வெற்றிவலவன் பதிவுகள்

Pages

  • Home
  • கைவல்யம் - வேதாந்தம்
  • உண்மை இராமாயணம்
  • சாமியார்கள் எச்சரிக்கை
  • சோதிட ஆராய்ச்சி
  • சிந்தனை செய்வோம்
  • சமூக நீதி
  • பெரியார் உலகம்
  • உழைப்பவர் உலகு

Thursday, 17 February 2022

திராவிடர் கழகத் தலைவர் பற்றி 'தினமணி கதிர்' 'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்!


பிற இதழிலிருந்து... 
February 15, 2022 • Viduthalai

கி.வைத்தியநாதன்

‘தினமணி கதிரில்’ ‘தினமணி’ ஆசிரியர் திரு. கி.வைத்தியநாதன் ஒரு தொடரை எழுதி வருகிறார். அத்தொடரில் 13.2.2022 நாளிட்ட ‘தினமணி கதிரில்’ வட மாநிலத்தில் குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்த அரசியல் நிலவரங்களைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகவே எழுதியுள்ளார்.

மண்டல் குழு அமலாக்கம் பற்றிய தீவிரமான செயல்பாடுகள் தலைதூக்கிய கால கட்டம்; அகில இந்திய அளவில் சமூகநீதி சக்திகளை ஒருங்கிணைக்க திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மிகப் பெரிய முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இதற்காகத் திராவிடர் கழக முயற்சியால் 42 மாநாடுகளும், 16 போராட்டங்களும் நடைபெற்றன. நாடாளுமன்றத்துக்கு முன்பும், பிரதமர் இல்லத்திற்கு முன்பும் கூட மறியல் போராட்டம் நடத்தப்பட்டதுண்டு. பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் (பி.பி.மண்டல்) அவர்களும் உறுப்பினர்களும் சென்னைப் பெரியார் திடலுக்கு வந்ததுண்டு. சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாங்கள் அளிக்கும் பரிந்துரைகளைச் செயல்படுத்தும் சக்தி பெரியார்பிறந்த மண்ணுக்குத்தான் உண்டு. இப்பொழுது திராவிடர் கழகத் தலைவர் வீரமணியின் கையில் அது இருக்கிறது என்றார்.

அக்கால கட்டத்தில் வட இந்திய தலைவர்களுடன் திராவிடர் கழகத் தலைவர் நெருக்கமாக இருந்து செயல்பட்டார்.

எதிரும் புதிருமாக இருந்த பல கட்சித் தலைவர்களை சமூகநீதி என்னும் புள்ளியில் ஒன்றிணைக்கும் மகத்தான பணியில் திராவிடர் கழகத் தலைவர் ஈடுபட்டார். ‘வீரமணியைப் பார்க்கும் பொழுதெல்லாம் சமூகநீதி உணர்வைப் பெறுகிறேன்?” என்று வி.பி.சிங் கூறும் அளவுக்கு அது இருந்தது. உ.பி.யிலும் அதன் பிரதிபலிப்பு இருந்தது.

“தினமணி” ஆசிரியர் திரு. வைத்தியநாதன் ‘தினமணி கதிரில்’ எழுதி வரும் ‘பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்' என்னும் தொடரில் வடபுல அரசியலில் அந்தக் கால கட்டத்தில் திராவிடர் கழகத் தலைவரின் பங்களிப்பு எத்தகைய முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது என்பதை கடந்த பிப். 6 இதழிலும் பிப். 13 இதழிலும் விளக்கியுள்ளார். அந்தக் கட்டுரை இங்கே வெளியிடப்படுகிறது.


அம்பேத்ராஜன், கன்ஷிராம், கி.வீரமணி

"இப்போது நாம் ஒருவரைச் சந்திக்கப் போகிறோம். அவரை நீங்கள் டில்லியில் எதிர்பார்த்திருக்கவே முடியாது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி வியூகம் வகுப்பது அவர்தான்'' என்கிற பீடிகையுடன் ஓட்டு நரை கௌடில்யா மார்க்கிற்குப் போகும்படி சொன்னார் ம. நடராஜன். "தமிழ்நாடு இல்லத்துக்கு அவர் போகமாட்டாரே... பிறகு ஏன் கௌடில்யா மார்க்கிற்கு போகச் சொல்கிறார்...' என்கிற யோசனையில் நான் ஆழ்ந்தேன். தமிழ்நாடு இல்லத்தைத் தாண்டி, அதன் எதிர்வரிசையில் ஏனைய சில மாநிலங்களின் விருந்தினர் மாளிகைக்கு இடையில் அமைந்திருந்த ஒரு பங்களாவில் அந்தக் கார் நுழைந்தது. "ஸ்பிக் கெஸ்ட் ஹவுஸ்' என்கிற பெயர் பலகையிலிருந்து, அந்த நிறுவனத்தின் விருந்தினர் மாளிகை அது என்பது புரிந்தது. உள்ளே நுழைந்தோம். ம. நடராஜன் சொன்னது போலவே, அவரை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதற்கு முன்பு அவரை நான் நேரில் சந்தித்ததும் இல்லை. கொள்கைரீதியான முனைப்புடன் உத்தரப் பிரதேசத் தேர்தலில் கூட்டணி அமைவதற்காக, அவர் அங்கே வந்து தங்கியிருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை.1993 உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியை ஏற்படுத்தி, ஒரே நேரத்தில் காங்கிரசையும், பாஜகவையும் வீழ்த்திய அந்தத் தலைவர் அரசியல்வாதி அல்ல. அவரது பங்களிப்பு தேசிய அளவிலும் பேசப்படவில்லை; தமிழகத்தி லும் உணரப்படவில்லை. அதனால்தான் இங்கே அதைப் பதிவு செய்ய விரும்புகிறேன். (பிப். 6, 2022 - ‘தினமணி கதிர்‘)

அங்கே இருந்தவர் வேறு யாருமல்ல, ‘விடுதலை' ஆசிரி யரும், திராவிடர் கழகத் தலைவரு மான கி. வீரமணிதான். அதற்கு முன்பு அவரது பேச்சைக் கேட்டிருக்கிறேன், எழுத்தைப் படித்திருக்கிறேனே தவிர, நேருக்கு நேர் அருகில் பார்த்ததில்லை.

ம.நடராஜன் என்னை அவரிடம் அறிமுகப்படுத்திய போது, ‘சாவி‘யில் இருந்தவர்தானே? என்று அவர் சட்டெ னக் கேட்டது என்னை ஆச்சரியப்பட வைத்தது. ‘சாவி' இதழில் நான் வேலை பார்த்தபோது, அவரைச் சந்தித்ததே இல்லை. அப்படி இருந்தும் அவர் என்னை அடையாளம் காண்கிறார் என்றால், எந்த அளவுக்கு அவர் எல்லோர் குறித்தும், எல்லா நிகழ்வுகள் குறித்தும்புரிதலுடன் இருக் கிறார் என்பது தெரிந்தது. தலைவர்களிடம் மட்டுமே காணப்படும் குணாதிசயம் அது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடிமைப்பணி அதிகாரி களாக இருந்து பணி ஓய்வுபெற்ற மூன்று நான்கு தமிழகத் தைச் சேர்ந்த அதிகாரிகள் ‘விடுதலை’ ஆசிரியர் கி. வீரமணி யுடன் இருந்தனர். சில உத்தரப் பிரதேச அரசியல்வாதிகளும்.

நான் ஓர் ஓரமாக சென்று அமர்ந்துவிட்டேன். ‘விடுதலை' ஆசிரியர் வீரமணியும், ம.நடராஜனும்தான் தீவிரமான ஆலோசனையிலும் விவாதத்திலும் இருந்தனர். என்னை அவர்கள் வெளியே போகச் சொல்லாததிலி ருந்து, அவர்கள் பேசுவதை நான் கேட்டால் தவறில்லை என்று கருதுகிறார்கள் என்ப தைப் புரிந்து கொண்டேன். என்னைப் பற்றி ம. நட ராஜன் என்ன சொல்லியிருந்தார் என்பது எனக்குத் தெரியாது. ‘வி.பி.சிங்கின் ஜனதா தளம், முலாயம் சிங் யாதவின் சமாஜவாதி கட்சி, கன்ஷிராமின் பகுஜன் சமாஜ் கட்சி மூன்றையும் ஓரணியில் இணைப்பது என்பதுதான் விடுதலை ஆசிரியர் கி. வீரமணியின் திட்டமாக இருந் தது. அதற்காகத்தான் அவர் டில்லியில் தங்கி இருந்து செயல் பட்டுக் கொண்டிருந்தார். இப்போது முன்மொழியப்படும் சமூக நீதிக் கூட்டணிக்கான முதல் முயற்சி 1993-இல் தி.க. தலைவர் வீரமணியால் முன்னெடுக்கப் பட்டது என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது.

வி.பி.சிங், கன்ஷிராம் இருவருமே ‘விடுதலை' ஆசிரியர் வீரமணியிடம் அதீத மரியாதை வைத்திருந்தனர். கன்ஷி ராம் அவரை ராஜகுருவாகவே கருதினார் என்றுதான் சொல்ல வேண்டும். அது வரை வடநாட்டு தலித் அமைப்பு கள் பெரியாரை அங்கீகரித்ததில்லை. அவர் குறித்துப் பரவலாக தெரியாது. விடுதலை ஆசிரியர் வீரமணியுடனான உறவின் காரணமாகத்தான், அம்பேத்கருக்கு நிகரான முக்கி யத்துவத்தைப் பெரியார் ஈ.வெ.ராவுக்கும் பகுஜன் சமாஜ் கட்சி தரத் தொடங்கியது. இப் போது வரை அது தொடர்கிறது.

“பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளைத் தவிர, ஏனைய கட்சிகளை எல்லாம் ஓரணியில் திரட்டி மும்முனைப் போட்டியை ஏற்படுத்தினால்தான், பெரும்பான்மை பலத் துடன் ஆட்சி அமைக்க முடியும். இல்லா விட்டால், பாஜகவோ, காங்கிரஸோ ஏதாவது ஒரு கட்சியைத் தேர்த லுக்குப் பிறகு இழுத்துக் கொண்டு ஆட்சி அமைத்துவிடும்" இதுதான் ‘விடுதலை’ ஆசிரியர் கி. வீரமணியின் கருத்து என்று ம. நடராஜன் என்னிடம் தெரிவித்தார்.

ஒருபுறம், ‘விடுதலை’ ஆசிரியர் வீரமணி எல்லா கட்சி களையும் ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடு பட்டிருந்தார் என்றால், இன்னொருபுறம் முலாயம் சிங், ஜனதா தளத்தைப் பலவீனப்படுத்துவதில் குறி யாக இருந்தார். ஏற்கெனவே ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து ஜனதா தளம் (அஜீத் சிங்) என்கிற பெயரில் இயங்கி வந்த அஜித் சிங்கை சந்திக்கச் சென்றேன்.

“முலாயம் சிங்கை இவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார் கள். அவர் எனது தந்தை சரண்சிங்கின் சீடர் என்பதால், ஆரம்பத்தில் இருந்தே அவரை எனக்குத் தெரியும். காங்கிர ஸின் வாக்கு வங்கியை ஏனைய கட்சிகள் பிரித்துக்கொண்டு விட்டதால், காங்கிரஸ் முலாயமுக்கு ஒரு பொருட்டே அல்ல. பாஜகதான் அவரது எதிரி. வி.பி.சிங், நான், கன்ஷிராம் போன் றோர் இருப்பது அவருக்கு இடைஞ்சலாகத் தெரி கிறது. தனது வாக்கு வங்கிக்குப் போட்டியாக இல்லாத கன்ஷிராமை வேண்டுமானால் அவர் ஏற்றுக் கொள்வார். எங்களைப் பக்கத்தில் சேர்த்துக் கொள்ளவே மாட்டார்” - இது அஜீத் சிங் என்னிடம் சொன்னது.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, டில்லியில் இருப்பது குறித்தும், அவர் உத்தரப் பிரதேசத்தில் சமூகநீதிக் கூட்டணி ஒன்றை உருவாக்க முயற்சிப்பது குறித்தும் அவரிடம் சொன்னேன்.

"அதில் இணைந்து கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால், அவர்கள் என்னைச் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஜாட்டுகளை முற்பட்ட இனத்தவரும் தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்வதில்லை. பிற்படுத்தப் பட்டவர்களும் சேர்த்துக் கொள்வதில்லை. கன்ஷிராம் கட்சியினருக்கும் நாங்கள் தீண்டத்தகாதவர்கள். குறிப்பாக, என்னை வி.பி. சிங்கும், முலாயம் சிங்கும் அகற்றி நிறுத்தி அழிக்கத்தான் விரும்புவார்கள். வேறு வழியில்லா விட்டால், நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம். அது பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள்..." என்று சொன்னார் அஜீத் சிங்.

அமர்சிங் மூலம் இந்தத் தகவலை முலாயம்சிங்கிற்குத் தெரிவித்தேன். எனக்குக் கிடைத்த பதில் என்ன தெரியுமா? “அஜீத் சிங், அவரையும், அவர் கட்சியையும் பற்றிக் கவ லைப்படட்டும். எங்களை பற்றிக் கவலைப்பட வேண்டாம்!”

1991-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்ருந்தது. காங்கி ரஸ் 46 இடங்களிலும், ஜனதா தளம் 92 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. ஜனதா தளத்திலிருந்து பிரிந்து, சந்திரசேகரின் சமாஜவாதி ஜனதா கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட முலாயம் சிங் யாதவின் சமாஜவாதி கட்சி 34 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 12 இடங்களில் வென்றிருந்தன.

முலாயம் சிங் மீண்டும் இணைந்தால் பிற்படுத்தப்பட்ட சமூகமும், சிறுபான்மை சமூகமும் முழு ஆதரவைத் தரக்கூடும் என்பது வி.பி.சிங்கின் 1993 தேர் தல் எதிர்பார்ப்பு. பலவீனமாகிவிட்ட காங்கிரஸ் வாக்குகளும் தங்களுக்குத் கிடைத்தால் 200 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கலாம் என்று அவர் வெளிப்படையா கவே தெரிவித்தார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள முலாயம் சிங் தயாராக இல்லை .

முலாயம் சிங், வி.பி.சிங்கை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்றால், கன்ஷிராமும் வி.பி. சிங்கை ஏற்றுக் கொள் ளத் தயாராக இல்லை . தனது முயற்சிகள் ஆடு, புலி, புல்லுக் கட்டு பிரச்சினையாக இருப்பதை உணர்ந்ததாலோ என்னவோ, தி.க. தலைவர் வீரமணி தனது அடுத்தகட்ட முயற்சியில் இறங் கினார் என்று தோன்றுகிறது. அப்போது அவர் வகுத்த வியூ கங்கள் என்னென்ன என்ப தெல்லாம் குறித்து ‘விடுதலை‘ ஆசிரியர்தான் விளக்க வேண்டும். எனக்குத் தெரியாது.

“வி.பி. சிங்குடன் இணையாமல் இருப்பதற்கு முலாயம் சிங்கிற்கு ஒரு காரணம் உண்டு. சிறுபான்மை முஸ்லிம்களின் ஆதரவாளர்கள் ஓரணியில் திரள்கிறார்கள் என்கிற சந்தேகம் ஏற்பட்டால், ஹிந்துக்கள் ஓரணியில் பாஜக பின்னால் அணி திரண்டு விடுவார்கள். அதே நேரத்தில் வெற்றி வாய்ப்பு தனக்குத்தான் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தினால், பாஜகவைத் தோற்கடிப்பதற்காக முஸ்லிம்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று கணக்குப் போட்டுக்காயை நகர்த்துகிறார் முலாயம்" என்று எனக்குப் பொறுமையாக விளக்கினார் முன்னாள் பிரதமர் சந்திர சேகர்ஜியின் உதவியாளர் யாதவ். அதுதான் நடந்தது.

இன்னொரு பக்கம், ‘விடுதலை’ ஆசிரியர் வீரமணி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கன்ஷிராமின் முழு நம்பிக்கையைப் பெற்றவராக இருந்தார். இரண்டு பேரும் சேர்ந்துதான் தேர்தல் வியூகங்களை வகுத்தனர் என்றுகூட நான் நினைக்கிறேன். அந்த சந்திப்புகளில் ம. நடராஜனுக்குப் பங்கு இருந்ததாகத் தெரியவில்லை .

பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராமைப் பற்றிக் கூறும்போது அம் பேத்ராஜனைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியாது. கன்ஷிராமின் நிழல் என்றேகூட அவரைச் சொல்லலாம். கன்ஷிராமுக்கும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கும் இடையே பாலமாகவும், அவர்களது கருத்துப் பரிமாற்றங்களுக் குத் துணையாகவும் அந்தக் காலகட்டத்தில் இருந்தவர் அம்பேத்ராஜன்தான்.

கன்ஷிராம் உடல் நலமில்லாமல் சிகிச்சைக்கு சென் னைக்கு வந்தபோது, தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான அம்பேத்ராஜனைத் தன்னருகில் வைத்துக் கொண்டார். கன்ஷிராமின் கடைசிக் காலம் வரை அவரைவிட்டுப் பிரியாமல் இருந்த அம் பேத்ராஜன், அவரது மறைவுக்குப் பிறகு ‘பெஹன்ஜி' என்று அழைக்கப்படும் மாயா வதிக்கும் உதவியாளராகவும், தனிச்செயலாளராகவும், கட்சியின் செயலாளராகவும் தொடர்ந்தார்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த அம்பேத்ராஜன் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆரம்பம் முதல் அதன் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள் ஏராளம் என்பது அனைவருக்கும் தெரி யும். மாயாவதி அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கியது. அந்தக் கட்சியில் பல ருக்கும் எதிர்பாராத அதிர்ச்சி, தமிழர் ஒருவர் உத்தரப் பிரதேச அரசியலில் முதன்மை பெறுவதும், மாயாவதியின் நம்பிக்கைக்குரியவராகத் தொடர்வதும் பலருக்குப் பொறாமையை ஏற்படுத்தியதில் வியப்பென்ன இருக்கிறது?

இப்போது அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இல்லை என்பது மாயாவதியின் கெட்ட வாய்ப்பே!. கட்சியில் இருந்த அவரது வடநாட்டு எதிரிகள் வெற்றியடைந்தனர்.

அது இருக்கட்டும். கூட்டணி முடிவுக்கு விடுதலை ஆசிரியரும், கன்ஷிராமும் முன்னெடுத்த முயற்சி காரணமா, இல்லை முலாயம் சிங் யாதவின் ராஜதந்திரக் கணக்கு காரணமா என்பது குறித்த விவாதம் தேவையற்றது. சமாஜவாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைப்பது என்று முடிவெடுத்தபோதே, 1993 உத்தரப் பிரதேசத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

முலாயம் சிங் யாதவின் பின்னால் ஏறத்தாழ ஒரு கோடி யாதவர்கள் ஆட்சி அதிகாரம் பெற்றுவிடுவோம் என்கிற நம்பிக்கையில் அணி திரண்டனர். அவர்களுடன் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவாளர்களான ஒன்றரை கோடி தலித்துக ளும் இணைகி றார்கள் எனும் போது, சிறுபான்மை முஸ்லிம் களின் 80% வாக்குகள் அந்தக் கூட்ட ணிக்கு உறுதியானது.

தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தது போல அமைய வில்லை. 422 உறுப்பினர்கள் கொண்ட அவையில் பாஜக 177 இடங்களை வென்றிருந்தது. தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை . 109 இடங்களில் சமாஜ்வாதி கட்சியும், 67 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சியும் வெற்றி பெற்று, அந்தக் கூட்டணி 176 இடங்களுடன் பாஜகவுக்கு அடுத்தபடியாக வந்திருந்தது. 28 இடங்களுடன் காங்கிரஸும், 27 இடங் களுடன் ஜனதா தளமும் வேறு வழியில்லாமல் முலாயம் சிங்கின் கூட்டணியை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டன.

கூட்டணியை ஏற்படுத்திக் கொடுத்ததில் ‘விடுதலை’ ஆசிரியரின் பங்கு கணிசமானது. அதேபோல, பகுஜன் சமாஜ் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தியதில் ஜெய லலிதாவின் பங்கு இருந்ததாகச் சொல்லப்பட்டது. ஏனைய அரசியல் கட்சி களைப்போல அல்லாமல், தேர்தலை எதிர்கொள்ளும் பணபலம் பகுஜன் சமாஜ் கட்சிக்கு எப்படி வந்தது என்கிற கேள்விக்கு ஒருவேளை அம்பேத்ராஜன் விடைதருவாரோ என்னவோ தெரியாது. 1993 சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பல வட நாட்டு மாநிலக் கட்சித்தலைவர்கள் ம.நடராஜனின் நட்பை நாடினார்கள் என்பது எனக்குத் தெரியும்.

அந்தத் தேர்தல் முடிவுகள் வி.பி. சிங்கின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தது என்றுதான் கூற வேண்டும். அதேபோல, பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் விரும் பியது போலவே, காங்கிரஸ் தலைவர் என்.டி. திவாரியின் அரசியல் வாழ்வுக்கும் முற்றுப்புள்ளி விழுந்தது.

1993-இல் தொடங்கி இன்றுவரை உத்தரப் பிரதேச அரசியல் பாஜக - சமாஜவாதி - பகுஜன் சமாஜ் கட்சிகளுக் கிடையேயான ஆட்சி அதிகாரப் போட்டியாகத்தான் கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்கிறது. அதன் பின்னால் தமிழ் நாட்டின் பங்கு இருக்கிறது என்பதை எல்லோருமே மறந்து விட்டார்கள்.

நான் முன்பே சொன்னதுபோல, 1993 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்த லில் தமிழகத்தின் பங்கு தேசிய அளவில் கவனம் பெறவில்லை. தமிழ்நாட்டில் அது உணரப்படவில்லை . ‘விடுதலை ஆசிரியர் கி. வீரமணியும், கன்ஷிராமின் உதவியா ளராக இருந்த அம்பேத்ராஜனும், அந்த நாள் ஞாபகமாகப் பகிர்ந்துக் கொள்ள பல செய்திகள் உண்டு என்பது மட்டும் உறுதி.

- நன்றி: ‘தினமணி கதிர்', 13.2.2022

Posted by parthasarathy r at 22:59
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: ஆசிரியர், உ.பி, கூட்டணி

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

மூலிகை மன்னன்

மூலிகை மன்னன்
செ.ர.பார்த்தசாரதி
Powered By Blogger

Search This Blog

Translate

About Me

parthasarathy r
View my complete profile

Contact Form

Name

Email *

Message *

Subscribe To

Posts
Atom
Posts
Comments
Atom
Comments

Followers

Blog Archive

  • ►  2025 (28)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (2)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (3)
    • ►  May (5)
    • ►  March (4)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2024 (53)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  October (13)
    • ►  September (5)
    • ►  August (1)
    • ►  July (8)
    • ►  June (10)
    • ►  May (4)
    • ►  April (1)
    • ►  March (1)
    • ►  February (4)
    • ►  January (3)
  • ►  2023 (51)
    • ►  December (3)
    • ►  November (9)
    • ►  October (5)
    • ►  August (6)
    • ►  May (8)
    • ►  April (5)
    • ►  March (11)
    • ►  February (3)
    • ►  January (1)
  • ▼  2022 (42)
    • ►  December (1)
    • ►  November (3)
    • ►  October (3)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  July (8)
    • ►  June (1)
    • ►  May (4)
    • ►  April (1)
    • ►  March (6)
    • ▼  February (10)
      • செம்பரம்பாக்கத்தில் புதிய கிளைக்கழகம் தொடங்கப்பட்டது
      • பொதுக்குழு உறுப்பினர் தோழர் கே.எம்.சிகாமணி, தமிழர்...
      • ஆசிட் தியாகராசன்....
      • ஆங்கிலேய அரசை எதிர்த்த தந்தை பெரியார்
      • பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடர் சேர்க்கை : உண...
      • நலவாரிய உறுப்பினர்கள் நலத்திட்ட உதவி பெற ஆதார் அவச...
      • திராவிடர் கழகத் தலைவர் பற்றி 'தினமணி கதிர்' 'பிரணா...
      • தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தரப் பணியாளர்களுக்கு...
      • தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் திருத்தி அமைப்...
      • தமிழர் தலைவரிடம் பெரியார் உலக நிதி (செல்வேந்திரன்)
    • ►  January (3)
  • ►  2021 (81)
    • ►  December (3)
    • ►  November (3)
    • ►  October (13)
    • ►  September (3)
    • ►  August (9)
    • ►  July (11)
    • ►  June (3)
    • ►  May (5)
    • ►  April (1)
    • ►  March (5)
    • ►  February (20)
    • ►  January (5)
  • ►  2020 (80)
    • ►  December (7)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  July (5)
    • ►  June (8)
    • ►  May (24)
    • ►  April (6)
    • ►  March (8)
    • ►  February (12)
    • ►  January (5)
  • ►  2019 (61)
    • ►  December (6)
    • ►  November (5)
    • ►  October (5)
    • ►  September (5)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  May (3)
    • ►  April (7)
    • ►  March (3)
    • ►  February (9)
    • ►  January (8)
  • ►  2018 (34)
    • ►  December (2)
    • ►  November (3)
    • ►  October (3)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  July (6)
    • ►  June (4)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  February (7)
    • ►  January (3)
  • ►  2017 (31)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (5)
    • ►  April (1)
    • ►  March (4)
    • ►  February (6)
    • ►  January (4)
  • ►  2016 (33)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (4)
    • ►  September (10)
    • ►  August (1)
    • ►  June (5)
    • ►  May (4)
  • ►  2015 (7)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  August (1)
    • ►  May (1)

Popular Posts

  • கோயில் நுழைவு போராட்டத்தை எதிர்த்த உ வே சாமிநாதையரும் வ.சு அய்யரும்
    1899ஆம் ஆண்டு நடந்த கமுதி ஆலய நுழைவு வழக்கில் நாடார்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று நீதிமன்றத்தில் கூறியவர் உவே சாமிநாத அய்யர் 1922ஆம்...
  • அவதூறு பரப்பும் சீமான் மீது நடவடிக்கை கோரி புகார் மற்றும் விரிவான விளக்கம்
    பார்ப்பன அடிவருடியாகவும் ஆர்.எஸ்.எஸ்., பிஜேபியின் கைக்கூலியாகவும் ஆகிவிட்ட சீமான் சில காலமாக தந்தை பெரியாரைப் பற்றி அவதூராகவும் ...
  • மே தினமா? விஸ்வகர்மா ஜெயந்தியா? எது தொழிலாளர் தினம்?
    பெல் ம. ஆறுமுகம் உலகிலுள்ள தொழிலாளர்கள் அனைவரும் உலகத் தொழிலாளர் நாளாக மே முதல் நாளை ஏற்றுக் கொண்டு கொண்டாடி வருகின்றனர். ஆனால், ஆர்....
  • ஏமாற்றும் கட்டுக்கதைகள் ‘‘நெருப்பும், அக்னி பகவான் பெற்ற சாபமும்’’-செ.ர.பார்த்தசாரதி
     ஏமாற்றும் கட்டுக்கதைகள் ‘‘நெருப்பும், அக்னி பகவான் பெற்ற சாபமும்’’-செ.ர.பார்த்தசாரதி தீ(சுடர்) உண்டாக வேண்டும் என்றால் மூன்று  பொருட்கள் தே...
  • ஒபிசி சான்றிதழ் பெறும் வழிமுறை
    ஓபிசி சான்றிதழ் - சில தகவல்கள் - குடந்தை கருணா மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோ ருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்...
  • சூத்திரன் குடிக்கத் தடை செய்யப்பட்ட மாட்டுப் பால்! -செ.ர.பார்த்தசாரதி
    வைணவ மதத்தை பரப்பிய பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நாதமுனி ஆழ்வார் அவர்களின், ‘விஷிஷ்டாத்வைதம்’ என்ற கொள்கைக்கு வேத முறைப்படி விளக்க உரை கூ...
  • ‘சூத்திரன்’ என்றால் ஆத்திரம் கொண்டு அடி!
      Published August 22, 2024, விடுதலை நாளேடு கைவல்யம் பிறந்த நாள் இன்று (22.8.1877) ‘சூத்திரன்’ என்றால் ஆத்திரம் கொண்டு அடி! கைவல்யம் (1877-1...
  • திராவிடர் இயக்கம் தோன்றிய வரலாறு
    *வரலாறு அறிவோம்.* ஒரு காலத்தில் உணவு விடுதிகளைப் பெரும்பாலும் பிராமணர்களே நடத்திவந்தனர். *பிராமணர் அல்லாதார் உள்ளே சென்று உட்கார்ந்து சாப்பி...
  • வால்மீகி இராமாயணத்தில் சொல்லப்படாத இராமேஸ்வரம் - செ.ர.பார்த்தசாரதி
    - செ.ர.பார்த்தசாரதி புத்த இராமாயணம், ஜைன இராமாயணம், தாய்லாந்து இராமாயணம் (ராம்கியான்) முதல் பல இராமாயணங்கள் நாட்டில் வழங்கப்பட்டு வந்தாலும் ...
  • ஆரிய பார்ப்பானின் அயோக்கிய குணங்கள்
    முட்டாள் ஆரியப் பார்ப்பான்  கடவுள் உண்டு என்பான், தானே கடவுள் என்பான், பரமாத்மாவேறு, ஜீவாத்மா வேறு என்பான், ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று ...

Labels

  • 100 நாள்
  • 2024
  • 27 சதவிகித இடஒதுக்கீடு
  • 5 வயது
  • 8மணி நேரம்
  • standing order
  • அ.குணசீலன்
  • அக்னி
  • அக்னி பகவான்
  • அடி
  • அடிப்படை கடமைகள் 51a
  • அண்ணா
  • அண்ணாதுரை
  • அண்ணாமலை
  • அநீதி
  • அமெரிக்கா
  • அம்பேத்கர்
  • அயோக்கியர்கள்
  • அயோத்திதாசர்
  • அய்ந்து ஆவணங்கள்
  • அய்யா
  • அரசாணை
  • அரசு
  • அரசு ஆணை
  • அரசு திட்டங்கள்
  • அரிச்சுவடி
  • அருங்காட்சியகம்
  • அருவறுப்பு
  • அர்ச்சகர்
  • அவசர உதவி
  • அளவு
  • அறக்கட்டளை
  • அறிக்கை
  • அறிவியலாளர்
  • அறிவு
  • அறுவை சிகிச்சை
  • அற்றவர்
  • அனுமதிசான்றிதழ்
  • அனைத்து சாதியினரும் அர்ச்சகர்
  • அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்
  • ஆகமம்
  • ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை
  • ஆங்கில அரசு
  • ஆசிட் தியாகராசன்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் கி.வீரமணி
  • ஆசிரியர் மகள்
  • ஆசிவகம்
  • ஆட்சி
  • ஆட்சி அதிகாரம்
  • ஆணை
  • ஆணையம்
  • ஆதார்
  • ஆதி திராவிடர்
  • ஆதிச்சநல்லூர்
  • ஆதிதிராவிடர்
  • ஆதித்த கரிகாலன்
  • ஆயகலைகள்
  • ஆய்வு
  • ஆரிய பார்ப்பான்
  • ஆரியர்
  • ஆர் எஸ் எஸ்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்எஸ்எஸ்
  • ஆர்கனைசர்
  • ஆர்ப்பாட்டம்
  • ஆலய பிரவேசம்
  • ஆவடி
  • ஆவணம்
  • ஆளுநர்
  • ஆஷ் துரை
  • இசுலாம்
  • இசை
  • இசைப்பள்ளி
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு
  • இடிப்பு
  • இடுகாடு
  • இணையதளத்தில் பதிவு
  • இணையேற்பு
  • இதயம்
  • இதர பிற்படுத்தப்பட்டோர்
  • இதழ்
  • இந்தி
  • இந்தியா
  • இந்து
  • இந்து அல்ல
  • இந்து மதம்
  • இம்மானுவேல்
  • இயேசு
  • இரட்டைமலை சீனிவாசன்
  • இரயில்
  • இரயில்வே
  • இராமதாசு
  • இராமராஜ்ஜியம்
  • இராமன்
  • இராமாயணம்
  • இராமேஸ்வரம்
  • இராஜகோபாலாச்சாரி
  • இராஜாஜி
  • இலக்கணம்
  • இலக்கியம்
  • இலக்குமணன்
  • இலவசம்
  • இறுதிப் பேருரை
  • இனக்குழு
  • இனம்
  • இனவெறி
  • ஈரோடு
  • உ.பி
  • உ.வே.சா
  • உங்களுக்குத் தெரியுமா
  • உச்ச நீதிமன்றம்
  • உச்சநீதிமன்றம்
  • உஞ்சவிருத்தி
  • உடைப்பு
  • உணவு விடுதி
  • உதவி
  • உத்தரவு
  • உத்திரமேரூர் கல்வெட்டு
  • உயர் நீதிமன்றம்
  • உயர்நிலை
  • உரிமை
  • உருக்கு இரும்பு
  • உருண்டை
  • உவேசா
  • உழைப்பு
  • உறுதிமொழி
  • உறுப்பினர்
  • ஊதியம்
  • ஊர்
  • ஊழல்
  • எதிர்ப்பு
  • எபிகூரசு
  • எபிகூரஸ்
  • எம்ஜிஆர் நகர்
  • எருக்கஞ்சேரி
  • எழிலன்
  • எழுத்து
  • எனது
  • எனது கட்டுரை
  • ஒ.பி.சி.
  • ஒப்புதல்
  • ஒரே தேர்தல்
  • ஒரே நாடு
  • ஒலிப்பு
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்றியம்
  • ஓசி சோறு
  • ஓபிசி சான்றிதழ்
  • ஓய்வூதியம்
  • கச்சத்தீவு
  • கடமை
  • கடவுள்
  • கட்டுரை
  • கணக்கீடு
  • கணக்கு
  • கணக்கெடுப்பு
  • கணபதி
  • கண்டு பிடிப்பு
  • கண்ணதாசன்
  • கத்தோலிக் சர்ச்
  • கந்தன்
  • கம்பராமாயணம்
  • கம்யூனிசம்
  • கருத்துரை
  • கரோனா
  • கர்ணம்
  • கலி.பூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைஞர் உலகம்
  • கல்பாத்தி
  • கல்லூரி
  • கல்வி
  • கல்வியில் இட ஒதுக்கீடு
  • கவிஞர்
  • கவிஞர் கலிபூங்குன்றன்
  • கழகம்
  • கழிப்பறை
  • கழுவேற்றம்
  • கற்பழிப்பு
  • காட்டுமிராண்டி மொழி
  • காந்தி
  • காமராஜர்
  • காமலீலை
  • காரணம்
  • காரல் மார்க்ஸ்
  • காராம் பசு
  • காலக் கணக்கு
  • காவிரிச் செல்வன்
  • காஷ்மீர்
  • கி. வீரமணி
  • கி.வீரமணி
  • கிராம நிர்வாகம்
  • கிரிகோரியன்
  • கிருத்துவம்
  • கிளைக் கழகம்
  • கீரி
  • குங்குமம்
  • குடும்ப அட்டை
  • குணம்
  • குமரேச சதகம்
  • குமாரசம்பவம்
  • குரான்
  • குலக்கல்வி
  • குறைந்தபட்ச ஊதியம்
  • கூட்டணி
  • கூட்டாட்சி
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளா
  • கேள்வி பதில்
  • கேள்வி-பதில்
  • கைது
  • கைவல்யம்
  • கொடி
  • கொடுங்கையூர்
  • கொடுமை
  • கொலை
  • கொலை முயற்சி
  • கோடம்பாக்கம்
  • கோடு
  • கோயில்
  • கோயில் அகற்றல்
  • கோயில் நுழைவு
  • கோல்வால்கர்
  • சங்ககாலம்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சார்
  • சட்டமன்ற உறுப்பினர்கள்
  • சட்டம்
  • சண்டை
  • சத்தியவாணி முத்து
  • சத்திரியர்
  • சந்தா
  • சந்திப்பு
  • சமணம்
  • சமணர்
  • சமஸ்கிருதம்
  • சமூக மாற்றம்
  • சமூகநீதி நாள்
  • சமையல்
  • சம்பிரதாயம்
  • சாதனை
  • சாதி
  • சாதி ஒழிப்பு
  • சாதி கொடுமை
  • சாதி சான்றிதழ்
  • சாதிவெறி
  • சாமிநாதன்
  • சாய்பாபா
  • சான்றிதழ்
  • சி.பி.எஸ்.ஈ
  • சிகாமணி
  • சிக்கனம்
  • சிங்காரவேலர்
  • சிந்தனை
  • சிந்தனை முத்து
  • சிபிஎஸ்சி
  • சிவகளை
  • சிவம்
  • சிறுகதை
  • சீடர்
  • சீதை
  • சீமான்
  • சீர்காழி கோவிந்தராசன்
  • சீனிவாச அய்யங்கார்
  • சுதந்திரப் போராட்டம்
  • சுந்தரம்
  • சுபவீ
  • சுயமரியாதை
  • சுயமரியாதை திருமண சட்டம்
  • சுயமரியாதைத் திருமணம்
  • சூத்திரர்
  • சூத்திரர்கள்
  • சூத்திரன்
  • சூத்திரன் நீக்கம்
  • சூரிய மறைப்பு
  • செ.ர. பார்த்தசாரதி
  • செ.ர.பார்த்தசாரதி
  • செங்கை
  • செம்பரம்பாக்கம்
  • செலவு
  • செல்வேந்திரன்
  • சென்னை
  • சேது கால்வாய்
  • சைதாப்பேட்டை
  • சைதை கூட்டம்
  • சைவம்
  • சொக்கலிங்கம்
  • சொத்து
  • ஞாயிறு மலர்
  • ஞாயிறு மலர் கட்டுரை
  • டி.என்.பி.எஸ்.சி.
  • தகைசால் தமிழர்
  • தண்ணீர் தொட்டி
  • தந்தை பெரியார்
  • தமிழர் தலைவர்
  • தமிழர்கள்
  • தமிழன்
  • தமிழினம்
  • தமிழ்
  • தமிழ் கல்வெட்டு
  • தமிழ் தேசியம்
  • தமிழ் நாடு
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் பைபிள்
  • தமிழ் மொழி
  • தமிழ்த்தாய் வாழ்த்து
  • தமிழ்நாடு
  • தலாக்
  • தலையங்கம்
  • தலைவர்
  • தலைவெட்டி முனியப்பன்
  • தன்னிலை விளக்கம்
  • தாவரம்
  • தாழ்த்தப்பட்டோர்
  • திட்டம்
  • திணிப்பு
  • திமிர்
  • தியாகராயர்
  • திராவிட நாடு
  • திராவிட வீராங்கன
  • திராவிடம்
  • திராவிடர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் மொழி
  • திராவிடர்கள்
  • திருடன்
  • திருநீறு
  • திருமண வரலாறு
  • திருமணம்
  • திருமாவேலன்
  • திருமூலர்
  • திலகர்
  • திறப்பு
  • தினமலர்
  • தீ
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்ளக்
  • துறவி
  • தூக்கு
  • தூய்மைப் பணியாளர்கள்
  • தென் சென்னை
  • தேசபக்தி
  • தேர்ச்சிக்கு சமம்
  • தேர்வு
  • தை
  • தொண்டு
  • தொலைபேசி
  • தொழிலாளர்
  • தொழிற்சாலை
  • தோள்சீலை
  • தோள்சீலைப் போராட்டம்
  • நடக்க உரிமை
  • நம்பூதிரி
  • நலவாரியம்
  • நன்கொடை
  • நன்மை
  • நன்னன்
  • நாடார்
  • நாள்காட்டி
  • நான்
  • நிதி
  • நியமனம்
  • நியூயார்க் டைம்ஸ்
  • நிலம் அளனவ
  • நிலவு
  • நிலையானைகள்
  • நினைவிடம்
  • நீசபாசை
  • நீட்
  • நீதிக் கட்சி
  • நீதிக்கட்சி
  • நீதிக்கட்சி அரசாணை
  • நுங்கம்பாக்கம்
  • நூல்
  • நூல் திறனாய்வு
  • நூல் விமர்சனம்
  • நூற்றாண்டு
  • நேரம்
  • நேர்காணல்
  • நோய்
  • பகத்சிங்
  • பசு
  • பசுவதை
  • பச்சையப்பன் கல்லூரி
  • பஞ்சமா பாதகம்
  • பஞ்சாப்
  • படக்கதை
  • படத்திறப்பு
  • படம்
  • படிம வளர்ச்சி
  • பட்டா
  • பட்டியல்
  • பணம்
  • பணிநிறைவு
  • பதவிகள்
  • பதிலடி
  • பதிலடி பக்கம்
  • பதிவு திருமணம்
  • பயிற்சி
  • பரமசிவம்
  • பழமொழி
  • பழனி
  • பள்ளி
  • பள்ளி சான்றிதழ்
  • பள்ளிக்கல்வி
  • பறைச்சி
  • பறையர்
  • பறையன்
  • பனகல் அரசர்
  • பன்முகம்
  • பா.சிவக்குமார்
  • பா.ஜ.க.
  • பாகிஸ்தான்
  • பாடல்
  • பாதிரியார்
  • பாம்பு
  • பார்க்க வேண்டிய இடம்
  • பார்த்தசாரதி
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் ஆதிக்கம்
  • பார்ப்பனர் ஊழல்
  • பார்ப்பனர்கள் ஆதிக்கம்
  • பார்ப்பான்
  • பாலம்
  • பாலியல் கொடுமை
  • பாலியல் துன்புறுத்தல்
  • பாலியல் வன்முறை
  • பாவாணர்
  • பான்காடு
  • பிச்சை
  • பிராமணர்
  • பிரிட்டிஷ் ஆட்சி
  • பிரியன்
  • பிள்ளையார்
  • பிறந்தநாள்
  • பினராயி விஜயன்
  • பிஜேபி
  • புகழ்
  • புகார்
  • புதியகல்வி
  • புதுப்பிப்பு
  • புதுவை
  • புத்தர்
  • புத்தர் சிலை
  • புவி
  • புறம்போக்கு
  • பெண்
  • பெண்கள்
  • பெயர்
  • பெயர் சூட்டல்
  • பெயர் நீக்கம்
  • பெரியாரியல்
  • பெரியார்
  • பெரியார் உலகம்
  • பெரியார் மண்
  • பெரியார் மய்யம்
  • பெரியார் மேளா
  • பெரியார் மையம்
  • பெரியார் விருது
  • பேட்டி
  • பேதம்
  • பேரணி
  • பேரவை
  • பேருந்தில் இலவசம்
  • பைபிள்
  • பொதுக்கூட்டம்
  • பொதுவுடமை
  • பொருளாதாரம்
  • போப்
  • போராட்டம்
  • பௌத்தம்
  • பௌத்தர்
  • ம.பொ.சி.
  • மணியம்
  • மணியம்மை
  • மணியம்மையார்
  • மண்
  • மதசார்பின்மை
  • மதம்
  • மதிப்பு
  • மதிப்பெண்
  • மதிப்பெண் ஊழல்
  • மத்மாநாடு
  • மருத்துவம்
  • மலம்
  • மலையாளம்
  • மறைவு
  • மனுதர்மம்
  • மன்னர்கள்
  • மஹத் போராட்டம்
  • மாட்டுப்பால்
  • மாநாடு
  • மாநில பிரிவு
  • மாலன்
  • மாற்றுத்திறனாளி
  • மாஸ்கோ
  • மின் அஞ்சல்
  • மின் இணைப்பு
  • மின் நூல்
  • மின்சாரம்
  • மின்னஞ்சல்
  • மின்னூல்
  • மீட்பு
  • முகவரி
  • முத்துராமலிங்கம்
  • முரசொலி
  • முருகன்
  • முனைவர் பட்டம்
  • முன்னேற்றம்
  • மூக்நாயக்
  • மூடநம்பிக்கை
  • மெரினா
  • மே நாள்
  • மேளம்
  • மைல்கல்
  • மொழி
  • மோசடி
  • மோடி
  • யுனெஸ்கோ
  • ரயில்வே
  • ரவிக்கை
  • ராமர் பாலம்
  • ராமானுஜர்
  • ராஜாஜி
  • ரிஷி
  • லக்னோ
  • லண்டன்
  • லால் பகதூர் சாஸ்திரி
  • வசை
  • வணிகக் கட்டடங்கள்
  • வண்ணார்
  • வயது
  • வரலாறு
  • வருணாசிரமம்
  • வருமான சான்றிதழ்
  • வர்ணம்
  • வழக்கு
  • வளர்ச்சி
  • வாஞ்சிநாதன்
  • வாரிசு
  • வாலிபர் மாநாடு
  • வாழ்க்கை வரலாறு
  • வி பி சி ங்
  • விடுதலை அலுவலகம்
  • விடுதலை புலிகள்
  • விபூதி வீரமுத்து
  • விமர்சனம்
  • வியப்பு
  • விருது
  • விருப்ப மொழி
  • வில்லிவாக்கம்
  • விவேகாநந்தர்
  • விவேகானந்தர்
  • விளக்கம்
  • வெப்பம்
  • வெற்றிச்செல்வி
  • வேண்டாம்
  • வேதம்
  • வைக்கம்
  • வைத்தியநாதன்
  • ஜாக்கெட்
  • ஜாதி
  • ஜாதி ஒழிப்பு
  • ஜாதிப் பிரிவு
  • ஜெயலலிதா
  • ஜெயலெட்சுமி
  • ஸ்ரீ தேசிகப் பிரபந்தம்
  • ொத்துரிமை
Simple theme. Powered by Blogger.