Tuesday, 30 May 2023

5 வயது வரை குழந்தைகளுக்கு பேருந்தில் இலவசம்: தமிழ்நாடு அரசு ஆணை

 

 சென்னை,மே25- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்குக் கட்டண மில்லை என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் அனைத்து விதமான பேருந்து களிலும் 5 வயது வரையிலான குழந்தைகள் கட்டணமின்றி பய ணம் செய்யலாம் என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர்  சா.சி.சிவ சங்கர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அரசுப் பேருந்து களில் 5 வயது வரை குழந்தைகளுக்கு கட்டணமில்லை என்ற அறிவிப்பை அமல்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 5 வயதுக்கு மேல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்து களில் அரை டிக்கெட் எடுத்து பயணம் மேற்கொள்ளலாம் என் றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன் னதாக, 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு மட்டுமே பேருந் துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப் பட்டிருந்தது.

Wednesday, 24 May 2023

நீதிக் கட்சி ஆட்சியில் ஆதி திராவிடர் பெற்ற * நன்மைகள்-

வாலாசா வல்லவனின் 
* பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா?என்ற  நூலில் 
* இருந்து -சிறு துளி.

பள்ளர் பறையர் என்று இழிவாக உள்ள பெயரை மாற்றி,ஆதி திராவிடர் என்ற பெயரை எங்கள் சமூகத்திற்கு இட்டு அழைக்க வேண்டும் என்று எம்.சி.இராஜா சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார்.
அவரின் தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டு,
அச் சமூகத்தினரை ‘ஆதி திராவிடர்கள் என்றே அனைத்து ஆவணங்களிலும் பதிய வேண்டும் என்று
அரசாணை (எண் 217 )சட்டம் (பொது)25-03-1922 இல் பிறப்பிக்கப் பட்டது.

ஆதி திராவிடர் பிள்ளைகள் பொது பள்ளியில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.(G.O.No87-கல்வி நாள் 6-1-23.

அரசு மான்யம் பெறும் பள்ளியில் ஆதிதிராவிடர் மாணவர்களை சேர்க்க மறுத்தால் அரசு மான்யம் இரத்து செய்யப்படும்(G.O.எண் 88-கல்வி நாள்16-1-23)

இந்தியாவின் முதன் முதலாக ஆதி திராவிடப் பிள்ளைகள் இலவசமாக தங்கிப்படிக்க ஆதிதிராவிடர் மாணவர் விடுதி கட்டப்பட்டது.
G.O-2563-நாள் 24-10-1923-.1931க்குள் மூன்று விடுதிகள் கட்டப்பட்டன.

ஆதி திராவிடர் பிள்ளைகள் வருவதற்கு தடையில்லாத இடத்தில் பள்ளிகள் கட்ட அரசு ஆணை G.O-2333-27-11-1922 

ஆதி திராவிட மாணவர்களுக்கு நான்காம்வகுப்பு முதல் கல்வி உதவித் தொகை
S.S.L.C.தேர்வு கட்டணம் இரத்து.
ஆதி திராவிடப் பிள்ளைகளை அதிகமாகச் சேர்க்கும் பள்ளிகளுக்கு அதிக அளவில் பண உதவி.

பனகல் அரசர் காலத்தில் ஆதி திராவிடர் மாணவர்களுக்கு வகுப்புரிமையின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் மூன்று இடங்கள் கிடைத்தன.மருத்துவக் கல்லூரியில் பயிலும் ஆதி திராவிட மாணவர்களுக்கும்,பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு பஞ்சமி நிலங்கள் ஆதி திராவிடர்க்கு ஒதுக்கப்பட்டன.1920-1921 ஆதி திராவிடர்க்கு ஒதுக்கப் பட்ட பஞ்சமி நிலங்கள்-19251 ஏக்கர்.
நீதிக்கட்சி ஆட்சியில் ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் 3,42,611 ஏக்கர்.
- பன்னீர்செல்வம் முகநூல் பக்கத்திலிருந்து...

Tuesday, 23 May 2023

தமிழ் உலகு: தமிழ் இனி கட்டாயம்

தமிழ் உலகு: தமிழ் இனி கட்டாயம்:     Viduthalai     May 23, 2023     தமிழ்நாடு, சென்னை,மே23- 'சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து வகை பள்ளி களிலும், தமிழ் கட்டாயம்' என, த...

Thursday, 18 May 2023

கொடுமைகள் திருத்தப்பட்ட வரலாறு

*உங்களுக்கு தெரியுமா?*

*தேசத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட காந்தி அவர்கள் சென்னை வந்தால் மைலாப்பூரில் இருந்த சீனிவாச அய்யங்கார் வீட்டு திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார்.
அய்யங்கார் வீடு என்பதால் உள்ளே அவரை அனுமதிக்கவில்லை.

*சூத்திரர்கள் படிக்க ஆசைப்படக்கூடாது,அப்படி படித்தாலும் ஐந்தாம் வகுப்புக்குமேல் படிக்கக்கூடாது,மீறி படித்தாலும் பிராமணர்களைப்போல அதிகாரத்திற்கு வர நினைக்கக்கூடாது* என்று அவர் நடத்திய *மஞ்சரி* பத்திரிக்கையில் பாலகங்காதர திலகர் எழுதினார்.

*1919-வரை அக்ரஹாரத்திலும்,கோவிலுக்கு சொந்தமான மடங்களிலும்,சத்திரங்களிலும்தான் பல  பள்ளிகள் செயல்பட்டன.அப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.சேர்த்துக்கொண்ட சில பள்ளிகளும் அவர்களை தனி வரிசையில் உட்காரவைத்தன.

*சூத்திரர் மற்றும் பஞ்சமர்களின் நிழல்கூட தங்கள்மீது படக்கூடாது*என்பதால் வைக்கம் வீதிகளில் அவர்கள் நடக்கக்கூட அனுமதிக்கப்படவில்லை.

*சமஸ்கிருதம் படித்தவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும்* என்று சட்டம் இருந்தது.

*பிராமணர்கள் எந்த குற்றமிழைத்தாலும் அவர்களை தண்டிக்கக்கூடாது* என்று சட்டமிருந்தது.

*பெண்களை தேவதாசிகளாக கோவிலுக்கு நேர்ந்துவிட வேண்டும்* என்று சட்டமிருந்தது.

*நான்கு வருண கோட்பாட்டை கொண்டதுதான் இந்தியா.பிராமணர்களே பிறப்பால் உயர்ந்தவர்கள்.மற்ற வருணத்தார் பிராமணர்களை தெய்வமாக வணங்கி நடக்கவேண்டும்* என்று கோல்வால்கர் எழுதினார்.

*திருமணம் என்றால் என்ன என்று தெரியாத சிறுமிகளுக்கும் திருமணம் நடந்தது.பச்சிளம் வயதில் கணவனை இழந்த சிறுமிகளுக்கு மொட்டையடித்து முக்காடு போட்டு வீட்டின் மூலையில் முடக்கி வைத்தனர்*.

*சேரன்மாதேவியில் ஒரு குருகுலப் பள்ளி இருந்தது.அங்கு பிராமண மாணவர்களுக்கு செம்புக்குடத்திலும் சூத்திர மாணவர்களுக்கு மண் குடத்திலும் குடி தண்ணீர் வைக்கப்பட்டது.அன்றைய முதல்வர் ஓமந்தூர் ராமசாமி அவர்களின் மகனும் அந்த குருகுலத்தில் படித்தான். மண் குடத்தில் தண்ணீர் தீர்ந்துவிட்டதால்
தாகத்திற்காக  பிராமண மாணவர்களுக்கு வைத்திருந்த செப்பு குடத்திலிருந்த தண்ணீரை குடித்துவிட்டான்.
அதற்காக அவன் தண்டிக்கப்பட்டு,படிப்பும் பாதியில் நின்றுபோனது.

*சுதந்திரம் பெற்ற பின்பும் ரயில்வே கேண்டின்களில் பிராமணரகளுக்கு தனி அறை இருந்தது.

*1937-ல் நீடாமங்கத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் பந்தியில் சரிசமமாக சாப்பிட உட்கார்ந்த தாழ்த்தப்பட வகுப்பினரை மரத்தில் கட்டிவைத்து உதைத்து மொட்டையடித்து அவமானப்படுத்தினார்கள்*

*இதெல்லாம் எதற்கு?* என்று கேட்கிறீர்களா?

*இப்போது அந்த பழைய கொடுமைகளும்,
அநீதியும் இருக்கிறதா என்று யோசித்து பாருங்கள்*

இந்த  கொடுமைகளை ஒழித்து  நமக்கு  உரிமைகளை பெற்றுத்  தந்த  தலைவர்  தான் 
*தந்தைபெரியார்*
- கட்செவி பதிவிலிருந்து..

Friday, 5 May 2023

ஓபிசி சான்றிதழ் குறித்து திருத்தப்பட்ட ஆணை வெளியீடு

 

 தமிழ்நாடு முதலமைச்சரின் உடனடி உத்தரவு!

பொதுத்துறை நிறுவன ஓபிசி பணியாளர்களுக்கு தமிழ்நாட்டில் ஓபிசி சான்றிதழ் மறுக்கப்படுவது குறித்து நமது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் என்.எல்.சி. நிறுவன ஓபிசி அமைப்பின் சார்பில் 10.8.2022 தேதியிட்ட கடிதம் பெறப்பட்ட நிலையில், அ.இ.பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் கூட்ட மைப்பின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு 4.9.2022 தேதியிட்ட கடிதம் அனுப்பப்பட்டது.

நமது கூட்டமைப்பின் கடிதத்தில்,‘‘தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் 24.8.2021 தேதியிட்ட ஆணையில், ஓபிசி பிரிவினரில் முன்னேறிய பிரிவினரை (கிரிமிலேயர்) நீக்கம் செய்திட குறிப்பிட்டுள்ள பணியாளர் வகைப்பாட்டில் (service category), (பத்தி 2- வீவீ)” பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர்” என பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் பொதுத்துறை நிறுவனங் களில் பணியாற்றும் அனைத்து நிலை ஓபிசி பணியாளர்கள் பிள்ளைகளுக்கு ‘ஓபிசி சான்றிதழ்’ பெறுவதில் பெரும் சிக்கலும் தடையும் ஏற்பட்டுள்ளது.

இதற்கு ஆதாரமாக, தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை 24.8.2021 இல் குறிப்பிட்டுள்ள ஒன்றிய அரசின் இரு ஆணைகளிலும், (இந்திய அரசின் அலுவலக குறிப் பாணை எண்: 361012/22/93-Estt.SCT, நாள்: 8.9.1993 மற்றும் இந்திய அரசின் அலுவலக குறிப்பாணை எண்:36033/1/2013-Estt-(Res), நாள் 13.9.2017) பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஓபிசி பிரிவினர் குறித்து பொத்தாம் பொதுவாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் 24.8.2021 தேதியிட்ட ஆணையையும், அதே போன்று அந்த ஆணையை வழி மொழிந்து அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கும் பிறப்பித்த வருவாய் நிருவாக ஆணையரகத்தின் 24.9.2021 தேதியிட்ட ஆணையையும் திரும்பப் பெற வேண்டும்.

ஒன்றிய அரசின் அரசுத் துறை மற்றும் பொதுத்துறை நிறுவன பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பதையும், தற்போதைய 24.8.2021 தேதியிட்ட ஆணை, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங் களில் பணியாற்றும் தமிழ்நாடு ஓபிசி பிரிவினர் வாய்ப்பை மேலும் குறைத்திடும் என்பதையும் கருத்தில் கொண்டு, மிகவும் முக்கியம் வாய்ந்த இந்தப் பிரச்சினையில் தாங்கள் உடனடியாக தலையிட்டு, ஆவன செய்திட தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்” என கடிதம் எழுதப்பட்டது. கடிதத் தின் நகல் பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் அவர் களுக்கும் அளிக்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட கடிதத்தின் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசின் ‘சமூக நீதி கண்காணிப்புக் குழு’ 11.10.2022 தேதியிட்ட கடிதத்தில் வலியுறுத்தப்பட்ட நிலையிலும், நமது கூட்ட மைப்பின் சார்பில் பிற்படுத்தப்பட்டோர் துறையின் சம்பந்தப் பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்துத் தொடர்ந்து வலியுறுத் தப்பட்டது.

நமது கூட்டமைப்பின் தொடர் முயற்சியின் காரணமாக, தற்போது தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் துறையின் சார்பில் 30.3.2023 தேதியிட்ட கடிதத்தின் மூலம், நாம் கோரிய கோரிக்கை, அதாவது, தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் ஆணை (24.8.2021), வருவாய் துறையின் ஆணை (24.9.2021) திரும்பப் பெறப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

தமிழ்நாடு அரசின் 30.3.2023 தேதியிட்ட கடிதத்தின் பார்வை 7 இல் நமது கூட்டமைப்பின் 4.9.2022 தேதியிட்ட கடிதம் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டுகிறோம்.

தமிழ்நாடு அரசின் தற்போதைய 30.3.2023 தேதியிட்ட கடிதம் காரணமாக, ‘பொதுத் துறை நிறுவன ஊழியர்கள்’ அனைவருக்கும் கிரிமிலேயர் என்ற நிலை நீக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் அல்லாத பதவிகளில் உள்ள ஓபிசி பிரிவினர் ஒன்றிய அரசின் குரூப் சி-க்கு இணையான பதவிகள் என்பதாலும், குரூப் சி பதவிகளுக்கு ‘கிரிமிலேயர்’ முறை பொருந்தாது என்பதாலும், ஒன்றிய அரசு, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்களில் அலுவலர்கள், கடைநிலை ஊழியர்கள் பதவிகளில் உள்ள அனைத்து பிற்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரது பிள்ளை களுக்கு ஓபிசி சான்றிதழ் பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்போது பிற்படுத்தப்பட்டோர் துறையின் 30.3.2023 தேதியிட்ட கடிதத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் வருவாய் துறை, அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் ஓபிசி சான்றிதழ் வழங்கிடும் துறைகளுக்கும் விரைவில் கடிதம் அனுப்பப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, வருவாய் துறை கூடுதல் முதன்மை செயலாளர் /ஆணையருக்கு கூட்டமைப்பின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் ஆணை (24.8.2021), வருவாய் துறையின் ஆணை (24.9.2021) குறித்த சிக்கலை நமது கவனத்திற்கு கொண்டு வந்த என்.எல்.சி. நிறுவன ஓபிசி அமைப்பிற்கும் அதன் அனைத்து நிர்வாகிகளுக்கும் நமது நன்றி. பாராட்டுகள்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பி வருவாய் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் அருமைத் தம்பி மருத்துவர் நா.எழிலன் அவர்களுக்கு நன்றி! 

 நமது அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் கூட்டமைப்பு கடிதத்தின் அடிப்படையில் உரிய தீர்வினை மேற்கொண்டு, ஓபிசி பிரிவினருக்கு சான்றிதழ் கிடைத்திட வழிவகை செய்த தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது கூட்டமைப்பின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள் கிறோம். மேலும் பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுக்கும், சமூக நீதி கண்காணிப்புக் குழு அரசு செயலாளர் மற்றும் தலைவர் ஆகியோருக்கும் நமது உளமார்ந்த நன்றிகள்!

- கோ.கருணாநிதி

பொதுச்செயலாளர்

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் கூட்டமைப்பு

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு ஜாதிச் சான்றிதழ் கிடைக்க வழிசெய்வீர்! சட்டப்பேரவையில் டாக்டர் நா. எழிலன் வலியுறுத்தல்!

 

 8

சென்னை, ஏப்.9- சட்டப் பேரவையில், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நா.எழிலன் எழுப்பிய கேள்வியும், அமைச்சர் கே. கே. எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அளித்த பதிலும் வரு மாறு:-

டாக்டர் நா. எழிலன்: 

இதர பிற்படுத்தப்பட் டோர் 27 சதவிகித இடஒ துக்கீடு ஜாதிச் சான்றிதழ் தொடர்பாக என் கேள்வி யைக் கேட்கிறேன். ஒன் றிய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் வகைப்பாடுகளில், ஜாதிச் சான்றிதழ்களில் தனித்தனியாக வகைப் படுத்தி உள்ளார்கள். ஆனால் தமிழ்நாடு அர சின் உத்தரவுகளில் 4 (2) (3) பிரிவில் பொதுவாக பொதுத்துறை ஊழியர் கள் என்று குறிப்பிட்டி ருப்பதால், பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்யும் இடைநிலை, கடைநிலை ஊழியர்க ளுக்கு உரித்தான ஜாதிச் சான்றிதழ் கிடைக்காமல் சிக்கல் உள்ளது.

பொதுத் துறை ஊழி யர்கள் என்ற இப்பிரிவினை வகைப்படுத்தி, கடைநிலை ஊழியர் கள், இடைநிலை ஊழியர்கள் என்று பிரித்தால்தான், 27 சதவிகிதம் இட ஒதுக் கீடு அவர்களுக்கு கொண்டுபோய் சேருவதற்கான வழி முறைகள் சாத்தியக்கூறு ஆகும்.

இதனால் இந்தத் திருத்தத்தைத் திருத்தி வருவாய்த் துறையில் இதர பிற்படுத்தப்பட் டோர் பொதுத் துறை நிறுவனங்களில் இடை நிலை ஊழியர்கள், கடை நிலை ஊழியர்கள் என்று பிரித்தால் அவர்களு டைய குழந்தைகள் ஒன் றிய அரசின் வேலை வாய்ப்பிலும், கல்வி நிறு வனங்களிலும் சேர இதர பிற்படுத்தப்பட்டோர் 27 சதவிகித இட ஒதுக்கீடு சான்றிதழ் கிடைக்க வழி செய்யுமாறு அமைச்சர் அவர்களிடம் கேட்டு அமர்கிறேன்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன்:

உறுப்பினர் அவர்கள் இது சம்பந்தமாக ஏற் கெனவே என்னிடம் பேசியிருக்கிறார்கள். அது சம்பந்தமாக என்னு டைய துறை அதிகாரிகள் மத்தியிலும் நான் கலந்து பேசியிருக்கிறேன். 

என்னுடைய துறை சார்ந்த மானியக் கோரிக்கை முடிந்த பிறகு, உறுப்பினர் அவர் களை அழைத்து பேசி, அதற்கு வேண்டிய முடி வெடுத்து, முதலமைச்சர் அவர்களின் கவனத் திற்குக் கொண்டு செல் லலாம்.

-இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

Wednesday, 3 May 2023

கவிஞர் 'புதுவை சிவம்' அவர்களின் முயற்சியால் ஆசியாவிலேயே முதல் முறையாக புதுவையில் 8 மணி நேர வேலை

தொழிலாதொழிலாளர் நாளில் நினைவு கூற வேண்டியவர்களில் முதன்மையானவர்களில் கவிஞர் புதுவை சிவமும் ஒருவர்!

1936-37களில் ஆசியாவிலேயே முதல் முறையாக புதுவையில் 8 மணி நேர வேலை  கவிஞர் 'புதுவை சிவம்' அவர்களின் முயற்சியால் நடைமுறைபடுத்தப்பட்டது..

Tuesday, 2 May 2023

100 நாள் வேலைக்கான சம்பளம் உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு


ஹரியானா, கேரளா, கர்நாடகா, கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்த குறைந்தபட்ச ஊதியம் ரூ. 300 க்கும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

mgnrega tamil nadu:  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூலி விகிதத்தை அதிகரித்து மத்திய ஊரக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஒரு நாள் குறைந்தபட்ச கூலித் தொகை ரூ. 281ல் இருந்து  ரூ. 290ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.அதாவது, வெறும் 3% விகிதம் உயர்த்தப்பட்டுளளது.

2005-ல் இயற்றப்பட்ட தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்ட சட்டத்தின் கீழ், கிராமப்புற மக்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு கட்டாய உடலுழைப்பு வேலை சட்டப்படி அளிக்கப்படும். அவ்வாறு, வேலை கொடுக்கத் தவறினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் 30 நாட்கள் சம்பளத்தில் கால் பங்கும், மேலும் தவறினால் பாதி ஊதியத்தை அபராதமாக வேலைக் கொடுக்கும் வரை அரசு தர வேண்டும்.

இந்த சட்டத்தின் 6(C) பிரிவின் கீழ்,  100 நாள் பணியாளர்களுக்கான ஊதிய விகிதத்தை  மத்திய அமைச்சகம் அவ்வப்போது நிர்ணயித்து வருகிறது.  இந்த நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்திற்குக் குறைவான ஊதியத்தை வழங்கக் கூடாது.

அந்த வகையில், தற்போது ஊதிய விகிதத்தை மத்திய ஊரக அமைச்சகம் மாற்றி அமைத்துள்ளது. புதிய அறிவிப்பின் படி, தமிழ்நாட்டில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஹரியானா, கேரளா, கர்நாடகா, கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்த குறைந்தபட்ச ஊதியம் ரூ. 300 க்கும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தச் சட்டத்தின் கீழ், 100 நாள் பணியாளர்களுக்கு வாரத்திற்கு ஒரு முறையோ, அல்லது வேலை செய்த 14 நாடுகளுக்குள் ஊதியம் வழங்க வேண்டும். ஊதியம் தாமதமாக வழங்கப்பட்டால் ஊதியம் வழங்கல் சட்டத்தின் கீழ் நஷ்டஈடு கொடுக்க வேண்டும்.

-நியூஸ் 18 தமிழ் இணையதளம்

26.03.2023