Friday 13 March 2020

பெரியாரின் சொத்துகணக்கு என புதிதாக ஒரு புலம்பல்

ரதி மல்லிகா வழியாக..... 

இதோ பாருங்கள் பெரியாரின் சொத்துகணக்கு என புதிதாக ஒரு கும்பல் கிளம்பியுள்ளது

சரி எங்கே காட்டுங்கள் என்றால் 1 முழத்திற்கு வாசிக்கின்றார்கள்

அது எல்லாம் என்ன சொத்து என்றால் முழுக்க கல்வி நிலையம், ஆதரவற்ற இல்லம், வழிகாட்டும் மையம், மருத்துவ இல்லம்

இது எல்லாம் பெரியார் தமிழகத்தை ஏமாற்றி சம்பாதித்தாம் , அட பதர்களா, கொஞ்சமேனும் மூளை இல்லையா இல்லை தமிழரை எல்லாம் ராசா கோஷ்டி போல நினைத்துவிட்டீர்களா?

பெரியாரின் தந்தை பெரும் வணிகர், இது போக அன்று வங்கிகள் இல்லா நிலையில் பொதுமக்களுக்கு எல்லாம் அவர்தான் வங்கிபோல் இருந்தார், பணம் குவிந்தது

இது போக பெரியாரும் தன் 35 வயதுவரை சம்பாதித்திருந்தார்

பொதுவாழ்விற்கு வந்தபின் பெரியாருக்கு நன்கொடைகள் குவிந்தன, புத்தகம் விற்றார், பத்திரிகை நடத்தினார் இந்த வகையிலும் பணம்  வந்தது

பெரியார் மிக சிக்கனமானவர், எந்த அளவு என்றால் ஜி.டி நாயுடு முதல் வகுப்பு டிக்கெட் எடுத்து இலவசமாக கொடுத்தாலும் அதை மூன்றாம் வகுப்பு டிக்கெட்டாக மாற்றி பயணித்தவர்

இலவசம்தானே அய்யா, பயணித்தால் என்ன என கேட்டால் இந்த பெட்டியும் மெட்ராஸ்தான் போகும், முதல் பெட்டியும் மெட்ராஸ்தான் போகும் , வேற எதுக்கு என கேட்டவர்

சிக்கனம் என்றால் மகா சிக்கனம், சவர செலவு கூட இல்லை. பத்திரிகையில் அச்சடிக்கும் செலவு குறையவேண்டும் என்பதற்காக தமிழ் எழுத்துக்களையே மாற்றினார்

பெரியாரின் கருத்தில் சர்ச்சை இருக்கலாம், ஆனால் பொதுமக்கள் அவரிடம் நம்பி கொடுத்த நன்கொடைகளை அப்படியே சமூகத்திற்கு கொடுத்தார்

தன் சொத்து, இதர வருமானம், நன்கொடை என அனைத்தும் கலந்து அவர் தொடங்கியதுதான் கல்வி நிலையங்கள்

அவை ஒவ்வொன்றாய் பெருகி இன்று வளர்ந்து நிற்கின்றன‌

பெரியார் ஸ்டார் ஹோட்டல் நடத்தினாரா? இல்லை கிரிக்கெட் கிளப் வைத்திருந்தாரா? 20 கப்பல் 500 லாரிகள் என போக்குவரத்து தொழில் செய்தாரா?

தியேட்டர் கட்டினாரா? படம் எடுத்தாரா?

இல்லை, மாறாக கல்வி நிலையங்களை கட்டி கல்வி கொடுத்தார், அனாதை இல்லம் கட்டினார், மகளிர் கல்விக்கு  முன்னுரிமை கொடுத்தார்

ஒரு மனிதன் முழுக்க கல்வி பணிக்கு தன் சொத்தை எல்லாம் கொடுத்தால் தவறா?

அதுவும் இன்று டிரஸ்ட் என்ற பெயரில் மக்கள் சொத்தாக இருக்கின்றதே தவிர, பெரியார் குடும்ப சொத்தாகவோ அல்லது மணியம்மை வகையரா சொத்தாகவோ ஒரு பைசா இல்லை

மக்கள் பணத்தை மக்களுக்கே விட்டுசென்ற மாமனிதர் பெரியார்

இது புரியாமல் பெரியார் திராவிடம் பேசி சம்பாதித்தார் என பல பதர்கள் புலம்புகின்றன‌

By.G.k

No comments:

Post a Comment