இதோ ஆதாரம்:
தங்கக் கிண்ணத்தில் அமேத்தியம் (மலம்)
ஒரு சமயம் இவர் தஞ்சையில் ஒரு வாலிபர் சங்கத்தில் தலைமை தாங்கினார். அங்குப் பேசிய தமிழன்பர் ஒருவர் பெரியார் இராமா யணத்தைக் குறை கூறுவது தவறு என் றும், கலையுணர்ச்சிக் காகவும் அதனைப் போற்ற வேண்டும் என்றும் கூறினார். அதற்கு இவர் கூறிய பதில்:
"நான் கலையுணர்ச்சியையும், தமிழ் உணர்ச்சியையும் வேண்டாம் என்று கூறவில்லை. தங்கக் கிண்ணத்தில் அமேத்தியம் (மலம்) இருந்தால் தங்கக் கிண்ணம் என்பதற்காக அமேத்தியத்தைப் புசிக்க முடியுமா? அதுபோல் கம்பராமாயணப் பாட்டுகள் சிறந்தவைதான்.அவற்றில் உள்ள மூடநம்பிக்கைக்கும், தமிழர் இழிவுக்கும், ஆரியர் உயர்வுக்கும் ஆதாரமானவற்றை வைத்துக் கொண்டு எப்படி அவற்றைப் பாராட்ட முடியும்?" என்றார்.
ஆதாரம்: சாமி. சிதம்பரனார் எழுதிய 'தமிழர் தலைவர்' - பக்.162
கம்பராமாயணத்தைப்பற்றி பெரியார் சொன்னதை திருக்குறளுக்குச் சொன்னதாக மோசடி செய்யும் பார்ப்பனரைத் தெரிந்து கொள்வீர்!
"தமிழகத்தில் திராவிட நாத்திக வாதத்தை ஒழிக்கப் பிறந்தது 'துக்ளக்', அந்தத் திராவிட நாத்திக வாதத்தின் மிச்சம் இருக்கும் வரை 'துக்ளக்'கின் தேவையும் இருக்கிறது. தமிழகத்தில் பெரியாரை எதிர்த்தால் அது பெரிய விஷயம் என்று நினைத்த காலத்தில் மிகத் துணிச்சலாகப் பெரியாரை விமர்சனம் செய்ய முடியும் என்று காட்டியவர் சோ. 'திருக்குறளை மலம் என்று சொன்னவரை தந்தை பெரியார் என்று எப்படி அழைக் கிறீர்கள்' என்று துணிச்சலாகக் கேள்வி கேட்டவர் சோ" ('துக்ளக்' 1.1.2020)
இவ்வாறு பேசியிருப்பவர் - 'சோ'வின் வீட்டிலிருந்து 'துக்ளக்'கைக் கபளீகரம் செய்து கொண்டுள்ள எஸ். குருமூர்த்தி அய்யர்தான்.
திராவிட நாத்திக வாதத்தின் மிச்சம் இருக்கும் வரை 'துக்ளக்' இருக்குமாம்.
1971இல் நடந்தது மறந்து போய் விட்டதா? சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர் வலத்தில் ராமன் செருப்பாலடிக்கப் பட்டார்; ராமனை செருப்பாலடித்த தி.க. ஆதரிக்கிற திமுக வுக்கா ஓட்டு என்று இதே 'துக்ளக்' சிறப்பிதழை எல் லாம் வெளியிட்டு பக்கம் பக்கமாக எழுதியதே - தமிழ்நாட்டு மக்கள் என்ன பதிலடி கொடுத்தார்கள்?
ஆமாம், 'ராமனை செருப்பாலடித்த' தி.க. ஆத ரிக்கும் திமுகவுக்குதான் ஒட்டு' என்று மொத்தடி கொடுக்கவில்லையா?
1967 தேர்தலில் 138 இடங்களை மட்டும் பிடித்த திமுக 'துக்ளக்' கும்பல் பிரச்சாரம் செய்த ராமனை செருப் பாலடித்த தி.க. ஆதரித்த திமுகவுக்கு 1971இல் கிடைத்த இடங்கள் 183 என்பது 'சோ' கும்பலுக்கு மறந்து போய் விட்டதா!
அந்தத் தேர்தல் முடிவுக்குப் பிறகு "இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது" என்று ஒப்புக் கொண்டு இவாளின் மூதறிஞர் ராஜாஜி கையொப்பமிட்டு 'கல்கி'யில் (4.4.1971) எழுதி சரணாகதி அடைய வில்லையா?
ஆத்திகம் தோற்று நாத்திகம் வென்றது என்பதை ஆச்சாரியாரே ஒப்புக் கொண்ட பிறகு இந்த நண்டு சிண்டு குருமூர்த்திகள் எம்மாத்திரம்!
1971ஆம் ஆண்டுக்குக்கூட போக வேண்டாம். எட்டு மாதங்களுக்கு முன் திருவாளர் குருமூர்த்தி அய் யர்வாள் ஆசிரியராக வந்து விட்ட நிலையில், 'துக்ளக்' ஒப்புக் கொண்டு சரணா கதி அடைந்தது தெரியுமா?
கேள்வி: மனிதர்களைப் படைத்த கடவுளாலேயே மனிதர்களின் தேவை களை நிறைவேற்ற முடியாதபோது, ஒரு எம்.பி.யால் எப்படி நிறைவேற்ற முடியும் என்று மத்திய இணை அமைச்சர் மகேஷ் சர்மா கூறி யுள்ளது நியாயமா?
பதில்: நியாயமோ இல்லையோ அவர் கூறியது உண்மை ('துக்ளக்' 10.4.2019 பக்கம் 27).
இதன் மூலம் குரு மூர்த்தி அய்யர் என்ன சொல்ல வருகிறார்? கடவுளால் மனிதர் களின் தேவைகளை நிறைவேற்ற முடியாது என்று ஒப்புக் கொண்ட இந்த சிகாமணி தான் திராவிட நாத்தி கத்தைப் பற்றிச் சற்றும் வெட்கமில் லாமல் நாக்கைச் சுழற்றுகிறார்!
இன்னொரு பித்தலாட்டத்தை பிசிறு இல்லாமல் அரங்கேற்றியுள்ளார் இந்த அக்கிரகார அம்பி.
திருக்குறளை மலம் என்று சொன் னார் பெரியார் என்றும் பேசியுள்ளார்.
பலமுறை எழுதியாயிற்று. சவால் என்றும் கூறியாயிற்று.திருக்குறளை மலம் என்று எங்கே சொன்னார் பெரியார்? என்று பல முறை 'விடுதலை' கேள்வி எழுப்பினாலும் நாணயமான முறையில் பதில் சொல்ல வக்கற்ற இந்த அறிவு நாணயமற்ற ஆசாமி மறுபடியும் திருப்பித் திருப்பி கோயபல்ஸ் பாணியில் பொய்யை அவிழ்த்துக் கொட்டி வருகிறார்.
தந்தை பெரியார் உண்மையிலே சொன்னது திருக்குறளையல்ல - கம்ப இராமணத்தைப்பற்றி தஞ்சையில் கூறியது ('தமிழர் தலைவர்' பக்கம் 162) என்று ஆதாரத்துடன் எடுத்துக் கூறிய பிறகும், குடுமி குருமூர்த்திகள் 'மூடனும் மூர்க்கனும் கொண்டது விடான்' என்ற பழமொழிக்கு ஏற்ப வாந்தி எடுப்பதை 'துக்ளக்' இதழை வாங்கும் தமிழர்கள் புரிந்து கொள் வார்களாக!
- மின்சாரம்
- விடுதலை நாளேடு 31 12 19
No comments:
Post a Comment