Wednesday 9 November 2016

சென்னை மாகாணம் ஆட்சி: ஒரு பார்வை


சென்னை மாகாணம் இன்றைய தமிழ்நாடு, வடக்கு கேரளாவின் மலபார் பகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரை மற்றும் ராயலசீமா பகுதிகள், மற்றும் கர்னாடகத்தின் பெல்லாரி, தெற்கு கன்னடா, மற்றும் உடுப்பி பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆங்கிலேயரின் இந்திய ஆட்சிப்பகுதியாக இருந்தது.
சென்னை பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை ஆளுமை எல்லைகளாக தொடங்கிய சென்னை மாகாணம் ஆங்கில-பிரெஞ்சு (கிஸீரீறீஷீ-திக்ஷீமீஸீநீலீ) யுத்தத்திற்கு பிறகு கிழக்கு இந்திய கம்பெனி மற்றும் ஆற்காட்டு நவாப் உடன்படிக்கைக்கு பின்னர் வடக்கு சர்க்கார் தொடங்கி குமரி முனை வரை விரிந்து பரவியது.
1670-ல் பொதுத்துறையில் ஒரு செயலருடன் தொடங்கிய தலைமைச்செயலகம் 1920 ஆம் ஆண்டில் ஆறு துறைகளும் அதனை மேற்பார்வையிட ஒரு தலைமைச் செயலாளரும் கொண்ட கட்டமைப்பாக உருப்பெற்றது . இந்திய அரசு சட்டம், 1919 இயற்றப்பட்டபின் இங்கு 1920-ல் முதன் முதலாக தேர்தல் நடத்தப்பட்டு சட்டப் பேரவை அமைக்கப்பட்டது. சட்டப் பேரவை யின் ஆட்சிக்காலம் மூன்று வருடங்களாக இருந்தது. 132 உறுப்பினர்களில் 34 உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.
இந்திய அரசு சட்டம், 1935 ன்படி 215 உறுப்பினர்கள் அடங்கிய சட்டப் பேரவையும் 56 உறுப்பினர்களை கொண்ட மேலவையும் உருவாக்கப்பட்டது. ஜுலை 1937 ஆம் ஆண்டில் இந்த சட்டத்தின் கீழ் முதல் சட்டப் பேரவை பதவியேற்றது. சட்ட மேலவை (Anglo-French) எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர் மூன்றாண்டு காலத்தில் ஓய்வு பெறும்படியான ஒரு நிரந்தர அமைப்பு.
1939-ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியா மாகாண அரசாங்கங்களை கலந்து பேசாமலே இரண்டாம் உலகப்போரில் இந்தியா பங்கேற்கும் என பிரகடனம் செய்தது. இந்திய தேசிய காங்கிரஸ் இந்த முடிவை எதிர்த்து தன் கட்சியின் அனைத்துத் தேர்ந்தெடுகப்பட்ட பொறுப்பிலிருந்தவர்களையும் ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலகக் கோரியது. 1946-ல் பின்னர் நடந்த மாகாண தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
சென்னை மாகாணம்
1    ஏ. சுப்பராயலு    17 டிசம்பர், 1920, 11 ஜூலை, 1921        நீதிக்கட்சி    முதல் மந்திரி
2    பனகல் ராஜா    11 ஜூலை, 1921,  3 டிசம்பர், 1926        நீதிக்கட்சி    முதல் மந்திரி
3    பி. சுப்பராயன்    4 டிசம்பர், 1926, 27 அக்டோபர், 1930        சுயேச்சை    முதல் மந்திரி
4    பி. முனுசுவாமி நாயுடு    27 அக்டோபர், 1930, 4நவம்பர், 1932        நீதிக்கட்சி    முதல் மந்திரி
5    ராமகிருஷ்ண ரங்காராவ்    5 நவம்பர், 1932, 4 ஏப்ரல், 1936        நீதிக்கட்சி    முதல் மந்திரி
6    பி. டி. இராஜன்    4 ஏப்ரல், 1936, 24, ஆகஸ்டு, 1936        நீதிக்கட்சி    முதல் மந்திரி
7    ராமகிருஷ்ண ரங்காராவ்    24 ஆகஸ்டு, 1936, 1 ஏப்ரல், 1937        நீதிக்கட்சி    முதல் மந்திரி
8    கூர்மா வெங்கட
ரெட்டி நாயுடு     1 ஏப்ரல், 1937, 14 ஜூலை, 1937        நீதிக்கட்சி    பிரதம மந்திரி
9    சி. இராஜகோபாலாச்சாரி    14 ஜூலை, 1937, 29 அக்டோபர், 1939        காங்கிரஸ்    பிரதம மந்திரி
10    த. பிரகாசம்    30 ஏப்ரல், 1946, 23 மார்ச்சு, 1947        காங்கிரஸ்    பிரதம மந்திரி
11    ஓமந்தூர் ராமசாமி
ரெட்டியார்     23 மார்ச்சு, 1947, 6 ஏப்ரல், 1949        காங்கிரஸ்    பிரதம மந்திரி
12    பூ. ச. குமாரசுவாமி
ராஜா    6 ஏப்ரல், 1949, 26 ஜனவரி, 1950        காங்கிரஸ்    பிரதம மந்திரி
சென்னை மாநிலம்
சென்னை மாநிலம், தற்போதைய தமிழ்நாடு மாநிலத்திற்கு முந்தையது. இது இந்திய ‘விடுதலை’க்குப் பிறகு 1947-ல் உருவாக்கப்பட்டது. தற்போதைய தமிழ்நாடு மற்றும் தற்போதைய ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் பகுதிகளும் இம்மாநிலத்தின் பகுதிகளாயிருந்தன. பொது வாக்களிப்பு உரிமையின் அடிப்படையில் தேர்தல்கள் முதன்முறையாக 1952-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டு இங்கு மார்ச்சு 1, 1952-ல் சட்டப் பேரவை அமைக்கப்பட்டது.
சென்னை மாநிலம் பிற்பாடு மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. மாநிலங்கள் மாற்றியமைப்புச் சட்டம், 1956-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பின் கேரள மாநிலமும், மைசூர் மாநிலமும் சென்னை மாநிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டன. பின்னர் ஆந்திர சென்னை மாநிலங்கள் எல்லை மாற்றச் சட்டம், 1959ந் கீழ் ஏப்ரல் 1, 1960 முதல் திருத்தணி வட்டம் மற்றும் சித்தூர் வட்டத்தின் துணைவட்டமான பள்ளிப்பட்டு ஆகியவை சென்னை மாநிலத்தோடும், செங்கல்பட்டு மற்றும் சேலம் மாவட்டங்களின் சில பகுதிகள் ஆந்திர மாநிலத்தினோடும் இணைக்கப்பட்டன.
1    பி. எஸ்.
குமாரசுவாமிராஜா    26 ஜனவரி, 1950, 9 ஏப்ரல், 1952        இந்திய தேசிய காங்கிரஸ்
2    சி. இராஜகோபாலாச்சாரி    10 ஏப்ரல், 1952, 13 ஏப்ரல், 1954        இந்திய தேசிய காங்கிரஸ்
3    கு. காமராஜ்    13 ஏப்ரல், 1954, 31 மார்ச்சு, 1957        இந்திய தேசிய காங்கிரஸ்
4    கு. காமராஜ்    13 ஏப்ரல், 1957, 1 மார்ச்சு, 1962        இந்திய தேசிய காங்கிரஸ்
5    கு. காமராஜ்    15 மார்ச்சு, 1962, 2 அக்டோபர், 1963        இந்திய தேசிய காங்கிரஸ்
6    எம். பக்தவத்சலம்    2 அக்டோபர், 1963, 6 மார்ச்சு, 1967        இந்திய தேசிய காங்கிரஸ்
7    சி. என். அண்ணாத்துரை    6 மார்ச்சு, 1967, ஆகஸ்டு, 1968        தி.மு.க.
தமிழ்நாடு
சென்னை மாகாணம் - 14 ஜனவரி 1967 அன்று தமிழ் நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தமிழக சட்டபேரவை 14 மே 1986-ல் சட்ட மேலவையை நீக்க தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் பாராளுமன்றத்தில் "தமிழக சட்ட மேலவை (நீக்க) சட்டம், 1986" (Tamil Nadu Legislative Council (Abolition) Act, 1986) எனும் பெயரிலான சட்ட மசோதா 1 நவம்பர் 1986 முதல் அமல்படுத்தப்படுமாறு தமிழக சட்ட மேலவை நீக்கப்பட்டது. தற்பொழுது தமிழக சட்ட அமைப்பு ஓரங்க அமைப்பாக (unicameral) 234 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும், ஒரு நியமன உறுப்பினரையும் கொண்ட சட்டபேரவையாக உள்ளது.
முதலமைச்சரின் பதவிக்காலம் சட்டப்பேரவையின் நம்பிக்கை அவர்மீது உள்ளவரை நீளும். நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படுமாயின் முதல்வராக இருப்பவர் பதவி விலகவேண்டும். மேலும் மத்திய அமைச்சரவையின் பரிந்துரையைக்கொண்டு இந்திய அரசமைப்புச் சட்டம் 356 பிரிவில் குறிப்பிட்டுள்ள ஒரு தகவலின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒர் மாநில அரசை கலைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. 1976-ல் திமுக ஆட்சி  ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
முதலமைச்சராக உள்ள ஒருவர் இறப்பதாலோ, பதவி விலகுவதாலோ அல்லது பதவி நீக்கம்செய்யப்பட்டாலோ உருவாகும் காலியிடத்திற்கு, மாநில ஆளுநர் மற்றொருவரை அமைச்சரவை அமைக்க அழைத்து சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரும்படி கேட்டுக்கொள்ளலாம். எவரொருவருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் அவை கலைக்கப்படும் அல்லது ஆளுநர் ஆட்சி அமைக்கப்படும் அல்லது மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்வரை இடைக்கால பொறுப்பாட்சி அமையும் நிலை ஏற்படும்.
தமிழ்நாடு
1    சி. என். அண்ணாத்துரை     ஆகஸ்டு, 1968, 3 பிப்ரவரி, 1969         தி.மு.க.
2    இரா. நெடுஞ்செழியன்
(தற்காலிக முதல்வர்)     3 பிப்ரவரி, 1969, 10 பிப்ரவரி, 1969        தி.மு.க.
3    மு. கருணாநிதி    10 பிப்ரவரி, 1969, 4 ஜனவரி, 1971        தி.மு.க.
4    மு. கருணாநிதி    15 மார்ச்சு, 1971, 31 ஜனவரி, 1976        தி.மு.க.
குடியரசுத் தலைவராட்சி     31 ஜனவரி, 1976, 30 ஜூன், 1977      
5    எம். ஜி. இராமச்சந்திரன்    30 ஜூன், 1977, 17 பிப்ரவரி, 1980        அ.இ.அ.தி.மு.க.
குடியரசுத் தலைவர் ஆட்சி    17 பிப்ரவரி, 19809 ஜூன், 1980      
6    எம். ஜி. இராமச்சந்திரன்    9 ஜூன், 1980, 15 நவம்பர், 1984        அ.இ.அ.தி.மு.க.
7    எம். ஜி. இராமச்சந்திரன்    10 பிப்ரவரி, 1985, 24 டிசம்பர், 1987        அ.இ.அ.தி.மு.க.
8    இரா. நெடுஞ்செழியன்
(தற்காலிக முதல்வர்)    24 டிசம்பர், 1987, 7 ஜனவரி, 1988        அ.இ.அ.தி.மு.க.
9    ஜானகி இராமச்சந்திரன்    7 ஜனவரி, 1988, 30 ஜனவரி, 1988        அ.இ.அ.தி.மு.க.
குடியரசுத் தலைவர் ஆட்சி    30 ஜனவரி, 1988, 27 ஜனவரி, 1989      
10    மு. கருணாநிதி    27 ஜனவரி, 1989, 30 ஜனவரி, 1991        தி.மு.க.
குடியரசுத் தலைவர் ஆட்சி    30 ஜனவரி, 1991, 24 ஜூன், 1991      
11    ஜெ. ஜெயலலிதா    24 ஜூன், 1991, 12 மே, 1996        அ.இ.அ.தி.மு.க.
12    மு. கருணாநிதி    13 மே, 1996, 13 மே, 2001        தி.மு.க.
11    ஜெ. ஜெயலலிதா     14 மே, 2001, 21 செப்டம்பர், 2001        அ.இ.அ.தி.மு.க.
12    ஓ. பன்னீர்செல்வம்    21 செப்டம்பர், 2001, 1 மார்ச்சு, 2002        அ.இ.அ.தி.மு.க.
13    ஜெ. ஜெயலலிதா    2 மார்ச்சு, 2002, 12 மே, 2006        அ.இ.அ.தி.மு.க.
14    மு. கருணாநிதி    13 மே, 2006, 15 மே, 2011        தி.மு.க.
15    ஜெ. ஜெயலலிதா    16 மே, 2011, 27 செப்டம்பர், 2014         அ.இ.அ.தி.மு.க.
16    ஓ. பன்னீர்செல்வம்    28 செப்டம்பர், 2014, மே 23, 2015        அ.இ.அ.தி.மு.க.
17    ஜெ. ஜெயலலிதா    மே 23, 2015,        அ.இ.அ.தி.மு.க.
-விடுதலை ஞா.ம.,6.2.16

No comments:

Post a Comment