Monday 22 April 2019

மோடி ஆட்சியில் தொழிலாளர்களுக்கு இழைத்த அநீதி



1) இந்தியப் பிரதமர், முதலீட்டாளர்கள் மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் மத்திய - மாநில அரசுகள் பங்கேற்கும் தொழிலாளர்கள் நிலை பற்றி விவாதிக்கும் இந்திய தொழிலாளர் மாநாடு (Indian Labour Conference)ஆண்டுதோறும் நடைபெற்று வந்தது. மோடி ஆட்சியில் கடந்த நான்காண்டுகளாக நடைபெற வில்லை . -

2) பணமதிப்பிழப்பு செய்ததால் 234லட்சம் சிறு, குறு நடுத்தர தொழில்கள் அழிக்கப்பட்டு 5 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.

3) மத்திய தொழிற்சங்கங்கள் பல்வேறு சமுகப் பாதுகாப்புத் திட்டங்களை உள்ளடக்கிய 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், வேலைநிறுத்தம் போன்ற போராட்டங் கள் நடத்தியும், கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசாங்கம் மத்திய தொழிற்சங்கங்களை அழைத்துப்பேசிடவில்லை. தொழிற்சங்கங்களை உதாசீனப்படுத்தும் நிலையை உருவாக்கியதோடு தொழிலாளர் விரோத அரசாக செயல்பட்டு வருகிறது.

4) தொழிலாளர்களுக்கு பாதுகாப்புத் தரக் கூடிய 44 தொழிலாளர் நலச்சட்டங்களை 4சட்டங்களாக்கி தொழிலாளர்களுக்கு கிடைத்து வந்த உரிமைகளை பறித்ததுடன் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது.

5) மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து 3 ஆண்டுகள் லாபம் ஈட்டினால் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவித்து ஊதிய உயர்வு மறுக்கப் படுகிறது.

6) வருங்கால வைப்பு நிதி, இ.எஸ்.அய். திட்டத்தை விருப்புரிமை அடிப்படையில் பிடித்தம் எனக்கூறி தொழி லாளர்கள் பெற்று வந்த சலுகைகளை, சமூகப் பாது காப்பை புறக்கணித்துள்ளது.

7) வருங்கால வைப்பு நிதித் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளது. இதனால் ஓய்வு காலத்தில் பெறும் ஓய்வூதியத்திற்கு உத்திரவாதம் இல்லாமல் உள்ளது.

8) மோட்டார் வாகன சட்டத்திருத்தம் செய்து, சாலைப் போக்குவரத்து தொழிலை கார்ப்பரேட்டிற்கு தாரை வார்க்கும் முடிவால் மோட்டார் தொழிலை அழித்திடும் நிலையும் அந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழில் செய்வோரும் தொழிலாளரும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

9) மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் இணைந்து உருவாக்கிய ஒப்பந்தங்களை ஏற்க மறுப்பதால் தொழிலாளர்களுக்கு பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

10) மத்திய அரசு துறையிலுள்ள காலிப் பணியிடங் களையும், மத்திய பொதுத்துறை நிறுவனங்களிலுள்ள, காலிப்பணியிடங்களையும் நிரப்பாமல் உள்ளது.

11) மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தங்களை உருவாக்க கட்டுப்பாடு - விதித்து ஒப்பந்தங்களை நிறைவேற்றாமல் இருப்பதால் ஊழியர்கள்ஊதிய உயர்வு கிடைக்காமல் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள்.

12) தொழிலாளர்கள் தொழிலகங்களில் பெற்று வந்த நிரந்தரத் தன்மையை மாற்ற குறிப்பிட்ட காலவேலை (Fixed Term Employment) என நிர்ணயித்து நிரந்தர வேலையினை ஒழிக்க முற்பட்டுள்ளது.

13) மின்சார சட்டம் கொண்டு வந்து மின்துறையை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் முயற்சியினை மேற்கொண்டுள்ளது.

14) அங்கன்வாடி, ஆஷா, மத்திய உணவு திட்ட பணியாளர்களுக்கான தொழிலாளர் (Scheme Worker)தரம்  தர மறுப்பது.

15) இந்திய தொழிலாளர் மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டசமவேலைக்கு சம ஊதியம் என்ற திட் டத்தை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது.

16) குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 தரப்பட வேண்டும் என்கிற தொழிற்சங்க கோரிக்கையை ஏற்க மறுப்பது.

17) புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைப்படுத்த மறுப்பது.

18) NEEM (National Employability Enhancement Mission) NETAP (National Employment Through Apprenticeship Programme) போன்றவை மூலம் நிரந்தரப் பணியாளர்களை ஒழிக்கும் செயலை மேற்கொள்வது.

19) தமிழகத்தில் ராஜாஜி முதலமைச்சராகயிருந்த போது கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை "தொழிற்கல்வி என்ற பெயரில் மறைமுகமாக குலத் தொழிலை செய்யும் நிலையை உருவாக்குவது.

20) குழந்தை தொழிலாளர்கள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தாமல் இருப்பது.

21) வேலைவாய்ப்பை உருவாக்காமல் நாளுக்கு நாள் வேலைவாய்ப்பின்மையை ஏற்படுத்துதல்.

இவை மோடி அரசால் தொழிற்சங்கங்களுக்கும் - தொழிலாளர்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகள் -சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்நிலை மாறிட வேண்டுமானால் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்களித்து - வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

-  விடுதலை ஞாயிறு மலர், 13.4.19

No comments:

Post a Comment