Sunday 6 November 2016

சான்றிதழ்கள் தவறினால்....


கல்விச் சான்றிதழ்கள் காணாமல் போனால், அவற்றை மீண்டும் பெறுவதற் கான வழிமுறைகளை விளக்குகிறார், சென்னை எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியின் எலெக்ட்ரிகல் துறைத் தலைவரான பேராசிரியர் டாக்டர் காமராஜ்.
* சான்றிதழ்கள் காணாமல் போன எல்லைக்குட்பட்ட காவல்நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் அச்சான்றி தழ்கள் கிடைக்காவிட்டால், அந்த காவல் நிலையத்தில் இருந்து `நான் ட்ரேசபிள் சான்றிதழை (non traceable certificate) வாங்க வேண்டும். அதேபோல தாங்கள் படித்த பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் காணாமல் போன சான்றிதழ் களை பெறும் வழிமுறை அறிவிப்பு பகுதியில் இருக்கும் அஃபிடவிட் (affidavit) சான்றிதழ்களை வாங்கும் வழிமுறை படிவத்தை பதிவிறக்கம் செய்து, பின்னர் அந்த படிவத்தில் எந்த சூழ்நிலையில், என்ன காரணத்தால் தன் சான்றிதழ் காணாமல் போனது மற்றும் அந்த சான்றிதழ் தொடர்பான கேள்விகளைப் பூர்த்திசெய்து, படித்த கல்லூரி முதல்வர் அல்லது நோட்டரி பப்ளிக் (வழக்கறிஞர்) ஒருவரிடம் கையெழுத்து வாங்க வேண்டும். தொலைந்துபோன சான்றிதழ் தொடர்பாக பிரபலமான தினசரி நாளி தழில் அறிவிப்பை வெளியிட்டு, அந்த ஒரிஜினல் நியூஸ் பேப்பருடன், தொலைந்துபோன சான்றிதழின் நகலை சேர்த்து, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து காணாமல் போன சான்றிதழ் தொடர்பான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். அதோடு காணாமல் போன சான்றிதழை புதிதாக பெறுவதற்கான  தொகையை கன்ட்ரோலர் ஆஃப் எக்ஸாமினேஷன் (controller of examination), பல்கலைக் கழக பெயருக்கு `டி.டி எடுத்து, விண்ணப்ப படிவத்தை சேர்த்து அனுப்பிவைக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்பிய 15 நாட்கள் கழித்து பல்கலைக்கழகத்தில் இருந்து நம் வீட்டுக்கே புதிய சான்றிதழ் அல்லது சான்றிதழ் தொடர்பான அறிவிப்புகள் வரும்.
* கல்லூரியில் படித்துக் கொண்டிருக் கும் மாணவர்கள் தங்கள் துறைத் தலைவரிடம் இதுகுறித்த புகாரைத் தெரிவிக்கலாம். மேலும், ஒவ்வொரு கல்லூரியிலுமே செயல்படும் தேர்வு கட்டுப்பாட்டு மய்யத்தின் வாயிலாக காணாமல் போன சான்றிதழ் தொடர் பான பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொள்ளலாம்.
* ஒவ்வொரு பல்கலைக்கழக இணையதளத்திலுமே படித்து முடித்த, படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் காணாமல் போன கல்விச் சான்றிதழ் களை திரும்ப பெறும் வழிமுறைகள் தொடர்பான விவரங்கள் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும். அதனைப் பார்த்து இந்தப் பிரச்சினை சார்ந்த உதவி தேவைப்படும் மாணவர்கள் பயன்பெறலாம்.
* பள்ளிச் சான்றிதழ்கள் தொலைந்து போக நேர்ந்தால், உடனடியாக நீங்கள் படித்த பள்ளியைத் தொடர்புகொண்டு, அதற்கான வழிகாட்டுதலை பெற முடியும்
-விடுதலை ஞா.ம.,18.6.16

No comments:

Post a Comment