Tuesday 17 August 2021

அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்


அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம்

சென்னை, ஆக. 14- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக லாம் திட்ட தொடக்கவிழாவில் அர்ச்சகர் பயிற்சி முடித்தவர் களுக்கு பணி நியமன ஆணை களை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வழங்கினார்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக நியமனம் செய்யப்படுகின்றனர். அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்க ளுக்கு பணி நியமன ஆணை களை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வழங்கினார். பயிற்சி முடித்த 24 அர்ச்சகர்கள் உட்பட 58 அர்ச்சகர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்து சமய அற நிலையத்துறை கோயில்களில் காலியாக உள்ள பணியிடங் களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

20 ஓதுவார்கள் உள்பட 158 கோயில் பணியாளர்களும் நிய மனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூர்  கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய் யப்பட்டுள்ளனர். அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் அனைத்து ஜாதியினரும் அர்ச் சகராகும் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக நியமிப்பதன் மூலம் வரலாறு படைத்தது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற புரட் சிகரமான சட்டம் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது நிறைவேற்றப்பட்டது. 1970ஆம் ஆண்டு கலைஞரால் நிறைவேற்றப்பட்ட சட்டம் 51 ஆண்டுகளுக்கு பிறகு நடைமுறைக்கு வருகிறது. பல சட்டப் « பாராட்டங்களை கடந்து அனைத்து ஜாதியின ரையும் அர்ச்சகராக திமுக அரசு நியமித்துள்ளது. அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிப்பதன் மூலம் பெரியார், அண்ணா, கலைஞரின் கனவை நிறைவேற்றி உள்ளார் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ் நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக அனைத்து ஜாதியி னரும் அர்ச்சகர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்  கே.என். நேரு, மருத்துவம் மற் றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அற நிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் த. வேலு மற் றும் ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, தவத்திரு குன்றக்குடி பொன் னம்பல அடிகளார், திருப் பெருந்திரு சாந்தலிங்க மருதா சல அடிகள், முனைவர் தவத் திரு குமரகுரபர சுவாமிகள், சுகி சிவம், திருமதி தேச மங்கை யர்க்கரசி, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக் டர் பி. சந்தரமோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன், இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் இரா. கண் ணன் மற்றும் அரசு உயர் அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment