Sunday, 27 November 2016

ஓபிசி சான்றிதழ் - சில தகவல்கள்


- குடந்தை கருணா
மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோ ருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு, சமூக நீதிக் காவலர் முயற்சியால், 1993 முதல் வேலை வாய்ப்பிலும், 2007 முதல், மத்திய அரசின் கல்வி நிலையங்களான அய்.அய்.டி, அய்.அய்.எம் போன்ற உயர்கல்வி நிறு வனங்களில் நடைமுறைப்படுத்தப்படு கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப் பிப்பதற்கும், கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கும், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள், அதற்கான ஜாதி சான்றிதழ் அனுப்பவேண்டும். அதற்குப் பெயர் தான் ஓபிசி சான்றிதழ்.
தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) என ஜாதி சான்றிதழ் தரப்படுகிறது. இவர்களுக்கு, மத்திய அரசில் பணியில் அல்லது கல்வி நிலையத்தில் சேர்வதற்கு, ஓபிசி சான் றிதழ் அதாவது இதர பிற்படுத்தப்பட் டோர் சான்றிதழ் என கூறப்படுகிறது.
இந்த ஓபிசி சான்றிதழ், பி.சி., எம்.பி.சி. சான்றிதழ் வழங்கும், அதே வட்டார அலு வலரால் தான் (தாசில்தார்) தரப்படுகிறது.
இந்த ஓபிசி சான்றிதழ், வருமானமும் சம்மந்தப்பட்ட சான்றிதழ் என்பதாலும், கிரிமிலேயர் என்கிற முறை இருப்ப தாலும், இந்த ஓபிசி சான்றிதழை ஒரு ஆண்டுக்குத்தான் பயன்படுத்தமுடியும். அதாவது, ஒரு ஆண்டின், ஏப்ரல் மாதத்திலிருந்து, அடுத்த மார்ச் மாதம் வரை, இந்த ஓபிசி சான்றிதழ் பயன்படும். மேலும், தேவைப்பட்டால், மீண்டும் அதே வட்டார அலுவலகத்தில், புதுப் பித்துக் கொள்ள வேண்டும்.அதாவது, இந்த ஆண்டு 1.4.2015 அல்லது அதற்குப் பிறகு வாங்கப்படும் ஓபிசி சான்றிதழை 31.3.2016 வரை பயன்படுத்த முடியும். இந்த ஓபிசி சான்றிதழ் யாருக்குக் கிடையாது?
1. தமிழ் நாட்டில், பி.சி., எம்.பி.சி. பட்டியலில் உள்ள ஜாதிகளில், சில ஜாதிகள், மத்திய அரசின் ஓ.பி.சி. பட்டியலில் இன்னும் சேர்க்கப்படாமல் இருக்கிறது. அந்த ஜாதிகளுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடைக்காது. இந்த ஜாதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள், மத்திய அரசின் வேலை வாய்ப்பில் அல்லது கல்வி நிலையத்தில் சேர்வதற்கு, பொதுப் பிரிவில்தான் அதாவது திறந்த போட் டியில்தான் விண்ணப்பிக்க முடியும். ஓபிசியில் சேர்க்கப்பட்ட ஜாதி சான்றிதழ் விவரம், www.ncbc.nic.in என்ற இணைய தளத்தில் கிடைக்கும்.
2. அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற குரூப் ஏ பதவியில் பெற்றோர்கள் இருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கு, இந்த ஓபிசி சான்றிதழ் கிடையாது.
3. குரூப் சி அல்லது பி யில் பணியில் சேர்ந்து, 40 வயதுக்குள், குரூப் ஏ பதவிக்குச் சென்றாலும், அந்த பெற்றோரின் குழந்தை களுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடையாது.
4. பெற்றோர்களது வருமானம் மூன்று ஆண்டுகளுக்கும் சராசரியாக ஒரு ஆண்டுக்கு ரூ.ஆறு லட்சத்தைத்தாண்டி இருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கு, ஒபிசி சான்றிதழ் பெற முடியாது. இதில், வியாபாரிகள், வழக்குரைஞர்கள், மருத்து வர்கள், பொறியாளர்கள் என தனியே நிறுவனம் அமைத்து, வருமானம் இருந்தால், அந்த வருமானம், ஆண்டுக்கு, ரூ.ஆறு லட்சத்தைத் தாண்டினால், அவர்களுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடைக்காது. அப்படி என்றால், யாருக்கு ஓபிசி சான்றிதழ் கிடைக்கும்?
1.   குரூப் ஏ, குரூப் பி போன்ற பதவி தவிர்த்து, குரூப் சி, குரூப் டி போன்ற பதவிகளில் பணிபுரிந்தால், அப்போது, அவர்களது சம்பளம், ஆண்டுக்கு, ரூ.ஆறு லட்சத்தைத்தாண்டினாலும், ஒபிசி சான்றிதழ் கிடைக்கும்.
2.   மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றில் பணிபுரியும், பிற்படுத்தப்பட்டோர், அவர் களது ஆண்டு வருமானம், ரூ.ஆறு லட் சத்தைத் தாண்டினாலும், ஒபிசி சான்றிதழ் கிடைக்கும். 3. விவசாய வருமானம் ரூ.ஆறு லட் சத்தைத் தாண்டினாலும், அந்த பிற்படுத்தப் பட்டோரின் பிள்ளைகளுக்கு, ஓபிசி சான்றிதழ் பெறலாம்.      தமிழக அரசின் ஆணை:
ஓபிசி சான்றிதழ் பெறுவதற்கு, பிற்படுத் தப்பட்டோரின் ஆண்டு வருமானத்தைக் கணக்கிடும்போது, மாதச் சம்பளத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது; அதே போன்று, விவசாய வருமானத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என, தமிழக அரசு, ஆணை பிறப்பித்துள்ளது. இதனை, மத்திய அரசும் ஏற்றுக்கொண் டுள்ளது.
இந்த ஆணையின்படி, பிற்படுத்தப்பட் டோரின் பெற்றோர், அரசின் பதவிகளில் இருந்தாலும், வங்கி உள்ளிட்ட எந்த பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிந் தாலும், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், அவர்களது, மாதச் சம்பள வருமானத்தை, கணக்கில் எடுத் துக் கொள்ளக்கூடாது என்பதை, ஜாதி சான்றிதழ் வழங்கும் வட்டார அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
ஓபிசி சான்றிதழக்கு எப்படி விண்ணப்பிப்பது?
முன்னர் சொன்னபடி, ஜாதி சான்றிதழ் வழங்கும், வட்டார ஆட்சியர் அலுவல கத்தில், ஓபிசி சான்றிதழ் பெறுவதற்குரிய விண்ணப்பம் கிடைக்கும். அதனைப் பூர்த்தி செய்து, ஏற்கனவே தமிழக அரசு வழங்கியுள்ள ஜாதி சான்றிதழ் நகலையும் இணைத்திட வேண்டும்.
அந்த விண்ணப்பப் படிவத்தில், பாரா 12-ல் 12- என்ற பாரா, வருமானம்/சொத்து பற்றிய விவரம் கேட்கப்படுகிறது. அதில் ஆண்டு வருமானம் என்பதில், மாதச் சம்பளம் மற்றும் விவசாய வருமானம் தவிர்த்து, என்றே குறிப்பிடப்பட்டிருக் கும். இந்த படிவம், www.persmin.nic.in என்ற இணைய தளத்தில்,   OM and Orders என்கிற பகுதியில், O.M. No.36012/22/93-Estt.(SCT), தேதி 15.11.1993 என்கிற அரசு ஆணையை பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆகவே, மாதச் சம்பளம் பெறுவோர், விவசாயி போன்றோர், இந்த விண்ணப்ப படிவத்தில், வருமானம் என்ற இடத்தில், மாதச்சம்பளம், அல்லது விவசாய வருமானம் என்பதை மட்டும் குறிப்பிட்டு, தமிழக அரசின் ஆணையின் நகலையும் இணைத்து, விண்ணப்பித்தால், ஓபிசி சான்றிதழ் நிச்சயம் கிடைக்கும். தற்போது, வங்கி உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்களில், வேலைவாய்ப்பு மிக அதிகமாக உள்ள நிலையில், வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு பயன் தங்களது பிள்ளை களுக்கு கிடைத்திட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த விவசாய மக்களும் மாதச் சம்பளம் பெறுவோரும்,, இந்த விவரங்களைப் பயன்படுத்தி, ஓபிசி சான்றிதழ் பெறுமாறு கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள்.
தமிழக அரசின் ஆணை, விண்ணப் பப்படிவம், தேவைப்படுவோர், aiobc.gk@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு செய்தி அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
-விடுதலை,14.5.15

Wednesday, 9 November 2016

நாங்கள் ஒன்றும் ‘தகுதி’ குறைந்து விடவில்லை!


“ஊர் ஊருக்கு ஒரு வாகனத்தை அனுப்பி எல்லா பிற்படுத்தப்பட்டவனையும், தாழ்த்தப் பட்டவனையும் அள்ளிப் போட்டு அவர்களை எல்லாம் டாக்டர் ஆக்கி விடவில்லை. படித்துதான் வந்தார்கள். ராசராசன் காலத்தில் இருந்து எங்களை ஏய்த்து , தாங்கள் மட்டும் படித்துக் கொண்டிருந்தவர்களுக்கு போட்டியாக நாங்களும் படித்துதான் வந்தோம்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கிடைக்கிற சலுகை மதிப்பெண்கள் : 0.25
தாழ்த்தப் பட்டவர்களுக்கு கிடைக்கிற சலுகை மதிப்பெண்கள் : 3.9
(புள்ளி விவரம் ஆண்டு 2012)
இந்த மதிப்பெண் வித்தியாத்தில் எந்த கம்பவுண்டரும் டாக்டர் ஆகி விட முடியாது.
ஆயிரம் ஆண்டு வித்தியாசத்தை நேர் படுத்த இந்த 3.9 மதிப்பெண்கள் தான் சலுகை. கோட்டாவில சீட்டு வாங்கி டாக்டர் ஆகிறான்.
தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான்.
எத்துணை எளிதாய் ஒரு வரியை சொல்லி விட முடிகிறது.’’
முடிந்தால் ஒடுக்கப்பட்ட மக்களைத் தூக்கிவிடுங்கள் -_ முதுகெலும்பை முறிக்காதீர்கள் - பார்ப்பனீயம் பார்ப்பனரல்லாதாரிடமும்  நோயாகத் தொற்றிக் கொண்டதே!
முக நூலில் இருந்து: சாந்தி நாராயணன்
-விடுதலை ஞா.ம.,6.2.16

சென்னை மாகாணம் ஆட்சி: ஒரு பார்வை


சென்னை மாகாணம் இன்றைய தமிழ்நாடு, வடக்கு கேரளாவின் மலபார் பகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரை மற்றும் ராயலசீமா பகுதிகள், மற்றும் கர்னாடகத்தின் பெல்லாரி, தெற்கு கன்னடா, மற்றும் உடுப்பி பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆங்கிலேயரின் இந்திய ஆட்சிப்பகுதியாக இருந்தது.
சென்னை பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை ஆளுமை எல்லைகளாக தொடங்கிய சென்னை மாகாணம் ஆங்கில-பிரெஞ்சு (கிஸீரீறீஷீ-திக்ஷீமீஸீநீலீ) யுத்தத்திற்கு பிறகு கிழக்கு இந்திய கம்பெனி மற்றும் ஆற்காட்டு நவாப் உடன்படிக்கைக்கு பின்னர் வடக்கு சர்க்கார் தொடங்கி குமரி முனை வரை விரிந்து பரவியது.
1670-ல் பொதுத்துறையில் ஒரு செயலருடன் தொடங்கிய தலைமைச்செயலகம் 1920 ஆம் ஆண்டில் ஆறு துறைகளும் அதனை மேற்பார்வையிட ஒரு தலைமைச் செயலாளரும் கொண்ட கட்டமைப்பாக உருப்பெற்றது . இந்திய அரசு சட்டம், 1919 இயற்றப்பட்டபின் இங்கு 1920-ல் முதன் முதலாக தேர்தல் நடத்தப்பட்டு சட்டப் பேரவை அமைக்கப்பட்டது. சட்டப் பேரவை யின் ஆட்சிக்காலம் மூன்று வருடங்களாக இருந்தது. 132 உறுப்பினர்களில் 34 உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.
இந்திய அரசு சட்டம், 1935 ன்படி 215 உறுப்பினர்கள் அடங்கிய சட்டப் பேரவையும் 56 உறுப்பினர்களை கொண்ட மேலவையும் உருவாக்கப்பட்டது. ஜுலை 1937 ஆம் ஆண்டில் இந்த சட்டத்தின் கீழ் முதல் சட்டப் பேரவை பதவியேற்றது. சட்ட மேலவை (Anglo-French) எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர் மூன்றாண்டு காலத்தில் ஓய்வு பெறும்படியான ஒரு நிரந்தர அமைப்பு.
1939-ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியா மாகாண அரசாங்கங்களை கலந்து பேசாமலே இரண்டாம் உலகப்போரில் இந்தியா பங்கேற்கும் என பிரகடனம் செய்தது. இந்திய தேசிய காங்கிரஸ் இந்த முடிவை எதிர்த்து தன் கட்சியின் அனைத்துத் தேர்ந்தெடுகப்பட்ட பொறுப்பிலிருந்தவர்களையும் ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலகக் கோரியது. 1946-ல் பின்னர் நடந்த மாகாண தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
சென்னை மாகாணம்
1    ஏ. சுப்பராயலு    17 டிசம்பர், 1920, 11 ஜூலை, 1921        நீதிக்கட்சி    முதல் மந்திரி
2    பனகல் ராஜா    11 ஜூலை, 1921,  3 டிசம்பர், 1926        நீதிக்கட்சி    முதல் மந்திரி
3    பி. சுப்பராயன்    4 டிசம்பர், 1926, 27 அக்டோபர், 1930        சுயேச்சை    முதல் மந்திரி
4    பி. முனுசுவாமி நாயுடு    27 அக்டோபர், 1930, 4நவம்பர், 1932        நீதிக்கட்சி    முதல் மந்திரி
5    ராமகிருஷ்ண ரங்காராவ்    5 நவம்பர், 1932, 4 ஏப்ரல், 1936        நீதிக்கட்சி    முதல் மந்திரி
6    பி. டி. இராஜன்    4 ஏப்ரல், 1936, 24, ஆகஸ்டு, 1936        நீதிக்கட்சி    முதல் மந்திரி
7    ராமகிருஷ்ண ரங்காராவ்    24 ஆகஸ்டு, 1936, 1 ஏப்ரல், 1937        நீதிக்கட்சி    முதல் மந்திரி
8    கூர்மா வெங்கட
ரெட்டி நாயுடு     1 ஏப்ரல், 1937, 14 ஜூலை, 1937        நீதிக்கட்சி    பிரதம மந்திரி
9    சி. இராஜகோபாலாச்சாரி    14 ஜூலை, 1937, 29 அக்டோபர், 1939        காங்கிரஸ்    பிரதம மந்திரி
10    த. பிரகாசம்    30 ஏப்ரல், 1946, 23 மார்ச்சு, 1947        காங்கிரஸ்    பிரதம மந்திரி
11    ஓமந்தூர் ராமசாமி
ரெட்டியார்     23 மார்ச்சு, 1947, 6 ஏப்ரல், 1949        காங்கிரஸ்    பிரதம மந்திரி
12    பூ. ச. குமாரசுவாமி
ராஜா    6 ஏப்ரல், 1949, 26 ஜனவரி, 1950        காங்கிரஸ்    பிரதம மந்திரி
சென்னை மாநிலம்
சென்னை மாநிலம், தற்போதைய தமிழ்நாடு மாநிலத்திற்கு முந்தையது. இது இந்திய ‘விடுதலை’க்குப் பிறகு 1947-ல் உருவாக்கப்பட்டது. தற்போதைய தமிழ்நாடு மற்றும் தற்போதைய ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் பகுதிகளும் இம்மாநிலத்தின் பகுதிகளாயிருந்தன. பொது வாக்களிப்பு உரிமையின் அடிப்படையில் தேர்தல்கள் முதன்முறையாக 1952-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டு இங்கு மார்ச்சு 1, 1952-ல் சட்டப் பேரவை அமைக்கப்பட்டது.
சென்னை மாநிலம் பிற்பாடு மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. மாநிலங்கள் மாற்றியமைப்புச் சட்டம், 1956-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பின் கேரள மாநிலமும், மைசூர் மாநிலமும் சென்னை மாநிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டன. பின்னர் ஆந்திர சென்னை மாநிலங்கள் எல்லை மாற்றச் சட்டம், 1959ந் கீழ் ஏப்ரல் 1, 1960 முதல் திருத்தணி வட்டம் மற்றும் சித்தூர் வட்டத்தின் துணைவட்டமான பள்ளிப்பட்டு ஆகியவை சென்னை மாநிலத்தோடும், செங்கல்பட்டு மற்றும் சேலம் மாவட்டங்களின் சில பகுதிகள் ஆந்திர மாநிலத்தினோடும் இணைக்கப்பட்டன.
1    பி. எஸ்.
குமாரசுவாமிராஜா    26 ஜனவரி, 1950, 9 ஏப்ரல், 1952        இந்திய தேசிய காங்கிரஸ்
2    சி. இராஜகோபாலாச்சாரி    10 ஏப்ரல், 1952, 13 ஏப்ரல், 1954        இந்திய தேசிய காங்கிரஸ்
3    கு. காமராஜ்    13 ஏப்ரல், 1954, 31 மார்ச்சு, 1957        இந்திய தேசிய காங்கிரஸ்
4    கு. காமராஜ்    13 ஏப்ரல், 1957, 1 மார்ச்சு, 1962        இந்திய தேசிய காங்கிரஸ்
5    கு. காமராஜ்    15 மார்ச்சு, 1962, 2 அக்டோபர், 1963        இந்திய தேசிய காங்கிரஸ்
6    எம். பக்தவத்சலம்    2 அக்டோபர், 1963, 6 மார்ச்சு, 1967        இந்திய தேசிய காங்கிரஸ்
7    சி. என். அண்ணாத்துரை    6 மார்ச்சு, 1967, ஆகஸ்டு, 1968        தி.மு.க.
தமிழ்நாடு
சென்னை மாகாணம் - 14 ஜனவரி 1967 அன்று தமிழ் நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தமிழக சட்டபேரவை 14 மே 1986-ல் சட்ட மேலவையை நீக்க தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் பாராளுமன்றத்தில் "தமிழக சட்ட மேலவை (நீக்க) சட்டம், 1986" (Tamil Nadu Legislative Council (Abolition) Act, 1986) எனும் பெயரிலான சட்ட மசோதா 1 நவம்பர் 1986 முதல் அமல்படுத்தப்படுமாறு தமிழக சட்ட மேலவை நீக்கப்பட்டது. தற்பொழுது தமிழக சட்ட அமைப்பு ஓரங்க அமைப்பாக (unicameral) 234 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும், ஒரு நியமன உறுப்பினரையும் கொண்ட சட்டபேரவையாக உள்ளது.
முதலமைச்சரின் பதவிக்காலம் சட்டப்பேரவையின் நம்பிக்கை அவர்மீது உள்ளவரை நீளும். நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படுமாயின் முதல்வராக இருப்பவர் பதவி விலகவேண்டும். மேலும் மத்திய அமைச்சரவையின் பரிந்துரையைக்கொண்டு இந்திய அரசமைப்புச் சட்டம் 356 பிரிவில் குறிப்பிட்டுள்ள ஒரு தகவலின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒர் மாநில அரசை கலைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. 1976-ல் திமுக ஆட்சி  ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
முதலமைச்சராக உள்ள ஒருவர் இறப்பதாலோ, பதவி விலகுவதாலோ அல்லது பதவி நீக்கம்செய்யப்பட்டாலோ உருவாகும் காலியிடத்திற்கு, மாநில ஆளுநர் மற்றொருவரை அமைச்சரவை அமைக்க அழைத்து சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரும்படி கேட்டுக்கொள்ளலாம். எவரொருவருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் அவை கலைக்கப்படும் அல்லது ஆளுநர் ஆட்சி அமைக்கப்படும் அல்லது மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்வரை இடைக்கால பொறுப்பாட்சி அமையும் நிலை ஏற்படும்.
தமிழ்நாடு
1    சி. என். அண்ணாத்துரை     ஆகஸ்டு, 1968, 3 பிப்ரவரி, 1969         தி.மு.க.
2    இரா. நெடுஞ்செழியன்
(தற்காலிக முதல்வர்)     3 பிப்ரவரி, 1969, 10 பிப்ரவரி, 1969        தி.மு.க.
3    மு. கருணாநிதி    10 பிப்ரவரி, 1969, 4 ஜனவரி, 1971        தி.மு.க.
4    மு. கருணாநிதி    15 மார்ச்சு, 1971, 31 ஜனவரி, 1976        தி.மு.க.
குடியரசுத் தலைவராட்சி     31 ஜனவரி, 1976, 30 ஜூன், 1977      
5    எம். ஜி. இராமச்சந்திரன்    30 ஜூன், 1977, 17 பிப்ரவரி, 1980        அ.இ.அ.தி.மு.க.
குடியரசுத் தலைவர் ஆட்சி    17 பிப்ரவரி, 19809 ஜூன், 1980      
6    எம். ஜி. இராமச்சந்திரன்    9 ஜூன், 1980, 15 நவம்பர், 1984        அ.இ.அ.தி.மு.க.
7    எம். ஜி. இராமச்சந்திரன்    10 பிப்ரவரி, 1985, 24 டிசம்பர், 1987        அ.இ.அ.தி.மு.க.
8    இரா. நெடுஞ்செழியன்
(தற்காலிக முதல்வர்)    24 டிசம்பர், 1987, 7 ஜனவரி, 1988        அ.இ.அ.தி.மு.க.
9    ஜானகி இராமச்சந்திரன்    7 ஜனவரி, 1988, 30 ஜனவரி, 1988        அ.இ.அ.தி.மு.க.
குடியரசுத் தலைவர் ஆட்சி    30 ஜனவரி, 1988, 27 ஜனவரி, 1989      
10    மு. கருணாநிதி    27 ஜனவரி, 1989, 30 ஜனவரி, 1991        தி.மு.க.
குடியரசுத் தலைவர் ஆட்சி    30 ஜனவரி, 1991, 24 ஜூன், 1991      
11    ஜெ. ஜெயலலிதா    24 ஜூன், 1991, 12 மே, 1996        அ.இ.அ.தி.மு.க.
12    மு. கருணாநிதி    13 மே, 1996, 13 மே, 2001        தி.மு.க.
11    ஜெ. ஜெயலலிதா     14 மே, 2001, 21 செப்டம்பர், 2001        அ.இ.அ.தி.மு.க.
12    ஓ. பன்னீர்செல்வம்    21 செப்டம்பர், 2001, 1 மார்ச்சு, 2002        அ.இ.அ.தி.மு.க.
13    ஜெ. ஜெயலலிதா    2 மார்ச்சு, 2002, 12 மே, 2006        அ.இ.அ.தி.மு.க.
14    மு. கருணாநிதி    13 மே, 2006, 15 மே, 2011        தி.மு.க.
15    ஜெ. ஜெயலலிதா    16 மே, 2011, 27 செப்டம்பர், 2014         அ.இ.அ.தி.மு.க.
16    ஓ. பன்னீர்செல்வம்    28 செப்டம்பர், 2014, மே 23, 2015        அ.இ.அ.தி.மு.க.
17    ஜெ. ஜெயலலிதா    மே 23, 2015,        அ.இ.அ.தி.மு.க.
-விடுதலை ஞா.ம.,6.2.16

Sunday, 6 November 2016

சான்றிதழ்கள் தவறினால்....


கல்விச் சான்றிதழ்கள் காணாமல் போனால், அவற்றை மீண்டும் பெறுவதற் கான வழிமுறைகளை விளக்குகிறார், சென்னை எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியின் எலெக்ட்ரிகல் துறைத் தலைவரான பேராசிரியர் டாக்டர் காமராஜ்.
* சான்றிதழ்கள் காணாமல் போன எல்லைக்குட்பட்ட காவல்நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் அச்சான்றி தழ்கள் கிடைக்காவிட்டால், அந்த காவல் நிலையத்தில் இருந்து `நான் ட்ரேசபிள் சான்றிதழை (non traceable certificate) வாங்க வேண்டும். அதேபோல தாங்கள் படித்த பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் காணாமல் போன சான்றிதழ் களை பெறும் வழிமுறை அறிவிப்பு பகுதியில் இருக்கும் அஃபிடவிட் (affidavit) சான்றிதழ்களை வாங்கும் வழிமுறை படிவத்தை பதிவிறக்கம் செய்து, பின்னர் அந்த படிவத்தில் எந்த சூழ்நிலையில், என்ன காரணத்தால் தன் சான்றிதழ் காணாமல் போனது மற்றும் அந்த சான்றிதழ் தொடர்பான கேள்விகளைப் பூர்த்திசெய்து, படித்த கல்லூரி முதல்வர் அல்லது நோட்டரி பப்ளிக் (வழக்கறிஞர்) ஒருவரிடம் கையெழுத்து வாங்க வேண்டும். தொலைந்துபோன சான்றிதழ் தொடர்பாக பிரபலமான தினசரி நாளி தழில் அறிவிப்பை வெளியிட்டு, அந்த ஒரிஜினல் நியூஸ் பேப்பருடன், தொலைந்துபோன சான்றிதழின் நகலை சேர்த்து, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து காணாமல் போன சான்றிதழ் தொடர்பான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். அதோடு காணாமல் போன சான்றிதழை புதிதாக பெறுவதற்கான  தொகையை கன்ட்ரோலர் ஆஃப் எக்ஸாமினேஷன் (controller of examination), பல்கலைக் கழக பெயருக்கு `டி.டி எடுத்து, விண்ணப்ப படிவத்தை சேர்த்து அனுப்பிவைக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்பிய 15 நாட்கள் கழித்து பல்கலைக்கழகத்தில் இருந்து நம் வீட்டுக்கே புதிய சான்றிதழ் அல்லது சான்றிதழ் தொடர்பான அறிவிப்புகள் வரும்.
* கல்லூரியில் படித்துக் கொண்டிருக் கும் மாணவர்கள் தங்கள் துறைத் தலைவரிடம் இதுகுறித்த புகாரைத் தெரிவிக்கலாம். மேலும், ஒவ்வொரு கல்லூரியிலுமே செயல்படும் தேர்வு கட்டுப்பாட்டு மய்யத்தின் வாயிலாக காணாமல் போன சான்றிதழ் தொடர் பான பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொள்ளலாம்.
* ஒவ்வொரு பல்கலைக்கழக இணையதளத்திலுமே படித்து முடித்த, படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் காணாமல் போன கல்விச் சான்றிதழ் களை திரும்ப பெறும் வழிமுறைகள் தொடர்பான விவரங்கள் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும். அதனைப் பார்த்து இந்தப் பிரச்சினை சார்ந்த உதவி தேவைப்படும் மாணவர்கள் பயன்பெறலாம்.
* பள்ளிச் சான்றிதழ்கள் தொலைந்து போக நேர்ந்தால், உடனடியாக நீங்கள் படித்த பள்ளியைத் தொடர்புகொண்டு, அதற்கான வழிகாட்டுதலை பெற முடியும்
-விடுதலை ஞா.ம.,18.6.16

Thursday, 3 November 2016

பள்ளி சான்றிதழில் ஜாதி, மதம் கட்டாயமில்லை

- பள்ளிகளுக்கு சுற்றறிக்கை: நீதிபதிகள் உத்தரவு

சென்னை, ஜூன் 16
 பள்ளி களில் ஜாதி, மதம் பெயரை கேட்டு மாணவர்களை கட்டாயப் படுத்த கூடாது. மேலும், ஏற் கெனவே உள்ள அரசாணையை உடனடியாக அமல்படுத்தும் வகையில் அது குறித்த சுற்ற றிக்கையை  அனைத்துப் பள் ளிகளுக்கும் அனுப்பவேண்டும் என்று நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத் தில், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர்  தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக கல்வித்துறை கடந்த 1973 ஆம் ஆண்டு ஒன்று 2000 ஆம் ஆண்டு மற் றொன்று என இரண்டு அர சாணைகளை வெளியிட்டது. இதில் மாணவர்களை கல்வி நிறுவனங்களில் சேர்க்கும் போது ஜாதி, மதத்தை கட் டாயப்படுத்தக்கூடாது.
பள்ளிகளில் மாற்று சான் றிதழ். பள்ளி சான்றிதழ் வழங் கும் போது ஜாதி, மதம் பெயரை விருப்பபட்டவர்கள் கொடுக்கலாம். ஜாதி, மதம் என்பதை  குறிப்பிட வேண் டும் என்று பள்ளி நிர்வாகம் மாணவர்களை கட்டாயப் படுத்த கூடாது என்று அரசா ணையில் தெளிவாக கூறப்பட் டுள்ளது. இதை தமிழகத்தில் உள்ள பள்ளி நிர்வாகங்கள் அமல்படுத்துவது இல்லை.
எனவே, இந்த அரசா ணையை அமல்படுத்த  பள்ளி களுக்கு சுற்றறிக்கை அனுப்ப, அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடவேண்டும். பெற் றோர்களிடம் சரியான விழிப் புணர்வு இதுகுறித்து ஏற்படுத் தவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் வழக்கில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்கே.கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் விசா ரித்தனர். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரை ஞர், அரசாணையை அமல் படுத்த எல்லா பள்ளிகளுக்கும் உத்தரவிடுகிறோம். என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், உடனடியாக  அரசு அனைத்து பள்ளிகளுக்கும் புதிய சுற்ற றிக்கை அனுப்ப வேண்டும். அதில் அரசாணையை அனைத்து பள்ளிகளும் அமல்படுத்தவேண் டும் என்று குறிப்பிட வேண் டும் என்று உத்தரவிட்டனர்.
-விடுதலை,16.6.16