Friday, 31 December 2021

கிரெகொரியின் நாட்காட்டி


அய்க்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாட்காட்டி

கிரெகொரியின் நாட்காட்டி (Gregorian calendar) என்பது உலக (சர்வதேச) அளவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் நாட்காட்டியாகும்.[1][2][3] இந்த நாட்காட்டி கிரிகோரியன் நாட்காட்டி எனவும் அறியப்பெறுகிறது. மேலும் மேற்கத்திய நாட்காட்டி எனவும் கிறித்துவ நாட்காட்டி எனவும் வழங்கப்பெறுகிறது. இந்த நாட்காட்டியானது சர்வதேச நிறுவனங்களான சர்வதேச தபால் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றினால் அங்கீகரிப்பட்டுள்ளது.[4]

உரோமையில் புனித பேதுரு பெருங்கோவிலில் உள்ள திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரியின் கல்லறை. நாட்காட்டி சீர்திருத்தம் கொண்டாடப்படும் காட்சி

இன்று உலகில் பரவலாகப் பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியான இது கி. மு 45 -ல் ரோமப் பேரரசர் சூலியசு சீசரால் உருவாக்கப்பட்ட யூலியன் நாட்காட்டியின் (Julian calendar) ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோயிசியசு இலிலியசு (Aloysius Lilius) என்ற மருத்துவரால் முன்வைக்கப்பட்டது. இது பிப்ரவரி 24 1582 இல் அப்போதைய திருத்தந்தையான திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரியின் ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாகப் பின்னாளில் இந்நாட்காட்டிக்கு "கிரகோரியன் நாட்காட்டி" என்னும் பெயர் வழங்கலாயிற்று.
இந்த நாட்காடியின் படி இயேசு பிறந்ததாகக் கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன. மேலும் இக்காலப்பகுதி "ஆண்டவரின் ஆண்டு" எனவும் பெயரிடப்பட்டது. இது கிபி 6 வது நூற்றாண்டில்தயனீசியசு எக்சீகுவசு (Dionysius Exiguus) என்னும் கிறித்தவத் துறவியால் உரோமையில் துவக்கப்பட்ட ஆண்டுக் கணிப்பு முறையாகும்.

கிரிகோரியன் நாட்காட்டி பயன்படுத்தும் முன்னர் இருந்த உரோமானிய நட்காட்டியில் சனவரிபிப்ரவரிமார்ச்சுஏப்ரல்மேசூன்செப்டம்பர்அக்டோபர்நவம்பர்திசம்பர் எனப் பத்து மாதங்கள் கொண்டதே ஒரு ஆண்டாகும். பின்னரே சூலை மற்றும் ஆகத்து மாதங்கள் சேர்க்கப்பட்டன. கிரகோரியின் நாட்காட்டியானது 'சூலியன் நாட்காட்டியின்' சராசரி ஆண்டைவிட நீளமாகக் காணப்பட்டமையால் இளவேனிற் சம இராப்பகல் நாள், நாட்காட்டியில் பின்னோக்கி நகர்வதைத் திருத்துவதற்காக முன்கொணரப்பட்டது.அதாவது கிபி.1752 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் சுமார் 10 நாட்கள் கிரிகோரியன் நாட்காட்டியில் இருந்து கழிக்கப் பட்டது.மேலும் உயிர்த்த ஞாயிறு நாளைக் கணக்கிட பயன்பட்ட சந்திர நாட்காட்டியும் பல குறைகளைக் கொண்டிருந்ததும் இன்னொரு முக்கிய காரணமாகும்.

எசுப்பானியாபோர்ச்சுக்கல்போலந்திய இலிதுவேனியன் காமன்வெல்த்இத்தாலியின் பெரும்பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் நாட்காட்டியை முதலில் ஏற்றுக் கொண்டன. 1582 அக்டோபர் முதல் இவை கிரிகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்தத் தொடங்கின. இங்கிலாந்தும் அமெரிக்காவும் 1752 ஆம் ஆண்டிற்குப் பிறகே கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தன. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்தியாவிலும் இந்த நாட்காட்டி புழக்கத்திற்கு வந்தது. கிரிகோரியன் நாட்காட்டியைக் கடைசியாக ஏற்றுக் கொண்ட நாடுகளில் கடைசியாக வருவது கிரேக்கம் ஆகும். 1923 பிப்ரவரி 15 -ல் தான் இந்நாடு கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தது.

விளக்கம்தொகு

சூரிய நாட்காட்டி வகையைச் சார்ந்தது கிரிகோரியன் நாட்காட்டியாகும். ஒரு வழக்கமான கிரிகோரியன் ஆண்டு என்பது முன்நூற்று அறுபத்து ஐந்து (365) நாட்களையும், ஒரு லீப்(நெட்டாண்டு) ஆண்டினையும் உடையதாகும். லீப் ஆண்டு என்பது வழக்கமான கிரிகோரியன் ஆண்டு நாட்களுடன், பிப்ரவரி 29 என்ற நாளையும் இணைத்து முன்நூற்று அறுபத்து ஆறு (366) உடையதாகும். பொதுவாக லீப் ஆண்டு நான்கு கிரிகோரியன் ஆண்டுக்கொருமுறை ஏற்படுகிறது. சூலியன் நாட்காட்டி படி இல்லாமல் நானூறு (400) ஆண்டுகளுக்கு மூன்று (3) லீப் வருடங்களைக் கிரிகோரியன் நாட்காட்டி தவிர்த்துவிடுகிறது.

ஒரு கிரிகோரியன் ஆண்டானது பின்வரும் பன்னிரண்டு மாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

வரிசை எண்.மாதத்தின் பெயர்நாட்கள்
1சனவரி31
2பிப்ரவரி28 or 29
3மார்ச்31
4ஏப்ரல்30
5மே31
6சூன்30
7சூலை31
8ஆகத்து31
9செப்டம்பர்30
10அக்டோபர்31
11நவம்பர்30
12திசம்பர்31

ஒவ்வொரு மாதமும் சீரற்ற முறையில் வருகின்ற நாட்களைக் கணக்கிட கீழ்கண்ட ஈடுகோள் உதவுகிறது.

L = 30 + { [ M + floor(M/8) ] MOD 2 }

இதில் L என்பது மாதங்களின் நாட்கள் எண்ணிக்கையைக் குறிக்கும், M என்பது 1 முதல் 12 வரையான மாதத்தின் வரிசை எண்ணைக் குறிக்கும்.

பொதுவாகப் பூமி ஒரு முறை சூரியனை சுற்றிவர 365 நாள் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடி காலத்தினை எடுத்துக் கொள்கிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் காலத்தினை ஒருநாள் என்று வைத்துக் கணக்கிட இருக்கும் சிரமத்தினை எண்ணி, ஒரு ஆண்டினை 365 நாட்கள் என்ற முழு எண்ணாகக் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மீதமிருக்கும் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடிகளைத் தவர்க்க இயலாது என்பதால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறப்பு நாளாகப் பிப்ரவரி 29 என்ற நாளையும் இணைத்துக் கிரிகோரியன் நாட்காட்டில் கணக்கிடப்படுகிறது.

இவ்வாறு ஆண்டிற்கொருமுறை ஒரு நாளை (பிப்ரவரி 29) நாளை இணைக்கையில் 100 ஆண்டுகளில் 18 மணி 43 வினாடி காலம் அதிகமாக இணைக்கப்படுகிறது. எனவேதான் நூறு வருடங்களுக்கு ஒரு முறை லீப் வருடம் (நெட்டாண்டு) கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இவ்வாறான பல சீர்த்திருத்தங்களை கொண்ட கிரிகோரியன் நாட்காட்டினாது, மேலும் தீர்வில்லாத சிக்கல்களை கொண்டிருப்பதால் இந்த நாட்காட்டியானது சரியானது இல்லை என்ற கருத்தும் அறிஞர்களிடையே உள்ளது.

சந்திர நாட்காட்டிதொகு

கிறிசுதுவர்கள் பொதுவாக இயேசுவின் பிறந்தநாளென்று டிசம்பர் 25 ஆம் நாளைக் குறித்துக் கொண்டாலும், இயேசு உயிர்த்தெழுந்த நாளைக் கணக்கிட கிரிகோரியன் நாட்காட்டியை அடிப்படையாகப் பயன்படுத்துகிறார்கள். இதனால் ஈஸ்டர் எனப்படும் இயேசு உயிர்த்தெழுந்த நாள் ஆண்டுதோறும் வேறுவேறு நாட்களில் வருகிறது. இதற்குச் சூரியன் மற்றும் சந்திரனின் இயக்கத்தினையும் கணக்கில்கொள்வதே காரணமாகிறது.

- விக்கிப்பீடியா

Thursday, 30 December 2021

கிராம நிர்வாகங்களில் பார்ப்பன, ஆதிக்க ஜாதி ஆதிக்கம் தகர்ப்பு

Image

கிராமங்களைப் பற்றி தோழர் பெரியார் பேசுவதைப் பாருங்கள்.

கிராமங்கள்  பலவற்றால்  ஆகிய  ஒரு  நாட்டை  ஒருவன்  கைப்பற்றி  ஆட்சி  செய்யும்போது,  அவன் இந்தக்  கிராம  வாழ்க்கையின்  அமைப்பைச்  சீர்குலைக்காமல்,  மேலும்  பலமாக்கி  வைத்துத்  தன்  ஆட்சியை  நிலை  பெறுத்துவதற்குச்  சாதகம்  செய்து  கொண்டான்

ஒவ்வொரு  கிராமத்திற்கும்  ஒரு  தலைவனை  ஏற்படுத்தி  அவன்  மூலம்  தனக்குத்  தேவையான கப்பத்தை  வாங்கிக்  கொண்டு  தன்  கட்டளைப்படி  நடந்து  தனக்குதவிபுரிபவர்களுக்கு  ஒவ்வொரு  கிராமத்திலும்  வரி  நீக்கப்பட்ட  விளைநிலங்களை ஊழிய  இனாமென்றும்,  தேவதாயம்,  பிரம்மதாயம்  என்றும்  சாமிக்கும்,  பூசாரிக்கும்,  பிராமணருக்கும்  கொடுத்து  இவர்களைத்  தன்  ஆட்சிக்கு  அரண்களாக்கிக்  கொண்டான்

கிராம அமைப்பு  முடி  ஆட்சிக்கும்,  கொடுங்கோன்மைக்கும்  சாதகமான  அமைப்பு  என்பதைக்  கண்டதினால்,  பழைய  இந்து  அரசர்கள்  காலத்தில்  இருந்த  இவ்வமைப்புப்  பின்னால்  முகமதிய  அரசர்களாலும்,  அதற்குப்பின் வந்த கிருஸ்தவ  (இங்கிலீஸ்)  அரசாங்கத்தாலும்,  அப்படியே  காப்பாற்றப்பட்டு வருகிறது. (பகுத்தறிவு இதழ்மே 1936)

இந்து மதம் திணித்த ஜாதிஅமைப்பை அப்படியே நிலை நிறுத்தவும், வலிமைப்படுத்தவும் இந்த கிராம அமைப்பு பயன்பட்டது என்றார் பெரியார்.

இப்படிப்பட்ட கிராமங்களுக்குத் தலைவர்களையும், நிர்வாகிகளையும் தேர்ந்தெடுக்கும் முறை ஒன்றை இராஜராஜசோழன் தொடங்கி வைத்தார். அது தான் “குடவோலை முறை”. குடவோலை முறைப்படி, ஒவ்வொரு கிராமத்தையும் நிர்வகிக்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். இப்போது நடக்கும் பஞ்சாயத்து போர்டு தேர்தலைப் போன்றது அது.

ஒரு முக்கியமான வேறுபாடு என்னவென்றால், குடவோலை முறையில் பார்ப்பனர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும். அவர்களுக்கு மட்டுமே அந்தத் தகுதி இருப்பதாக மன்னர்களே அறிவித்தார்கள். பார்ப்பனர்கள் மட்டுமே கிராமங்களை நிர்வகிக்கும் உரிமை பெற்றவர்களாக இருந்தார்கள். 

 ஆங்கிலேய அரசாங்கம் வந்த பிறகு, குடவோலை முறை மறைந்தது. 1802, 1895- களில் கிராம அதிகாரிகள் சட்டம் இயற்றப் பட்டது. அந்தச் சட்டத்தின்படியும் பரம்பரை பரம்பரையாக கிராமங்களை நிர்வகித்தவர்கள் என்ற அடிப்படையில் பார்ப்பனர்களே கிராம அதிகாரிகளாக நீடித்து வந்தனர். பார்ப்பனர்கள் வசிக்காத பல கிராமங் களில் பெரும் நில உடமையாளர்களாக இருந்த, பார்ப்பனரல்லாத உயர்ஜாதியினர் கிராம அதிகாரிகளாக வரத் தொடங்கினர்.

தற்காலத்திலுள்ள வி.ஏ.ஓ.க்களுக்கு இணையான பதவி அது. கிராம முன்சீஃப், கர்ணம், மணியம் என பல பெயர்களில் இந்தப் பரம்பரைப் பதவிகள் இருந்தன. இந்தப் பரம்பரைக் கிராம அதிகாரி களிடம் தான் நமது இருப்பிடச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், நில உரிமைப் பதிவுக்குத் தேவையான அடிப்படை ஆவணங்கள், நிலங்களின் எல்லைகள் குறித்த தகவல்கள் போன்ற பல அடிப்படையான சான்றிதழ்களைப் பெறவேண்டும்.

திராவிடர் அரசுகள் எத்தனையோ வகுப்புரிமைச் சட்டங்களை இயற்றினாலும், கல்வி, வேலை வாய்ப்பு, விவசாய, நில உரிமைகள்  வழங்கப்பட்டாலும் அவற்றைப் பெறுவதற்கு இந்தச் சான்றிதழ்கள் மிகவும் முக்கியம். அந்தச் சான்றுகளை வழங்கும் உரிமை பார்ப்பனர் களிடமும், அந்தந்தக் கிராமங்களிலிருந்து ஆதிக்க ஜாதியினரிடமும் இருந்தது.

ஒரு பட்டியலின மாணவரோ, பிற்படுத்தப்பட்ட சமுதாயத் திலேயே எளிய ஜாதி மாணவரோ, அந்தக் கிராமத்தில் பெரும்பான்மை யாக இல்லாத ஜாதி மாணவரோ அல்லது விவசாய, நில உரிமைகளைப் பெற விரும்பும் மக்களோ மேற்கண்ட ஆதிக்கவாதிகளிடம் சான்றிதழ் களைப் பெறுவதென்பது கனவிலும் நடக்காததாக இருந்தது.

நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதையாக நமது உரிமைகள், ஏட்டில் இருந்தன. நடைமுறைக்கு வருவதில் பெரும் தடை இருந்தது. மக்கள் விடுதலையில் அக்கறையுள்ள - சமுதாயத்தை நன்கு அறிந்து வைத்துள்ள ஒரு அரசு மட்டுமே இதை நுணுக்கமாகப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்ற முடியும்.

தோழர் பெரியார் நீண்ட காலமாகவும், அந்த நேரத்திலும்,

கிராமங்களில் ஜாதி ஒழிய வேண்டுமென்றால்கணக்குப்பிள்ளை வேலையைப் பறையருக்குக் கொடுக்க வேண்டும்மணியம் வேலையை பள்ளர்சக்கிலியர்குறவர்களுக்குக் கொடுக்க வேண்டும்கணக்குப் பிள்ளையாகப் பார்ப்பானும்மணியமாக பிள்ளையும்கவுண்டரும் இருப்பதால்தான் அங்கே ஜாதி உரிமை தோன்றுகிறதுஆகவே ஜாதி ஒழிப்புக்கு நாம் தூண்ட வேண்டும்பரிகாரம் தேட வேண்டும்” என்று அறிவிப்பு செய்தார். (விடுதலை 12.04.1964 & 16.04.1964)

என்றார். பெரியாரின் கனவை அண்ணா நனவாக்கினார். கிராம நிர்வாகம் என்பதில் இருந்த பார்ப்பன, ஆதிக்க ஜாதிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

Tamil Nadu Proprietary Estates Village Service and the Tamil Nadu Hereditary Village-Offices (Repeal) Act, 1968 எனும் சட்டத்தை 1968 அக்டோபர் 16 அன்று பிறப்பித்தார்.

அந்தச் சட்டத்தைச் செயல்படுத்தியதில் எழுந்த சில சட்டச் சிக்கல்களை - அடுத்து வந்த கலைஞர் ஆட்சி Tamil Nadu Village Officers Service Rules, 1970 எனும் சட்டத்தால் சரி செய்தது.

எதிர்பார்த்தபடியே இச்சட்டங்களை எதிர்த்து ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. 1973 மற்றும் 1975 ஆம் ஆண்டுகளில் அந்தச் சட்டச் சிக்கல்களைச் சரி செய்வதற்காக கலைஞரின் தி.மு.க. அரசு புதிய புதிய அரசாணைகளைப் பிறப்பித்தது.

கிராம அதிகாரி, கர்ணம்போன்ற எந்தப் பதவியாக இருந்தாலும் அவற்றுக்கு அரசு சார்பில் பொதுத்தேர்வு நடத்தப்படும். அதில் தேர்வாகும் எந்த ஜாதியினர் வேண்டுமானாலும் எந்தக் கிராமத்திற்கு வேண்டுமானாலும் கிராம நிர்வாக அதிகாரிகளாக நியமிக்கப்படலாம் என்ற நிலை உருவானது.

பஞ்சமிநிலக் கொள்ளைக்கு உடந்தையான பார்ப்பனர் மற்றும் கர்ணங்கள்மிராசுதார்கள்

ஆங்கிலேயர் காலத்தில் அரசுக்குச் சொந்தமாக இருந்த புறம் போக்கு நிலங்களில் விவசாயம் செய்து கொள்ள யார் வேண்டு மானாலும் விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிப்பவர்களுக்கு நிலம் கிடைக்க வேண்டுமானால், அந்தப் புறம்போக்கு நிலங்கள் இருக்கும் கிராமங்களில் உள்ள ஆதிக்க ஜாதிகளைச் சேர்ந்த இந்தக் கர்ணம், மணியம், முன்ஃப்புகளின் ஒப்புதல் வேண்டும். அவர்கள் மறுத்தால் யாருக்கும் நிலம் கிடைக்காது.

பார்ப்பனர்களோ, பெரும் நில உடமையாளர்களோ, நிலமே இல்லாத ஆதிக்க ஜாதியைச் சேர்ந்தவரோ யாராக இருந்தாலும், பட்டியலின மக்களுக்கோ, அந்தந்தக் கிராமங்களில் எண்ணிக்கை குறைவாக வாழும் ஜாதியினருக்கோ நில உரிமை கிடைப்பதை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்.

அதனால் தான், ஆங்கிலேயர் காலம் முதல் நீதிக்கட்சி காலம் வரை பட்டியலின மக்களுக்கு 12 இலட்சம் ஏக்கர் நிலங்கள் வழங்கப் பட்டன. (Depressed Classes Land Act G.O. No 1010/10-A (Revenue) 1892) அப்படி வழங்கப்பட்ட நிலங்களில் இன்று சுமார் 10 இலட்சம் ஏக்கர் நிலங்களைப் பட்டியலின மக்களிடமிருந்து இடைநிலை ஜாதியினர் பறித்துக் கொண்டனர்.

இந்து மதத்தின் ஜாதிமுறை என்பது சமுதாயத்தின் அனைத்துத் தளங்களிலும் ஆதிக்கத்தைச் செலுத்துவதை நாம் அறிவோம். பஞ்சமி நில அபகரிப்புக்குப் பின்னாலும் இந்து பார்ப்பன, ஜாதித்தத்துவங்களே இருக்கின்றன. அவை கிராம முன்ஃப், கர்ணம், மணியம் போன்றவர் களின் வழியாக பஞ்சமி நிலக் கொள்ளையை நடத்தின.

அப்படிப்பட்ட இந்து மத, ஜாதிமுறைப் பாதுகாப்புப் பதவி களைத்தான் அண்ணாவும், கலைஞரும் அதிரடியாகக் கலைத்தனர். ஒருவேளை இத்தகைய சட்டங்கள் பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்ட காலத்திலேயே நிறைவேற்றப்பட்டிருக்குமானால் இத்தனை இலட்சம் ஏக்கர் நிலங்கள் பட்டியலின மக்களிடமிருந்து பறிபோயிருக்காது.

ஜாதியச் சமுதாயம் மீது நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல்

பரம்பரைப் பதவிகளுக்கு எதிராக பொதுத்தேர்வுகள் வழியாக கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு செய்யப்படும் முறை உருவாக்கப் பட்ட, அதே காலகட்டத்தில், தமிழ்நாட்டு அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீடு சதவீதமும் 49 ஆக உயர்த்தப்பட்டது.

இதுபோன்ற தொடர்ச்சியான சட்டரீதியான கூட்டு நடவடிக்கை களும், இந்தச் சட்டங்களுக்கு ஆதரவாகப் பெரியார் திரட்டிக்கொடுத்த சமுதாய ஆதரவும் தமிழ்நாட்டு கிராமங்களில் நிலவிய கடுமையான பார்ப்பன, பார்ப்பனிய, இடைநிலை ஜாதிகளின் ஆதிக்கங்களின் மீது துல்லியத் தாக்குதல்களை நடத்தின.

– அதிஅசுரன், வேண்டும் மீண்டும் திராவிடர் ஆட்சி நூல்

-காட்டாறு இணைய பக்கத்தில் இருந்து



Friday, 17 December 2021

துறவியாக சூத்திரனுக்கு அனுமதி இல்லை

சூத்திரன் என்ற இழிசொல்லை நம்மைக் குறிப்பதற்குப் பயன்படுத்தியவர்கள்,  இன்றும் பயன் படுத்துகின்றவர்கள்,  பிராமணர்கள். அவர்கள் தம்மை பிராமணர் என்று சொல்லிக்கொள்ளும்போதே நம்மை இழிபிறவியினர் Kul-heena; low-borns)  சூத்திரர்கள் என்று கருதுகிறார்கள் மற்றும் சுட்டிக்காட்டுகிறார்கள் என்பது  தெளிவாகும்.  
கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளபோதே இந்தக் கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன.  நம்மை மீண்டும் அநாகரிக வேத காலத்திற்குக் கொண்டுசெல்ல ஜக்கி மூலமாக சதுர்வர்ண சதிகாரர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது நிலைமை இன்னும் மோசமாகவே இருக்கும். (அ)தர்ம சாஸ்திரங்களைக் காட்டி சூத்திரர்கள் துறவு புகுவது தடுக்கப்படும், (தற்போது நீதி மன்றங்கள் அந்த உரிமையை அங்கீகரித்திருந்தாலும் கூட). 
சென்னை உயர்நீதிமன்றத்தின், 1887 ஆம் ஆண்டுத் தீர்ப்பு ஒன்றில், சூத்திரர்களில் துறவிகள் இருந்தால், அவர்கள் பரதேசிகள் என்று அழைக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு விளக்கம் அளித்தவர் நீதிபதி முத்துசாமி ஐயர் ஆவார். (He said that  "If an ascetic or a hermit is a Brahmin, he is called a Yati or Sanyasi; if a Sudra, he is called a paradesi" (Giyana Sambandha Pandara Sannadhi v. Kandasami Tambiran - 1887) (Chief Justice. Sir Arthur J. H. Collins and Justice Muthusamy Ayyar) (P - 385 Madras Series Vol .X). )
இந்து மதம் பிராமணரல்லாதாரை அமைப்பு ரீதியாகத் தொடர்ந்து இழிவு படுத்தி வருகிறது. 
இந்தச் சூத்திர மடாதிபதிகள் (பரதேசிகள்) என்றைக்குத தன்மானம் கொண்டவர்களாக மாறுவர்?
- கட்செவி வழியாக பெறப்பட்டது