“ஊர் ஊருக்கு ஒரு வாகனத்தை அனுப்பி எல்லா பிற்படுத்தப்பட்டவனையும், தாழ்த்தப் பட்டவனையும் அள்ளிப் போட்டு அவர்களை எல்லாம் டாக்டர் ஆக்கி விடவில்லை. படித்துதான் வந்தார்கள். ராசராசன் காலத்தில் இருந்து எங்களை ஏய்த்து , தாங்கள் மட்டும் படித்துக் கொண்டிருந்தவர்களுக்கு போட்டியாக நாங்களும் படித்துதான் வந்தோம்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கிடைக்கிற சலுகை மதிப்பெண்கள் : 0.25
தாழ்த்தப் பட்டவர்களுக்கு கிடைக்கிற சலுகை மதிப்பெண்கள் : 3.9
தாழ்த்தப் பட்டவர்களுக்கு கிடைக்கிற சலுகை மதிப்பெண்கள் : 3.9
(புள்ளி விவரம் ஆண்டு 2012)
இந்த மதிப்பெண் வித்தியாத்தில் எந்த கம்பவுண்டரும் டாக்டர் ஆகி விட முடியாது.
ஆயிரம் ஆண்டு வித்தியாசத்தை நேர் படுத்த இந்த 3.9 மதிப்பெண்கள் தான் சலுகை. கோட்டாவில சீட்டு வாங்கி டாக்டர் ஆகிறான்.
தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான்.
எத்துணை எளிதாய் ஒரு வரியை சொல்லி விட முடிகிறது.’’
முடிந்தால் ஒடுக்கப்பட்ட மக்களைத் தூக்கிவிடுங்கள் -_ முதுகெலும்பை முறிக்காதீர்கள் - பார்ப்பனீயம் பார்ப்பனரல்லாதாரிடமும் நோயாகத் தொற்றிக் கொண்டதே!
முக நூலில் இருந்து: சாந்தி நாராயணன்
-விடுதலை ஞா.ம.,6.2.16
No comments:
Post a Comment