Tuesday 21 January 2020

‘சிறீ லால்பகதூர் சாஸ்திரி பெயர்க்காரணம் என்ன?

நினைவிருக்கிறதா?

நேரு மறைவிற்குப் பிறகு பிரத மரான லால்பகதூர் சாஸ்திரியின் நினைவு நாள் இன்று (1966).

இவர் பெயருக்குப் பின்னால் இருக்கும் சாஸ்திரிபற்றி உடம்பெல் லாம் மூளை என்று பெரிதாகப் பீற்றிக் கொள்ளும் ராஜாஜி என்ன சொன் னார் தெரியுமா?

‘‘சிறீ லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் பெயருக்குப் பின்னால் வரும் ‘சாஸ்திரி' என்ற பட்டப் பெயர் அவருடைய ஜாதியைக் குறிக்கும் சொல் லாகவோ, குடும்பப் பெயராகவோ சாதாரணமாகக் குறிப்பிடப்படவில்லை என்பதையும், காசி வித்யா பீடத்தில் அவர் சாஸ்திரங்களைப் படித்துத் தேர்வு பெற்றதாக அவரால் பெறப்பட்ட படிப்புப் பட்டமே! என்பதையும் முதலில் மக்கள் அறியச் செய்ய வேண்டியது அவசிய மாகிறது.

அவர் சாதாரண லால்பகதூரே ஆவார். பி.ஏ., எம்.ஏ., போன்ற படிப்புப் பட்டங்களைப் பெற்றவர் போன்றே இவர் வித்யா பீட சாஸ்திரி ஆவார். திரு.சாஸ்திரி என்று குறிப்பிடுவதும், திரு.பி.ஏ., திரு.எம்.ஏ., என்று குறிப்பிடுவது போன்றதாகவே ஆகும். மற்றும் லால்பகதூர் என்பதில் உள்ள பகதூர்  என்பதும் ஒரு பட்டமோ அல்லது தகுதி காட்டும் கவுரவமோ அல்ல. அது அவரது சொந்தப் பெயரே ஆகும்'' என்று சி.ஆர். என்று கையொப்பம் இட்டு எழுதினார் (‘சுயராஜ்யா', 1.2.1964) என்றால், இதன் பொருள் என்ன?

லால்பகதூர் சாஸ்திரி பூணூல் போட்ட நம்பளவாள் இல்லை. நம்பளவாள் என்று ஏமாந்துவிடாதீர்கள் என்று ஜாடை காட்டுவதுதானே!

கவர்னர் ஜெனரலாக இருந்த பார்ப்பனருக்கே இந்தப் புத்தி என்றால், மற்ற பார்ப்பனர்களைப்பற்றிக் கேட்கவா வேண்டும்?

- விடுதலை நாளேடு 11 1 20

No comments:

Post a Comment