Tuesday, 25 May 2021

கேரளாவில் கோயில்கள் நிர்வாகத்துக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அமைச்சராக நியமனம்


திருவனந்தபுரம்,மே22-  கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் உட்பட   21 அமைச்சர்கள்  புதிய  அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகிய  கே.ராதாகிருஷ்ணனுக்கு முதல்முறையாக தேவசம்போர்டு துறை வழங்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் கோயில்களில் அர்ச்சகராக பணியாற்ற முதல்முறையாக கேரள மாநில பினராயி விஜயன் அரசு உத்தரவிட்டது. இந்த முறை தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தேவசம் போர்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவில் உள்ள ஆயிரக்கணக்கான பாரம்பரியக் கோயில்கள், சபரிமலை அய்யப்பன் கோயில், திருவனந்தபுரம் பத்பநாபசுவாமி கோயில் உள்ளிட்ட பல கோயில்களை நிர்வகிக்கும் பொறுப்பு கே.ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment