Tuesday 24 October 2017

தந்தை பெரியாரின் அளப்பரிய தொண்டு-1

தந்தைப் பெரியாரை நாம் ஏன் போற்றுகிறோம்! அவர் இறந்து 44 ஆண்டுகள் ஆகியும் அவரை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம்! ஏன் !பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் கொண்டாடுவோம்!

தந்தை பெரியாரின் கோட்பாடு உலக கோட்பாடுகளுக்கு எல்லாம் தலையாய கோட்பாடு ஆகும். உலகிலுள்ள அனைத்துக் கோட்பாடுகளும் தந்தை பெரியாரின் கோட்பாடுகளுக்குள் அடக்கம் அதனால்தான் நாம் தந்தை பெரியாரை தலை மேல் தூக்கி வைத்து கொண்டு கொண்டாடுகிறோம்!


தமிழ் சமுதாயம், உலகிலுள்ள மற்ற சமுதாயங்கள் நாகரீகம் அடைவதற்கு முன்பாகவே நாகரீகமடந்த சமுதாயமாகும்.


உலகிலுள்ள மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி தமிழ் மொழியாகும். தமிழ் மொழியிலிருந்துதான் மற்ற மொழிகள் கிளைத்தன.


"நாவலம் தீவு" என்று அழைக்கப்பட்ட, இந்தியா முழுக்க தமிழ் மொழி பேசப்பட்டு வந்தது. இந்தியாவுக்கு வெளியிலிருந்து கைபர் போலன் கனவாய் வழியாக வந்த ஆரியர்கள் வட இந்தியா முழுக்க பரவி தமிழையும் தமிழ் அடையாளங்களையும் அழித்தனர். அங்கிருந்த மக்கள் தமிழை மறந்து வேற்று மொழியை கற்றுக்கொ ண்டனர். அதேபோல் தென்னிந்தியாவிலும் புகுந்து தமிழையும் தமிழ் அடையாளங்களையும் அழிக்க நினைத்தனர் ஆரியர்கள்! தென்னிந்தியாவில் கடுமையான எதிர்ப்பு இருந்ததால் முழுமையாக அவர்களால் செயல்பட முடியவில்லை.


ஆரிய மொழியான சமஸ்கிருத மொழி ஊடுருவலால் தென்னிந்தியாவில் தமிழ் மொழி சிதைந்து பல மொழிகள் ஆயின. அவை திராவிட மொழிகள் எனப்பட்டன. தென்னிந்தியாவில் தற்போது தமிழ் நாடு எனப்படும் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட ஆரிய பண்பாட்டு படையெடுப்பு தடுத்து நிறுத்தப்பட்டது.

காட்டுமிராண்டி காலத்தில் தோன்றிய தமிழ் மொழி காலந்தோறும் பல மாற்றங்களை அடைந்துள்ளது. (எண், எழுத்து, மொழி)


ஆரியர்களின் வருகைக்குப்பின் தமிழ் மொழி பின்னடைவை எதிர்கொள்ள நேர்ந்தது.


தமிழ் இலக்கண இலக்கியங்கள் அனைத்தும் ஆரிய மயமாக்கப்பட்டன.


இலக்கண இலக்கியங்களின் வளர்ச்சி தான்! மொழியின் வளர்ச்சி யாகும்!


தமிழ் இலக்கண இலக்கியங்கள் திருத்தப்பட்டு பார்ப்பனர்களால் காட்டுமிராண்டித்தனமான கருத்துகள் புகுத்தப்பட்டன. இதனால்தான் தந்தை பெரியார் தமிழ் மொழியை காட்டுமிராண்டித்தனமானது என்றார்.


பார்ப்பன மயமாக்கலில் இருந்து தமிழை மீட்டெடுக்க வேண்டும் என்றார்.


சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் மொழி தோன்றியதாக பார்ப்பனர்கள் கதை கட்டியிருந்தனர். தமிழ் மொழியில் சமஸ்கிருத மொழியை கலந்து மணி பிரவாக நடை என்ற பெயரில் எழுதியும் பேசியும் தமிழ் மொழியை பார்ப்பனர்கள் அழிக்க துடித்தனர். தந்தை பெரியார் மறைமலை அடிகளாருடன் கைகோர்த்து தமிழ் மொழியில் கலக்கப்பட்ட சமஸ்கிருத சொற்களை நீக்கிவிட்டு, தமிழால் தனித்து இயங்க முடியும் என நிறுவினார்.  எழுத இலகுவாக இருக்க தமிழ் எழுத்துக்களை திருத்தினார். இசைத்துறையில் கர்நாடக இசை மட்டுமே கோலோச்சியது. இதை மாற்றி தமிழிசை சங்கத்தை தோற்றுவித்து தமிழிசையை கோலோச்ச வைத்தார்.


தமிழர்களுடைய பெயர்களை சமசுகிருத மயமாக்கினர் பார்ப்பனர்கள். தஞ்சை பெரிய கோயிலை கட்டிய அருண்மொழித்தேவன் என்ற  அரசன், பார்ப்பனர்களுக்கு அடிமையாகி தனது பெயரையே  இராஜராஜ சோழன் என மாற்றிக் கொண்டான். இதைக்கண்டு வெகுண்டெழுந்து தமிழிலேயே பெயர்களை  வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார்.  குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களையே சூட்டினார். "தமிழ்நாடு தமிழருக்கே" என முழக்கமிட்டார். தமிழர் வாழும் பகுதிக்கு அறிஞர் அண்ணா மூலம் தமிழ்நாடு என பெயர் சூட்டினார்.


தமிழ்நாட்டு கோயில்களில் "தமிழை நீச பாசை" என்று சொல்லி அனுமதிக்க மறுத்தனர். கோயில்களில் தமிழை அர்ச்சனை மொழியாக்க போராடினார். இதேபோல் தமிழர்களுக்காகவும்  தமிழ் மொழிக்காகவும் தந்தை பெரியார் பல வழிகளில் போராடினார்.


No comments:

Post a Comment