Friday, 20 March 2020
கலைஞர்* ஆரம்பித்த திட்டங்களை தெரிந்து கொள்வோம்.
Friday, 13 March 2020
பெரியாரின் சொத்துகணக்கு என புதிதாக ஒரு புலம்பல்
Wednesday, 11 March 2020
திராவிடக் கட்சிகளினுடைய ஆட்சியின் பெரும் சாதனை - இனமான பேராசிரியர் (தமிழன் உயர்வு)
Tuesday, 10 March 2020
‘‘பிராமணனுக்கு'' ஸ்பெஷல் டாய்லெட்டாம் - கேரளக் கோவிலில்!
இன்றைய ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளேட்டில் (சென்னை பதிப்பு, 6.3.2020, பக்கம் 9) வெளிவந்துள்ள அதிர்ச்சிக்கும், அருவருப்புக்கும் உரிய தகவல் - செய்தி!
‘கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குட்டுமுக்கு மகாதேவர் கோவிலில் பார்ப்பனர் களுக்கென்று ஒரு தனி கழிப்பறை (Exclusive Toilet for Brahmins in Kerala temple raises a stink) உள்ள செய்தி ‘நாறுகிறது' என்ற தலைப்பில் வந்துள்ள செய்தியில்,
கேரளத்து ஆராய்ச்சி மாணவர் அரவிந்த் ஜி கிறிஸ்டோ என்பவர் இந்த அதிர்ச்சித் தகவலை ‘போர்டு' அமைக்கப்பட்டுள்ளதோடு, படம் எடுத்து சமூக வலைத்தளங்களின்மூலம் பரவவிட்டு - ‘‘திருவிழாவின்போது நான் அங்கே போனேன்; பார்த்தேன் - அதிர்ச்சியாக இருந்தது; இதற்குப் பிறகு அந்தப் பலகை ‘‘பார்ப்பனர்களுக்கு மட்டும்'' என்ற கழிப்பறைப் பலகை நீக்கப்படும் என்று தேவசம் போர்டும், அக்கோவில் நிர்வாகிகளும் கூறுவது அறிய மகிழ்ச்சி'' என்கிறார் அவர்!
‘‘அவர் ஏன் எங்களுக்குச் சொல்லவில்லை? ஏன் சமூக வலைத்தளங்களில் பரவவிட்டார்'' என்று கோபத்துடன், அவர்மீது காவல்துறையில் புகார் மனுவை பார்ப்பனர்கள் கொடுத்திருப்பது எவ் வளவு மோசமான ஜாதிவெறியின், மதவெறியின் அப்பட்டமான வெளிப்பாடு பார்த்தீர்களா?
‘‘25 ஆண்டுகளுக்குமேல் அந்த பார்ப்பனர் களுக்கு மட்டுமே அந்த கழிப்பறை என்ற பலகை இருப்பதுபற்றி எங்கள் கமிட்டியின் தகவலுக்கு இது கொண்டு வரப்படவில்லை; உடனடியாக நீக்குகி றோம்'' என்று தேவசம் போர்டும், கோவில் நிர் வாகிகளும் கூறியிருப்பது ஒரு வகையில் வர வேற்கத்தக்கதுதான்; ஆனால், கேரளப் பார்ப் பனர்கள் இதற்கு சப்பைக் கட்டும் விளக்கங்கள் கூறுவதுதான் மிகப்பெரிய கேலிக் கூத்தாக உள்ளது!
அந்தப் பெயர்ப் பலகை 2003 இல் வைக்கப்பட்டது என்று தேவசம் போர்டு தலைவர் ஏ.பி.மோகனன் என்பவர் கூறுகிறார். இந்து அறநிலைய ஆணையர் ஜெயக்குமார், இதுகுறித்து ஒரு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
‘யோக க்ஷேம சபா'வின் மேனாள் மாவட்ட செயலாளரான ஹரிநம்பூதிரி என்ற பார்ப்பனர், ‘‘பிராமண சமூகத்தின்மீது அவதூறு பரப்புவதற்கே இச்செய்தி பரப்பப்பட்டுள்ளது'' என்று சிறிதும் வெட்கமின்றி கூறுவது வேடிக்கையான ஜாதி ஆணவப் போக்கு அல்லவா?
‘‘ஆறுகால பூஜையில், சாப்பிடுவதாகக் கூறப் படும் பகவானுக்கே ‘‘கக்கூஸ்'' கோவில்களில் தனியே கட்டப்படுவதில்லையே, ஏன்?'' என்று நடிகவேள் எம்.ஆர்.இராதா தனது நாடகங்களில் கேட்பார்! அதுவும் இப்போது நினைவுக்கு வருகிறது.
பார்ப்பன சாம்ராஜ்யம் - ஆட்சியில் இல்லாமல் ராஜகுரு ஸ்தானத்தில் பார்ப்பனீயம் அமர்ந்து, அர்த்தமுள்ள இந்து மதத்தின் அட்டகாசமான வர்ணாஸ்ரமக் கொடுமை எவ்வளவு கோரமான முகத்தையுடையது என்பது இதன்மூலம் புரிய வில்லையா? முன்பு - கேரளாவை ‘‘ஒரு பைத்தி யக்காரர்கள் வாழும் விடுதி'' என்றார் விவே கானந்தர்; அது இப்போது முற்போக்கு - பகுத்தறிவு - இடதுசாரிகளால் பெரிதும் மாற்றப்பட்டு வருகிறது!
பைத்தியக்காரர்கள் என்னும்போது, மற்றொரு செய்தியும் நினைவுக்கு வருகிறது.
சுமார் 150 ஆண்டுகளுக்குமுன்பு, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநலக் காப்பகம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ள ‘‘பைத்தியக்கார ஆஸ்பத் திரியில்'' பார்ப்பனர்களுக்கென்று தனி வார்டு (ஸ்பெஷல் வார்டு) இருந்தது என்ற தகவல் பலருக்கும் தெரிந்திருக்காதே!
பகவானுக்கு இல்லாத வசதிகள்கூட பார்ப்ப னர்களுக்கு உண்டு என்பதுதான் சாஸ்திர விதி யாகுமே!
‘‘தெய்வாதீனம் ஜகத் சர்வம்,
மந்த்ரா தீனம் து தெய்வதம்
தன் மந்த்ரம் பிரம்மணா தீனம்
தஸ்மதத் பிரம்மணம் பிரபு ஜெயத
(‘ரிக் வேதம்', 62ஆம் பிரிவு 10ஆம் சுலோகம்)
உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது.
கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டது.
மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப் பட்டவை.
எனவே பிராமணனையே தொழவேண்டும்''
துளசிதாஸ் ராமாயணத்தில், ராமன் போன்ற அவதாரங்களே பிராமணர்களைத்தான் முதலில் தொழுது வணங்கினார்கள் பக்தி சிரத்தையோடு; கடவுளை வணங்குவதுகூட அவ்வளவு முக்கியத் துவமானது அல்ல!
எனவேதான், பிராமணர்களுக்கு டாய் லெட்டில்கூட ‘‘ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்!''
இதை சட்டமாக்கவே துடிக்கிறார்கள் பலரும் இன்று!
கடவுளும், பக்தியும் யாருக்குப் பயன்படுகிறது பார்த்தீர்களா?
பக்தகே(ர)டிகளே, சிந்தியுங்கள்; வெறுப்பு விருப்பின்றி சிந்தியுங்கள்!
பெரியார் உங்கள் மனக்கண்ணில் படுவார்!
- விடுதலை நாளேடு, 6.3.20
Friday, 6 March 2020
பிராமணன் என்பதில் பெருமை! - இராஜாஜி (மாலன்களின் “புளுகுப் புராணம்!)
- கவிஞர் கலி.பூங்குன்றன்
சன் தொலைக்காட்சி (திமுக) மூலம் வெளி உலக வெளிச்சத்துக்கு வந்து - திமுக தலைவர் கலைஞரால் “உதவிகள்” பெற்று - அதற்குப் பின் பல “அவதாரங்களை எடுத்தவர்” மாலன் என்ற நாராயணன்.
இப்பொழுது அவர் ‘துக்ளக்‘கின் ஆஸ் தான எழுத்தாளர் - பாரதீய ஜனதாவின் அறிவிக்கப்படாத செய்தித் தொடர்பாளர். இந்த வார ‘துக்ளக்‘ இதழில் (26.2.2020) “தலித் விரோத அரசா?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தீட்டியுள்ளார். அதில் ராஜாஜி பற்றி பலபடப் பாராட்டியுள்ளார் - இதில் ஆச்சரி யப்படுவதற்கு ஏதுமில்லை. அது அவாளின் பூணூல் பாசம்.
இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜிக்கே அந்தப் பிறவிக் குணம் போகவில்லை என்கிறபோது நாராயண மாலன்களுக்கும் அந்த உணர்ச்சி ஓங்கி நிற்பதில் ஆச்சரியம் இருக்க முடி யாது.
‘கேரவன்’ ஏட்டில் வெளிவந்த செய்தி தான் அது.
Infact, one occasion Rajaji proudly said that he valued his Brahminhood more than his Chief Ministership (Caravan, April (1) 1978 - Gandhiji’s Crusade against Casteism).
முதல் அமைச்சர் என்கிற பதவியை விட பிராமணனாக இருப்பதில்தான் பெரு மையு றுவதாகப் புளகாங்கிதம் அடைந்தவர் ராஜாஜி.
தாழ்த்தப்பட்டவருக்காக சித்தூர் சென்று வாதாடியதாக ஒரு தகவலை விவரித்து எழுதியுள்ளார் தோழர் மாலன்.
அது எப்படியோ இருக்கட்டும்; தாழ்த் தப்பட்டவர் விடயத்தில் ராஜாஜி எப்படி நடந்து கொண்டு இருக்கிறார் என்பதை அண்ணல் அம்பேத்கர் வாயிலாகவே கேட்டு விடுவோம்.
“நான் அந்தக் காலத்தில் எக்சிகியூட்டிவ் கவுன்சில் மெம்பராக இருந்த போது வெள் ளைக்கார வைசிராயுடன் பேசி விளக்கி, தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து திறமை மிக்க மாணவர்களைப் பொறுக்கி எடுத்து மேல்நாட்டுக்கு அனுப்பி கல்வி பெற வசதியளிக்கும் திட்டத்தை சர்க்கார் செய்ய வேண்டும் என்பதை அவர் ஒப்புக் கொள் ளும்படிச் செய்தேன்.
அதன்படி அப்பொழுது ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாயை ஒதுக்கினார்கள். இது தொடர்ந்து நடந்து வந்தது. நான் அமைச்சர் பதவியிலிருந்து விலகியவுடன் என் நண்பர் ராஜகோபாலாச்சாரியார் இதை ஒழித்துக்கட்டி விட்டார்.”(Report of Backward Classes Commission, Vol. III page 75, para 2).
இதுதான் மாலன் மகத்துவமாக ராஜாஜி பற்றிக் கூறும் ராஜாஜியின் தலித் மீது கொண்ட ‘தகத்தகாய காதல்’
ராஜாஜியின் பார்ப்பனப் பற்று எத்தகை யது என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட் டையும் கூற முடியும் - அதுவும் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களின் எழுத்துக் களிலிருந்தே காட்ட முடியும்.
“தமிழ்நாட்டில் சத்தியாக்கிரகப் போருக்கு உரிய களனாக வேதாரண்யம் குறிக்கப்பட்டது. இராஜகோபாலாச்சாரி யார் தண்டுகளுடன் திருச்சியினின்றும் புறப் பட்டார்.
சிதம்பரத்தினின்றும் ஒரு தண்டை நடத்திச் செல்லத் தண்டபாணி பிள்ளை உள்ளிட்ட சிலர் முயன்றனர். அதற்கு என் தலைமை விரும்பப்பட்டது. அவ்விருப்பத் தைக் குலைக்க என் மனம் எழவில்லை. அச்சமயத்தில் இராஜகோபாலாச்சாரியார் பிடிபட்டதும், தொடர்ந்த போருக்கு யான் நியமிக்கப்பட்டிருக்கிறேன் என்று கேள்வி யுற்றேன்.
இராஜகோபாலாச்சாரியார் கடிதம் எழுதவில்லை. வேறு வழியாகவும் தெரி யப்படுத்தவுமில்லை. எனது நியமனம் வெறும் வதந்தி என்று கருதினேன். எதற் கும் சித்தமாயிருக்கலாமென்று எண்ணி னேன்.
திருச்சியினின்றும் புறப்பட்ட படை யையன்றி, வேறு படைகள் யாண்டும் திரளலாகாதென்றும், அதை வேதாரண் யம் நோக்கலாகாதென்றும் ஓர் அறிக்கை இராஜகோபாலாச்சாரியாரிடமிருந்து வெளிவந்தது. ஆச்சாரியாருக்குப் பின்னர் கே.சந்தானம் நியமிக்கப்பட்ட செய்தியும் எட்டியது. சிதம்பர முயற்சி சிதறியது. எழுந்த என் உள்ளமும் விழுந்தது. நிகழ்ந்தது இவ் வளவே!
பத்திரிகை உலகம் திருவிளையாடல் புரியத் தொடங்கியது. சில பத்திரிகைகள் ‘கலியாண சுந்தர முதலியார் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு சித்தமாயிருந்தார், ஏமாற்றப்பட்டார், ஒரு பிராம ணரல்லாதார் தலைமை பூண்டு படை யைத் திரட்டிச் செல்லப் பிராமணன் கண் பார்க் குமோ’ என்று எழுதினர்.”
(திரு.வி.க. எழுதி வைத்த வாழ்க்கைக் குறிப்பு 1, பக்கம் 318-319).
பாவம் - மாலன் ரொம்பதான் ராஜாஜி யைத் தூக்கிச் சுமக்கப் பார்க்கிறார். ஆனால் உண்மையோ ஜன்னலுக்கு வெளியே
வேறு திசையில் பயணிக்கிறது.
******
மாலனின் அறியாமையா? அண்டப் புளுகா?
“இன்னொன்றும் சொல்ல வேண்டும். இந்திரா சஹானி வழக்கின் காரணமாக பட்டியலினத்தவரின் பதவி உயர்வுக்கு ஆபத்து ஏற்பட்டபோது அரசமைப்பு சட்டத்தைத் திருத்தி அவர்களுக்குப் பாதுகாப்பளித்தவர் அன்றைய பிரதமர் வாஜ்பாய். தவிர, நிரப்பப்படாமல் இருந்த காலியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தார்”.
- இதுவும் அதே ‘துக்ளக்‘ இதழில் (26.2.2020, பக்கம் 23) திருவாளர் மாலன் எழுதியுள்ளார்.
இது உண்மையா? இந்திரா சஹானி வழக்கில் அப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது உண்மைதான்.
அந்த நேரத்தில், மத்திய ஆட்சியில் இருந்தவர் பி.வி.நரசிம்மராவ், சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் சீத்தாராம்கேசரி. அவர்தான் முன்னெடுத் தார். அரசமைப்பு சட்டத்திருத்தம் 77இன் படிதான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டுக்கு வழிச்செய்யப்பட்டது.(The constitution (Seventy - Seventh Amendment) Act 1995 - 17th June 1995. Amendment of Article 16 (4A))
“(4A) Nothing in this article shall prevent the State from making any provision for reservation in matters of promotion to any class or classes of posts in the services under the State in favour of the Scheduled Castes and the Scheduled Tribes which, in the opinion of th States are not adequately represented in the services under the State”
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது மத்திய சமூகநலத்துறை அமைச்சர் சீத்தாராம்கேசரி அவர்களின் துறையின் சார்பாக சட்டம் நிறை வேற்றப்பட்டதுதான் உண்மை.
1995இல் ஆட்சியில் இல்லாத வாஜ்பேயி, பிரதமராக இருந்த போதுதான் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதாக எழுதுவது மாலனின் அறியாமையா - அண்டப் புளுகா?
- விடுதலை ஞாயிறு மலர் 22 2 20
பவுத்தர்களின் தலைகளைச் சீவியது பார்ப்பனீயம்!
அநேக யாகங்களைச் செய்தவனும் தேவபக்தனு மான “புஷ்யமித் திரன் என்னும் பெயருடைய அரசன், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பல்லாயிரக்கணக்கான ஆராமங்களை எல்லாம் அழித்து , அவைகளில் சத்தர்மப் பிரசாரம் (நல்லற நெறிகளை உபதேசித்துச்) செய்துவந்த தவசிரேஷ்டர்களாகிய லட்சக்கணக்கான புத்த பிட்சுக்களைக் கொலை செய்து ஒடுக்கினான்.
பின் ஒரு நூற்றாண்டு கழிந்ததும் சிராஸ்வதிக்கு அரசனான “விக்கிரமாதித்தன்” என்பானும், மற்றொரு அரசனான “கனிஷ்கன்” என்பானும் மேற்கூறியவாறே பிட்சுக்களைச் கொல்வது, அவர்களின் பர்ணசாலை களை அழிப்பது அரச தருமமான வேட்டை என்றே நினைத்து நடத்தி வந்தார்கள். சிவபக்தரான மிஹிரகுலன் என்பானும் இங்ஙனமே செய்துவந்தான். மேற்கு வங்காளத்திற்கு அரசனாயிருந்த சசாங்கன் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் உயிர் வாழ்ந்திருந்தவன். விளையாட்டாகவே அநேக புத்த ‘விக்கிரகங்களையும் துறவிகளையும் நாசம் பண்ணியும் அவ் விளையாட்டை நிறுத்த மனமின்றிப் புத்தபகவான் பரிநிர்வாணம் அடைந்த போதிவிருட்சத்தை (அரசமரம்) வேரோடு பறித்து எறிந்த பின்னரே அடங்கினானாம்.
காஷ்மீரத்தை ஆண்டுவந்த சேமகுப்தன் சிறீஹர்ஷன் இவ்விருவரும் புத்த பிட்சுக்களையும், அவர்களின் கோவில்களையும் அழித்து வந்தார்கள். மீமாம்ஸா சாஸ்திர கர்த்தாவான “குமாரிலபட்டன்” என்னும் பார்ப்பனனொருவனுடைய ஏவுதலின் பேரில் மலையாளத்திலுள்ள புத்த பிட்சுக்கள் அனைவரும் கொல்லப்பட்டும், கோவில்களும், மடங்களும், ஆடு மாடுகளை அறுக்கும் கொலைக்களங்களாக (காளி கோயில்) மாற்றப்பட்டும் போயின. “சுதன்வா”வென்னும் பெயருடைய அரசன் சேது முதல் இமயமலை வரை யிலுள்ள குடிகளில் யாரேனும் ஒருவன் பவுத்தர்களைக் கொலை செய்யாமல் இருந்து வருவதாகத் தெரிந்தால், அக்கணமே அவனைக் கொன்றுவிடும்படி கட்டளை யிட்டிருந்ததாகச் “சங்கவிஜயம்“ என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது.
புத்தபிட்சுக்கள் இருக்கும் இடங்களிலும் அவர்கள் கோயில்களிலும் ஒரு பயனையும் கருதாமல் பொழுது போக்கிற்காகப் போகிறவன் கூட நரகத்தை அடைவான் என்று “பிருஹந் நாரதீய புராணம்“ கூறுகிறது. வங்க நாட்டிற்கெனத் தனியாக ஒரு ஸ்மிருதி நூலை இயற்றிய “சூலபாணி” என்னும் பார்ப்பனன் புத்தசமயத்தினன் ஒருவனைத் திடீரென்று பார்க்க நேரினும், அதனால் பாவம் சூழ்ந்து கொள்ளுமென்றும் அதைப்போக்கக் கடுமையாகப் பிராயச்சித்தங்களும் விதித்திருக்கின்றான். புத்தசமயிகள் தீய நெறியில் ஒழுகி வருபவராதலால், அவர்களைக் கொலை செய்யும் பொருட்டே பிராமணகுலத்தில் விஷ்ணு பகவான் ‘கல்கி’யென்னும் திருநாமத்தோடு அவதரிக்கப் போகிறார் என்று அனுபாகவத புராணம் கூறுகின்றது.
- விடுதலை ஞாயிறு மலர், 1.2.20