Tuesday 17 August 2021

உயர்ந்த பாகவத தர்மம் உஞ்சவிருத்தி தர்மமாம்!


இப்பொழுது “உஞ்சவிருத்தி பார்ப்பனர்” என்னும் சொல் உங்களுக்கு நன்கு பரிச்சயமான ஒன்றாக இருக்கும்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்புவரையில் சில குடும்பங்கள் உஞ்சவிருத்தி செய்துதான் தங்கள் வாழ்கையை நடத்தினர்.

தலையில் சிவப்பு துணி கட்டியபடி இடது இடுப்பில் சொம்பையும் காலில் சலங்கையையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடு வீடாய்ச் சென்று தானம் கேட்பதுதான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவதாக ஒரு அய்தீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்ப வர்கள் இடுப்பில் இருக்கும் சொம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும்.

இதுவே உஞ்சவிருத்தி என்னும் பிச்சை, உஞ்சவிருத்தி பார்ப்பனர்கள் .யாரிடமும் பணம் கேட்க மாட்டர்களாம் .தெருக்களில் நாமசங்கீர்த்தனம் செய்தவாறு செல்வர். விருப்பப்பட்டவர்கள் அரிசி இடுவர்.கொடு என்றும் அவர்கள் யாரிடமும் கேட்க மாட்டார்களாம். அவர்களது பாத்திரம் நிரம்பியதும் வீடு திரும்புவர்.அதிகமாகவும் பெறமாட்டார்களாம்.அரிசி கிடைக்கவில்லை என்றால் அன்றையநாள் முழுதும் குடும்பத்துடன் பட்டினி தான்.அவர்க ளுக்கு தெரிந்து பகவானும் பகவான் நாம சங்கீர்த் தனமும் தானாம் - நம்பவேண்டும்

பலகோடி பிறவிகளில் செய்த புண்ணிய பலனாகத்தான் ஒருவன் உஞ்சவிருத்தி பார்ப்பானாக உருவாக முடியும். இசை மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜர் உஞ்சவிருத்தி செய்தேதான் தன் வாழ்வை பக்திபூர்வமாக நடத்தினாராம் - உஞ்சவிருத்தி பார்ப்பனர்கள் தாங்கள் வாழும் வாழ்க் கையை இறைவனுக்காக மட்டுமே வாழ்வார்களாம்.

பிச்சை எடுப்பதைக்கூட இவ்வளவு கவுரவமாக எழுதியிருக்கும் பார்ப்பனர்கள். இவர்கள் அக்கிர காரம் என்னும் அவர்களின் வாழிடங்களை விட்டு வெளியே வரமாட்டார்கள். அப்படி என்றால் என்ன பொருள் - அவர்களுக்கு சகலமும் சவுக்கியமாக வாழ கிடைக்கும்,

அப்படி என்றால் இவர்கள் ஏன் பிச்சை எடுப்பதை இவ்வளவு சிலாகித்துச் சொல்கிறார்கள் என்றால் பகவத் கீதையிலுள்ள ஒரு வாசகத்தை பார்த்தால் புரியும் கடமையைச் செய் பலனை எதிர் பாராதே என்று எழுதிவைத்துள்ளனர். அதாவது அடிமைகளாக வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும். கூலியை கேட்கக்கூடாது என்பதுதான்

அதுபோல் தான் இதுவும் நீ பிச்சை எடு - அது பெருமையானது என்று கூறி மக்களை ஏமாற்றி மறைமுகமாக மக்களை கீழ்மட்ட நிலையிலேயே வைத்திருக்க செய்த தந்திரம் தான் உஞ்சவிருத்தி - இது அவாளுக்குப் புரியும், ஆமாம் இன்று எந்தப் பார்ப்பனராவது உஞ்சவிருத்தி பிச்சை என்று பாத்திரம் தூக்கிக்கொண்டு வருகிறாரா?

மற்றதில் எல்லாம் பாரம்பரியம் பார்க்கும் பார்ப் பனர்கள் இன்றும் சொம்பை தூக்கிகொண்டு வர வேண்டியதுதானே? ஏன் வரவில்லை.

No comments:

Post a Comment