சிப்பாய்களையும் திரட்டி தன் தலைமை அலுவலகத்துக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றார்.
அலுவலகத்தை அடைந்ததும் சிப்பாய்கள் பேயை விரட்டுவதற்காக மும்முறை ஆகாயத்தை நோக்கி சுட்டார்கள். பிறகு அவர்கள் அனைவரும் அலுவலகத்தை மும்முறை வலம் வந்தனர். அதனையடுத்து ஓட்டல் விருந்து ஒன்றும் படைக்கப்பட்டது.
பேயை விரட்டுவதற்கான சடங்கில் பங்கு பெற்ற ஒவ்வொரு சிப்பா ய்க்கும் பணம் கொடுக்கப்பட்டது.
திரு ஷு ஷுங்வாங் 1000 டாலர் செலவிட்டார் என்று குவாங் டோங் (சீனா) பத்திரிகை கூறியது.
ஆதாரம்: சிங்கப்பூர் 'தமிழ் முரசு, 3-7-83
சீனாவில் மத சடங்கு செய்த கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் கட்சியை விட்டு நீக்கப்பட்டு விட்டார். இங்கும் தான் கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்களே ?
தகவல்:
செ. ர. பார்த்தசாரதி, சென்னை-34
- உண்மை இதழ், 15.07.1983


No comments:
Post a Comment