Saturday 8 June 2024

டில்லி பெரியார் மய்யத் திறப்பு விழா! மற்றும் சமூக நீதி மாநாடு

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (302)

டில்லி பெரியார் மய்யத் திறப்பு விழா!
கி.வீரமணி

(கட்டுரையின் ஒரு பகுதி)

புதுடில்லியில் ‘பாம்னோலி’ என்ற இடத்தில் அய்ந்தடுக்குகளைக் கொண்ட பெரியார் மய்யத் திறப்பு விழா புத்தாயிரம் ஆண்டில் தந்தை பெரியார் அவர்களின் 122ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, சமூகநீதி மாநாடு மற்றும் பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில் நடைபெறுகின்ற ‘கி-.வீரமணி சமூகநீதி விருது’ வழங்கும் விழா ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள 26.9.2000 அன்று இரவு 7:30 மணிக்கு திராவிடர் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து பெரியார் சிறப்பு ரயிலில் நான் வழியனுப்பி வைக்க புறப்பட்டனர்.

சமூகநீதி மய்யம், திராவிடர் கழகம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு ஆகிய மூன்று அமைப்புகளின் சார்பில் தேசிய சமூகநீதி மாநாடு 30.9.2000 அன்று முற்பகல் 11:00 மணியளவில் புதுடில்லி மாவ்லங்கர் அரங்கத்தில் வெகுசிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றது. சமூகநீதி மய்யத்தின் தலைவர் சந்திரஜித், மத்தியபிரதேச துணை முதல்வர் சுபாஷ் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூகநீதிப் பற்றாளர்கள் ஏராளமானோர் பங்கேற்று உரையாற்றினர். நான் சிறப்புரையாற்றினேன். இறுதியாக சமூகநீதி மாநாட்டிற்கு தலைமையேற்ற சமூகநீதி மய்யத்தின் தலைவர் சந்திரஜித் தலைமையுரை யாற்றினார். முடிவில் திரு.பீம்சிங் நன்றி கூறினார்.

டில்லியில் 1.10.2000 அன்று நடைபெற்ற பெரியார் மய்யத் திறப்பு விழா ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விழா. இந்த விழாவில் கலந்துகொள்ள ‘திராவிடர் கழகம் தனி ரயில்’ என்ற பெயரில் தமிழ்நாட்டிலிருந்து இரயில் மூலமாக திராவிடர் கழகத் தோழர்கள், மகளிர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். அது மட்டுமல்ல, டில்லி நகரில் இப்பெரியார் மய்யத்திற்கு அருகிலுள்ள பல கிராமங்களில் இருந்தும் ஏராளமான கிராம மக்கள் இந்நிகழ்சியைக் கண்டுகளிக்க வந்திருந்தனர்.
உலக மனித நேய அமைப்பின் தலைவர் நார்வே நாட்டைச் சார்ந்த லெவி ஃபிராகல் டில்லி பெரியார் மய்யத்தைத் திறந்து வைக்க வந்திருந்தார். அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர் அருமைச் சகோதரர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் அமெரிக்காவிலிருந்து இவ்விழாவில் கலந்துகொள்ள இங்கு வந்திருந்தார்.

டில்லி மாநில முதல்வர் திருமதி ஷீலா தீட்சித் அவர்கள் இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். கருநாடகத்தைச் சார்ந்த முக்கியப் பிரமுகர்கள் வந்திருந்தனர். மத்தியப் பிரதேசத்தைச் சார்ந்த முக்கியப் பிரமுகர்கள், பிகார், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம் என இப்படி இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் முக்கியப் பிரமுகர்கள் வந்திருந்தனர்.

விழாவில் நான் வரவேற்புரையாற்றினேன். அப்போது, “இந்த நாள், நமது வாழ்நாளில் பொன்னாள், வடக்கே பெரியாரைக் கொண்டு-வந்திருக்கும் நாள். பெரியாரை வடக்கில் மட்டுமல்ல, கிழக்கு, மேற்கிலும் கொண்டு சென்றிருக்கிறோம். உலக அளவில் அவரது கருத்துகளை எடுத்துச் சென்றிருக்கிறோம்.
பெரியார் ஒரு குறிப்பிட்ட ஜாதி அல்லது சமூகத்துக்கு சொந்தக்காரர் அல்ல. அவர் உலக சமுதாயத்தின் பொதுச் சொத்து. இன்று நாம் எதிர்நோக்கியுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு, பெரியாரின் கொள்கைகளே. இந்த மய்யத்தின்மூலம், சமுதாயத்தைச் சீர்திருத்த முயற்சிக்கிறோம். இங்குள்ள இரு கிராமங்களைத் தத்தெடுத்துக் கொள்கிறோம். இப்பகுதி மக்களுக்குக் கல்வி, விழிப்புணர்வு, பெண்கள் அதிகாரம் போன்ற அனைத்து மேம்பாடுகளையும் அளிப்போம். இந்த மய்யம் முழுவதும் பொதுமக்கள் நன்கொடையால் உருவாக்கப்பட்டது.

சமுதாய அமைப்பில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற லட்சியத்துடன் இந்த மய்யம் துவக்கப் பட்டுள்ளது.

பெரியாரின் கொள்கைகள் வடபுலத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகின்றன. அக்கொள்கைகள் ஆழமாக வேரூன்ற ஒரு முக்கியமான பணிமய்யம் தேவைப்படுகிறது என்பதால்தான் பெரியார் மய்யம் துவக்கப்பட்டுள்ளது.
வடபுலத்தில் பெரியார் மய்யம் துவக்கப்-பட்டிருப்பதன் மூலம் பல்வேறு சிக்கல்கள் தீர்க்கப்படும். இந்த மய்யத் திறப்பு விழாவுக்கு வடபுலத்தில் இருந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றதே இதற்குச் சான்று. இந்த மய்யம் துவக்கப்பட்டதன் நோக்கம்

நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே நம்பிக்கையில் எங்கள் பணி தொடரும் என்று அப்போது குறிப்பிட்டேன்.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து-கொண்ட டில்லி மாநில முதலமைச்சர் ஷீலா தீட்சித் பெரியார் மய்யத்திற்கு ரூபாய் 5 லட்சம் நன்கொடை அளித்து உரையாற்றுகையில், “இதுவரை பெரியார் கொள்கைகளுக்காக டில்லியில் ஓர் அமைப்பு இல்லாமல் இருந்தது. இப்போது அந்த ஆசை நிறைவேறியுள்ளது. இதற்காக, வீரமணி, சமூகநீதி அமைப்பின் தலைவர் சந்திரஜித் ஆகிய இருவரையும் பாராட்டுகிறேன்.
பெரியாரின் சுயமரியாதைக் கொள்கை இன்றைய உலகுக்கு மிகவும் தேவையாக உள்ளது. நூற்றாண்டாக சமூகப் புறக்கணிப்பால் நாம் கடுமையாகப் பாதிக்கப்பட்டோம். ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறந்ததால், பிறவியிலேயே அவன் புறக்கணிக்கப்பட்டான். இது மனிதாபிமானமற்றது’’ என்று ஷீலா தீட்சித் கவலை தெரிவித்தார்.

பெரியார் மய்யம் மூலம் இப்பகுதி மக்களுக்கு, கல்வி, கம்ப்யூட்டர் அறிவு, பொருளாதார மேம்பாடு உள்பட அனைத்துப் பலன்களும் கிடைக்கும். இம்மய்யத்தின் வளர்ச்சிக்காக ரூ.5 லட்சம் நன்கொடை அளிக்கிறேன். இங்கு துவக்கப்படும் கம்ப்யூட்டர் மய்யத்துக்கு இண்டெர்நெட் உள்பட அனைத்து வசதி-களையும் அளிக்க இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என்றார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.மூப்பனார் பெரியார் சிலையைத் திறந்து வைத்துப் பேசுகையில், “பெரியார் மய்யத்தை நிறுவியுள்ள ஆசிரியர் வீரமணியின் முயற்சி பாராட்டுக்குரியது. அவர் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். அவருக்கு தமிழ்நாட்டில் தனியாகப் பாராட்டு விழா நடத்த வேண்டும்’’ என்று தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

நார்வே நாட்டு பகுத்தறிவாளர் லெவி ஃபிராகல் பெரியார் மய்ய வளாகத்தைத் திறந்து வைத்துப் பேசுகையில், “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார அமைப்பின் பணி-களைப் பாராட்டினார். இந்த சுயமரியாதை இயக்கம், 40 அமைப்புகளுடன் சிறப்பாகச் செயல்படுகிறது. இது உலகில் எங்குமே கேள்விப்படாத சாதனை! இந்த அமைப்பும் மனிதநேய அமைப்புதான்’’ என்றார்.
டில்லி அமைச்சர் யோகானந்தர், கருநாடக அமைச்சர் கிருஷ்ணப்பா, மத்திய பிரதேச துணை முதல்வர் சுபாஷ், த.மா.கா தலைவரும், மேனாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், இந்திய கம்யூ. தேசியச் செயலாளர் டி.ராஜா, ஜனதா தள (அய்) தேசியச் செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விழாவிற்கு தலைமையேற்று சமூகநீதி மய்யத்தின் தலைவர் சந்திரஜித் அவர்கள் தலைமையுரையாற்றினார். தொடர்ந்து மத்திய பிரதேச துணை முதல்வர் சுபாஷ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அவர்களது உரையில் பெரியார் மய்யத்தின் வளர்ச்சிக்காக ரூபாய் 31 ஆயிரத்தை அளிப்பதாக உற்சாகத்தோடு அறிவித்து ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுக்காக பெரியார் மய்யம் மிகச் சிறப்பாக பணியாற்றும் எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருநாடக அமைச்சர் கிருஷ்ணப்பா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அவர் தனது உரையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக காலமெல்லாம் உழைத்தவர் தந்தை பெரியார் அவர்கள். அவரின் பெயரால் அமைக்கப்பட்டுள்ள இந்த மய்யம் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையை ஏற்படுத்தும். இதன் வளர்ச்சிக்காக ரூபாய் 25 ஆயிரத்தை அளிக்கிறேன் என உற்சாகத்தோடு அறிவித்தார்.

அடுத்து டில்லி அமைச்சர் யோகானந்தர் அவர்கள் தனது வாழ்த்துரையில், இந்தப் பெரியார் மய்யத்தின் வளர்ச்சிக்காக எல்லாவித உதவிகளையும் செய்வதற்கு நான் எப்போதும் தயாராக உள்ளேன். மக்களுக்காக உழைத்த மாமேதை தந்தை பெரியார் எனக் குறிப்பிட்டு உரையாற்றினார்.
பெரியார் பெருந்தொண்டர் பா.அருணாசலம் அவர்கள் பவள விழாவைக் கொண்டாடுகின்ற நேரத்திலே, டில்லி பெரியார் மய்யத்திற்கு தந்தை பெரியாரின் சிலையை வழங்கியிருக்கிறார். அவருக்கு உளமார்ந்த நன்றியைப் பெரியார் மய்யத் திறப்பு விழாவில் தெரிவித்தேன்.
டில்லி பெரியார் மய்யத்தின் ஒவ்வொரு செங்கல்லும் பொது மக்களுடைய பணத்தால் பெறப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த டில்லி பெரியார் மய்யத்திற்கு நன்கொடை வழங்கிய தமிழ்நாட்டைச் சார்ந்த, இந்தியாவில் உள்ள மற்றும் உலகில் உள்ள அனைவருக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக்கொண்டேன்.

அமெரிக்க நாட்டில் இயங்கும் பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில் வழங்கப்படும் சமூகநீதிக்கான கி.வீரமணி விருதுக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேனாள் முதல்வர் செல்வி மாயாவதி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1.10.2000 அன்று மாலை டில்லி பெரியார் மய்யத்தின் அருகில் அமைக்கப்பட்ட பெரியார் அரங்கத்தில் அவருக்கு விருது வழங்கப்பட்டது. கான்சிராம் கலந்துகொண்டார்.

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (302)

2022 அக்டோபர் 16-30 2022 அய்யாவின் அடிச்சுவட்டில்

டில்லி பெரியார் மய்யத் திறப்பு விழா!
கி.வீரமணி

பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்யாமல் சட்டவிரோதமாக வேலைக்கு ஆள் எடுத்த எல்.அய்.சி. நிருவாகத்தைக் கண்டித்து, சென்னை அண்ணாசாலை எல்.அய்.சி. அலுவலகம்முன் 9.9.2000 அன்று முற்பகல் 11:00 மணிக்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன். சட்ட முறைப்படி நீதிமன்றத்தில் எங்களையும் இணைத்துக் கொண்டு உரிமையை நிலை-நாட்டுவோம் என்று அப்போது உறுதி கூறினேன்.

சென்னை அண்ணா நகர் புஷ்பாஞ்சலி திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் பெரியார் பெருந்தொண்டர் டி.ஏ.கோபாலன் மற்றும் இராணிப்பேட்டை மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் என்.ஆர்.எம்.-சுவாமி ஆகியோரின் பெயரனும் எம்.மோகன் _ அறிவுக்கண்ணு மோகன் ஆகியோரின் செல்வன் பொறியாளர் எம்.பிரேம்_க்கும் மயிலாப்பூர் எம்.அஸ்வின் குமார்ஷா அவர்களின் மகள் செல்வி மீத்தாவுக்கும் வாழ்வு இணையேற்பு விழா என் தலைமையில் 15.9.2000 காலை 9:00 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. மணமகன் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் டி.ஏ.ஜி.அசோகன் அவர்களின் சகோதரி மகன் என்பதும் இது ஒரு ஜாதி மறுப்புத் திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலத் தலைநகராம் அய்தராபாத்தில் 17.9.2000 ஞாயிறன்று எழுச்சியோடும் உணர்ச்சியோடும் தந்தை பெரியாரின் 122ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும் சுயமரியாதை இயக்கப் பவள விழாவும் நடைபெற்றன.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் 91 வயதான முதிர்வுடன் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் உரிமைக்காக அயர்வின்றிப் போராடி வருபவருமான சர்தார் கவுது லட்சண்ணாவுக்கு தந்தை பெரியார் விருது _ பாராட்டிதழ் _ நினைவுப் பரிசு ஆகியவற்றை வழங்கி பெருமைப்படுத்தினேன். நிறைவாக எனது உரையில் ஒன்றுபடுத்துபவைகளை விரிவுபடுத்தி வேறுபடுத்துபவைகளைப் புறக்கணித்திட மக்களிடம் சென்று விழிப்புணர்வை உருவாக்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தேன்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஏ.கோபண்ணா ‘மக்கள் தலைவர் மூப்பனார்’ என்ற தலைப்பில் தொகுத்த நூலை 20.9.2000 அன்று மராட்டிய மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் வெளியிட்டார். முதல் பிரதியை ஆந்திர மாநில முதல்வர் ஜனார்த்தன ரெட்டி பெற்றுக்கொண்டார். நிகழ்வில் கலந்துகொண்டு பாராட்டுரை வழங்கினேன்.
புதுடில்லியில் ‘பாம்னோலி’ என்ற இடத்தில் அய்ந்தடுக்குகளைக் கொண்ட பெரியார் மய்யத் திறப்பு விழா புத்தாயிரம் ஆண்டில் தந்தை பெரியார் அவர்களின் 122ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, சமூகநீதி மாநாடு மற்றும் பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில் நடைபெறுகின்ற ‘கி-.வீரமணி சமூகநீதி விருது’ வழங்கும் விழா ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள 26.9.2000 அன்று இரவு 7:30 மணிக்கு திராவிடர் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து பெரியார் சிறப்பு ரயிலில் நான் வழியனுப்பி வைக்க புறப்பட்டனர்.

சமூகநீதி மய்யம், திராவிடர் கழகம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு ஆகிய மூன்று அமைப்புகளின் சார்பில் தேசிய சமூகநீதி மாநாடு 30.9.2000 அன்று முற்பகல் 11:00 மணியளவில் புதுடில்லி மாவ்லங்கர் அரங்கத்தில் வெகுசிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றது. சமூகநீதி மய்யத்தின் தலைவர் சந்திரஜித், மத்தியபிரதேச துணை முதல்வர் சுபாஷ் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூகநீதிப் பற்றாளர்கள் ஏராளமானோர் பங்கேற்று உரையாற்றினர். நான் சிறப்புரையாற்றினேன். இறுதியாக சமூகநீதி மாநாட்டிற்கு தலைமையேற்ற சமூகநீதி மய்யத்தின் தலைவர் சந்திரஜித் தலைமையுரை யாற்றினார். முடிவில் திரு.பீம்சிங் நன்றி கூறினார்.

டில்லியில் 1.10.2000 அன்று நடைபெற்ற பெரியார் மய்யத் திறப்பு விழா ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விழா. இந்த விழாவில் கலந்துகொள்ள ‘திராவிடர் கழகம் தனி ரயில்’ என்ற பெயரில் தமிழ்நாட்டிலிருந்து இரயில் மூலமாக திராவிடர் கழகத் தோழர்கள், மகளிர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். அது மட்டுமல்ல, டில்லி நகரில் இப்பெரியார் மய்யத்திற்கு அருகிலுள்ள பல கிராமங்களில் இருந்தும் ஏராளமான கிராம மக்கள் இந்நிகழ்சியைக் கண்டுகளிக்க வந்திருந்தனர்.
உலக மனித நேய அமைப்பின் தலைவர் நார்வே நாட்டைச் சார்ந்த லெவி ஃபிராகல் டில்லி பெரியார் மய்யத்தைத் திறந்து வைக்க வந்திருந்தார். அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர் அருமைச் சகோதரர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் அமெரிக்காவிலிருந்து இவ்விழாவில் கலந்துகொள்ள இங்கு வந்திருந்தார்.

டில்லி மாநில முதல்வர் திருமதி ஷீலா தீட்சித் அவர்கள் இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். கருநாடகத்தைச் சார்ந்த முக்கியப் பிரமுகர்கள் வந்திருந்தனர். மத்தியப் பிரதேசத்தைச் சார்ந்த முக்கியப் பிரமுகர்கள், பிகார், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம் என இப்படி இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் முக்கியப் பிரமுகர்கள் வந்திருந்தனர்.

விழாவில் நான் வரவேற்புரையாற்றினேன். அப்போது, “இந்த நாள், நமது வாழ்நாளில் பொன்னாள், வடக்கே பெரியாரைக் கொண்டு-வந்திருக்கும் நாள். பெரியாரை வடக்கில் மட்டுமல்ல, கிழக்கு, மேற்கிலும் கொண்டு சென்றிருக்கிறோம். உலக அளவில் அவரது கருத்துகளை எடுத்துச் சென்றிருக்கிறோம்.
பெரியார் ஒரு குறிப்பிட்ட ஜாதி அல்லது சமூகத்துக்கு சொந்தக்காரர் அல்ல. அவர் உலக சமுதாயத்தின் பொதுச் சொத்து. இன்று நாம் எதிர்நோக்கியுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு, பெரியாரின் கொள்கைகளே. இந்த மய்யத்தின்மூலம், சமுதாயத்தைச் சீர்திருத்த முயற்சிக்கிறோம். இங்குள்ள இரு கிராமங்களைத் தத்தெடுத்துக் கொள்கிறோம். இப்பகுதி மக்களுக்குக் கல்வி, விழிப்புணர்வு, பெண்கள் அதிகாரம் போன்ற அனைத்து மேம்பாடுகளையும் அளிப்போம். இந்த மய்யம் முழுவதும் பொதுமக்கள் நன்கொடையால் உருவாக்கப்பட்டது.

சமுதாய அமைப்பில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற லட்சியத்துடன் இந்த மய்யம் துவக்கப் பட்டுள்ளது.

பெரியாரின் கொள்கைகள் வடபுலத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகின்றன. அக்கொள்கைகள் ஆழமாக வேரூன்ற ஒரு முக்கியமான பணிமய்யம் தேவைப்படுகிறது என்பதால்தான் பெரியார் மய்யம் துவக்கப்பட்டுள்ளது.
வடபுலத்தில் பெரியார் மய்யம் துவக்கப்-பட்டிருப்பதன் மூலம் பல்வேறு சிக்கல்கள் தீர்க்கப்படும். இந்த மய்யத் திறப்பு விழாவுக்கு வடபுலத்தில் இருந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றதே இதற்குச் சான்று. இந்த மய்யம் துவக்கப்பட்டதன் நோக்கம்

நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே நம்பிக்கையில் எங்கள் பணி தொடரும் என்று அப்போது குறிப்பிட்டேன்.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து-கொண்ட டில்லி மாநில முதலமைச்சர் ஷீலா தீட்சித் பெரியார் மய்யத்திற்கு ரூபாய் 5 லட்சம் நன்கொடை அளித்து உரையாற்றுகையில், “இதுவரை பெரியார் கொள்கைகளுக்காக டில்லியில் ஓர் அமைப்பு இல்லாமல் இருந்தது. இப்போது அந்த ஆசை நிறைவேறியுள்ளது. இதற்காக, வீரமணி, சமூகநீதி அமைப்பின் தலைவர் சந்திரஜித் ஆகிய இருவரையும் பாராட்டுகிறேன்.
பெரியாரின் சுயமரியாதைக் கொள்கை இன்றைய உலகுக்கு மிகவும் தேவையாக உள்ளது. நூற்றாண்டாக சமூகப் புறக்கணிப்பால் நாம் கடுமையாகப் பாதிக்கப்பட்டோம். ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறந்ததால், பிறவியிலேயே அவன் புறக்கணிக்கப்பட்டான். இது மனிதாபிமானமற்றது’’ என்று ஷீலா தீட்சித் கவலை தெரிவித்தார்.

பெரியார் மய்யம் மூலம் இப்பகுதி மக்களுக்கு, கல்வி, கம்ப்யூட்டர் அறிவு, பொருளாதார மேம்பாடு உள்பட அனைத்துப் பலன்களும் கிடைக்கும். இம்மய்யத்தின் வளர்ச்சிக்காக ரூ.5 லட்சம் நன்கொடை அளிக்கிறேன். இங்கு துவக்கப்படும் கம்ப்யூட்டர் மய்யத்துக்கு இண்டெர்நெட் உள்பட அனைத்து வசதி-களையும் அளிக்க இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என்றார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.மூப்பனார் பெரியார் சிலையைத் திறந்து வைத்துப் பேசுகையில், “பெரியார் மய்யத்தை நிறுவியுள்ள ஆசிரியர் வீரமணியின் முயற்சி பாராட்டுக்குரியது. அவர் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். அவருக்கு தமிழ்நாட்டில் தனியாகப் பாராட்டு விழா நடத்த வேண்டும்’’ என்று தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

நார்வே நாட்டு பகுத்தறிவாளர் லெவி ஃபிராகல் பெரியார் மய்ய வளாகத்தைத் திறந்து வைத்துப் பேசுகையில், “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார அமைப்பின் பணி-களைப் பாராட்டினார். இந்த சுயமரியாதை இயக்கம், 40 அமைப்புகளுடன் சிறப்பாகச் செயல்படுகிறது. இது உலகில் எங்குமே கேள்விப்படாத சாதனை! இந்த அமைப்பும் மனிதநேய அமைப்புதான்’’ என்றார்.
டில்லி அமைச்சர் யோகானந்தர், கருநாடக அமைச்சர் கிருஷ்ணப்பா, மத்திய பிரதேச துணை முதல்வர் சுபாஷ், த.மா.கா தலைவரும், மேனாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், இந்திய கம்யூ. தேசியச் செயலாளர் டி.ராஜா, ஜனதா தள (அய்) தேசியச் செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விழாவிற்கு தலைமையேற்று சமூகநீதி மய்யத்தின் தலைவர் சந்திரஜித் அவர்கள் தலைமையுரையாற்றினார். தொடர்ந்து மத்திய பிரதேச துணை முதல்வர் சுபாஷ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அவர்களது உரையில் பெரியார் மய்யத்தின் வளர்ச்சிக்காக ரூபாய் 31 ஆயிரத்தை அளிப்பதாக உற்சாகத்தோடு அறிவித்து ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுக்காக பெரியார் மய்யம் மிகச் சிறப்பாக பணியாற்றும் எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருநாடக அமைச்சர் கிருஷ்ணப்பா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அவர் தனது உரையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக காலமெல்லாம் உழைத்தவர் தந்தை பெரியார் அவர்கள். அவரின் பெயரால் அமைக்கப்பட்டுள்ள இந்த மய்யம் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையை ஏற்படுத்தும். இதன் வளர்ச்சிக்காக ரூபாய் 25 ஆயிரத்தை அளிக்கிறேன் என உற்சாகத்தோடு அறிவித்தார்.

அடுத்து டில்லி அமைச்சர் யோகானந்தர் அவர்கள் தனது வாழ்த்துரையில், இந்தப் பெரியார் மய்யத்தின் வளர்ச்சிக்காக எல்லாவித உதவிகளையும் செய்வதற்கு நான் எப்போதும் தயாராக உள்ளேன். மக்களுக்காக உழைத்த மாமேதை தந்தை பெரியார் எனக் குறிப்பிட்டு உரையாற்றினார்.
பெரியார் பெருந்தொண்டர் பா.அருணாசலம் அவர்கள் பவள விழாவைக் கொண்டாடுகின்ற நேரத்திலே, டில்லி பெரியார் மய்யத்திற்கு தந்தை பெரியாரின் சிலையை வழங்கியிருக்கிறார். அவருக்கு உளமார்ந்த நன்றியைப் பெரியார் மய்யத் திறப்பு விழாவில் தெரிவித்தேன்.
டில்லி பெரியார் மய்யத்தின் ஒவ்வொரு செங்கல்லும் பொது மக்களுடைய பணத்தால் பெறப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த டில்லி பெரியார் மய்யத்திற்கு நன்கொடை வழங்கிய தமிழ்நாட்டைச் சார்ந்த, இந்தியாவில் உள்ள மற்றும் உலகில் உள்ள அனைவருக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக்கொண்டேன்.

அமெரிக்க நாட்டில் இயங்கும் பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில் வழங்கப்படும் சமூகநீதிக்கான கி.வீரமணி விருதுக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேனாள் முதல்வர் செல்வி மாயாவதி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1.10.2000 அன்று மாலை டில்லி பெரியார் மய்யத்தின் அருகில் அமைக்கப்பட்ட பெரியார் அரங்கத்தில் அவருக்கு விருது வழங்கப்பட்டது. கான்சிராம் கலந்துகொண்டார்.

டில்லி பெரியார் மய்யம் திறப்பு விழா நிகழ்ச்சிக்குச் செல்ல பேருந்தில் பயணம் செய்த கழகக் குடும்பத்தினர் விபத்தில் இறந்தமைக்காக 7.10.2000 அன்று ஒரத்தநாடு ரெங்கமணி திருமண மண்டபத்தில் நடந்த படத்திறப்பு விழாவில் கனத்த இதயத்துடன் நான் கலந்துகொண்டு இரங்கலுரையாற்றினேன். விபத்தில் மறைவுற்ற சுயமரியாதைச் சுடரொளிகள் கை.இ.கைலாசமுத்து ஒன்றிய ப.க. தலைவர், (கை.முகிலன் அவர்களின் தந்தையார்), அ.இராமச்சந்திரன் -இரா.இராசம்மாள் (ஒரத்தநாடு_ இரா.குணசேகரன் அவர்களின் பெற்றோர்), ரெ.பாப்பம்மாள் (வர்த்தகச் சங்கத் தலைவரும் நகர தி.க. துணைத் தலைவருமான பேபி.கு.ரெங்கசாமி அவர்களின் துணைவியார்), கை.தூ.நீலமேகம் (கை.தூயமணி அவர்களின் மகன்) ஆகியோரின் படங்களைத் திறந்து வைத்தேன்.

No comments:

Post a Comment