Monday, 28 August 2023

'ஹிந்தி' யாருக்குத் தாய்மொழி?

  

ஹிந்தியை எப்படியாவது இந்தியாவின் தேசிய மொழியாக. உள்ளிட்ட எந்த இந்தியாவின் ஒற்றை மொழியாகக் கொண்டுவந்துவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் மோடி, அமித்ஷா உள்ளிட்ட எந்த வடநாட்டாருக்கும் 'ஹிந்தி' தாய்மொழி அல்ல. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் தாய்மொழியும் கீழே தரப்பட்டுள்ளன.

தமிழ்நாடு: தமிழ்மொழி

கேரளம்: மலையாள மொழி

ஆந்திரா, தெலங்கானா: தெலுங்குமொழி

கருநாடகா: கன்னடம், துளு மொழி

மகாராட்டிரா: மராத்தி, கொங்கணி மொழி

குஜராத்: குஜராத்தி மொழி

பஞ்சாப்: பஞ்சாபி மொழி

ராஜஸ்தான்: ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி மொழிகள்

அரியானா: அரியானா மொழி

இமாசலப்பிரதேசம்: மஹாசு. பஹாரி. மண்டேலி. காங்கிரி, பிலாஸ்புரி, சாம்பேலி மொழிகள்.

ஜம்மு-காஷ்மீர்: காஷ்மீரி. டோக்ரி. பாடி. லடாக்கி மொழிகள் 

உத்தராகண்ட்: குடவாலி, குமோனி மொழிகள்

உத்தரப் பிரதேசம்: பிரஸ்பாஷா, கரிபோலி, அவதி, கன்னோஜி, போஜ்புரி, பந்தேலி. பகேலி மொழிகள்

பீகார்: போஜ்புரி, மய்திலி மொழிகள்

ஜார்கண்ட்: சந்தாலி மொழி

சதீஸ்கர்: கோர்பா மொழி

மத்தியப்பிரதேசம்: மால்வி, நிமதி, பகேலி மொழிகள்

மேற்கு வங்கம்: வங்க மொழி

ஒடிசா: ஒடியா மொழி

வடகிழக்கு மாநிலங்கள்: அசாமி, போடோ காரோ, தாமோங், நேபாளி, பங்காளி, காசி,கொக்பராக், மணிப்பூரி மொழிகள்

இப்படி யாருக்கும் தாய்மொழியாக இல்லாத ஹிந்தி மொழியை எந்தவித இலக்கண, இலக்கியத் தொன்மையும் இல்லாத ஒரு மொழியை யாருக்காகத் திணிக்க முயல்கின்றனர்? எதற்காகத் திணிக்க முயல்கின்றனர்? இந்தியாவின் பொதுமொழியாக ஹிந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? 

(நன்றி: 'முகம்' - நவம்பர் 2022)


No comments:

Post a Comment