தந்தை பெரியார் அவர்கள் கள்ளுக்கடை மறியல் கதர் துணி போராட்டம் போன்றவற்றை நடத்தினார்.
ஆங்கிலேய அரசை எதிர்த்து கோர்ட் புறக்கணிப்பு செய்தார்.
30.12.1933ல் 'இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?' என்ற தலைப்பில் கட்டுரை எழுதியதற்காக ஆங்கிலேயர் ஆட்சியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
1934ல் ஆங்கிலேயர் சட்டத்தை எதிர்த்து சிறை சென்றார்.
தந்தை பெரியார் இந்த நாட்டிற்கு விடுதலை வேண்டாம் என்று சொல்லவில்லை; இப்பொழுது வேண்டாம் என்றுதான் சொன்னார்.
22.4.1939ல் சர்.ஸ்டாபோர்ட்கிரிப்சை சந்தித்துத் திராவிட நாடு பிரிவினையை வலியுறுத்தினார். ஆகையால் திராவிட நாட்டைப் பிரித்துக் கொடுத்து விட்டு செல்லுமாறு ஆங்கிலேயரிடம் கோரினார்.
இந்தியா 1947 விடுதலை பெற்றும் 21.7.1948 வரை ஆங்கிலேயரான மவுண்ட்பேட்டன் அவர்களின் கீழ்தான் இயங்கி வந்தது. (விடுதலை இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் மவுண்ட்பேட்டன்)
ஆக ஆளும் வழியைக் கற்றுக் கொடுத்துவிட்டு தான் ஆங்கிலேயர்கள் சென்றனர்.
தந்தை பெரியார் ஆங்கிலேயரை கேட்டது எங்களுக்கு தனியான அதிகாரத்தை வழங்கி விட்டு செல்லுங்கள் என்பதுதான்.
திராவிடர்களுக்கு முழு உரிமை கிடைக்காததால் அந்த நாளை கருப்பு நாளாக தந்தைபெரியார் அறிவித்தார்.
1950 ஜனவரி 26ம் நாள் இந்திய குடியரசு நாளை தென் நாட்டை அடிமைப்படுத்தும் துக்க நாளாக கொண்டாடுங்கள் என அறிவுறுத்தினார்.
இன்றைய குடியரசு நாளிலும் தென்னாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது; முக்கியமாக தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது.
மதவாதிகளின் பிடியில் இந்திய ஒன்றியம் சிக்கிக் கொண்டுள்ளது.
மண்ணுக்கு தான் விடுதலை கிடைத்துள்ளது; மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை!
-எனது முகநூல் பக்கம், 27.1.22
No comments:
Post a Comment