Saturday, 22 February 2020

தமிழ்நாட்டின் தனிக்கொடியை பறக்க விடுவோம்

தோழர் அண்ணாதுரை சொற்பொழிவு

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது. இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

கோவை ஜில்லா நீதிக்கட்சி மாநாட்டிற்குப்பிறகு அதே இடமாகிய கலைமகள் பெருமன்றில் ஒரு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

திருப்பத்தூர் தோழர் சுபான் பாடல்கள் பாடினார்.

கூட்டத்திற்கு சென்னை 'தாருல் இஸ்லாம்' ஆசிரியர் ஆலிஜனாப் - பா.தாவூத்ஷா பி.ஏ., தலைமை வகித்துப் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-

"மாநாட்டில் பல தலைவர்கள் பேசினர். இனி நாம் செய்யவேண்டுவதென்ன? தேர்தலுக்குமுன்பு கூறியது போல் இனியும் காங்கிரஸ் புலி பாயப்போகிறது 16 அடி எனப்பலவாறு காங்கிரசார் பசப்புவர். இழந்த மந்திரி பதவியைப் பெற பகீரதப் பிரயத்தனம் - செய்கின்றனர். அவர்கள் பதவி வகித்த காலத்தில் கனவிலும் இந்த நிலைமை வருமென நினைக்கவில்லை. ஏன்? அவர்கள் பதவியை ராஜிநாமாச் செய்த அக்டோபர் 31-ஆம் தேதியன்று கூட, நாங்கள் மீண்டும் தீபாவளிக்குள் வந்து விடுவோம்; அதுவரை நீங்கள் சாதாரணமாகக் காரியங்களை நடத்திக் கொண்டிருங்கள்.

முக்கியமான பேப்பர்களில் கை வைக்காதீர்கள். அவை களைப் 'பெண்டிங்கில் வையுங்கள்" என செக்ரட்டிரியேட்டில் குமாஸ்தாக்களிடம் கூறி வந்தனர். தீபாவளியும் போயிற்று; 16 மாதம் ஆயிற்று. திரும்பிவருவதாக நம்பிக்கை இல்லை. இன்று ஏன் பதவியை விட்டோம் என்று அவதிப்படு

கின்றனர்.

மழை விட்டும் தூவானம் - விடவில்லை

அன்று இவர்கள் மனம் போன போக்கில் சென்றனர். தமிழர்களுக்குச் செய்த கேடுகள் கொஞ்சமா? சமீபத்தில் சேலத்தில் ஆரிய சமாஜத்தார். செய்யும் கொடுமைகளை விள க்கி இதை சர்க்கார் கவனிக்க வேண்டும், இங்கு இந்து முஸ்லிம் பிணக்கு வரும்போல இருக்கிறதென்ற கருத்துகள் கொண்ட ஒரு கட்டுரையை  ஒருவர் அனுப்பி இருந்தார்.

ஆனால் சமீபத்தில் சவர்க்கார் பேசிய பேச்சுக்கள் போல் ஒரு முஸ்லிம் பேசியிருந்தால் இந்நேரம் நாட்டில் எந்த நிலைமை ஏற்பட்டிருக்கும். இத்தகைய பேச்சுக் களையும், கட்டுரைகளையும் வெளியிடும் பத்திரிகைகளால் இந்து - முஸ்லிம் பிணக்கு உண்டாகாதா? அதனை சர்க்கார் கவனிக்க வேண்டும். மழை விட்டும் இன்னும் தூவானம் விடவில்லை! பத்திரிகைகளைப் பரிசீலனை செய்ய 'இந்து பத்திரிகையின் உதவியாசிரியராயிருந்து ஓய்வு பெற்ற ஒரு பார்ப்பனரை சமீபத்தில் நியமித்துள்ளனர். அவர் கண்களுக்கு தினமணி, மித்திரன், தமிழ்மணி, இந்து போன்ற பத்திரிகைகள் நன்றாக தெரிகிறது. நமது இயக்கப் பத்திரிகைகளின் கதியைக் கேட்க வேண்டுமா?

ஒற்றுமையும் கட்டுப்பாடும் வேண்டும்

நிற்க, சுயராஜ்யம் என்பது ராமராஜ்யம் என்கிறார் காந்தியார். ராமராஜ்யம் என்பது பார்ப்பனராஜ்யம் என ராமாயணம் முதலியன கூறுகின்றன. எனவே சுயராஜ்யம் என்றால் பார்ப்பனராஜ்யம் என்பது விளங்கவில்லையா? 'நூலெனிலே கோல்சாயும்' என்றனர். எனவே மீண்டும் பார்ப்பனராஜ்யம் வந்தால் நாம் வாழ முடியுமா? அதன் கொடுமையைத்தான் சென்ற 2 வருடங்களாகப் பார்த்தோமே! ஜின்னா அவர்கள் கூறுவது போல் நாடு பிரிக்கப்படவேண்டும். நமது திராவிடநாடு திராவிடருக்காக வேண்டும். இதற்காகவே பெரியார் பாடுபடுகிறார். தமிழரனைவரும் ஒன்று சேர்ந்து இதற்காகப் பாடுபடவேண்டும். நம்மில் ஒற்றுமை கட்டுப்பாடு ஊக்கம் வேண்டும். இவ்வாறு கூறினார்.

அடுத்துத் தோழர் சி.என்.அண்ணாதுரை எம்.ஏ., ஆற்றிய நீண்ட சொற்பொழிவு வருமாறு:- தோழர்களே! திராவிட நாடு தனியே பிரிக்கப்பட வேண்டுமென இன்று தீர்மானம் நிறைவேற்றினோம். நமது ஆசையை அதோ தொங்கும் படத்தில் பார்க்கலாம். சென்னை முதல் நேப்பாளம் வரை தீட்டப்பட்டிருக்கும் சிவப்பு நிறமுள்ள பகுதியனைத்தும் திராவிட நாடாகும். சிலப்பதிகாரம் முதலிய பழந்தமிழ் நூல்களைக் கொண்டும், சரித்திர ஆராய்ச்சி கொண்டும் பார்த்தால் இத்திராவிட நாடு எக்காலத்திலும் பிறருக்கு அடிமைப்பட்டதாகத் தெரியவில்லை அன்று நாம் திராவிட நாடு திராவிடருக்கே என்ற போது, எதிரிகள் எலிவலை எலிகளுக்கே என்று கூறிக்கேலி செய்தனர். மலையில் பிறந்த சிறிய எலி, பெரிய மொகலாய சாம்ராஜ்யத்தைத் துளைத்தது' என்று சிவாஜியைப் பற்றிக் கூறுவதுண்டு. அதுபோல அன்று ஈரோட்டில் கிளப்பிய முழக்கம் இன்று லாகூர் வரை சென்று ஒலிக்கிறது! அன்று கிண்டல் செய்தவர்கள் இன்று கிலியடைகின்றனர்.

வார்தா திட்டம் வராது

நாம் பதவியை இழந்திருந்தாலும் நம்மில் பல பிளவு இருந்தாலும் நாம் கிளப்பும் கிளர்ச்சி ஒரு காலத்தில் அகில இந்தியாவிலும் பரவி புகழ் பெறும். ஏன்? இரட்டையாட்சி பசையற்றது, கவைக்குதவாதது என்று பிற மாகாணத்தார் கூறிய காலையில், சென்னை அதனை வரவேற்றது. அவ்வாட்சியாலும் கூடிய நன்மைகளை மக்களுக்குச் செய்யலாம் என்பதை ஜஸ்டிஸ் கட்சி எல்லா இந்தியாவுக்கும் எடுத்து விளக்கியது. வந்தேமாதரக் கிளர்ச்சி முதலில் தமிழ் நாட்டில் தோன்றியது. வந்தேமாதரத்தை நீக்கு என முஸ்லிம்கள் கேட்கவில்லை; ஜின்னா கேட்கவில்லை; பெரியார் கேட்கிறாரே!' என அன்று ஆச்சாரியார் கூறினார். மேலும் 35 ஆண்டுகளாகப் பாடிவந்த வந்தேமாதரத்தை நிறுத்த முடியாது. காந்தியையோ, தேசத்தையோ வேண்டுமானாலும் இழப்போம் வந்தேமாதாரத்தை விடமுடியாது என ஆச்சாரியார் சொன்னார். பிறகு அவ்வந்தேமாதரம் பாடுதல் நிறுத்தப்பட்டது. அது பீர்பூர் ராஜா அறிக்கையில் இடம் பெற்றது, அதைப்பற்றி ஜின்னா பேசும் அளவுக்குக் கூடவந்துவிட்டது. 8 மாகாணத்தை கட்டி ஆண்ட ஆணவத்தால் நாம் தொடங்கிய எதிர்ப்புக் கிளர்ச்சி வெற்றிபெறுமா? என்று காங்கிரசார் கேட்டனர். இன்று கட்டாய இந்தி எடுபட்டாதா? இல்லையா? முதன் முதலில் வார்தாத் திட்டத்தைக் கண்டித்தது நாம். இன்று ஜின்னா அதைக் கண்டிக்கிறார். இனி காங்கிரஸ் ஆட்சி வந்தால் கூட வார்தா திட்டம் வராது.

திராவிட நாடு தனியேயிருந்தது

எனவே வெற்றியடைய த் தமிழர் கூறும் - வீரக்கூக்குரல் ''தமிழ்நாடு தமிழருக்கே" என்பது. காரணமென்ன?... நாகரிகத்திலோ, பிறவற்றிலோ நம்மோடு ஒற்றுடையவரல்ல ஆரியர் என சரித்திரம் கூறுகிறது. அவர்களுடைய உருவம், உணர்ச்சி உணவு, நடை, உடை, பாவனை வேறு; நம்முடையன எல்லாம் அவைகட்கு முற்றிலும்மாறுபட்டன. எனவே எல்லாவற்றிலும் மாறுபட்ட வேறு வேறு மக்கள் நிறைந்த ஒரு நாட்டை, கண்டத்தை ஒன்றாய்ச் சேர்த்துக் கொண்டு அவை களை தனித்தனி நாடாகப் பிரிக்கக்கூடாது என்றால் என்ன அர்த்தம்? சிந்து நதிக்கரை வரை ஜெயித்து வந்த அலெக்சாந்தர் மேலே செல்ல நினைத்த காலத்தில் நீங்கள் வடநாட்டைத்தான் ஜெயிக்க முடியும்; உங்களைப் போன்ற ஆற்றல் படைத்த வர்கள் தென்னாட்டிலிருக்கிறார்கள்" எனக் கிரேக்க வீரர்கள் சொன்னவுடன் மேலே வராது திரும்பிச் சென்றுவிட்டார். சமுத்திரகுப்தன் கூடக் கலிங்கத்தின் ஓரம் வரைதான் வந்தான். மேலே வரமுடியவில்லை நர்மதையைக் கடந்து, அன்று தக்காளியையோ,  ஆரஞ்சுப்பழ ரசத்தையோ நம்பிக் கொண்டு ஆட்சி நடத்தவில்லை, தமிழர்கள் தக்க பாது காவல் செய்திருந்தனர். தமிழ் நாட்டிற்கு தனிச்சிறப்புடன் தமிழ்நாடு தன்னரசு செலுத்தியிருந்திருக்க வேண்டும். இல்லையேல் தொல்காப்பியமோ, சிலப்பதிகாரம், மணி மேகலை போன்ற பழந்தமிழ் நூல்களோ பிறந்திருக்க முடியாது. பண்டைக் காலச்சிற்பம், இசை, கலை, நாகரிகம், உணர்ச்சி எதைப் பார்த்தாலும் திராவிட நாடு தனித்திருந்த தாகத்தான் தெரிகிறது. அன்று ஆண்டவர் நாம் இன்று ஆண்டியானோம். இன்று இழந்ததைக்கொடு என்று கேட்கிறோம். இனி திராவிட நாட்டில் பார்ப்பனீயத்திற்கோ வைதீகத்திற்கோ இடமில்லை என்று கூறுகிறோம்.

(தொடரும்)

- விடுதலை: 11.4.1940


தமிழ்நாட்டின் தனிக்கொடியை பறக்க விடுவோம் தோழர் அண்ணாதுரை சொற்பொழிவு

வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

31.1.2020 அன்றைய தொடர்ச்சி...

அன்று மூவரசர் புகழுடன் ஆண்டனர். நக்கீரரும் கபிலரும் வள்ளுவரும் தோன்றினர். தமிழகத்தின் புகழ் உரோமாபுரி வரை  - கிரேக்க ராஜ்யம் வரை பரவியிருந்தது. இது சரித்திரங்கள் கண்ட உண்மை. எனவே அன்று ஆரியர் அபகரித்துக்கொண்டதை இன்று திருப்பிக்கொடு என்கி றோம். பாகப்பிரிவினை வழக்குத்தொடுக்க நமக்குச் சகல உரிமையும் இருக்கி றது. பிரிட்டிஷ் துப்பாக்கியாலும் பார்ப் பனீயக் கட்டா லும் நிலைபெற்றுள்ள நமது அடிமைத்தனம் ஒழிந்தால் தமிழ்நாடு தமிழருக்காகும்.

இதைக்கேட்க வெட்கமில்லையா?

தமிழன் பர்மாவிலும், பம்பாயிலும் மலாயாவிலும் சென்று, கூலி வாழ்வு, பஞ்சைப்பனாதி வாழ்வு வாழ் கிறான். ஆனால் தமிழ்நாட்டில் வடநாட்டான் முதலாளி யாய், வியாபாரியாய், அதிகாரியாய், தலைவனாய் வாழுகிறான். தாயை வெட்டுவதா? என்கிறார்கள். உண்மையாக 40 கோடி மக்க ளும் பாரதத் தாயின் மக்களானால் அவர்களுக்குள் உயர்வு தாழ்வு ஏன்? கான்பூர். சுக்கூர் கலவரங்கள் உண்டாவானேன்? 8 கோடி மக்கள் கல்வியிலாது மனிதத் தன்மையிலாது மாட்டிலும் மலத்திலும் கேடாக மதிக்கப்பட்டு, நடத்தப் பட்டு வருகின்றனரே. இந்தக்கொடுமை நடக்கக்காணும் பாரதத் தாயையா 40 கோடி மக்களைப்பெற்ற தாய் என்பது! மலடி யென்று அன்றோ கூறல் வேண்டும்.

கங்கை, காவிரி வற்றாது ஓடும் எங்கள் நாட்டில் எனக்கவி பாடலாம். யாகம் யோகம் அவதாரங்கள் மலிந்திருந்த காலத் தில் தான், கத்தியும் கண்ணாடியும் சீப்பும் சோப்பும் வைத் திருந்த சாதாரண வெள்ளையன் இந்நாட்டைப் பிடித்தான். வெட்கமில்லையா இதைக் கேட்க. அன்று மகாராட்டிரர் களும், ராஜபுத்திரர்களும், படையாட்சிகளும் இருந்தனரே. சிறப்புடன் வாழ்ந்தனரே. செங்கோல் செலுத்தினரே. இன்று எங்கே சென்றனர்? அன்று பல பிளவுள்ள மக்கள் இருந்த தால் தான், ஒன்றுக்கும் உபயோகமில்லையென ஆங்கிலேய ரால் வெறுக்கப்பட்ட வாழ்க்கையை வெறுத்துத் தற்கொலை செய்து கொள்ள நினைத்த சாதாரண கிளைவுக்கு நாடு காட்டிக் கொடுக்கப்பட்டது.

அன்றழுதது கேட்கவில்லையா?

இந்தியாவில் 574 சுதேச சமஸ்தானங்கள் உள்ளன. இது ஆச்சாரியார் அகராதிப்படி பாரதத்தாயை 574 துண்டு களாக்கிச் சித்திரவதை செய்ததாக, ஆகாதா? என்று கேட்கி றேன். எல்லை காட்டி நமது நாட்டை நமக்கும் இந்திய சர்க் காருக்கும் தொடர்பில்லாது சிலோனைப்போல பர்மாவைப் போல இங்கிலாந்துடன் சம்பந்தம் இருக்கட்டும் என்கிறோம்.

பாரதமாதாவின் புருவம் போன்றது. நேபாளம். அது சென்ற - 6,7 நூற்றாண்டாகத் தனியாக இருக்கிறதே. பாரத மாதாவின் புருவம் வெட்டப்பட்டதோ - அன்று பாரதமாதா அழுதது இவர்கள் காதில் கேட்க வில்லையா?

புதுச்சேரி, காரைக்கால், சந்திரநாகூர் ஆகியவை தனியே பிரஞ்சுக்காரர் வசம் இருக்கிறதே. இதற்காக வெள்ளையன் வெட்கப்பட்டானா? ஆச்சாரியார் அல றி £ரா? அன் றெல்லாம் இதனை யார் கேட்டார்கள்? மேலும் கோவா, டையூ, டாமன் முதலியன போர்ச்சுகீசியர் ஆளுகையில் உள்ளனவே; இவைகளெல்லாம், 'பாரதத்தாயைத் துண்டித்த தாகாதா? திராவிட நாடு பிரிக்கப்பட்டால் தானா தாயை வெட்டுவது போல் - தேசீயத்தோழர்களுக்குத் தோன்றுகிறது. திராவிட நாடு என்றும் தனித்தே இருந்து வந்தது என்ற சரித்திரம் தெரிந்தவர் எப்படி காங்கிரஸ்காரர் பேச்சை ஒப்ப முடியும்? எங்களுக்கும், மற்ற வகுப்பார்களுக்கும் உள்ள பேதங்களை ஆங்கிலேயரோ, பார்ப்பனரோ நீக்க இதுவரை முயற்சித்தார்களா? 150 வருட ஆங்கில ஆட்சியும், 15 வருட காந்தீயமும் இதற்கு என்ன மார்க்கம் காட்டிற்று? இந்து முஸ்லிம் ஒற்றுமையை உண்டாக்கினரா? மகாத்மா, படேல் பஜாஜ்களால் பலநாள் முயன்றும் முடியாத ஒற்றுமையை சேர்க்க முடியாத நாட்டை ஒன்று சேர்ப்பது எந்த விதம்? நாட்டைத் துண்டாக்கிவிட்டால் அன்னியன் எளிதில் பிடித்து விடுவான் என்கின்றார்கள். இத்தாலி, அபிசீனியாவை விட பெரிய நாடா? ஜப்பான், சீனாவை விடப் பரந்த தேசமா? இங்கிலாந்து, இந்தியாவைவிடப் பெரிய நாடா? அபிசீனியாவும் சீனாவும் இந்தியாவும் ஏன் அவை களிடம் திண்டாடுகின்றன?

சிறிய பின்லாந்து எப்படி பெரிய ரஷ்யாவுடன் பல நாள் போரில் - சமாளித்தது. ஜெர்மனி எப்படி அய்ரோப்பாவையே ஆட்டுகிறது? காரணம் விஞ்ஞானமல்லவா?

ஒரு நாட்டின் பாதுகாப்பு அதன் பரந்த தன்மையால் இல்லை. அம்மக்களின் போர்த்திறன், பயிற்சி, விஞ்ஞான வளர்ச்சி, அதன் மூலம் அமைக்கப்படும் ராணு வம் இவை களினால் தான், பாதுகாப்பு உண்டாகும்.

ஆரியருக்கும் நமக்கும் வேற்றுமை அநேகம்

குஜராத், இந்துஸ்தான், ராஜபுதனம் மூன்றும் சேர்ந்த ஆரியர் வர்க்கம் அதோ நடுவில் மஞ்சள் வர்ணத்தால் காட்டப்பெற்றிருக்கிறது. படத்தில் அவ்வாரியர்கள், பூலோ கத்தை ஆதிசேஷன் தாங்குவதாகக் கூறி வாழட்டும். ஆனால் நாம் அதை நம்போம். நாம் நான்கு வருணம் கூடா தென்கிறோம். எனவே அவர்களுடன் நாம் ஒன்று பட்ட வர்களல்ல. நாம் கடவுள் உருவமில்லா தவர் என்கிறோம். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது நமது மறை. அவர்களோ கடவுள் பல அவதாரங்கள் எடுத்தார் என்றும், அவருக்கு மனைவி, மக்கள், கூத்தி, கேளிக்கை உண்டென் றும் நம்புகிறவர் கள். அத்தகையவர் தங்கியுள்ள ஆரிய வர்த்தத்துடன் நாம் சேர்ந்திருக்க முடியாது. அவர்கட்கும் நமக்கும் மதத்தில் வேற்றுமை. அரசியலில் வேற்றுமை. அவர்கள் கவுடில்யர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தை அரசியலில் அனுசரிப்பார்கள். அது, எதிரியைக் கொல்ல, பட்டத்திற்கு வர எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறுகிறது. விற்பனை வரி போடலாம் என்கிறது. அதனால் தான் ஆச்சாரியார் விற்பனை வரிபோட்டார் போலும்!

ஆனால் நமது திருக்குறள் அரசியலில் சகோதரத்து வத்தையும் சுதந்திரத்தையும், ஒழுக்கத்தையும் கூறு கிறது. ஆரியம் ஏகாதிபத்தியம் - எதேச்சாதிகாரத்தை விரும்புகிறது.

இனி, நமது நாட்டுப் பணம் நம்மிடையே நிற்ப தில்லை. பம்பாயில் 4-அடுக்கு மாளிகை தமிழனுக் குண்டா? சென்னை தங்கசாலைத் தெருவில் சென்று பாருங்கள். குஜராத்திகள் 4-அடுக்கு மாளிகையில் வாழ்கின்றனர்; தமிழன் வடநாடு சென்றால் தினம் 6 அணா கூலிக்கு அவ திப்பட்டு ரத்தம் சிந்துகிறான். இங்கு வந்த வடநாட்டார்கள் நமக்குத் தலைவர்களாய், குபேரர்களாய் மிளிர்கிறார்கள். இதைத் தடுக்கா விட்டால் வெள்ளையன் பிடிவிட்டதும் வட நாட்டானி டம் நாம் அடிமையாவோம்.

இந்த ஆரிய வர்த்தத்தின் ஆட்கள் கையிலேயே காங் கிரசும் இருக்கிறது. பிற இடங்களிலுள்ள போஸ், காரே நரி மன் நசுக்கப்பட்டனர். ஒரு ஜீவானந்தம், ஒரு முத்துராம லிங்கத் தேவர் கதி என்னாயிற்று? காங்கிரசி லிருந்து விடு படக் கருதினால் இந்த ஆரியர் வர்த்த ஆட்களிடமிருந்து விடுபட வேண்டும்.

பிரிந்தால் தான் பெருமை ஏற்படும்

கிரீஸ் ஒரு காலத்தில் உலகம் பூராவும் நாகரீகத்தை யும், கலையையும் பரப்பியது. அங்கு தான் சாக்ரடீஸ் தோன்றி உண்மை அழகு, மறுவுலகம் என்பவை யாவை எனக் கேள்வியை எழுப்பி மக்கள் மனோ நிலையை வளர்த்தார். அப்பொழுது தான் கிரீஸ் நாட்டுப் புகழ் ஓங்கியது. பின்னர் கிரீஸ், பிறநாடுகளின்  மீது ஆசை கொண்ட காலையில் தான் ஒழிந்தது . ஜூலியஸ் சீசரால் ரோம் புகழ்பெற்றது.

பக்கத்து நாடுகளின் மீது நாட்டம் செலுத்திய காலத்துத் தான் ரோம் ராஜ்யம் வீழ்ந்தது. ரஷ்யாவை நீக்கிவிட்டால் அய்ரோப்பாவும், இந்தியாவும் ஒரே அளவுள்ளனவாயி ருக்கும். அய்ரோப்பா ஒரு தேசமல்ல. ஒரு காலத்தில் ஹோலி ரோமன் எம்பயர், என்ற ராமராஜ்ய ஆட்சியின் கீழ் ஒன்றாயிருந்ததால்  ஜெர்மனி, பிரான்சு, பெல்ஜியம், ஸ்பெயின் எனக்கேள்விப்பட்டிருக்க முடியாது போயிருக் கும். இன்று தோன்றியுள்ள பல அரசியல் தலைவர்களைப் பெற்றிருக்க முடியாது. கரிபால்டி, மாஜினி, ரூசோ, வால்ட்டேர் முதலியவர்கள் தோன்றியிருக்கமாட்டார் கள். மக்கள் பிரிந்த பிறகுதான் நாட்டு நிலைக்கு தகுந்த வாறு கீர்த்தி பெருமை ஏற்பட்து. யூகோஸ்லேவேக்கியா, ஸ்விட்சர்லாந்து முதலிய சிறியநாடுகளிலிருந்து சிறந்த பொருள்கள் கடிகாரம் போன் றன நம் நாட்டில் வந்து விலையாகின்றன. அய்ரோப்பா ஒரே நாடல்ல: 32 நாடுகள் கொண்ட ஒரு கண்டம். அங்கு லித்வினியா போன்ற மிகச் சிறிய நாடுகள் அனுபவம் பெற்று தமக்கெனத் தனியே விமானப் படை, கப்பற்படை கட்டி நாட்டைக்காத்துக் கொள்கின்றன. திராவிட நாடு தனியானால் தன்னைத் தான் காத்துக்கொள்ள நிச்சயம் திறம் உண்டு.

ஜின்னாவின் சமூகம் வீர இஸ்லாமிய பரம்பரையினர் மேலே அதாவது பச்சை வர்ணம் தீட்டப்பட்ட இடத்தில் அமர்ந்து விட்டால் எதிரி உள்ளே இந்தியா விற்குள் வரமுடியுமா? தெற்கே வித்தியமலையில் நாம் ஒரு மாக்னாட் அரண் அமைத்து விடுவோம். திராவிடரும் முஸ்லிமும் இரண்டு பக்கத்திலும் நெருக்க ஆரம்பித்தால் நடுவிலுள்ள ஆரியவர்த்தத்தின் கதியென்ன? இதை நாம் எண்ண வில்லை. இதை ஆச்சாரியார் உணருகிறார். எனவே தான் இந்தியா பிரிக்கப்பட்டால் ஆரியம் அழியுமே என அஞ்சு கிறார். தனித்தமிழ் நாடு கிடைத்து விட்டால் தமிழன் கை ராட்டையையோ, தகளியையோ நம்பான் என எண்ணி, நலிகிறார்.

நாம் ஏன் பிரிவினை விரும்புகிறோம்

இனி தமிழன் கலிங்கத்துப் பரணியை எண்ணி சிலப்பதி காரத்தை, நாயக மன்னரை மறவர் படை யாட்சியர் வீரத்தை எண்ணி ஆளுவான். தமிழ் நாட் டை யாராலும் பிடிக்க முடியாது. நாம் பிறர்க்கடிமையில்லாது சுதந்திரமாக வாழத் தான் பிரிவினையை விரும்புறோம் இல்லையெனக் கூற முடியாது. ... வாரன் ஹேஸ்டிக் காலத்தில் கட்டியாள வசதி யாயிருக்கும் பொருட்டு இந்தியா அரசியலில் ஒரு நாடாக இணைக்கப்பட் டது. இதனை சரித்திர ஆசிரியர்களே கூறியுள்ளார்கள். பிரித்துவிட்டால் நமக்கு ஆபத்து என்று பிரிட்டிஷாரும் நினைக்கலாம். பிரி என்றால் வெள்ளையர் கோபம் கொள்ளலாம். ஆரியர் அலற லாம், அவர்கள் அலறலுக்காக ஆரிய ஆழ்கடலுள் வீழ்ந்த நாம் சும்மாயிருக்க முடியுமா?

சில எதிரிகள் முஸ்லிம்களைத் தூண்டிவிட அப்படி நாடு பிரிக்கப்பட்டால் தஞ்சாவூர் முஸ்லிம் பஞ்சாபுக்குப் போக வேண்டும் என்கின்றனர். முஸ்லிம் களை ஒரு காலத்தும் நாங்கள் போக விடமாட்டோம். ஆண்டவன் பூஜைக்கு ஆபாச மேளமடிக்கும் வழக்கமெங்களுக்கில்லை; எனவே, முஸ்லிம்களுக்கும் எங்களுக்கும் மதச்சண்டை உண்டாகாது, முஸ்லிம் இடையேயும் சாதிபேதமில்லை. எங்களிடையேயும் சாதிபேதமில்லை. நாங்கள் இருவரும் வீரத்தை, வெற் றியை, உண்மையை, ஒழுக்தத்தை விரும்புகிறவர்கள் இங்குள்ள முஸ்லிம்களை நாங்கள் ஆதரிப்போம். பஞ்சாபிலுள்ள திராவிடரை சிக்கந்தர் காப்பாற்றுவார். ஆரியனுக்குத்தான் ஆபத்து. அத்திராவிட ஆட்சியில் உச்சிக் குடுமியும், நாமமும் பிறவும் துலங்க இருக்கலாம். ஆனால் அவைகளை வணங்கினால் உனக்கு மோட்சம் என்று ஆரியன் இன்று அளந்து தமிழனை ஏமாளியாக்குகிறானே .அது நடக்காது. நெருப்பு ஆற்றின் மீது மயிர்ப்பாலம் இருக்கும் கதையை அளக்க முடியாது. எனவே ஆரியனுக்கும் நமக்கும் பேரம் உண்டே ஒழிய முஸ்லீமுக்கும் நமக்கும் வேறுபாடு இல்லை.

நாம் ஏன் முயலக்கூடாது

இதனால் தான் நாடு பிரிக்கும் எண்ணம் ஏன் ஏற்பட்டது என்பதை புத்திசாலிகள் எண்ணிப்பார்க்க வேண்டும் என சர்.சண்முகம் கூறினார். அன்று இந் திக்காகப் பலரை சிறைக்கனுப்பியது ஆச்சாரியாராட்சி. 27 மாதம் நாம் பட்ட கஷ்டம் போதும். இனியும் எதிர்காலம் இப்படியே இருக்குமானால் பெரியார் கூறியது போல நாட்டில் ரத்த ஆறுகள் ஓடும், என் று. அய்ரோப்பாவில் சண்டை பிரிட்டன் ஒரு ஏக்கர் நிலத்துக்கோ, தங்கக்சுரங்கத்துக்கோ சண்டை போட வில்லை. பிற நாட்டின் மீது ஒரு நாட்டு கலையை, முறையை திணிப்பதைத் தடுக்கத்தான் போர். அதல சுதல பாதாள லோகங்களைப்பற்றி ஆரியன் பேசலாம். அங்கு போவதானாலும் போகலாம். ஆனால் அங்கு போகலாம் வா, என திராவிடனை அழைக்க முடியாது. அந்தக் கட்டுக்கதைக்கு தமிழன் இரையாக மாட்டான். பிரிட்டன் சும்மா செல்லவில்லை ஒரு நாட்டு அரசியல் முறையோ, மொழியோ, பிறவோ அந்தநாட்டுக்கே உரிமையானது. அதை அழிக்கக் கூடாது; பிறர்பறிக்கக் கூடாது என்பதற் காகவேதான் பிணக்குவியலாக ரத்த ஆறு ஓட்டி தங்கள்  மொழி, கலை முதலியவைகளை சிறு நாட்டினர் கூட பாது காத்துக் கொள்கின்றனர் என்றால் நாம் ஏன் நம்மைப் பாது காத்துக் கொள்ள முயலலாகாது? நம்மிடம் குண்டுகளில்லை; ஆனால் மனவுறுதியுண்டு. ஹிட்லர் குணங்களில்லாது நம் மைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய பெரியார் உண்டு.

கிண்டல் செய்வதாக மனதில் எண்ணிக் கொண்டு விகடன், ஜின்னாவை பாதுஷாவாக படம் போட்டு, அவர் எதிரிலே, பெரியார், கத்தியோடு நிற்பதாகக் காட்சி வரைந் துள்ளது. அது. வெறும் கிண்டலாகப் போய்விடாது! ஒரு காலம் வரத்தான் போகிறது. ஜனாப் ஜின்னா, முஸ்லிம் நாட்டை ஆளத்தான் போகிறார், பாதுஷாவாகவல்ல, பிரியமான தலைவராக. அச்சமயத் தில் திராவிட நாட்டைத் திரா விடருக்கென, இதனால் தான் துண்டித்தேன் என பெரியார். ஜின்னாவிடம் தமிழர் வெற்றி  என்ற கத்தியைக் காட்டத்தான் போகிறார். படம் ஆரியருக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் - புகட்டப் போகிறது.

வெட்டு ஒன்று துண்டு எத்தனை என்று விகடன் கேட்கிறான். ஒரே வெட்டில் 3 கேடுகளைத் துண்டித்து எறிவோம். ஒன்று பார்ப்பனீயம், இரண்டாவது ஏகாதிபத்தியம் மூன்றாவது மூடப்பழக்கம். இவை மூன் றும் ஒழிய வேண்டும்.

- விடுதலை: 11.4.1940

- விடுதலை: 31.1.20,3.2.20

Saturday, 15 February 2020

சென்னையில் உள்ள ஊடக தொலைபேசி எண்கள்

சென்னையில் உள்ள மீடியாக்கள் போன் நம்பர் உங்கள் தொலைபேசியில் வைத்துக் கொள்ளுங்கள். எதற்காவுது தேவைப்படும்

 தந்தி டிவி 
📞 044 42907777
📞 044 42907789
📞 044 42907714
📞 044 42907720
📲 88704 76091
நியூஸ் 7
📞 044 40777777
📞 044 40777780
📞 044 40777799
புதிய தலைமுறை
📞 044 45969500
📲 90030 75000
சன் நியூஸ்
📞 044 44676767
📞 044 40676161
ஜெயா டிவி
📞 044 4396 0000
கலைஞர் டிவி
📞 044 24307777
📞 044 24307878
📞 044 24307800
📞 044 24335053
சத்யம் டிவி
📞 044 25909950
📞 044 25909951
கேப்டன் டிவி
📞 044 30134567
தினதந்தி
📞 044 253030000
தினமலர்
📞 044 28540001
தினவேல்
📞 9944444744
தினகரன்
I📞 044 42209191
தினமணி
📞 044 23457601

பயனுள்ள தகவல் அனுப்பியவர்:
பொதுத் தகவல் மையம் .

Monday, 10 February 2020

தமிழர் பண்பாட்டு இயக்கம் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில்கள்( பார்ப்பனர்- ஆரியர்- திராவிடர்)

தமிழர் பண்பாட்டு இயக்கம் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில்கள்
1. கைபர் - போலன் கணவாய் வழியாக வந்தது ஆரியர்களா ? பார்ப்பனர்களா ? 
தமிழில் பார்ப்பனர் எனப்படும் ஆரியர்.
2. தமிழைச் சிதைத்தது ஆரியப் பிராமணக் கூட்டமா ? பார்பனக் கூட்டமா ?
ஆரியப் பார்ப்பனக் கூட்டம்.
3. பார்ப்பனர் எனும் குலப்பிரிவு எங்கு, எப்போது தோன்றியது ? 
தமிழர்கள் பார்த்துவந்த இளைஞர் சார்ந்த சேர்த்துவைக்கும் தொழிலை பறித்துக்கொண்டு அதனைவைத்து புரோகிதத் தொழிலை செய்துகொண்டு வரும் ஆரியக் கூட்டமே பார்ப்பனக் குலம்.
4. தொழில் அடிப்படையில் தோன்றிய குலப்பிரிவுகளை, கடவுளின் பெயரால் சாதியாய் நிலை நிறுத்தியது ஆரிய (திராவிட) வந்தேறிக் கூட்டமா ? பார்ப்பனர் கூட்டமா ? 
ஆரிய (பார்ப்பன) வந்தேறிக் கூட்டம் 
5. பழங்காலத்தில் இந்தியா முழுவதும் பரவிய மக்கள் கூட்டம் பேசிய மொழி எது ? தமிழ் மொழியா ? திராவிட மொழியா ?
திராவிட மொழி (பழந்தமிழ்)
6. உங்களின் கருத்துப்படி திராவிடர்கள் தமிழர், தமிழர்தான் திராவிடர்கள் என்றால், மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் என்றான பின்பும் இன்னும் தமிழர்களைத் திராவிடர்கள் என்று அழைப்பதின் உள்நோக்கம் என்ன ?
திராவிடர்களின் ஒரு பிரிவினரே இன்றைய தமிழர்கள், அதனால் தமிழர்கள் திராவிடர்கள். தமிழர்கள் என்று சொல்லக்கூடாது என்று சொல்லவில்லை, நீங்கள் தான் திராவிடர்கள் என்று சொல்லக்கூடாது என்று சொல்கிறீர்கள். ‘தமிழ் நாடு’ என்று பெயர் வைக்க சொன்னவர் தந்தை பெரியார். திராவிடர் என்ற பெயரை எந்த பார்ப்பனரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். பாதுகாப்புக்காக தமிழர் என்று சொல்லிக்கொள்ள தயாராக இருப்பார்கள். அதனால் தான் தந்தை பெரியார்.இயக்கமாக கட்டமைக்கும் போது பாதுகாப்பு கருதி பார்ப்பனர்கள் அஞ்சும் ‘திராவிடர்’ என்ற பெயரை பயன்படுத்தினார். தமிழர் என்று பார்ப்பனர்கள் பாதுகாப்புக்காக சொல்லிக்கொண்டாலும் தமிழை ‘நீசபாஷை’ என்று சொல்பவர்கள் தான் பார்ப்பனர்கள். ஆட்சிமொழிக் காவலர் இராமலிங்கனாரும, இராமானுஜ தாத்தாச்சாரியும் இதை உறுதிப்படுத்தியுற்றனர். 
7. தமிழ்நாட்டுக் கோயில்களில் பூசாரியாய் இருப்பவர்களில் மிகப் பெரும்பான்மையோர் தெலுங்கு, மராட்டி மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட ஆரியப் பிராமணர்களா ? தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பார்ப்பனர்களா ?
தமிழர் அர்ச்கராக வரக்கூடாது என்பதில் எல்லாப் பார்ப்பனர்களும் குறியாகத்தானே உள்ளனர். தமிழனை தாழ்ந்த பிறவி என்றல்லவா சொல்கின்றனர்.
- செ.ர.பார்த்தசாரதி
- 10.2.2013ல் எனது முகநூல் பதிவு

Fundamental Duties - அடிப்படை கடமைகள்


It shall be the duty of every citizen of India Art 51-A: (h) to develop the Scientific Temper, Humanism and the Spirit of Inquiry and Reform

அரசியல் சட்டத்தில் உள்ள அடிப்படை கடமைகள் என்பது அறிவியல் மனப்பான் மையை வளர்ப்பது மனித நேயத்தை முன்னெடுத்துச் செல்வது ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்பது. சீர்திருத்தம் செய்வது என் பதைப் பற்றிச் சொல்லப் பட்டிருக்கிறது.

இதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதன்படி நடக்க வேண்டும். அப்பொழுதுதான் அரசியல் சட்டத்தை பின்பற்றி நடப்பவர்களாவோம்.

கி. வீரமணி, எம்.ஏ.,பி.எல்..

விடுதலை 14-08-2008

- விடுதலை ஞாயிறு மலர், 1.2. 20

Sunday, 9 February 2020

இந்திய சமூகம் பற்றி காரல் மார்க்ஸ்


“ஆதிகாலத்துக்குச் சென்று ஆராய்ந்தால், நம்ப முடியாத கட்டுக்கதைகள் “மூலம், இந்தியாவில் தொல்லைகளைத் துவக்கி வைத்தவர்கள் பார்ப்பனர் கள் தான்.’ உலகில் கிருஸ் தவ சகாப்தம் உதயமாவதற்கு முன்பே , இந்தக் காரியங்களைச் செய்தவர்கள் அவர்கள். கிராமங்களில்   உண்டாக்கப்பட்ட சிறுசிறு  வகுப்புகள், ஜாதிபிரிவினை களாலும், உயர்வு தாழ்வுப்பிரிவினைகளாலும் அடி மைப்படுத்தப்பட்டன.  இந்தப் பேதங்கள் மனிதனை, வெளியிலிருக்கும். நிலைமைகளுக்கு அடிமையாக்கின.

சூழ்நிலைகளை ஆட்டிப் படைக்கவேண்டிய வன் அவைகளுக்கு அடி பணிய  நேர்ந்தது.  இதனால் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டிய சமுதாயம் மாறாத நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. இதனால் மிருகங்களை வணங்க வேண்டியவனானான்.

இயற்கையைக் கட்டி ஆள வேண் டிய மனிதன், குரங்கை அனுமான் என்றும், பசுவை சப்பலா என்றும் நம்பிக்கொண்டு, அடி பணிந்து கும்பிடலானான்.”

- காரல் மார்க்ஸ் (British Rule in India என்ற நூலில்)

 - விடுதலை ஞாயிறு மலர் 18 1 20

ஹிரேன்முகர்ஜி (இரண்டு தலைவர்கள்)

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் வரலாறு படித்து முடித்த பேராசிரியரும், சிறந்த நாடாளுமன்றவாதியுமான ஹிரேன்முகர்ஜி ஒரு சமயம் என்னிடம் கேட்டார். இன்னும் 500 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவில் நினைவு கூரத்தக்க இருவர் யார்? ‘காந்தி’ என்று பதிலளித்தேன். காந்தி, புத்தரைப் பின்பற்றியவர் என்றார். சரி ‘நேரு’ என்றேன். நேரு, அசோகரைப் போன்றவர் என்றார். பின்னர் பேராசிரியர் ஹிரேன்முகர்ஜியே விடையும் சொன்னார்: ‘500 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவில் நினைவு கூரத்தக்கவர்களாக பெரியாரும், சிங்காரவேலரும் இருப்பார்கள் என்றார்.

நான் வியப்படைந்தேன்.

-கே.டி.கே. தங்கமணி

(பொதுவுடைமை இயக்கத் தலைவர்)

-  விடுதலை ஞாயிறு மலர், 18.120

தை மாதத்தை ஆண்டின் முதல் மாதமாக குறிப்பிடும் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு


ராமநாதபுரம் மாவட்டம் கீழக் கரையில் வள்ளல் சீதக்காதி சாலையில்  உள்ள ஜும்மா பள்ளி வாசலில் காலச்சக்கர பழங்கால கல்வெட்டு ஒன்று உள்ளது. அந்த கல்வெட்டில் தை மாதத்தை தமிழ் வருட ஆரம்ப மாதமாக குறிக்கப்பட்டு உள்ளது. அதாவது சூரியன் உத்ராயணத்தில் பிரவே சிக்கும் மாதமாகிய தை மாதத் தில் ஆரம்பித்து ஆனியில் முடிவுற்று பின் அங்கிருந்து தட்சனாயணத்தில் பிரவேசிக்கும் மாதமாகிய ஆடியில் ஆரம் பித்து மார்கழியில் முடிவடைகிறது.

முற்காலத்தில் கோள்களின் சுழற்சியை அடிப்படையாக கொண்டே காலத்தை கணித்துள்ளார்கள். பூமியின் சுழற்சியால் சூரியன் பூமியின் தென்பகுதியில் இருந்து வடபகுதியின் கடைசிக்கும், வடபகுதியில் இருந்து தென்பகுதியின் கடைசிக்கும் செல்ல முறையே 6 மாத காலங்கள் எடுத்துக்கொள்கிறது.

மார்கழியில் அறுவடை முடித்து புது அரிசி கொண்டு சூரியனுக்கு பொங்கலிட்டு உழவர்கள் தை மாதத்தை வரவேற்கின்றனர். இந்த வழக்கம் பண்டைய காலத்தில் இருந்தே தொடர்கிறது என்பதை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. ராஜராஜ சோழன் தன் களஞ்சியத்தில் உள்ள பழைய தானியங்களை எடுத்து தர்மம் செய்துவிட்டு புதிய தானியங்களை கொள்முதல் செய்துவிடுவாராம்.

இதுபோன்ற பல சிறப்புகள் தை மாதத்திற்கு இருந்து வருகிறது.இதன்படி 2006.1.1ஆம் காலத்தில் இருந்த தமிழக அரசு தை மாதப் பிறப்பை தமிழ் புத்தாண்டாக அறிவித்தது.

இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த அறிவிப்பை நீக்கி மீண்டும் சித்திரை மாதத்தின் முதல் தேதியே தமிழ் புத்தாண்டு பிறப்பாக அறிவிக்கப்பட்டது. தற்போது காணப்பட்டுள்ள முன்னோர்களின் பழங்கால கல்வெட்டு தை மாதத்தை தமிழ் மாதத்தின் தொடக்க மாதமாக ஆரம்பித்துள்ளதை நிரூபித்துள்ளது.

300 ஆண்டு களுக்கு முன்பு வரை தை மாதத்தை தமிழ் வருடத்தின் முதல் மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக இந்த பழங்கால கல்வெட்டு உள்ளது. இந்த தகவலை கீழக்கரை வரலாற்று தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு தெரிவித்தார்.

- விடுதலை ஞாயிறு மலர் 11 1 20

திராவிடம் மறைப்பு அரசியல் (திராவிட மொழி ஞாயிறு)


தனித்தமிழியக்க முன்னோடிகளில் ஒருவரும், தன்னிகரற்ற தமிழ் அறிஞருமான 'ஞா.தேவநேயப் பாவாணர்' அவர்களை 'மொழிஞாயிறு' என அழைக்கின்றோம்.

அறிஞர் பாவாணருக்கு  மொழிஞாயிறு பட்டம் , எந்த ஆண்டு, எந்த அமைப்பால் வழங்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள முயன்றபோது, புதிய செய்தி ஒன்று கிடைத்தது. 4.10.1957 ஆம் ஆண்டு சேலம் தமிழ்ப் பேரவையினர் பாராட்டு விழா நடத் திப் பாவாணருக்கும், பொன்னம்பலனாருக்கும் விரு துகள் வழங்கிச் சிறப்பித்துள்ளனர். இருவருக்குமான விருதுகள் மற்றும் பொற்கிழிகளைத் தந்தை பெரியார் வழங்கியுள்ளார். அவ்விழாவில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரும் கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கியுள்ளார். பொன்னம்பலனாருக்கு அன்று வழங்கப்பட்ட பட்டம்தான் "தமிழ் மறவர்" என்பது. இச்செய்திகள் அனைத்தும், பாவாணரின் இளைய மகனார் மணி என்ற தே.மணிமன்றவாணன் எழுதியுள்ள, பாவாணர் நினைவலைகள் (பக்.197) என்னும் நூலில் உள்ளன.

இவற்றுள் ஒரு செய்தி முதன்மையானது. அறிஞர் பாவாணருக்கு அன்று வழங் கப்பட்ட பட்டம் திராவிட மொழிநூல் ஞாயிறு என்பதுதானே அன்றி மொழி ஞாயிறு என்பதன்று. சுருக்கம் கருதி திராவிட என்னும் சொல் நீக்கப்பட்டுள்ளதாக எண்ணிவிடக் கூடாது. மூதறிஞர் ராஜாஜி நகர் என்பது, எம்.ஆர்.நகர் என்று சுருங்குவதில்லை. ஆனால் தியாகராயர் நகர் என்பது தி.நகர் என்றும், கலைஞர் கருணாநிதி நகர் என்பது கே.கே.நகர் என்றும் சுருங்கிவிடுகின்றது. திராவிட மறைப்பு வேலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இனி நாம் பாவாணரைக் குறிப்பிடும்போதெல்லாம் திராவிட மொழிநூல் ஞாயிறு என்றே எழுதுவோம். சுருக்கம் தேவைப்படின்  திராவிட ஞாயிறு  என்போம்.

- தேவநேய பாவாணர் நினைவு நாள் (ஜன. 15)சிந்தனை

- விடுதலை ஞாயிறு மலர், 11.1.20

Wednesday, 5 February 2020

அனைத்து சாதியினர் அர்ச்சகர் உரிமை!

அனைத்து சாதியினர் அர்ச்சகர் உரிமை - அறுபது ஆண்டு கால தொடர் போராட்டம்!

அர்ச்சகர் என்பது வேலைவாய்ப்பு பிரச்சனை அல்ல.
மான உரிமைப் போராட்டம்!
சாதி தீண்டாமை ஒழிப்பு அறப்போர்!.

பார்ப்பனரல்லாதோர் அய்.ஏ.எஸ் ஆகலாம்.அய்.பி.எஸ் ஆகலாம். குடியரசுத் தலைவராகலாம். ஒரு குருக்கள் ஆக முடியாது என்பது என்ன நியாயம்?

"தீண்டாமை தண்டிக்கப்படவேண்டிய குற்றம்" என்று சொல்லும் இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் கோவில் கருவறைக்குள் பிராமணரல்லாதார் அர்ச்சனை செய்தால் சாமி தீட்டுப்பட்டுவிடும் என வைகாசன ஆகமம் கூறுவதை உள்ளடக்கியதாக இருக்கும் 25,26 சட்டப்பிரிவுகளை மானமுள்ள ஒருவனால் எப்படி ஏற்க முடியும்?

1950 களில் தந்தை பெரியாரால் துவக்கப்பட்ட இந்தப்போராட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

1970 ல் பார்ப்பனரல்லாதார் கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார் பெரியார்.

1972 ல் வாரிசு உரிமை அர்ச்சகப் பணி நியமனத்தினை ஒழித்து, இந்து அறநிலையச் சட்டதிருத்தத்தை கொண்டுவந்தார் கருணாநிதி. தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் பார்ப்பனர்கள். அர்ச்சகர்கள் கோவில் ஊழியர்கள்தான் என்றும், வாரிசு உரிமைப்படி பணி நியமனம் செய்வது  செல்லாது என்றும் சொல்லி தமிழக அரசின் சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்க முடியாது என்று அறிவித்தது உச்சநீதிமன்றம்.

அதே சமயம் "ஆகமங்களின் படி குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள்தான் அர்ச்சகராக முடியும். மேற்படி இனத்தவர்கள் கருவறைக்குள் நுழைந்தால் சாமி தீட்டாகிவிடும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு அர்ச்சகர்கள் நியமணம் செய்யப்படவேண்டும்" எனவும் உச்சநீதிமன்றம் கூறியது.

1979ல் எம்.ஜி.ஆர் அவர்களால் அமைக்கப்பட்ட நீதிபதி மகராசன் தலைமையிலான குழு 1982ல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அர்ச்சகர்கள் சம்பளம் பெறுவது உட்பட பல்வேறு ஆகமவிதி மீறல்கள் கோவில்களில் நடைபெறுவதை சுட்டிக் காட்டியது.
 
1991 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் வேத ஆகமக்கல்லூரிகள் திறக்கப்பட இருப்பதாகவும் அதில் சமூக நீதி அடிப்படையில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் இதில் பயிற்சி பெற்றவர்கள் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் அர்ச்சகர்களாக பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.

2002 ம் ஆண்டு கேரளாவில் ஈழவர் சாதியைச் சார்ந்த ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஆதித்யன் என்பவர் தொடுத்த வழக்கில், பார்ப்பனரல்லாதவர் அர்ச்சகர் ஆகலாம். மரபு பழக்கத்தின்படி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்பதை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. சட்டப்பிரிவு 17 ன்படி பிறப்பால் பாகுபாடு பார்ப்பது தீண்டாமைக்குற்றம். மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் கூறியது.

2006 ம் ஆண்டு  மேற்படி தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி இந்து அறநிலையச் சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்த அரசாணையையும் பின்னர் அர்ச்சகர் நியமனத்தில் வாரிசுரிமையை ஒழிக்கும் வகையில் அவசர சட்டத்தையும் கொண்டுவந்தார்.

மதுரையைச் சேர்ந்த ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சங்கம் உடனே 1972 உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடிப்படையாக வைத்து அவசர சட்டத்திற்கு தடையாணை வாங்கி விட்டார்கள்.

உச்ச நீதிமன்றத் தடையால் அர்ச்சகர் பள்ளியில் முறையாக ஆகமம் பயின்ற 206 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் உடனடியாக வழங்கப்படாமல் பெரிய போராட்டத்திற்கு பின் நீண்ட நாட்கள் கழித்தே வழங்கப்பட்டது. சான்றிதழ் கிடைத்தும் அவர்களுக்கு அர்ச்சகர் பணி கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஆகம விதிப்படித்தான் எல்லாம் நடக்கிறதா?

ஆகமம் உண்டியல் வைத்துகொள்ள அனுமதிக்கிறதா?

ஆகம விதிப்படி மின் விளக்குகள் பொருத்தப்படலாமா?

அர்ச்சகர்கள் ஊதியம் பெறலாமா?

ஆகம விதிப்படித்தான் கோவில்கள் அமைந்துள்ளனவா?

அர்ச்சகர் பணிநியமனத்தில் மட்டும் ஆகமவிதிப்படி சாதி பார்ப்பதாக சொல்லப்படுவது ஏன்?

2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உச்சநீதிமன்ற வழக்கு இறுதி விசாரணைக்கு வந்தபோது தற்போதைய தமிழக அரசு வழக்கறிஞர் இப்பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்ப்பதாக கூறி கால அவகாசம் கோரினார்.

எட்டு மாதங்களைக் கடந்தும் எந்த முயற்சியும் எடுக்காத தமிழக அரசை கண்டித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், உட்பட பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

சட்டம் திருத்தப்படுமா? அல்லது அர்ச்சகர் பணி நியமனத்தில் அரசு திருத்தம் கொண்டுவருமா? என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் சாதி தீண்டாமை பேசும் ஆதிக்க சாதியினர் ஒருபோதும் திருந்தமாட்டார்களா? என்ற கேள்விதான் ஓங்கி ஒலித்துகொண்டிருக்கிறது.

-  கீற்று இணையம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் சிக்கலும்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் சிக்கலும்

8.10.69 இல் பெரியார் அறிக்கை

 ‘காலம் வீணாகிப் போய்க் கொண்டிருக்கிறதுஅய்ப்பசி  மாத வாக்கில் ‘சூத்திரன்’ என்கிற இழிவு நீக்கம் கிளர்ச்சி துவக்கப்படும்அதில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் தெரிவியுங்கள்’ என்று தந்தை பெரியார் அறிக்கை விடுத்தார்.

போராட்டக்களங்களில் மக்களை ஈடுபடுத்துவதற்கு தந்தை பெரியார் கையாண்ட அணுகு முறைகளில் இதுவும்ஒன்றுஇப் போராட்டத்திற்கு ‘கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி’ எனப் பெயரிட்டார். 2000/க்கு மேற்பட்டோர் தங்களை இணைத்துக் கொண்டனர்.

1970 சனவரி 26 ஆம் நாள் கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி நடை பெறும் என பெரியார் நாள் குறித்தார். 16.11.69 இல் திருச்சி ‘பெரியார் மாளிகையில் நடைபெற்ற திராவிடர் கழக மைய நிர்வாகக் கமிட்டி கூட்டத்தில் கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சியின் அவசியத்தை பெரியார் விளக்கினார்.

இதனைத் தொடர்ந்து 17.1.70 இல் அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்கள் தனது அறிக்கையில்,

அர்ச்சகர்களுக்கென சில தகுதிகள் இருக்க வேண்டும்புனிதத் தன்மைகளை அவர்கள் கடைப்பிடித்தாக வேண்டும்அதற்குரியப் பயிற்சிகளை அவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்அதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லைஅப்படிப் பயிற்சி பெறுகிறவர்கள் எந்த வகுப்பினராயிருந்தாலும் அவர்கள் அதில் தேர்ச்சி பெற்று அர்ச்சகராக இருக்கவும்அதேசமயம் பரம்பரை அர்ச்சகர் வீட்டுப் பிள்ளைகள் அர்ச்சகராக விரும்பினால் அவர்களுக்கு முதல் சலுகை அளிப்பது பற்றியும் அரசு பரிசீலித்துக் கொண்டிருக்கிறதுஇந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டு அதன்படிஅர்ச்சகப் பதவிகளை பிறப்பினால் கணக்கிடாமல் தகுதியொன்றினால் கணக்கிடப்படக்கூடிய நாள் வந்து விடுமானால் ஆண்டவனைத் தொழ ஆலயம் செல்லுவோர் சாதி வேறுபாடின்றி கர்ப்பக்கிரகம் வரையில் செல்லுவதற்குத் தடையில்லை என்பதும் கொள்கை ரீதியாக ஒப்புக் கொண்டதாகிவிடும்ஆகவே இந்த நன்னிலை ஏற்பட ஆலயங்களில் ஆண்டவன் முன்னே சாதியின் பெயரால் மற்றவர்களுக்கு இழைக்கப்படும் இழிவான அநீதி அகன்றிட விதிமுறைகள் செய்திட அரசு முன் வருகின்றது என்ற உறுதிமொழி யினை ஏற்று பெரியார் அவர்கள் தான் திட்டமிட்டிருக்கிற கிளர்ச்சி யினை நிறுத்தி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி ஒத்தி வைக்கப்படுதல்

தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கிளர்ச்சியின் தத்துவத்தை நல்ல வண்ணம் புரிந்து செயல்பட முனைந்துள்ள அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் 26.1.70 அன்று நடை பெற இருந்த கிளர்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது’ என்று தந்தை பெரியார் அவர்கள் அறிக்கை வெளியிட்டார் .

இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் 1970/க்கான சட்டத் திருத்தம் 1971இல் தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டதுஇதன் நோக்கம் இரண்டு.

முதலாவதுபரம்பரைப் பரம்பரையாக அர்ச்சகராக இருந்துவரும் பார்ப்பனக் குடும்பங்களின் வாரிசு முறை மாற வேண்டும்இரண்டாவதுகோயில் வழிபாட்டு முறைகள்சடங்குகள் பழக்க வழக்கங்கள் இவைகளில் பயிற்சிப் பெற்று சான்றிதழ் வாங்கியவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் அர்ச்சகராகலாம்.

இதை எதிர்த்துப் பார்ப்பனர்கள் 12 ரிட் மனுக்களை உச்ச வழக்காடு மன்றத்தில் தாக்கல் செய்தனர்.  இவர்களுக்கு ஆதரவாக பல்கிவாலாபராசரண் போன்ற பிரபல வழக்கறிஞர்கள் வாதாடினர்பல்கிவாலாவை வாதாட வைத்ததில் இராசகோபாலாச்சாரிக்கு முக்கியப் பங்குண்டுஐந்து நீதிபதிகள் கொண்ட ‘பென்ச்’ பாலேகர் தலைமையில் அமைக்கப்பட்டதுஇவருடைய தந்தையார் மராத்திய அர்ச்சகப் பார்ப்பனர் என்று திராவிடர் கழகப் பொதுச்செயலர் வீரமணி அவர் கள் கூறியுள்ளார்.

தமிழக அரசின் சட்டத்திருத்தம் செல்லும் – நீதிபதிகள்

நீதிபதி பாலேகர் அளித்தத் தீர்ப்பில் ‘தமிழ் நாடு அரசு நிறை வேற்றிய சட்டம் செல்லுபடியாகும்அர்ச்சகர்களை டிரஸ்டிகள் நிய மிக்கும் செயல் மதக் காரியம் அல்ல என்றும் அது மதச் சார்பற்ற காரியமே என்றும் தீர்ப்பளித்துள்ளதுஇதன் காரணமாக 12 ரிட் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டனஎனினும் அனைத்து சாதி யினரும் அர்ச்சகராகலாம் என்னும் நிலை இன்றளவில் வந்த பாடில்லைஇதற்கு காரணம் என்ன?

கடவுளை மறுத்தகோவிலே கூடாது என்ற பெரியார்இதற்காகப் போராடக் காரணம்  என்ன?
நான் அடித்த சாதிப்பாம்பு என்னிடம் அடி வாங்கிகடைசியில் கோயில் கருவறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டுள்ளதுஅங்கு இருந்தும் மனித உரிமை அடிப்படையில் அதனை விரட்ட வேண்டும்’ என்று தந்தை பெரியார் அறைகூவல் விடுத்தார்இதுதானே தந்தை பெரியாரின் போராட்டக் காரணமாக இருந்ததுஇத்தீர்ப்பு வெளியானபோது இராச கோபாலாச்சாரி ‘கல்கி’ ஏட்டில்,

அர்ச்சகர்கள் போட்ட ‘ரிட்’ விண்ணப்பங்களை சுப்ரீம் கோர்ட்டில் தள்ளிவிட்டார்கள் என்று சுருக்கமான செய்திகளை பத்திரிக்கைகளில் வாசகர்கள் படித்திருக்கலாம்பரம்பரை பாத்தியதைப் பற்றிச் சுப்ரீம் கோர்ட்டாருடைய அபிப்ராயம் இது என்ற அளவில் இந்தச் செய்தி சரியானதேஆனால் ‘இந்து’ பத்திரிக்கை (15.3.72) 10 ஆம் பக்கத்திலும் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ (16.3.72) 10 ஆம் பக்கத்திலும் சுப்ரீம் கோர்ட்டா ருடைய முழுத் தீர்ப்பும் வெளியாகியிருக்கிறதுஇதைப் படித்தால்தான் சுப்ரீம் கோர்ட்டார் தீர்மானத்தின் முக்கியமான விசயங்களை அறிய முடியும்எந்தக் கோயிலிலும் சம்பிரதாயத்திற்கு விரோதமாக அர்ச்சனையோவேறு பூi சடங்கோ செய்வதற்கு இடமில்லைஅப்படிச் செய்யும்படித் தமிழ்நாட்டு சர்க்கார் ஏதாவது விதிகள் ஏற்படுத்தியிருந்தால் அவை செல்லாது என்று தெளிவாகச் சுப்ரீம் கோர்ட்டார் தீர்மானித்து இருக்கிறார்கள்அந்தந்தக் கோயில் சம்பிரதாயத்துக்கு எவ்விதத்திலும் மாறுதல் செய்து உத்தரவுகள் பிறப்பிக்கச் சர்க்காருக்கு அதிகாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டார் தீர்ப்பில் தெளிவாக எழுதியிருக்கிறார்கள்” என்று எழுதியதுதான் இன்றுவரை நடந்துள்ளது.

கோயில்களில் பொதுமக்கள் கடுமையான கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும்பூiஜகளை எல்லோரும் செய்ய முடியாது’ என்பதையும் அதற்கான தகுதியும் திறமையும் உடையவர்கள் மட்டுமே பூiஜகளைச் செய்ய முடியும் என்பதையும் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’ என்றும் காஞ்சி சங்கராச்சாரிஅர்ச்சகர் நியமனம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதற்கென உள்ள ஆகமத்தின்படிதான் வழிபாடுபூசை நடத்தப்பட வேண்டும்அதிலும் குறிப்பிட்ட பிரிவினர்தான் (வகுப்பினரி லிருந்துதான் அர்ச்சகர் இருக்க வேண்டுமென இன்றும் வற்புறுத்தப் படுகின்றது.

பார்ப்பனர்கள் வலியுறுத்தும் ஆகமம் தான் என்ன?

ஆகமங்கள் வேறுவேதங்கள் வேறுஆகமங்கள் வேதகாலத்திற்கு முற்பட்டவைகோயில் வழிபாட்டு முறைகள்சடங்குகள் சம்பிரதாயங் கள் ஆகியவைகளை உள்ளடக்கியதற்குப் பெயர்தான் ஆகமங்கள்வேதங்களை முழுமையாகக் கற்ற காஞ்சி சங்கராச்சாரிகூட பூசை நடத்த முடியாதுஎனவே ஆகமம் வேறுவேதம் வேறு என்று நீதிபதி மகராசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

அர்ச்சகராவதற்குரிய தகுதிகள் குறித்து சென்னை உயர் வழக்காடு மன்றம் ‘சுந்தரம்பாள் Vs யோகவனக் குருக்கள்’ என்ற வழக்கின் தீர்ப்பில் `சோமபானத்தை ஆண்களுடன் பகிர்ந்து குடிக்க முடியாத அளவுக்குபெண்ணின் உடம்பில் நரம்பு மண்டல அமைப்புப் பூஞ்சை யாக இருக்கின்ற காரணத்தால் வேத காலத்தில் பெண்களுக்குத் தகுதி யின்மையை விதித்தது வேதம்’ என்று கூறியுள்ளனர்மேலும் பெண்கள் அர்ச்சகராக முடியாது என்பதும் தெளிவாகின்றதுஇதுவரையில் பெண்கள் இயற்கையாக உடல்கூறுகளில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாகத்தான் பூசை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்று சொல்லிவருவது எவ்வளவு பித்தலாட்டம் என்பதும் வெட்ட வெளிச்சமாகின்றது.

ஆலயத்தில் அர்ச்சகராவதற்கு உள்ள தகுதியில் 1..பார்ப்பனராகவும் 2. வேதங்கள் முழுமையாகக் கற்றவராகவும் 3. பெருமிதமும் விரும்பத் தக்க பண்புடைய வராகவும் 4. சிற்றின்ப நடவடிக்கைகளை விலக்கிய வராகவும் 5. நேர்மையும் தர்ம சிந்தை உடையவராகவும் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதுபார்ப்பன அர்ச்சகர்கள் நடை முறையில் அதைப் பின்பற்றுகின்றார்களாவஞ்சகத்தோடும் சூழ்ச்சி யோடும் பணம் பண்ணும் எண்ணத்தோடும் மட்டுமே அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

1960-62 இல் சர்சி.பிஇராமசாமி அய்யர் தலைமையில் மைய அரசு அமைத்த இந்து அறநிலைய கமிசன்தனது அறிக்கையில்பார்ப்பன அர்ச்சகர்கள் எவ்வளவு தற்குறிகளாகவும் ஒன்றும் தெரியாதவர்களா கவும் இருக்கிறார்கள் என்பதை இந்தியா முழுவதையும் சுற்றிவந்து பலரிடம் சாட்சியம் பெற்று தெளிவாகப் படம் பிடித்துக் காட்டி யுள் ளார்கள்ஆகம விதிகளிலே சொல்லப்பட்டிருக்கின்ற அந்தத் தோற்றம்அந்தக் குணம் இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கின்ற எந்தப் பார்ப்பன அர்ச்சகருக்கும் இல்லை என்பதை நீதிபதி மகராசன் குழுவும் தனது அறிக்கையில் கூறியுள்ளதுமேலும் அர்ச்சகர் நியமனத்தில் பாரம்பரிய உரிமையைக் கோர முடியாது என உச்ச வழக்காடு மன்றம் ஒப்புக் கொண்டுவிட்டதுஇதுவே ஆகமத்திற்கு எதிரானதுதானேஇது குறித்துதந்தை பெரியார் விடுதலையில் எழுதிய தலையங்கம் வருமாறு:

கர்ப்பக்கிரகம் என்ற கருவரைக்குள் மற்றவர்கள் சென்றால்சாமி தீட்டாகிவிடும்பிறகு கடவுளுக்குச் சம்புரோட்சணம் செய்து சுத்தப் படுத்த வேண்டும் என்று அலறும் சனாதனப் பார்ப்பனர்களைக் கேட்கிறோம்இது எல்லாக் கோயில்களுக்கும் வழிபாடு நடத்தப் பெறும் அத்தனை விக்கிரகங்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டாமாஇன்று அப்படி இருக்கிறதாகாசியில் உள்ள விசுவநாதர் ஆலயத்தில்/புண்ணியம் பெறுவதற்கும் செய்த பாவங்களைப் போக்குவதற்கும் சனா தனிகள் தேர்ந்தெடுக்கும் இடம் காசிதானேஉள்ள நடைமுறை என்னஎவர் வேண்டுமானாலும் அந்தச் சிலையான கல் இருக்கும் இடம் வரைப் போய்விட்டு வில்வத்தையோ மற்றும் பூக்களையோ போட்டுப் பூசை செய்துவிட்டு தொட்டுக் கும்பிட்டுவிட்டுத் திரும்புகின்றனரேமனிதர் கள் மட்டுமல்ல பசுமாடு கூட அங்கு கொண்டு வரப்படுகிற்து (நாமே நேரில் அதனைக் கண்டோம்அங்குள்ள கடவுள் மட்டும் ஏன் தீட்டாகி விடுவதில்லை?

காசி மட்டுமல்லவடநாட்டு மிக முக்கிய கோயில்களான பிரசித்திப் பெற்ற பண்டரிபுரம் - பூரி ஜெகந்நாதம் கோயில்களிலும் சிலை இருக்கும் வரை எவரும் சென்று தொட்டுக் கும்பிட்டு வணங்கலாமேஅங்கு மட்டும் ஏன் சாமி தீட்டாகி விடுவதில்லைவடநாட்டுக் கோயில்களை விட்டுவிடுவோம்இங்குள்ள கோயில்களில் கர்ப்பக்கிரகத்திற்கு முன் பல சின்ன கடவுள்கள் உள்ளனவேஅந்த விக்கிரகங்களைத் தொடவும் தொட்டுப் பூ வைக்கவுமான காரியங்கள் செய்கின்றனரேஅவைகள் ஏன் தீட்டாகி விடுவதில்லை?

குளக்கரையிலும் மரத்தடிகளிலும் பிளாட்பாரங்களிலும் நடை பாதைகளிலும் திடீர் திடீர் என்று கடவுள் சிலைகள் தோன்றி கோயில் களாக மாறுகின்றனவே அவைகளை மனிதர்கள் மட்டும் வணங்க வில்லைபல நேரங்களில் அவை மீது செய்யப்பட்ட பாலாபிசேகம் தேனாபிசேகம் சுவை கண்ட நாய்களும் சென்று நக்குகின்றனவேஅவை எப்படித் தீட்டாகாமல் இருக்கின்றனஅவைகளுக்கெல்லாம் தினசரி சம்புரோட்சனம் நடத்தப்படுகின்றனவாபுனிதத்தன்மை இழந்துவிட்ட வெறும் கற்கள் என்று எந்தப் பார்ப்பானும் பக்தனும் கூறுவதில்லையே ஏன்மதக் கோட்பாடு என்றால் அதற்குச் சீர்மை (Uniformity) வேண்டாமாஎத்தனையோ இடங்களில் மரத்தடிஊர் முச்சந்திகளில் லிங்கங்கள் இருக்கின்றனவேஅவைகளை நாய்களும் மற்ற நாலுகால்பிராணிகளும் எவ்வளவு அசிங்கப்படுத்தி நடந்து கொள்ளமுடியுமோ அவ்வளவு செய்கின்றனவேஅதுபற்றிப் பார்ப் பனரோபக்தரோ இதுவரை எடுத்தத் தடுப்பு நடவடிக்கைதான் என்னபெரிய கோயில் என்றால் அவ்வளவும் பார்ப்பான் கொழுப்பதற்கும் அவனது சாதி ஆணவம் நிலை நாட்டப்படுவதற்கும்தானே?’ (‘விடுதலை’ தலையங்கம் 14.3.72)
எனவே அர்ச்சகர் நியமனம் குறித்து தமிழக அரசு இயற்றிய 1970 ஆம் ஆண்டைய சட்டம் செல்லுபடிக்கூடியதாகும்எனவே இதை செயல் படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆகம விதிகளுக்கு மாறாகக் கட்டப்பட்ட கோயில்கள் பற்றி மகராசன் குழு அறிக்கை

பெரியார் திடலில் 2.11.1991 இல் ‘அர்ச்சர்கர் பிரச்சனையும் வேத ஆகமக் கல்லூரியும்’ என்ற தலைப்பில் நீதிபதி பிவேணுகோபால் அவர்கள் ஆற்றிய உரை;

சென்னை தியாகராசர் நகரில் உள்ள சிவா விஷ்ணு கோயில் மற்றும் அடையாறு பெசன்ட் நகரிலுள்ள அஷ்டலட்சுமி கோயில் இவைகள் எல்லாம் ஆகம விதிகளுக்குப் புறம்பாகக் கட்டப்பட்டிருக்கின்ற கோயில் என்பதை சொல்லியிருக்கிறார்கள்இன்னமும் ஆகம விதி களுக்குப் புறம்பாகவே தமிழ்நாட்டில் பல கோயில்களில் பூசைகள் நடை பெற்றுக்கொண்டு வருகின்றனஅது மாத்திரமல்லதிருப்பதி கோயி லிலே ஏர்கண்டிஷன் போடுகின்றான்இவைகள் எல்லாம் ஆகம விதி களுக்குப் புறம்பானதாகத்தான் செய்யப்பட்டிருக்கிறது.

பழனி கோயிலிலே ஆரம்பத்தில் பண்டாரங்கள்தான் பூசை செய்து கொண்டு வந்தார்கள்பின்னாளில்தான் பார்ப்பனர் வந்து பூசை செய்தார்கள்அதற்குரிய ஆதாரம் இருக்கின்றது.

அரியலூர் கலியபெருமாள் கோயிலில் வன்னியர்கள்தான் பூசை செய்து கொண்டுவந்திருக்கிறார்கள் என்று பல மேற்கோள்களை மகராசன் அறிக்கையிலே சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்’ என்று ஆணித் தரமாக எடுத்துரைத்தார்.

மேலும் அரசியல் சட்டம் இதற்காகத் திருத்தப்பட வேண்டுமாஎன்பது பற்றியும் நீதிபதி வேணுகோபால் அவர்கள் தமது பேச்சினில், ‘அரசியல் சட்டம் ஏன் திருத்தப்பட வேண்டும் என்பதை மகராசன் அவர் கள் எதற்காக சொன்னார் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்இதை தெளிவாக விளக்க வேண்டுமானால்சிவன் கோவிலிலே சைவர்கள் பூசை செய்ய வேண்டும்விஷ்ணு கோவிலிலே வைணவர்கள்தான் பூசை செய்ய வேண்டும்இது தமிழ் நாட்டிலே பழக்கமாக (ஊரளவடிஅபாரம்பரியமாக வந்து கொண்டிருக்கிறது.

மகராசன் சொன்னார்: ‘சிவன் கோயிலிலே வைணவரைப் போட்டு விஷ்ணு கோயிலிலே சைவரைப் போட்டால் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொள்ளுவார்களேஎனவே இங்கே அரசியல் சட்டத்Ý திருத்தம் ஏற்பட வேண்டிய ஒரு அவசியம் மாதிரி இருக்கிறதேஎனவே அரசியல் சட்டத்தைத் திருத்தினால் ஒரு பாதுகாப்பாக இருக்குமேபொருத்தமாக இருக்குமே என்று சொன்னார்இங்கே மகராசன் சொன்னது அவரு டைய தனிப்பட்ட அபிப்ராயம்வல்லுநர் குழுவினுடைய அபிப்பராயம் அல்லஅல்லது நீதிமன்ற தீர்ப்பினுடைய அபிப்பராயம் அல்லசுப்ரீம் கோர்ட்டிலேயேகூட கால மாறுதல்களுக்கு ஏற்ப தீர்ப்பை மாற்று கின்றார்கள்.

ஆனால் அரசியல் சட்டத்திலே பாரம்பரியமாக எப்படி அர்ச்சகர்கள் நியமிக்கப் படுகின்றார்களோ அதற்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்று சொல்லப் பட்டிருக்கின்றதுஅந்த செக்ஷனை சர்க்கார் அமென்ட் மென்ட் பண்ணவில்லைஅதாவது வைணவர் கோயிலிலே வைணவர் களும் சிவன் கோயிலிலே சைவர்களும்தான் இருக்க வேண்டும் என்று இருக்கின்றதுஇப்படி இருப்பதை மாற்றினால் அரசியல் சட்டம் திருத்தப் பட வேண்டும் என்று தனது அபிப்ராயமாக சொன்னார்எனவே அரசியல் சட்டத்தைத் திருத்தினால்தான் இதை செய்ய முடியும் என்று பத்திரிக்கைகள் சொல்வதுஇதைப் பற்றி சரியாகப் படிக்காமல்சரியாக தெரிந்துகொள்ளாமல் சொல்லுகின்ற ஒரு மனக்குழப்பம்’ என்று ஆதாரங்களை எடுத்துக்காட்டினார்.

(அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் உரிமை /ஏன்என்னும் நூலிலிருந்து).

 (இதழ்க் குறிப்பு : ஏடு/ 8)